"முதலில் இந்தத் தலைமுறைகளை (முறை கிறை பார்க்கிற மரபுகளை ) ஒழிக்கணும்"சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே . இவற்றை இனம் கண்டு தான் இருந்தான். இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை. ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது. அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான். அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது.
சென்ற வாரம் தொலைபேசி அழைப்பில் பேசிய கணேஸ் ,"நான் ஒவ்வொரு நாளும் திருக்குறளில் ஒரு அதிகாரத்தைப் படிக்க தொடங்கி இருக்கிறேன்"என்றான். திருக்குறளில்,' அனைத்தும் இருக்கின்றன'என்பதை அவனும் கேள்விப் பட்டேயிருக்கிறான். இன்னமும் வாசிக்கிறதில் இறங்கவில்லை."நிலையாமை என்ற அதிகாரத்தை கணனி யூ டியூப்பில் திறந்து கேட்கத் தொடங்கினான். வாசிக்கப் பஞ்சிபடுறதை இப்படி கேட்கிறதும் பழக்கமாகி வருகிறது. அந்த ஒரு அதிகாரத்திலேயே வாழ்வை முழுதுமே அறிந்து விடலாம் தான். மனம் கேவிக் கொண்டேயிருக்கிறது. ஆனால்,அதில் அறத்தை அழுத்திச் சொல்லுறது…. மனத்தை ஆற்றவில்லை.
இந்த செய்தியை தங்கச்சி, இன்று அதிகாலை 5 மணி போல தொலைபேசியில் எழுப்பிச் சொல்லிய போது,எழுந்த அதிர்வுகளிலிருந்து இன்னமும் அவனால் மீளவே முடியிறதில்லை."இன்று அதிகாலை 3.00 மணி போல சந்திரமதியக்கா இறந்து விட்டாள்"என்றாள். பிள்ளைகளிற்கூடாகப் பரவி தெரிவித்துக் கொண்டிருக்கிறாள்.உள்ளம் கேவத் தொடங்கி விட்டது.அண்ணர் சொல்லுற மாதிரி ,அவள் உரிமையுடன் , அதேசமயம் ஒருவகைச் சிரிப்புடனும், ஆச்சிக்கணக்கில் பேசும் பேச்சுக்கள்...,"சித்திராக்கா,ரவியையும்,பாருவையும் விசேடமாகக் கவனிப்பா"என்று சிரிச்சுக் கொண்டே சொல்லுவாள். சித்திராக்கா, அவனுடைய அம்மா.அம்மாவை அப்படித்தான் கூப்பிடுறவையள். அதே போல அம்மாட தங்கச்சியான அவளுடைய அம்மாவையும் மாதுரியக்கா என்றே அழைப்பார்கள்.அவள் அம்மாவையும்,அப்பாவையும் இளவயதிலேயே இழந்து விட்டவர்கள்.தாய் இல்லாத தவிப்பைக் கொண்டிருந்தவர்கள்.அவர்களிலே எல்லாரும் பெண்கள்.இவள் மூன்றாவது ஆள்.அவனும் தங்கச்சிமாரும் வவுனியாவில் இருந்த போது,அக்காவும், அண்ணரும் அவர்களோட ஆச்சி வீட்டிலே (அம்மம்மா)இருந்து தான் நகரப் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள்.அம்மா ஆசிரியை .அம்மா அவனது சகோதரங்களுடன் பழகிற போது பெற்றறோரின் நினைப்பை ஏற்படுத்தி விடும்.பொறாமையுடன் பார்ப்பார்கள். பள்ளியில் நீள விடுற விடுமுறைகளில் எல்லாம் ஆச்சி வீட்டீலே டன்டோரா(சென்று) போட்டு விடுவார்கள்.வருசத்தில் ஒருமுறை வறன்ட் ரயில் டிக்கற்றுகள் (இலவச) கிடைக்கும்.ஒருவாட்டி அவர் வாங்க வேண்டியிருக்கும்.அவர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியையானவர்.பல்கலைக்கழகத்தில் படித்தவர்களிற்கு இவர்களை விட இருநூறு ரூபா அதிகமாகக் கையில் மாசச் சம்பளமாகக் கிடைக்கும்.அன்று அவருக்கு எண்னூறு மட்டிலே கையில் கிடைத்துக் கொண்டிருந்தது.ரயில் டிக்கற்றுக்கே கணிசமாகத் தேவைப்பட்டது.பலவித இறுக்கம்.ஆச்சி ஒருவாறு சமாளித்துச் செல்ல துணையாய் இருந்தார்.அதையும் சிரிச்சுக் கொண்டு சொல்லிக் காட்டுவாள்."சித்திராக்கா,அப்படி இருந்தது சரி என்று இப்ப தான் எனக்கும் பிள்ளைகள் வந்த பிறகு தெரிகிறது"என்பாள்.அப்படி நேரே கதைத்தாலும் வஞ்சகமில்லாத மனம் அவளுக்கு.
"சாந்தன் ,உனக்கு என்ன பிடிக்கும்?"என்று கேட்டு,கேட்டுச் சொன்னால், மினக்கெட்டு நின்று சமைப்பாள்.சமையல் கட்டில் நின்றவாறே ..."அவ இப்படி?,இவ எப்படி?....." என அனைத்தையுமே கதைத்து விடுவார்கள்.அவன் அக்காவிற்கும்,அண்ணருக்கும் கூட ஏச்சு விழும்.ஆனால் கோபமே வராது.அவனுடைய இன்னொரு அக்கா.இவவுடைய கடைசி தங்கச்சி விஜயாவும் இன்னொரு அக்கா தான்.வந்த புதிதில் அவனுக்கு சின்னமுத்து வந்து விட்டது.அவவுக்கு முன்னமே வந்து மாறி இருந்தது.அவவுடைய அப்பார்ட்மெண்டிலேயே மாறும் வரையில் இருந்தவன்.அம்மாட தங்கச்சியிட சகோதரம் வேற ,எங்கட சகோதரம் வேற இல்லை.அவனுடைய மூத்தக்காவுக்கும் அவனுக்கும்பிரச்சனை வாரதில்லை.சந்திரமதி போல வயதில் மூத்தவர்.அண்ணரோடு வந்து விடும்.அப்பவெல்லாம் காபாந்து செய்கிறவள் விஜயாவக்காவே .அண்னரை ஏசி விட அடங்கி விடுவார்.அம்மாவின் சகோதரங்களை ஏசுகிற போது மரியாதை கலந்தே இருக்கும். முகத்தை சிரிப்பில் வைத்தே பேசுவாள்.பாசமாகக் கதைப்பாள்.கண்களில் கண்ணீர் கோர்க்கிறது.ஆனால் , ஆச்சி வைக்கிற ரசம் பற்றிய இரகசியம் அவளிற்கு மட்டுமே தெரியும் அவளிடடம் மாயம் இருந்தது.இயக்கத்தில் இருக்கிற போது திருமலைத் தோழன் கறுவாட்டுக் குழம்பு வைத்தான் என்றால் சோறு எப்படி மறைந்தது எனத் தெரியாமல் முடிந்து விட்டிருக்கும்.அப்படி வைப்பான்.அதேப் போல ஆச்சியும் வைக்கிற ரசத்தோட மட்டுமே சாப்பாட்டை முடித்து விடலாம். அக்கா.அவன் போற நேரம் எல்லாம் ரசம் வைப்பார்.வந்த புதிதில் இங்கே பெடியள்கள் சமறியாகத் தான் இருந்தார்கள்.அக்காவோடத் தங்கி இருந்தாலும் சமறியில் இருந்த நண்பர்கள் இடத்திற்குப் போய் விடுவான்.அராலியில் அவனுக்குத் தெரிந்த அண்ணர் ஒருவர் தம் இரு மகன்களுடனும் தங்கி இருந்தார்.அவரின் மனைவியும் , மகளும் கிராமத்திலேயே இருந்தார்கள்.அவர்களிடமும் போவான்.அடுத்து சந்திரமதியக்கா வீடு அடிக்கடிப் போற வீடு.அக்காட முகவெட்டுடன் சிறிய மகளும்,மகனும் கூட அவனில் மரியாதையாக இருந்தார்கள்.அவர் கணவரும் பழக மிக நல்லவர்.
