எண்ணத்தில்
நல்லெண்ணம்
செயலில் நல்வடிவம்
வாக்கின் இனிமை
இப்படிச்சொன்னான்
வள்ளுவன்
ஆனாலும்;
மனதில் தூய்மை
வாக்கில் நேர்மை
காயத்தில் கட்டுப்பாடு
இப்படிச்சொன்னது
சித்தாந்தம்
கூட்டிப்பார்த்து
பிரித்தெடுத்தால்
அமைதியின் இருப்பிடம்
கேள்வியின் ஆரம்பம்
தனக்கான நீதிபதி
தன்னையறிவதற்கான
அளவுகோல்
மொத்தத்தில்
மனிதரின்
பரிணாம இடம்
மனசாட்சி
இதுதான் அறம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.