விழியின்
நுனியில் பார்வை பிறக்க,
உன் கருவிழி
ஓரமாய்
ஒதுங்கி நிற்க,
அசைவால் நயனிக்கும்
அந்தக் குட்டிக்
கூந்தல்..
உன் செவ்விழி
இடையே ஒலி இல்லா
இசை மீட்டியது!
உன்
குழந்தைக் குரல் வீதியில்
நடமாட,
உன்
பிஞ்சு விரல் காற்றில்
அலைபாய,
'அப்பா' என்ற அழகிய
அடையாளத்துடன்,
நீத்தேன்- என்
பிறவிப்பயனை .