அவரோட அக்காவிற்கு விளங்காத இயக்கக் கதைகளை பேசிக் கொண்டிருப்பான்."இப்ப எனக்கு தமிழ் வாசிக்கிறதிலே இடறுபடுகிறேன்"என்று இடையே புகுந்து கூறிச் சிரிப்பார்."இங்கே ஆங்கிலம் தான் முக்கியம்.அப்படியே போனதாலே இந்த நிலை"என்பார்."ஆங்கிலம் தெரியாட்டி நல்ல வேலையும் இங்கே எடுக்க முடியாது"என அட்வைஸ் செய்யவும் மறக்க மாட்டார்.அத்தானுக்கு பழையப்பாடல்கள் கேட்பதில் அதிகம் ரசனை .அவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்த போதும் சேர்த்த பாடல்களையும் பத்திரமாக வைத்திருந்தார்.அவன், அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவேக் கூட அங்கே போய்யிருக்கிறான்.அவனும் பிரேமுமே அடிக்கடி அவர்கள் வீட்டே போறவர்கள்."நீயும் ,பிரேமும்(அவனை வயதில் குறைந்தவன்,சொந்தம் தான்)தான் வாரவயள்.மிச்ச ஆட்கள் வர பஞ்சிப்படுறவயள்"என்பார். பிரேம் சின்ன வயதிலிருந்தே ஆச்சி வீட்ட வார பெடியன்.யாரும்," வரப் போறேன்"என்று கேட்டால் "வாங்கோ"என்று வரவழைப்பாள்.அன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.அப்படியும் கூட அவன் அம்மாவோட ,அக்காவோடச் சேர்ந்தும் போய்யிருக்கிறான்.என்னவோ தெரியல்லை இங்கத்தைய குடும்ப வாழ்க்கை....சீராக இருப்பதில்லை.மற்றவர்கள் 'தங்கள் வீட்டுக்கு அழைப்பதில்லை என்ற மனத் தாங்கலும் ஏற்பட்டிருந்தது.அவன்,பிரேம் எல்லாம் "அக்கா"என்று உரிமையுடன் பிழங்கின வீடு. அவர்களோடு சேர்ந்து ஒரு தடவை பாரதிராஜாவின் "தாஜ்மகால் "திரைப்படம் முழுதாய்ப் பார்த்தான்."படம் நல்லாய் இருக்கிறது"என்றாள்.மலையாளப்படம் போலவும்,ஜெயமோகனைப் போல மாயாவாதமுமாக எடுக்கப்பட்டிருந்தது,சும்மா பார்க்கலாம் தான்.பிறகு,பிள்ளைகளும் வளர , மாற்றங்களும் வர , போவதும் இல்லாமலே போய் விட்டது.அவன் 'ஒருநாளாவது அவர்கள் வீட்ட போக வேண்டும் 'நினைத்துக் கொண்டிருந்தான்.நடக்கவில்லை.இனி ,நடக்கவே முடியாது அவர் பேச்சையும் கேட்க முடியாது. அவளைப் போலவே அவன் மகளுக்கும் கண்ணால் பேசிச் சிரிக்கும் தன்மை இருந்தது. எல்லாமே விரைவாய் விடை பெறுவதற்காய் தாம் இருக்கின்றனவோ?அவனையும் கடவுள் நல்ல மாதிரிப் படைக்கவில்லையே விசாரமாய்யிருக்கிறது.எழுதி,எழுதி,அந்த எழுத்தில் அவர்களை அதிலாவது உயிருடன் பார்க்க முடியுமா?என்று கிறுக்கித் தோற்று தான் போனான்.உள்ளம் கிடந்து கேவி அழுகிறது.அம்மா,மாமாமார்,மச்சான்,நண்பர்,மகள்,அக்கா...இன்னும் எத்தனை, எத்தனைப் பேர்களோ..?
.சிறுபிராயத்தில்,வவுனியாவில் அவனில் அக்கறையாய்,அன்பாய் இருந்த அக்காவிற்குப் பிறகு,அவனில் அதிக அன்பை செலுத்திய அக்கா இவரே.குழந்தைப் பருவத்திலேயே (1 ,4 வயசு மட்டத்தில்) அம்மா ,ஆசிரியையாய் மாற்றல் பெற்று சென்று விட்டிருந்தார்.அப்பர் நிலவளவையாளராக இருந்தவர்.அங்கிருந்த பக்கத்து வீட்டுக் குடும்பமும் இளைப்பாறிய நிலவளவையாளர்க் குடும்பம்.அவர்களின் வளர்ந்த பெண்களிற்கு அவனுடைய வீட்டுச் சிறுசுகளில் அளவுக்கு மிஞ்சிய பாசம் ஏற்பட்டு விட்டது. அன்று,அக்காவும் ,அண்ணரும் கூட சிறுசுகள் தான்.அவர்களிற்கு நாடகம் பழக்கினார்.சாந்தனுக்கும் , தங்கச்சிமாருக்கும் சித்திரம் வரைய பழக்கினார்கள்.மடியில் வைத்து பேசி வரையும் போது தாய்ப்பாசம் கூட தோற்று விடும் போல இருந்தது. இன்று அவர்களின் முகம் நினைவில் இல்லை.
ஆனால் 'நிலவளவையாளர்' குடும்பம் என்றது அவர்களுள் ஏற்படுத்திய மாற்றங்கள் அளப்பரியது.பிறகு அந்த வீட்டில் வேற,வேற குடிதனங்களும் வந்து மாறி விட்டன. வளர,வளர யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிற்கும் கிடைக்கிற நீள விடுமுறை நாள்களில் எல்லாம் செல்கிற போது.அங்கே இருக்கிற சந்திரமதியக்கா,அறிவு தெரிந்த நாளிலிருந்து அவனிலே அதிக வாரப்பாடாக இருந்ததே தெரிந்தது .அவருடைய வட்ட முகத்தில் இருந்து விழிக்கும் கருணை பொழியும்,மகிழ்ச்சியான அதே கண்களை இவன் பிறகு,இயக்கத்தில் இருந்த போது கமலியிடமும் பார்த்தான்.அதாவது, இயல்பிலே சந்தோசமாக இருக்கிற கண்கள் மற்றவர்களையும் கலகலப்பாக்கி விடுற தன்மைக் கொண்டவை.ஆனால் ,சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததில், அவள் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.'மேக்கப்'பிற்கு ...ஜோக்ஸ் எல்லாம் நிறைய இருக்கிறது.அவள் முகத்திற்கு பவுடர் பூசுறதை விட்டு விட்டாள்.அவளைப் பார்த்து சாந்தனுக்கும் பவுடர் அலர்ஜியாய் வந்து விட்டது.இங்கே ,வந்த போது உணவகத்திலே வேலை தொடங்கியது.அங்கே அண்டர் ஆம் எல்லாம் பூசச் சொல்லி விதிகள் இருந்தன.குளித்துச் சுத்தமாய் இருந்தால் போதும் தானே.இந்தப் பூச்சுகள் எல்லாம் பிடிக்காததால்...அவனுக்கு உணவக வேலையே பிடிக்காமல் இருந்தது.வேலை மாறி விட்டான். உலகத்தில் எவருமே தனிமையானவர்களில்லை.உள்ளத்தில் சதா வளைய வந்து கொண்டுதானிருந்தார்கள். .ஆனால் விடுதலையில் இயக்கங்கள், சகோதரக்கொலைகளை முன்னெடுத்து அவற்றை உடைத்தெறிந்தது ஒரு கர்மம்..தோழர் யார்?,எதிரி யார் ?எனத் தெரியாமல் குழப்பி அடித்து விட்டார்களே.
நேரிலே .. உறவுகளோடு இருந்து ஆறுதலாய் ,திருப்தியாய் கதைக்கிற சந்தர்ப்பங்கள் தான் கிடைக்காமல் போய்க் கொண்டேயிருக்கின்றன.அப்படி தவற விட்ட மகிழனின் அம்மா,ராஜா...என சிலரோடு கதைக்காமலே இறந்தும் போய் விட்டார்கள். தனியவாவது போய் இவன் சந்தித்திருக்கலாம் தான்..! கடைசியில் ,இப்படி கிடந்து அங்கலாய்க்கிறவன் .இப்ப, அதே போலவே சந்திரமதியக்காவுடன் கதைக்காமலே போய் விட்டதால் .மனசு கிடந்து துடிக்க அழுகிறது….இந்த மெளன அழுகைகள் அவனுள்ளே அடங்கிப் போகப் போறது தான்.
சுயத்தில் , நண்பர்களின் வளர்ச்சியைப் பார்த்து அவன் அப்படியாகவில்லை,இப்படியாகவில்லை என்ற ஆசைகள் சில கிளறும். தோல்வியைச் சந்தித்ததால் மனம் கிடந்து அடித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அந்த உயர்வு,தாழ்ச்சி அவனை அழுத்தமாக வருத்தவில்லை என்றே படுகிறது.வானொலியில் புலம் பெயர்ந்த நாட்டில்,அவனுடன் படித்த சிங்கராசாவின் பல் கிளினிக் பற்றிய விளம்பரத்தைக் கேட்கிற போதெல்லாம்...தோல்வி, முள்ளு கணக்கில் குத்திக் கொண்டே இருக்கிறது.குறைந்த கால நீட்சி கொண்ட மனித வாழ்வில் பொறாமைக் கொள்வது ஏராளம். ஆனால் சேவை வேலையில் எல்லாமே உடலுழைப்பற்ற நீண்ட சலிப்புகள் விரவியேக் கிடக்கின்றன.கிடைக்கிற பணத்தைச் செலவழித்து கெளரவம்,மேல்த்தட்டுத் தன்மை எனக் கிடந்து அந்த சலிப்பை மறக்கக் கற்றுக் கொள்கிறர்கள். வேற ஒன்றுமில்லை சாதியிலும் கூட இப்படித் தான் உயர்வு நவிழ்ச்சிகள் ஏற்படுகின்றன என்பது புரியிற மாதிரியும் இருக்கின்றது. பிறகு, தட்டுகளில் வாழ்றதே விதிகளாகி விடுகிறன.
இருக்கிற போதே... ஒரு நொடியில் மூச்சை நிறுத்தி விடுற நிலையாமை வாழ்க்கையை உணராது கட்டுற ஆசைகள்; கோட்டைகள் எத்தனை,எத்தனை? அதிலேயே வீணாக அர்த்தமேயற்று விரயமாகிற வெறுத்துப் போன நாழிகைகள், அதிகரித்துக் கொண்டே போகின்றன.
முதலாளித்துவ முறையில்லாத இடதுசாரி அரசாட்சியில், பழைய சோவியத் யூனியனில் உள்ள மக்களிடம் இந்தளவு மனசடிப்புக்கள் இருந்திருக்கவில்லை போலவே படுகிறது. எப்படித் தான் இருந்தாலும் நாடுகளைப் பிடித்து காலனிப்படுத்துவதும்,அல்லது சிறுகச் சிறுக அதன் நிலங்களை கையகப்படுத்துறதும் சோவியத் யூனியனில் இருந்ததில்லை.முதலாளித்துவ சபலத்திற்குள்ளாகிய நாடுகள் இதன் பேச்சை செவி மடுக்காத போதும் , அது தனி ராஜ நடையே போட்டிருக்கிறது.
