- பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பதிவுகள் இணைய இதழாளர்களுக்கு எனது இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .....தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்றான நீலகிரியில் வசிப்பவன் நான். எங்களது குடும்பத்தார் இலங்கையின் மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ......அதன் நினைவாக இந்தக் கவிதை..... -
களிமண்ணால் சுவரேற்றி
கல்மூங்கிலால் கூரை அமைத்து
செம்மண் ஓடால்
கூரை வேய்ந்தது
எங்கள் வீடு .....
கடுங்குளிர் கனமழை
சுடுவெயில் அடர்பனியிலிருந்து
பாதுகாத்தது
எங்கள் வீடு ....
ஆந்தை அலற நரி ஊளையிட
யானை பிளிறி நிற்க புலியோ உறும
கரடியின் கத்தலில் இருந்தும்
முப்பதாண்டுகள் முழுமையாய் காத்த வீட்டை
முற்றாக மறந்து
கான்கிரீட் வீட்டுக்கு காலடிவைத்த போதும்
கலங்காமல்
வாழ்த்தி வழியனுப்பியது
எங்கள் வீடு .....
ஓத்தையாய் இருந்தவீட்டில்
ஓயாத மழையடிக்க
மண்ணோடு மண்ணாய் மறைந்து
போனது எங்கள்
மனம் கவர் வீடு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.