ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்
விடியும் பொழுதோடு ஒரு
வெளிச்சப் பொழுதென
மலரும் தீபாவளி அதனோடு
புலரட்டும் பொன்னான காலம்
தேசத்தின் காவலில் நின்று
நேசத்தின் வாயிலைத் திறந்து
பாசத்தின் முகத்திரை கொண்டு
வீசட்டும் வாழ்த்துக்கள் இன்று
இருளைக் கலைத்திடும் நேரம்
ஒளியை ஈந்திடும் காலம்
இல்லங்கள் தோறும் ஏற்றிடும்
உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்
கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்
அஹிம்சைகள் தழைத்திடவும்
புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு
எரியட்டும் தீபங்கள் இன்று
இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்
இரக்கத்தை மனதினில் ஏற்றி
இல்லாதோர் இல்லங்கள் தோறும்
இன்பத்தை இரந்திட வேண்டும்
வளமான வாழ்க்கையைக் கண்டோர்
வழங்கட்டும் கருணையை ஒளியுடன்
வருமிந்தத் தீபாவளித் திருநாள்
விளம்பட்டும் பொதுநலக் கருத்தை
அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்
அணையாது என்னுள்ளத்து தீபம்
அதுதானே மாறாத நேசம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நினைக்கும் போதே இனிக்கும் தீபாவளி!
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -
நினைக்கும் போதே
இனிக்கும் தீபாவளி
வருடத்திற்கு ஒருமுறை
உள்ளத்தைக் கிள்ளிச் செlல்லும்.
மக்களை ஒன்றிணைக்கும்
மந்திரச் சொல் தீபாவளி
ஏழையும் செல்வரும் துயர் மறந்து
உற்றார் உறவினர் மனம் திறந்து
பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து
மங்களத் தீபாவளியைக்
கொண்டாடி மகிவோம்!
அன்று
தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம்
இன்று
பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம்
நன்னாளிலும் சிதறுண்டு போனோம்
வேற்றுமையில்
தொடராய்த் தமிழினம்
கண்மூடிச் செல்வது
பல்லின நாட்டில் நமக்கு
இழப்புகள் மிகுதியாய்க்
கைகோர்க்கும்!
இருள் மறைந்து ஒளிதரும்
சீர்மிகு திருநாளில்
தமிழரினம் எழுச்சிக் கொள்ளட்டும்
சகோதரத்துவம் மீண்டும்
வீருகொண்டு எழட்டும்
ஒற்றுமையாய்த் திருநாளை
மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம்
தமிழர்கள் ஒற்றுமையாய்
வாழ்ந்து காட்டுவோம் மனதில்
உறுதி கொள்வோம் இந்நாளில்........!
பகை மறப்போம் பாசம் வளர்ப்போம்
ஒன்றுபட்ட தமிழரினம்
தலைநிமிர்ந்தே வாழவேண்டும்
நம்மை பிரிக்க நினைப்போருக்குச்
சொல்லி வைப்போம் விரைவில்
வெற்றித் திலகமிடுவோம்
ஒன்றுபட்ட தினமே உலகத்
தமிழர்களுக்குத் தீபத்திருநாள்..............!
தமிழர்கள் சிறந்தோர் ஆளப்பிறந்தோர்
தீபத்திருநாளில் நம்பிக்கையோடு
தீபத்தை ஏற்றுவோம் அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்ததுகள்............!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.