சீன இடதுசாரியின்,அகண்ட சீனா என்பதும் நில கையகப்படுத்துறதும் இலங்கையின் காலனிப் படுத்துவது போலவே இருக்கிறது,
சோவியத் யூனியனில் அப்படியான ஒரு வஞ்சகம் நிலவவில்லை.சுயநிர்ணய உரிமையை இரத்தமின்றி,பலப்பரீட்சையின்றி வழங்கிய அதன் தன்மை எந்த ஒரு பெரிய சிறிய நாடுகளிலேயுமே இருக்கவில்லை. அபிரகாம் லிங்கன் கறுப்பர்களிற்கான வழங்கிய உரிமையை போல,காந்தியின் பாதையைப் போல.... இந்த சுயநிணயமும் எண்ணப்படக் கூடியதே.
கீரிமியாவைக் கூட இந்தியா,கச்சதீவை இலங்கைக்கு அளித்தது போலவே வழங்கி இருந்தது. தற்போது,அதன் மாறுபட்ட போக்காலே தனியாக்கி விட்டிருக்கிறது. இன்றைய இலங்கை, கச்சை தீவில், எத்தகைய அலங்கோல ஆட்டம் போடுகிறது;போடும் ...என்பது நிதர்சனமாக இருக்கிறது. இந்தியா,கண்டிக்காமலே ...வெறுமனே கைக்கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டே நிற்கிறது.
மார்க்ஸ்ஸின் வழியில் நடந்த லெனிசம் தோற்றுப் போகவேயில்லை.பண நோட்டுகளைக் கையில் சேர்க்கும் ஆசைகளில்,சபலத்தில் வீழ்ந்ததாலேயே மக்களால் இன்று நலிவு குன்றி இருக்கிறது.லெனினைப் போல தலைவர் வருகிற போது அதன் பீடுநடையை மீளவும் பார்க்கலாம் .ஆனால் அவன் நாட்டில் , ஒரு இயக்கம் தீவிரமாக போராடி மற்றைய இயக்கங்களை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளி இருக்கின்றது.'மேலாண்மை' என்பது ஒட்டிக் கொண்டு விடுகிற நோய் போல இருக்கிறது.மற்றயவற்றை அவ்வியக்கம் "ஒட்டுக்குழு;துரோகக் கும்பல்;சமூக விரோதக்குழு ...."என்று அர்ச்சனை செய்திலிருந்து அது இன்னமும் வெளிய வரவில்லை . ஒட்டு மொத்த இயக்கங்களும் இணைந்த ஓரமைப்பாகி இலங்கையின் அரசியமைப்புச் சட்டங்கள் போல ஒருமித்தக் கொள்கைகளை,இங்காலேயும் ஒர் அரசியமைப்புச் சட்டங்களை ஏற்படுத்தி இருக்கவில்லை.மற்றய அரசியல் கட்சிகளுடனும் பயணிக்க வேண்டியிருந்தாலும் இவர்களுக்கிடையிலிம் ஒர் உறுதியான இணைவும் வேண்டாமா?இன்னமும் விலகலுக்குள்ளாகியே இருக்கின்றன.போராடிய குழுவை நர வேட்டையாடியது போல அரசு போர்க்குற்றங்களைப் புரிந்து முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றது.அகதி முகாம்களிலும் , சிறைகளிலும் இஸ்ரேல் கிடக்கிற மக்களுக்கு போர் முடிந்து பத்து வருசங்களிற்கு மேலான போதிலும் விடியல் கிடைக்கவில்லை.83 ஜூலையில் சிறையில் கொன்றது போலவும் கொன்று தள்ளி இருக்கிறார்கள்.யார் இருக்கிறார்கள்?யார் இல்லை என்ற விபரமும் தெரியவில்லை.பல அரசுகள் மாறி விட்டன.இராணுவ இரகசியங்கள் அரசியல்ப்பிரிவுகளிற்குத் தெரிவதில்லை.கையையே விரித்துக் கொண்டிருக்கின்றன.
சாந்தன், இப்படியும் யோசித்துக் குழம்பிக் .கொண்டுமிருக்கிறான்.
பொதுவாக மக்களுக்கு சோவியத் யூனியனில் கையில் கிடைக்கிற பணத்தின் அளவு குறைவாகவிருக்கின்றன என்ற பயம் இருக்கிறது .வீடு,சூழல்,சுகாதாரம் எல்லாம் வசதியாய்க் கிடைத்தாலும் மனிசனுக்கு கையிலும் பணமும் (அதிகமாக) பிழங்க வேண்டும். இந்த பலவீனத்தை விட முடியாதவனாகவே இருக்கிறான்.எனவே தான்,பல வசதி வாய்ப்புகளைக் குழப்புற வாழ்வை நோக்கியே ஓடுகிறான்.அப்படி மனம் குழம்பிறது தான் வாழ்க்கையும் என்கிறான்.
இக்கரைக்கு அக்கரைகள் பச்சை!.
சாந்தனுக்கு முதலாளித்துவம் என்றுமே பிடித்ததில்லை.பணமில்லை முக்கியம் !, .அறிவியல் பாதையில் கல்வி பயணிக்க வேண்டும்,அன்பில் வாழ்வு பயணிக்க வேண்டும். பயணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். படிக்கிறது ஒன்று,செய்யிற வேலை இன்னொன்று.ஒரு சறுகல் ஏற்பட்டாலும்...அதன் தொடர்ச்சியிலேயே கல்வியும் தொடர வேண்டும்.என்பது அவனது ஆசை இவன் உயிரியல் படித்தவன், பிறகு கட்டிடக்கலையைப் படிக்கிறான்.அப்படிப் படித்தும் அதிலேயும் வேலை வாய்ப்பே இல்லாது செய்யிற இனப்பிரிபாடு நாட்டிலே இருந்தான்,வெளியிலும் அப்படியே !
அவனுடன் நகரப் பள்ளியில் படித்த நசிர் "எங்கட வகுப்பிலே நான் மட்டும் தான் நோர்வே சென்றாலும் கூட மைக்கிரோ பயோலஜியிலே, அதன் தொடர்ச்சியைப் படிக்கிறேன்"என்று இலங்கைக்கு விடுமுறையில் திரும்பிய போது கொழும்பு பஸ்ஸில் சந்தித்த போது கூறிச் சிரித்தான்.தன்னுடைய பெண் தோழியைக் காட்டி இவவைத் தான் பிறகு மணமுடிக்க இருக்கிறேன்.பார் !,யார் என்று தெரிகிறதா?"என்றும் கேட்டான்."உன்னோடு டெக்கிலே படித்தவள் தான்.சாந்தி "என்றான்.ஒல்லியாய் இருந்தவள்.அவன் சொன்னதும் உண்மை தான் எ.லெவலில் உயிரியலில் படித்த போது எண்ணி ஆறுபேர் தான்.பல்கலைக்கழகம் சென்றார்கள்.மிச்ச எவருமே இவனைத் தவிர உயிரியலில் தொடர்ந்து படிக்கவே இல்லை. அவனுடன் படித்தவர்கள் சிலர் அவனுக்குத் தெரிந்தவர்களையும் மணமுடிக்கிறார்கள். நண்பர்களைத் தொலைத்த வாழ்க்கையை அகதி நீரோட்டம் இழுத்துச் செல்கிறது.முடிவில்லாத அஞ்ஞானவாசத்திலேயே அவனுக்கும் ,அக்காவைப் போல ஒரு நாள்...ஒரு திடீர் சாவு தான் நிகழக் கிடக்கிறது!.இலங்கையில் இருந்தால் அகால மரணத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிங்களப்பகுதியில், அன்றிலிருந்து இன்று வரையில் தமிழர் அதிகமாக படிக்கிறார்கள் என்ற பொறாமையிலேயே வேகிறார்கள். கல்வியில் எல்லாம் தரப்படுத்தல்ச் சட்டங்கள் வளர்ச்சிக் கண்டு கொடி கட்டிக் கொண்டு பறக்கின்றன. சிங்களமக்கள் , சதா பொய்களை நம்பிக் கொண்டே இருப்பதால் இன்றைய பேரவலப்போரிற்கும் … வந்து விட்டிருக்கிறது.
காலனியாட்சிக் காலங்களில் அந்நிலமை இருந்ததில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .பிறகு , நிறைய,நிறைய மாற்றங்கள். இனி அதைப் பேசி என்ன பயன்?,இவர்கள் கேட்கவா போகிறார்கள்; இல்லை , மாறவாப் போகிறார்கள்?
ஒருவருக்கு அடிப்படைவசதிகள் ஒப்பேற்றப்பட்டு விட்டால்....,இந்த பணத்தைக் கூட விட்டு, விடலாம் தான். நோட்டுக்களை விட்டு விட்டு ரேசன் சீட்டுக்கள் போல வெறும் சீட்டுகள் கொடுத்தாலேயே கூட போதும் தானே!.பணத்தை கண்ணால் கண்டவனுக்கு அதை விட முடியாத பலவீனம். முதலாளித்துவம், ஒரேயடியாய் மனிதனை பலவீனத்தில் வீழ்த்தி ஆழ்த்தியே விடுகிறது. இதிலிருந்து வெளியில் வர முடியாத அவர்களுக்கு குழப்பங்கள் குறைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.
சந்திரமதியக்காவின் பளிச்சென முகம்,மல்லிகைப் பூ கணக்கிலே மலர அவனுக்கும் தலை மயிரை வாரி "இப்படித் தான் இருக்க வேணும்"என்று அலங்கரித்து விடுவது ஞாபகம் வருகிறது.அவளுக்கு சூழ உள்ள எல்லாமே பளிச்சென அழகாக இருக்க வேண்டும்.கன்னத்திலே குழி விழுகிற அழகான அக்கா. சிரிச்சபடியே அன்பு இழையோடப் பேசுவாள்.அவனுக்கும் அக்காவின் சந்தோசம் தொற்றிக் கொள்ளும்.
பின்னணியில்,யார்ர வாழ்க்கை தான் சீராக இருந்திருக்கிறது? .பெற்றோர் சிறப்பில்லாது குடும்பப் பிரச்சனை,வறுமைகளை குத்தகைக்கு எடுத்தவர்களாக இருந்து,இடையிலே விடை பெற்றுச் சென்று விடுபவர்களாக இருந்தால் , நாம் என்ன செய்ய முடியும் ?, நாமும் அதற்காக ஏன் முகத்தை தூக்கி வைத்திருக்க வேண்டும்?.அவளுக்கும் அதே பாரதியின் சிட்டுக் குருவியின் சந்தோசம் நிறைய இருந்தது.
