1. குறுங்கவிதைகள்
1.
அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......
ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!
2.
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!
உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!
2. வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
1.
உன்னை ....
பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......
மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....
அதனால் நான் அடிக்கடி இறந்து ....
பிறக்கிறேன்..........!!!
உன்னை......
பிரிந்து வாழ்வதை காட்டிலும்.....
இறந்துவிடுவது நன்று என்று ...
அடிக்கடி ஜோசிப்பேன்.....
உன்னை அது காயப்படுத்தும்....
உன் வாழ்நாள் முழுவதும்....
உன்னை கொன்று விடும் என்பதால் .....
நான் கொஞ்சம் கொஞ்சமாய்....
இறக்கிறேன்.....!!!
2.
ஆசையாய்
வாங்கி கொடுத்த....
கொலுசை கழற்றி தந்துவிட்டாய்......
ஆசையாய் எழுதிய கவிதையை ......
கிழித்தெறிந்துவிட்டாய்......
இவை உனக்கு சடப்பொருள்.....
இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!!
கண்ணுக்குள் இருக்கும் - நீ
எப்போதும் மறையகூடாது ....
என்பதற்காக கண்ணே
மூடியதில்லை....
மூச்சு பயிற்சிசெய்ததில்லை ....
இதயத்தில் இருக்கும் நீ .....
மூச்சில்லாமல் தத்தளிப்பாய்....
என்பதற்காக......................!!!
3. ஹைக்கூக்கள் மூன்று!
என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்
முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்
வாழ்க்கை ஒரு சுமை
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.