ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையின் 19ஆவது கூட்டத்தொடர் பற்றி உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை
[ மார்ச் 03, 2012 ] பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.