ஒவ்வொருவருமே தம்மை விடவும்,முன்னவர்க்கும் கிடைத்ததை விடவும் அதிக சந்தோசங்களை பிள்ளைகள் பெற வேண்டும் என விரும்புகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தானே நம்மவர்களிற்கு .அடிப்படைகளே கனவுகளாகக் கிடக்கின்றன. நடைமுறைகள் தடைகளாக இருக்கின்றன. அவனை விட நாலோ,ஐந்து வயசு கூடின அக்காவாலே எல்லாத்தையுமே எடை போட்டு விடவும் முடியுமா,என்ன?. அவளும் இலங்கையிலேயே இருந்து , படித்து ஒரு வேலையும் கிடைத்து பார்க்கிறவளாக இருந்தால் இன்னம் நல்லாய் இருந்திருப்பாள்.
அவன் ஆசையும் அது தானே !. அப்படி இருக்கத் தானே விரும்பினான்.கூடப் படித்தவர்கள் வெளிநாடு போற போதெல்லாம்,"டேய், படித்து ,படிக்கிற படிப்பாலே இங்கேயே நல்லாவே இருப்பேனடா"என்று கூட சவாடல் பேசினானே!ஆனால், ,இருக்க முடிந்ததா ? . "காணி உரிமையை கையளிக்க மாட்டேன்.மாகாணவரசுப் பொலிஸ் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்."சரி வேண்டாம்.இலங்கையரசின் கீழ் உள்ள அமைச்சுகளிலேயே இருக்கட்டும்.கல்வியும்,சுயபல்கலைக்கழகங்களும் ,வேலை வாய்ப்புகளை வழங்கிற விசயங்களை மாகாணவரசிலே விட்டு விடலாமல்லவா!தவிர அரச நிர்வாக அமைப்புகளான கிராமசேவகர்,உப அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர் எல்லாம் எதற்கு?மாகாண அரசாங்கம் என்று ஒன்று தான் இருக்கிறதே,ஏற்கனவே பிச்சைக்கார நாடு இது ! ஏன், வீணான அரச கட்டமைப்புகளாக இரண்டு அரசாங்கங்கள்?, பிறகு மாகாணவரசு எதற்கு? முட்டாளுடன் முட்டாளாக இழைந்து தான் வாழணுமா,என்ன நியாயம் இது?. எங்கேயோ கண் காணாத தேசத்தில் எல்லாத்தையும் தொலைத்துக் கொண்டு...என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்?.அழுகிற மண்டபத்தில் இருந்து அழுகிய இலங்கையரசையும் திட்டோ,திட்டென ஒரு பாட்டம் திட்டித் தீர்க்க வேண்டும் போல ஆத்திரமும் இருக்கிறது. பிரசரும் அப்பப்ப ஏறுகிறது.
டிஸ்னி உலகத்தில் இருப்பது போல, அங்கிருக்கிற போது அக்கா,பென்சிலால் மினக்கெட்டு, மினக்கெட்டு சதுரம் சதுரம் போட்டு ஒவியர் ஜெயராஜா,மாயாவின் ஒவியத்தை அப்படியே அச்சொட்டாக பிரதி எடுத்தது போல வரைவாள். அப்படி ஒரு திறமை அதில் அவளுக்கு ஒரு சந்தோசம். அன்று எம் கைகளில் கிடைத்த சஞ்சிகைகளில் இவர்களின் படங்களே பெரிதாகவும்,சில கலரிட்டும் வந்தன.மற்றய சஞ்சிகைகள் எங்கே கையில் கிடைத்தன?. கிடைப்பதில்லை.ஓரிரண்டாக, இதுவும் இரவல் வாங்கி கீறிய பிறகு கொடுத்து விடுகிறது தானே இருந்தது. அந்த சஞ்சிகைகளையும் வாசிக்கிறதாலே கூட அவனுக்கும் வாசிக்கிற பழக்கம் வளர்ந்திருக்கலாம்.."ஆனால் வரைபுகள் அந்த மாதிரி இருக்கும்!".அது அவளின் பிரதான பொழுது போக்காக விளங்கியது.
கடைக்கு என வெளியில் போற போதெல்லாம் அவனையே கூட்டிப் போவாள்.அதற்குத் தான் இந்த மிகை அலங்கரிப்புகள்.சின்ன வயசில் இனிப்பு,பிஸ்கட்டுகள் தந்தாலே குட்டீஸ் வளர்ப்பு பிராணி போல ஒட்டி விடுவார்கள்.குழந்தைப் பிராயமாக நடக்கும் , பேசும் தறுவாய்யில் இருந்தால் அம்மா யார்,அக்கா யார் ?என்பதே தெரியாமல் இருக்கும்.அன்பான அக்காமார்கள்,மற்றும் அம்மாவின் சகோதரர்களும் அவர் தம் பிள்ளைகளும் இவர்களைப் போல நெடுக வந்து தங்கிற,பழகிற அம்மம்மா வீட்டிலே கலகலப்புக்குக் குறைவில்லை தான்.அங்கே, ஒருவித கூட்டுக் குடும்ப நிலையே நிலவி வந்தது.
அப்படி பிழங்கிற யாழ்ப்பாணத்தை பட்டிணமாகவும் வவுனியாவை பட்டிக்காடாகவும் தெரிய வாழ்ந்தவர்கள் தாம் சாந்தனும்,தங்கச்சிமாரும்.அண்ணனும்,அக்காவும் 6ம்,7ம் வகுப்புகளிலிருந்தே நகரப்பள்ளிகூடங்களில் படிக்கிற பட்டணவாசிகளாகி விட்டிருந்தனர். .பட்டிக்காடாக இருந்து இழுபட்டவர்கள் அவனும் தங்கச்சிமாரும் மட்டுமே.
அக்கா,அண்ணாவாலே அம்மாவிற்கும் ஆச்சி வீட்ட போய் வாரது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது.
மல்லிகைச் செடிகளிலிருந்த பதியங்கள் நல்ல செழிப்பாக வளர வேண்டுமானால் அறிவியலான கவனிப்புகளும்,விவசாய அறிவும் கூடுதலாகத் தேவை.வெறுமனே அம்மா,அப்பா,குரு தெய்வம் எனச் சொல்லுற அன்பையும் ,ஆதரவையும் காட்டுறவர்களாக இருந்து விட்டால் மட்டும் போதாது.இலங்கையிலடிப்படையிலான வீடு ,வேலை,...என இருப்பதோடு சுதந்திரமான மனித அடிப்படை உரிமைகளான பேச்சு,எழுத்து,செயல்களும் அவசியம் அல்லவா.இனவாதிகளின் குறுகீடுக்கள் அதிகமாக இடையூறுப்படுத்துவதால் குழப்பப்பாடுகள் சம்பந்தப்பட்ட அனைத்து வாய்ப்புகளிலுமே வைரஸ் போல படர வைத்து விட்டிருக்கிறார்கள்.இப்ப ,அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு ரேசிசம் போய் விட்டிருக்கிறது.ஒரு நாட்டின் அரசு நல்லாய் இல்லா விட்டால் குடிகள் சந்தோசமாகவே இருக்க மாட்டார்கள். குறிப்பாக அன்னியப்பட்டு இருந்தால் படு மோசமாகவே இருக்கும்.இலங்கை,அப்படியே,கிடக்கிறது இருக்கிறது.அரசியல் தான் இனத்தில் கவிழ்ந்து போய் விட்டதே.சமூகமாவது, ஒழுங்காய் இயங்குதென்றால்….அது பழைய போக்கிலே தலைமறைகளிலே இயங்கிறது.இன.மத,மொழி.. என பிரச்சனையாய் எதுவும் கவியட்டும். நம்மவர்களும் தலை மறைகளை(முறை மரபுகளைக் கடைப்பிடித்து வாழ்வது,கல்யாணம் கட்டினால் எங்கட ஆட்கள்,உங்கடயாட்கள் என்ற அட்டவணையில் ... ஒவ்வொரு விசயங்களையே கடைப்பிடித்தல்)மாற்ற முன்வருவதேயில்லை.அதைக் குறித்த சிந்தனைகளைக் கூட எழுப்புவதில்லை ""யாழ்ப்பாணத்தில் பலமாக சாதிப் பிரச்சனைகள் கதைக்கப்படுகிறன"வேலில் கிடக்கும் ஓணான் கணக்கில் எதற்கும் நிபந்தனைகள் போட்டுக் கதைக்கும் இலங்கையரசும் அதைக் குறித்தும் பொன்மொழிகள் உதிர்க்கின்றது.அதோடு சேர்ந்த (கட்டமைக்கப்பட்ட) சிங்கள அமைப்புகள், பைலா பாடல்களைப் பாடி குத்தாட்டங்களும் போட்டு நக்கலாக வேறுக் கதைக்கின்றன. ரேசிசத்தில் உயர்வு , தாழ்வு இல்லை.எல்லா ரேசிசமும் ஒன்று தான். உள்ளேயும் சரி,வெளியேயும் சரி அது யாருக்குமே சரிவர புரியிற மாதிரியும் தெரியவில்லை.
