அவன் இறங்கி நடந்தான்.
இரண்டுவாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்டிருந்தான்.
பதினெட்டாம் திகதி நிகழ்வொன்றிருக்கிறது.. போகவேணும்..
முகத்தைப் பார்க்காமலேயே முதலாளியின் மனதைப் படம் பிடித்தான்.
லீவு?
பதில் இல்லை..
தராவிட்டால் வேலை அம்போதான்.. பரவாயில்லை.. நினைத்தான்.
நேற்றிரவு வேலை முடிய சொல்லிவந்தான்.
'நாளை வரமாட்டன்...முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு போறன்'
அதே மௌனம்.
அவரும் அகதியாய் வந்தவர்தான்.
ஆனால் எல்லாம் மறந்து போட்டினம்... அந்தஸ்து... முதலாளி... இனி அவர்களுக்கு நிலம் பற்றி, எமது வலி பற்றி பேச என்ன இருக்கிறது?
இந்த நாட்டின் பிரசை... அங்க சுற்றுலாவிற்கு போனாத்தான் உண்டு..
காறித்துப்பியிருக்கலாம்..
போகத்தான் போறன்.. யாரும் மறிக்கேலாது..
மனதுக்குள் நினைத்தபடி நடந்தான்.
முட்டாள் என்று கேவலமாக கதைப்பது கேட்டது.. கேட்காதது மாதிரி நடந்து இருளில் மறைந்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.