தலை மறைகளைக் கதைக்காது சாதிப் பிரச்சனைக் கதைப்பது போல,இவர்களும் தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கதையாது மற்றைய பிரச்சனைகளை இழுத்து,இழுத்துக் கதைக்கிறார்கள்.அதற்குள்ளும் (கதைக்கிற சொற்ப விசயங்களுக்குள்ளும் ) இன வாத அரசியலை புகுத்தி விடுற நரித் தன்மைகளும் அதிகமாகவே இருக்கின்றன.சிங்களப் பிரச்சாரம் சிங்களவர் மத்தியிலே மட்டுமே எடுபடுகின்றன. அவை தீர்வுகளை நோக்கி இராமல் பேராசைகளுடன் கலவரங்களைப் பெருப்பிப்பதாகவே தமிழர் பக்கம் இருக்கின்றன.சமானியன் பாலை,கள்ளை,சுண்ணாம்பை பிரித்தறிய அறிவற்றவன்.எனவே விவாதிக்கப் படுற பிரச்சனைகளில் எது என்ரப் பிரச்சனை என பிரிதறிய முடியாது குழம்பிக் கொண்டேயிருக்கிறான்.சாந்தனின் இளம்பிராய விழிப்புக்கு அண்ணரும் கூட ஒரு காரணம் "எதையுமே பாடமாக்கி,மனனம் செய்து படிக்கக் கூடாது,விளங்கிப் படிக்கணும்"என்று சொல்லிக் கொண்டே இருப்பான். மற்றது அவனுடைய குப்பைப் பேப்பரைக் கூட படிக்கிற வாசிப்புத் தன்மையும் இருக்கலாம் தான்.அவனுக்குத் தெரிகிற.வாழ்ற வாழ்க்கையின் வடிவத்தில்,கட்டமைப்பில் என்னவோ பிழை இருக்கிறது என்ற உள்க் குரலை அவன் அன்றே கேட்டுக் கொண்டிருந்தான்.
அது, அவனை மரதன் ஓட வைத்தது; ஓட்டத்தால் கண்ட புதிய இடங்கள்,ஊர்கள் சிந்திக்க வைத்தன. மரதன் ஓட போற போதெல்லாம் மக்களையும் புதிய பார்வையில் பார்த்தான். யாழ்இந்துக்கல்லூரியில் கால் வைத்த பிறகு கிராமப் பள்ளிக்கூடத்திற்கும் ,நகரப்பள்ளிக்கூடத்திற்குமிடையில் கிடந்த வித்தியாசங்கள் வேறு அதாள பாதாளத்தில் இருந்தன, தெரிந்தன.
படிப்பு,படிப்பு என்று துரத்திய ஆசிரியப் பிள்ளைகள் கற்க வேண்டியவை படிப்பை மட்டுமில்லை ,அப்படி வெளியில் சொன்னால் சிரிக்கும் கலாச்சாரமே எங்குமிருக்கிறது. நகரத்தில்,காலூன்ற (வெற்றிகரமாக படித்து வாரல்) சமுக மட்டத்தில் மட்டுமே என்றில்லாமல் இருக்க தட்டுப்பட்டவர்கள் தட்டுப்பட்டுக் கொண்டே போகிறவர்களாகவும் போய்க் கொண்டுமிருந்தார்கள்.அதைவிட இது நல்லது என்றாலும் ....முழுமையாகவும் (நல்லது ) இல்லை.
கிராமங்களில் சில சமூகப் பெடியள்கள் மட்டுமே விளையாட்டில் காலூன்ற,மற்றவை காலூன்றாமல் இருக்கின்றன..உயர்,தாழ் என்பதை விட சில சமூகங்கள் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன.நெசவுசாலைகள் இயங்கிய பகுதிகளில் மகளிர் அமைப்புகள்,திறமையாகவும் ,முறையாகவும் ஆடும் விளையாட்டுக்குழுக்கள்,சேவை அமைப்புகள் இயங்கின தான்.ஆனால் மற்றயவைகளுடன் சேர்ந்து இயங்கவில்லை.அங்கே நிலவிய வளர்ச்சி அவர்களுடைய கோடுகளிற்கு உள்ளே வரைக்கும் தான்.மேலே தாண்டிப் போகவில்லை.பொதுமை வெளியில் பயணிக்கவில்லை.கிராமம் சிறப்புற வேண்டும் என்ற சிந்தனைகள் ,தேடல்கள் அறிவுபூர்வமாக ஏற்படவில்லை. சில சமூகங்களில் கல்வி குறுக்கத்தி நிலையிலும் இருந்தன.
வெளி அரசியல், அரசாங்கங்களை இலங்கையரசு இயங்க விடாததால்,அவர்களின் பிற்கோக்குத்தனமான கொள்கைகளை அரச நிர்வாக அமைப்புகளும் அமுல் படுத்தியதாலும்...பிரச்சனைகள் ,பிரச்சனைகள் தாம் எங்கும்.!இது, ஒரு கொடூரம் பிடித்த சாபமாகவேக் கிடக்கிறது.
ஆனால், காலனிக்கல்வி மயமாக்கலின் உள்ளே இழையோடும் பேராசைகள் எல்லாம் அறிவை குருகத்திப் போக வைத்திருந்தன.பயன்பாடுகள் எப்பவும் இனச்சாயலில் பார்க்கப் படுவதால் என்னவோ அதன் பக்க விளைவுகளாக நன்மைகளும் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டு போய்க் கொண்டிருக்கின்றன.இலங்கையில் தமிழ்க்கல்வி மட்டுமில்லை, சிங்களக்கல்வியுமே சிறப்பானதாக இல்லை.அங்கே நடப்பது இலவசக்கல்வி இல்லை,டியூசன் கல்வி.ஆசிரியர்களும் குருக்கள் அல்ல,டியூசன் மாஸ்ரர்கள்.தமிழ்த்தரப்பிற்கு அடிப்படைச் சுதந்திரத்தை வழங்காத வரையில் அங்காலேயும் வளர்ச்சியை எதிர் பர்க்க முடியாது என்பது தான் யதார்த்தம்.
எனவே தான் சகல அமைப்புகளிலும் மாறுபட்ட கொலைத் தொழிலிலும் அதற்கான பைலோக்களுமாக பயணிக்கின்றன. இலங்கையரசின் வண்டில் பயங்கரவாதம்,அவசரகாலம் என்ற இரண்டுச் சக்கரங்களில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது.இரண்டில் ஒன்றை எடுத்து விட்டாலேயே குடை சாய்ந்து விடும். உலக நாடுகள் எல்லாம் ஆயுதங்களையும் ,இராணுவ ஊர்திகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பதால் ஒரு சண்டியப் படையுடனும் வண்டி ஓடுகிறது. இனப்பிரச்சனையும் தீராதப் பிரச்சனையாய் தமிழ்ப்பலிகளை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது
இந்த நிலையிலே சந்திரமதியக்கா உட்பட மற்றைய அக்காக்களுமே ஒவ்வொன்றாக வெளிநாடு போய்க் கொண்டிருந்தார்கள்.கடைசியாகப் போனது இந்த அக்கா தான்.அச்சமயம் அவனும் அம்மாவோடும் , சின்னம்மாவோடும் சந்திரமதியக்காவை விமானத்தில் ஏற்றுவதற்காக கொழும்பு சென்றிருக்கிறான்.இப்பத் தான் வறன்ட் டிக்கற்றுகளும் மிச்சமாய் இருக்கின்றதே. அக்காவை ஏற்றுவதற்காக மட்டும் செல்லவில்லை போலவும் தோன்றுகிறது. சின்னம்மா சென்றதில் நியாயம் இருக்கிறது.அவனும் அம்மாவும் சென்றது ஏன்? இப்பவும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.அப்படி சென்றிருந்தாலும் அண்ணரோ,அக்காவோ சென்றிருக்க வேண்டும்.அவன் சென்றது புரியவில்லை.வயதாகிறதில்லையா,மறதிகளும் வரலாம் அல்லவா.
திரும்பிய பிறகு, எடுத்த பழைய ஒ.லெவல் தமிழ்ப்பாடப் பரிட்சையில்,’ அவளை வழி அனுப்பிய அந்த அனுபவத்தையே’ கட்டுரையாக எழுதி இருந்தான். அதைத் திருத்திய எழுத்தாளர் அப்பச்சி அவனுடைய எழுத்து நடை, பாவிக்கப்பட்டச் சொற்கள் ,அவன் அம்மா டிக்கெற் எடுத்த விபரம் எல்லாம் வைத்து அவனுடைய பேப்பரை இனம் கண்டு விட்டிருந்தார்.அவனை வழியில் சந்தித்த போது "டேய் ,நீ எழுதியிருந்த கட்டுரை சுப்பரடா,'அ','சு'எழுத்துக்களைப் பார்த்து எழுதடா,உன்னாலும் நல்லாய் எழுத முடியும்"என்று சொல்லிப் பாராட்டினார். அவர் அவன் வகுப்பு தமிழ் வாத்தியாராக நெடுக இருந்தவர்.அவன் கிராமப் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிற காலத்திலேயே அக்கா,வெளிய போறது நடந்திருக்கிறது. அவன் என்.சி.ஜி.ஈ படிக்கிற போதாய்யே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தானே அந்தப் பரிட்சையில் தோற்றுகிறான்.
அவருடைய பாராட்டு தான் அவனை எழுத்தாளனாக்கி இருக்கிறது.இப்பவும் , அவன் தன்னை எழுத்தாளனாக கருதுவதே இல்லை.ஆனால் ,ஆசிரியர் வாக்கில் ஆசிர்வாதம் இருக்கிறது,சரியோ,பிழையோ அவருக்காக எழுதிக் கொண்டேயிருக்கிறான். எழுத்தில் இயக்கங்களின் செய்திகளை பிரதானமாக( தாராளமாக) நுழைக்கிறான். வெற்றிப் பெற்றால்....வரலாறு பதியப்படுகிறது. சரிந்தால் நட்டம் தான்.
இருந்தாலும் எழுதுகிறான்.ஒன்று இரண்டாவது கடைசியில் தேறும் அல்லவா,ஆசிரியரின் வார்த்தையை புறக்கணிக்க முடியாது . ஒரு வகை ஓட்டம் தான். “ஒரே ஒரு கதை நல்லாய் வந்து விட்டால் உனக்குள் எழுதும் ஆற்றல் இருக்கிறது, உன்னால் மறுபடியும் எழுத முடியும் தான்” என்கிறார் கணையாழியின் கடைப் பக்கத்தில்பிரபல எழுத்தாளர் சுஜாதா . அவர் சொல்வது போல” முதல் வெற்றி தற்செயலாக நடந்து விடுகிறதாய் இருக்கலாம்.அடுத்ததை வரவாக்க வைக்கிற போது உனக்கு பையித்தியம் இடிக்காமல் இருந்தால் நீ அதிருஸ்டசாலி தான்”என்றும் எழுதிச் சிரிக்கிறார் .
எங்கேயோ நிகழும் சம்பவம் , எங்கேயோ இருக்கிறதையும் உதைக்கும்.இது ஒரு கொள்கை.சரியாய் இருப்பது போலவும் இருக்கின்றது பலரின் சேவையில் சிரமதான வேலையில் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழர்களை இலங்கை இராணவம் ஒரே இரவில் வாகனத்தில் ஏற்றி கண்டித் தோட்ட வீதிகளில் இறக்கி விடுவார்கள்,அச் செயலால் ஒரு இயக்கம் அவ்விடத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர் மீது பழித் தீர்த்தால்அதற்காக குமுதினிப் படகில் பயணிக்கிறவர்களையும் இலங்கைப்படை பயங்கரமாக பழி வாங்கும்.எப்பவும் இலங்கைப்படை இரண்டு,இரண்டு வகை அனர்த்தங்களை புரிய,தமிழ்த்தரப்பு ஏதாவது குழு ஒரு அனர்த்தையே நிகழ்த்த திணறுவதாகவுமே சம்பவங்கள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன.சிங்கள ஊடகங்கள் ,படை நடத்திய தொடக்க அனர்த்தை மறைத்துக் கொண்டு ,மற்றைதையும் நாட்டுக்காக,தேசத்திற்காக நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு,தமிழ்த் தரப்பை வெளிச்சம் போட்டு கதைத்துக் கொள்ளுறதே,தொடர்கிறன.இங்கே யாருமே காந்தியும்மில்லை,புத்தருமில்லை,ஜேசுவுமில்லை தான்.ஆனால்,அரசின் கொடூரம் எண்பது வீதமாக எகிற ,இவர்களின் பத்து வீதமாக குறுக நடைபெறுகின்றன.தமிழ்த் தரப்பில் அதற்கெதிரான விமர்சனங்கள் பலமாக எழ,ஆயுதப்போராட்டத்தில், புனிதத் தன்மையிலும் வெல்லலாம் என்ற குருட்டு நம்பிக்கைகளும் வளர்கின்றன.இவை அறியாமையா? இல்லை அது தான் காந்தியத்தின் தொடக்கமா?தெரியவில்லை.காந்தியம் ஆயுதம் ஏந்துவதையே முற்றாகவே எதிர்க்கிறது. தமிழர் தரப்பில் நிகழ்வது ஒரு வகை ஆயுதம் ஏந்திய காந்தியப் போராட்டமாகவும் இருக்கிறது
அதே போல, ஒருவர் வாழ்வில் விடுகிற தவறுககளும் அந்த குடும்பத்தில் இருக்கிறவர்களையும் பிறகு பாதிக்கச் செய்யலாம்.இயக்கங்களின் தவறுகள் விடுதலையைப் பாதிக்கிறது போல ஒரு ஊடுபாவு, அக்காவின் வாழ்வையும் அசைத்திருப்பதாகப் படுகிறது.எமது குடும்ப வேர்களின் வரலாறை அறிய வேண்டும் என்ற 'அவா' அவனுக்கு எப்பவும் இருக்கிறது.மறைப் பார்வைகளும்,பலவிதப் பார்வைகளுமே ....சிங்கள அரசியல் வாதிகளைப் போல நிபந்தனைகளைப் போட்டுக் கொண்டு சுதந்திரமாக இயங்கி அந்த இலக்கை அடையவும் தடைப்படுத்துகின்றன. அனைத்து தமிழ்த் தரப்பையும் கல்வியில் ஒரு படி மேலானதாக்கினால் தான் பலவிதக் குறும் பார்வைகளும் அகலும் என அவன் நினைக்கிறான்.
பெல்ஜியம் நாட்டில் ஒரு பொழுது போக்காகாக கமராப் பார்வையில் சூழற் காட்சிகளை ரேஸ் பண்ணுறதை கணனியில் தற்செயலாகப் பார்த்தான்.பார்த்ததிலிருந்து அவனும் அதைப் போல ஒன்று செய்ய முயல்கிறான். முதலில் மனதில்,பிறகு செயலில் , சரி வருவாதாய்யில்லை.ஆனால் பெல்ஜியம் ,ரஸ்ஸியா போன்ற நாடுகளில் பொழுது போக்காக வென்றிருக்கிறார்கள். சரி வராமலாப் போகும். அல்லது ஒருவேளை தமிழ்த் தரப்பில் பொறியியலாளர்களின் உதவிகளைப் பெற்று தமிழ் அமைப்புகள் முயற்சித்தால் பாறைகளும் நகர்ந்து விடலாம் தான்.துல்லியமான காட்சிப் படிவங்கள் முக்கியமானவை.கணனியில்,சனல் நாலில் இடம்பெறும் காட்சிகளும்,மொழியும் சாதாரணச் சிங்களவர்களிற்கு செல்வதுமில்லை.சென்றால் கூட விளங்கப் போவதுமில்லை.ஒரு கொரர் மூவி.அவ்வளவு தான்.தமிழ்த் தரப்பும் கூட அந்நிலையிலே தான் இருக்கின்றது.
ஒரு அழகான வீட்டை எல்லோருமே பார்க்கிறோம்.அதை கட்டிடக்கலைஞரும் ,படம் வரைஞரும் புரஸ்பெட்டிப் பார்வைகளில் சினப் சொட்டுகள் எடுத்துப் பார்க்கவே விரும்புவார்கள். பெரும்பாலும் இரு புள்ளி புரெஸ்பெட்டிவ் பார்வையில் தான் பார்க்கப்படுகின்றன.மூன்று புள்ளைப் பார்வையில் பார்க்கிற போது அடிப்படைக்கோடு இருப்பதில்லை என்பதால் மேலும் குழப்பும். அதையே இந்த பெல்ஜியரும் ,ரஸ்யரும் கணனி இல்லாமல் கமராப் போன்ற பெட்டி ஒன்றை அமைத்து பார்த்து புரஸ்பெட்டிக் ஸ்கெட்சுக்களை வரைந்து தள்ளுகிறார்கள். பிறகு, அதை முழுமையான ஒவியமாக்குகிறார்கள்.
வரைகிற வரைபுகளில் சிறுபிள்ளைகளைப் போல கலர் சேர்ப்பதாக இருந்தாலும் சிறப்பான ஓவியங்களாகவே அமைந்து விடுகின்றன அந்த முறையில் வடக்கு கிழக்கில் படுகொலைகள் நிகழ்ந்த இடங்களை எல்லாம் ஒவ்வொரு திசைகளிலுமே முற்பது,முற்பது பாகைகளில் வைத்து மூன்று மூன்றாக புரஸ்பெட்டிப் ஸ்கெட்சுக்களை பல திசைகளிலும் வரைந்து எடுத்து விட்டு அதில் நடந்தக் காட்சிகளை அதில் சிறுபிள்ளைத்தனமாக செருகினால் (வரைந்தால்) கூட எவராலுமே இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். அதோடு ஒரு நேர்மையான சிங்களவரின் கருத்தையும் பெற்று,அதையும் வரைதலில் வரைந்து சேர்த்து விட்டால்…..அப்படி இலங்கையின் தமிழரின் வரலாற்று அவலங்கள் முழுதையுமே கொமிக்ஸ் டைப்பில் வரைந்து வரைந்து ரயில்,பஸ் பயணங்களில் பயணிக்கிற தமிழர் ,சிங்களவர் கைகளில் கிடைக்கப் பெற்று வாசிக்க வெளிக்கிட்டாலே அனைவரிலும் இருக்கிற குறுகிய பார்வைகள் அகன்று விடும்.
இன்றும் அவனுக்கு எல்லாம் 'இந்த சம்பவம் இந்த நேரம் இங்க நடந்ததா?மற்றயதும் கூட தொடர்ச்சியாக சற்று தள்ளிய தூரத்தில் நடந்ததா?'என்று துல்லியமற்ற, குழப்பமடைந்த செய்திகளாகவே விடுதலை வரலாறு கிடக்கின்றது . துல்லியம் படு மோசம். யாழில், படையினர் குண்டு வெடிப்பில் சிதறிய அடுத்த நாளே தான் மாதகல் காம்மிலிருந்து வெளியேறிய படையினரால் மனிதன் (பத்திரிக்கை)ஆசிரியர் விமலதாசன் ஊர்க்குக் கிட்ட சண்டிலிப்பாய் வீதியிலே சுடப்பட்டு இறந்திருக்கிறான்.அதே படையினரே மானிப்பாய் வீதியிலும் பஸ்ஸிலிருந்து இறக்கி மாணவர் சிலரையும், மக்களுடன் சேர்த்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.இதை அண்மையில் வாசிச்ச இணையக் கட்டுரை ஒன்றிலிருந்தே அறிய முடிகிறது.சிலவேளை இதைக் கூட திருத்த வேண்டியிருக்கலாம்.இப்படி நம்மவர்களிற்கே குழப்பம் இருந்தால் சிங்களவர் பார்வையில் மங்கி,மங்கி மங்கலாகி நூந்தே போய் விடாதா?
கட்டாயமாக தமிழ்த்தரப்பும் ஒரு விடுதலைக் களஞ்சியம் ஒன்றைத் தயாரித்தே ஆக வேண்டும். அது புத்தக,இணைய ,பத்திரிக்கை,துண்டுபிரசுர வடிவில் ...என எந்த வழிகளிலும் கைக்கு கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.துல்லியமான இலக்கு மட்டுமில்லை துல்லிய வரலாற்றுப் பதிவுகளும் மக்கள் விடுதலைப் பெற அவசியமானவை. உலகம் சுட்டுகிற போர்க் குற்றவாளிகளை அறிவதற்கு முதல் நிறைய குற்றவாளிகளை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமானது.துல்லியமாகஅமிர்தலிங்கம்,விக்கினேஸ்வரன் தலைவர்கள் சேர்க்கிற தகவல்களைப் போல சரி ப்பார்க்கவும் வேண்டும் .அப்படிச் சென்றாலே இனப்பிரச்சனையையும் சிங்களவர்களும் வெளிச்சப் பார்வைகளிலும் பார்க்கத் தொடங்குவார்கள். தமிழருக்கு விடியலுக்கான நேரம் வரலாம்.
இலங்கை ஜனாதிபதிகள் போர்க்குற்றவாளிகளை மன்னித்து,மன்னித்து வெளியில் விட்டாலும் கூட சிங்கள மக்களே எப்படியும் தண்டித்தும் விடுவார்கள். ஆசைகள் நிறைவேறாதா?
நேற்றுக் கூட சந்தரமதியக்காவும் வரப் போகிற சம்பளப் பணத்திலே குட்டி,குட்டித் திட்டங்கள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறாள்., " அடுத்த வருசம் இந்த நாட்டு அரசாங்கம் வழங்கிற முதியோர் சம்பளமும் சேர்ந்தால் கையில் பெரிய தொகை இருக்கும் ! .அதைச் செய்யப் போறேன்,இதைச் செய்யப் போறேன்" என அவளின் மூத்தக்காவோடு (என்னென்னவோ) கனக்க கதைத்தாளாம்.நேற்று இரவு ....கண்ணை ஓரேயடியாய் மூடி விட்டாள்.சாந்தனுக்கு கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
"நாங்கள் என்னவோவெல்லாம் நினைக்கிறோம். பத்து வீதம் தான் நடக்கின்றன.விடுதலையையும் ஆயிரம் வீதமாக நினைப்போம்.நூறு வீதமாக நிறை வேறுமல்லவா".நீண்ட பெருமூச்சுகளே வருகின்றன..வீதியிலே,பஸ்ஸிலே,இலங்கை நிகழ்த்திய பயங்கரவாதம் என்கிற பம்மாத்துப் போரிலே எல்லாம் கொட்டிய கொத்துக்குண்டுகளிலே ,அமெரிக்கா ரகசியமாக விற்பனை செய்தவை,பகிரங்கமாகவே தெரின்கிறன, ஆனால், சாட்சிகளை கொண்டு வரவே முடியாது,எனவே அரங்கமும் ஏறாது, பெரிய நாடுகளின் சண்டித்தனமும் ஒருபுறம் கிடக்க நடந்த பேரவலத்தாலும் மெளனமாக பெருகும் கண்ணீர் பராக்கிரம சமுத்திரத்தை விட பெரிதாகின்றது.…!
வாழ்வில், ஆண்,பெண்களுக்கிடையில் ஓடும் அன்போட்டங்களைப் புரிதல் கூட மோசமாக இருக்கின்றன. பத்து,பதினைந்து வீதமே தேறும் என்ற நிலை .அந்த புரிதலை அதிகரிப்பதற்காகவே பால்யப்பிராய மணங்கள் அறிமுகமாயின என்கிறார்கள்.அதிலும் உண்மை இருக்கலாம் போலவே படுகின்றன..பலரின் வாழ்வுகளில் கழன்று விட்ட புரியாமை தான் விலகல்களுக்கு காரணம் .மனிதர் அனைவருமே சந்தோசமாக நல்லபடி வாழ பிறந்தவர்கள் .ஆனால், மனிதனின் ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுமே கொள்ளை,கொள்ளையான மனித உயிர்களை அறுவடை செய்வதாகவே இருக்கின்றன. 96 இல் அலைபேசியே வந்திருக்கவில்லை.இன்றைய வளர்ச்சியைப் பார்த்தால் எதிர்காலத்தில் மனித இனமே இருக்காது போல பயமுறுத்துகிறது.வேற்றுக்கிரகத்தவர் வந்து ஒன்றும் நிகழ்த்தப் போவதில்லை,
இங்கிருக்கும் மனிதப்போலிகளே நிகழ்த்தி முடித்து விடுவார்கள் போல இருக்கிறது.ஆயிரம் புத்தர்கள் பிறந்தும் நிகழ்த்தாத அதிசயத்தையா இனிமேலும் பிறக்கப் போற புத்தர், நிகழ்த்தப் போகிறார்?
சிங்கள அரசுகள் புத்தரின் பெயரால் தமிழர்களை அறுவடை செய்கிறதை நிறுத்தியேயாக வேண்டும்.புத்தரின் அகிம்ஸை,ஜேசுவின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டல் எல்லாம் தமிழருக்கும் கூட இடைஞ்சலாக கருதுகிறார்களே.எதிரி, புராணக்கதைகளில் வார அசுரன்,சூரனாகவே இருக்கின்றான்.அவனின் பசிக்கு நரர்களைக் கொடுக்க வேண்டிய நிலையில்….. என்ன வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்?.
சந்திரமதியக்கா விசயத்திலும் சினிமாப்படங்களில் ஏற்படுற மாற்றங்கள் ஒன்றும் சடுதியாக நடைபெற்று விடவில்லை.அகதியாகி விட்ட (தமிழ்) மக்கள் எதைத் தான் பெரிதாய் எதிர் பார்க்கலாம்?.
உலகநாடுகள் , ‘ரேசிசம்’ அரசியலமைப்பிலே கட்டமைக்கப் பட்டு விடுகின்றன என்பதை ஒப்புக் கொள்கின்றன.ஆனால் பகிரங்க விசாரணைக்கு எவ்வமைப்புகளுமே தயார் இல்லை.லிங்கன்,ரூடோ போன்ற தலைவர்களின் பிறப்பிற்காக உலகம் காத்திருக்கிறது.
அதிசயம் நிகழ்கிறதோ,இல்லையோ மரணங்கள் மனதைப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன.சந்திரமதியக்காவின் உள் ஓலங்கள் சாந்தனின் காதில் கேட்பது போலவே இருந்தது.சாந்தனின் பிராயம் இப்ப மாறி விட்டது.புதியவர்களுடன் பயணங்கள் எனப் போய்க் கொண்டே இருக்கிறான்.பாடசாலைக் காலங்களில் ஒரு வகை நண்பர்கள்.பிறகு அந்த பழைய கல்லூரி மாணவர்களாகப் போனவர்கள் ,பல்கலைக்கழகட்திற்குள் பாய்ந்து மாறுபட்ட நண்பர் வளையம், தொழினுட்பக்கல்லூரி நட்பினர், அடுத்து இயக்கத் தோழர்கள் ...எல்லா அமைப்புகளுடனும் புலம் பெயர்ந்து மணமான பின்பு முன்னைய மாதிரி வளையவும் வர முடிவதில்லை.
சாந்தன் இப்படியேப் பயணித்தவன்.இயக்கங்களில் பெண்கள் சேர்ந்திருந்தாலும் கூட அவர்களை அச்சமயம் உண்மையிலே எண்ணி விடலாம் என்ற நிலையே இருந்தது.பெண் தெய்வங்களின் கைகளில் ஆயுதங்களை ஏற்றியது ஏன்?ஒரு பொருந்தாத் தோற்றத்தையே கொண்டிருக்கிறதே என்று சாந்தன் முன்னம் எல்லாம் யோசிக்கிறவன் மிக மோசமான சூழல்களின் போதே அவர்களின் கைகளிலும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் .அங்கே எல்லாம் ஒரு விடுதலைப் போராட்டமும் இருந்தது தெரிகிறது.
இந்து சமயம் ,சைவ சமயம் பற்றி புரிதலற்றே சின்ன வயதிலிருந்தே அவன் இருந்தவன். சைவத்தை ஒரு பாடமாகவே படித்தான். விவேகானந்தர்ப் பரீட்சைகளில் தோற்றினான்,தவிர ஒட்டுதல் இருக்கவில்லை..கோயிற் சிற்பங்களை, தூண்களைப் பார்க்கிறதில் அப்ப ஒரு ரசனை மட்டும் இருந்தது.மற்ற தோழர்களுக்கும் தான் ,அவ்வளவு தான் ! இப்பத் தான் புனிதர் தனிநாயகம் அடிகளின் நூலில் அவர் எழுதிய கட்டுரைகளைப் வாசித்தப் பிறகே இந்து சமயத்தைப் பற்றிய ஒரு தேடல் ஏற்பட்டிருக்கிறது.மனதை ஆற்றுப்படுத்த மதமும் தேவையாய் இருக்கின்றது.
அதற்கு முன்பு அராலியிலும் மாற்றம் பெற்று வந்த ஒரு கிருஸ்தவப் போதகர் ஒருவர்,தமிழ் இலக்கியம் பற்றியும்,சைவ சமயம் பற்றியும் சந்திக்கிற குறுகிய நேரத்தில் நிறைய பேசி இருந்தார்.என்.சி.ஜி.ஈ படிக்கிற மூட்டம்.ஆச்சரியமாக இருந்தது.புதிதாக வந்த அவரை சேர்ச்சிற்கு வாரவர்களிற்கு அவ்வளவாக பிடிக்காமல் இருந்தது.அங்கே இருந்த சேர்ச் கொன்சர்வேட்டிப் போன்ற புரஸ்டட்டண்ட் பிரிவினர்.கத்தோலிக்கர் தான் இப்படி பொதுவாகப் பேசுறவர்கள்.ஆனால்,ஒருமுறை அவர் சாந்தனிடம் குறிப்பிட்டார்"எங்களுடைய பாடசாலையில் இந்து சமயம் பற்றிய பாடமும் இருக்கிறது.தமிழ் மொழி ,இந்துசமய ஆய்வுக்கெல்லாம் நிதி உதவி அளித்து ஆதரவவும் அளிக்கிறார்கள்"என்றும் கூறினார்.
சாந்தனுக்கு நம்ப முடியாமல் இருந்தது.அச்சமயம் அவனுக்கு எச்சமயம் பற்றியும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லையே.ரஸ்ய நாவல்கள் வாசிக்கத் தொடங்கி இருந்த நேரம்.அப்போதகர்,எல்லா சமூகத்திலும் சேர்ச் இளைஞர்களைக் கூட்டிப் செல்வதால் அதிர்ப்தியுற்று அவரிற்கு எதிராக சேர்ச்சும் அபிப்பிராயம் கொள்ளத் தொடங்கி இருந்தது.விரைவில்,அவரையும் மாற்றி விட்டார்கள்.,
இந்தியனாமியின் துவக்கு அவரின் இரு சகோதரிகளையும் கூட விட்டு வைக்கவில்லை ,சுட்டுக் கொன்று விட்டது.அவர் அதை துணிச்சலாக ஊடகங்கள் வளியச் சொல்லிச் சொல்லி கவலைப்பட்டவர். அந்த நேரத்தில் அரசபடைகளைப் பற்றியோ,கழுகைப் பற்றியோ எவரும் கதைக்க முடியாத மாதிரியே இந்தியனாமியைப் பற்றியும் கதைக்க முடியாதிருந்தது. அதை சேர்ச்சுக்குள்ளாலே கேள்வி பட்டிருந்தான். சில்லாலைப் பக்கப் போதகர் ஜெயசீலனிடம் விமலதாசன் என்ற இளைஞன்,கிருஸ்தவ வாலிபர்சங்கத்தின் உறுப்பினன்"பாதர் உரிமைகளிற்குப் போராடு என்று தானே பைபிள் கூறுகிறது.தமிழர் பிரச்சனைக்கு போராட வேண்டியது அவசியம் அல்லவா?"என்று கேட்டதுக்கு அவர் "ஓம்"என்று பதிலளித்து வாலிபச் சங்கத்திற்கூடாக அவனுக்கு நிதியுதவி கிடைக்கவும் உதவியாய்யும் இருந்திருக்கிறார். லத்தின் அமெரிக்காப் போதகர்களும் இலங்கையிலும் இருக்கிறார்கள் ,ஆச்சரியமாய் இருக்கிறது.
இப்படி அவர்கள் நியாயத்தின் பால் நேர்மையாக நிற்கிறது மெய் சிலிர்க்க வைக்கின்றது.அவனுக்கு இந்து சமயம் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியவர்களே கிருஸ்தவப் போதகராக இருக்கிறார்கள்.கேட்க முரணாக இல்லையா?.புத்த சமயத் தலைவர்களால் ஏன் அப்படி அப்பழுக்கில்லாதவர்களாக , நேர்மையானவர்களாக இருக்க முடியவில்லை?
பெண்கள் ஆயுதம் தூக்குவதையே இலங்கைப் படையினர் பெரு விருப்புடன் விரும்பி நிற்கின்றனர். போரின் போதே பெண் சுகபோகங்களும் அளவுக்கு மிஞ்சிக் கிடக்கின்றனவே. இவர்களிற்கு இலங்கையின் ஜனாதிபதிகளே சலுகை அளிக்கிறார்கள். ஏற்னவே, பெண்களுக்கெதிராக தமிழ் முட்கள் இருக்கின்றன . இங்கே, இப்ப , இருப்பதோ பெருமுட்கள். இதெல்லாமே தட்டிக் கேட்கப்பட வேண்டாமா?
இந்தியனாமி சுட்டதுக்கும் விசாரணையும் இல்லை.இலங்கைப்படையினருக்கும் எதிராகவும் விசாரணைகள் இல்லை,குறைந்த பட்ச தண்டனைக் கூட இல்லை. இப்படிப்பட்ட நாட்டில். களை எடுக்காமல் எந்தப் பயிரும் நன்கு வளர வாய்ப் பேயில்லை.தமிழருக்கு எல்லா விசயங்களிலுமே இரண்டு, இரண்டு மடங்குச் சுமைகள்.
இந்த நிலை என்று தான் மாறும்? நல்ல தலைவர்கள் , நேர்மையானவர்களாகப் பிறக்கவே மாட்டார்களா ? இனிமேலும், புத்தர்,ஜேசு பிறந்து பிரயோசனம் இல்லை.அதற்கு மேலே யாரும் பிறந்தால் தான் அமைதி,சமாதானம் எல்லாம்.காந்தி "மன்னிப்பேன்"என்று அழுத்திச் சொன்ன குற்றவாளிகள் எல்லாரும் இலங்கையில் மன்னிக்கப்படுவார்கள்.மனுநீதீ தவறிய ஜனாதிபதிகள் தமிழர்களை தூக்கில் போடுவதற்காகவே தூக்குத் தண்டனையை அமுலாக்கவும் துடிக்கிறார்கள்.இலங்கை இனவாதத்தின் கீழ்,படையினரின் சப்பாத்துக்களின் கீழ் வாழ நிர்பந்திக்கப் படுற அடிமை வாழ்வை எத்தனை அமெரிக்க ஜனாதிபதிகளான ஆபிரகாம்லிங்கன்கள் வந்தாலும் ஒழித்து விட முடியாது போலவே இருக்கின்றது.அங்கே லிங்கன் அரசியமைப்பில் ஊன்றி விட்டார்.இருந்தாலும் வீதிகளில் கறுப்பர்களை படையினர் கொன்று விட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்.இங்கே அரசியமைப்பில் இருக்கிற பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் நிறையவேத் தத்தளிக்கின்றது.அங்கே, படைத்தரப்புக்கு மட்டுமான நீதிமன்ற முறைகளை ஒழித்து விட்டாலே ஒருவேளை நேராகி விடும் போலத் தோற்றமளிக்கிறது . இங்கே நேராகவே முடியாத தோற்றம் . என்ன நாடு இது , என்ன அரசியல்வாதிகள் இவர்கள் ? இந்த சிந்தனை ஏன் ஏற்படுகிறது..அது ஒரு மயக்கம் தான். எதுவும் நேராகி விடாது . விட்டாலும் மறுபடியும் நடக்கும் தான் ! . ஆனால்,"என் நாடு என்ற பெருமிதம் ஏற்பட வேண்டும்", ஏற்படாமல் எம் நாடு சீரழிந்து கீழே,கீழே போய்க் கொண்டிருக்கிறது . எம் நாட்டைக் குறித்து பெருமிதமே கொள்ள முடியாதா ? இலங்கையில் ஒரு புரட்சி நடக்காமல் மாற்றத்தை எதிர்பார்க்கவே முடியாதா? மனச்சாட்சி இழந்த மனிதர்கள் ,மனச்சாட்சி இழந்த உலகம்....முதலில் பாலஸ்தீனர்கள் சமாதானம் பெற வேண்டும்.அதை நோக்கிக் கவனத்தைப் பதிப்போம்.அடுத்தவனின் உரிமைகளிற்குப் போராடாமல் சுதந்திரம் எமக்கும் இல்லை. எவருக்கும் இல்லை . வாழ்வும் இல்லை ! .சுயசமூகத்தில், வேறு சாந்தன் தலை மறை விதிகளாலும் மெளனமாக மன அழுத்ததிற்குள்ளாகியே வருகிறான்.
.மூத்தக்கா தொலைபேசியில் கதைக்கிற போது ஒன்றைக் குறிப்பிட்டாள் "சந்திராவும்,நானும் ஒரே நேரத்தில் பிறக்கிறதுக்கு இருந்தோம்.சந்திரா தான் பிறப்பாள் என எதிர்பார்த்திருக்க நான் பிறந்து விட்டேன்.அம்மாட சினேகிதி தங்கச்சி, சின்னம்மா ,”அக்கா,இவளுக்கு தைச்சச் சட்டைகளை எடுத்து இவளுக்குப் போடு"எனக் கொடுத்து விட்டாராம்.அதேச் சட்டைகளை பத்து நாள் தள்ளிப் பிறந்த சந்திராவும் பிறகு போட்டாள்"என்று அம்மா சொல்லிச் சிரிப்பாராம்"என்று நனவில் தோய்ந்து அழுகையில் பேசினாள்.
அவனுடைய மகள் குறைந்த வயதிலே இறந்த போது எழுந்த வாய் விட்டு அழ முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது .சுதந்திர நாடாக இருந்தால் மட்டும் போதாது சுதந்திரவெளிகளும் வேண்டியிருக்கின்றது.மியூசியம்,கோவில்கள் அமைக்கிற மாதிரி,தியான மண்டபம் அமைக்கிற மாதிரி,வாய் விட்டழவும் மண்டபங்கள் தனியாக எழ வேண்டும்.தனிப்பாட்டம் அழுது ஓய்ந்தால் தான் உள்ளே உள்ள அழுகைள் எல்லாம் வற்றித் தீரும்.
இனப்பிரச்சனையைப் போல தீராது எதையுமே உள்ளேயே வைத்திருப்பதால் வாழ்வில் துய்க்கக் கூடிய சந்தோசங்களையும் துய்க்க முடியாமல் போய் விடுகின்றன.யாராவது தீர்க்க முன் வர மாட்டார்களா?இப்படியே இருந்தால் இந்த வாழ்வில் யாருக்குத் தான் கடவுள் நம்பிக்கை வரும்? இந்த அடிமை வாழ்வில் காசுக்காய் படித்து,காசைப் பெருக்குவதற்காக வேலையில் ஓடிக் கொண்டிருக்கிறோம் தவிர நிம்மதியைத் தேடி,அலைய வேண்டி இருப்பது …..என்ன , விதியோ ?
சந்திரமதியக்கா நீயாவது அமைதி அடை.ஏற்கனவே உன்னைக் குறித்து கரிசனைகளுடன் கணிசமான உறவுகள் அங்கே காத்திருக்கிறார்கள்.என் மகளும் கூட உன் வரவைப் பார்த்தே நிற்கிறாள்.சென்று அமைதி அடைவாயாக!
"சாந்தன் நிராதரவாய் நின்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.