மகாவம்சத்தில் கோட்டபாயவும்! கோட்டபாயவின் மகாவம்சமும்
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் தான் இது நிகழ்ந்தது. இலங்கையிலேயே பெரிய இனவாதக் கோட்டை என்று கருதப்படும் கிரிபத்கொட என்கிற பிரதேசத்தில் இது நிகழ்ந்தது. அங்கு தான் களனி பன்சலையும் இருக்கிறது. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இந்த களனியில் நிகழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது.
அரசுக்கு வெளியில்; வெவ்வேறு நபர்களால் உரையெழுதப்பட்ட மகாவம்சப் பிரதிகள் சந்தையில் உண்டு. இது கிரிபத்கொட ஞானானந்த தேரர் முதலாவது தொகுதியை மூன்று பகுதிகளாக எளிமையான சிங்கள விளக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பௌத்த விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும், நூலகங்களுக்கும் இதை இலவசமாக விநியோகிப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். “சிங்களவர்களே மீண்டும் எழுங்கள்” என்கிற சுலோகத்துடன் அந்த விளம்பரங்கள் உள்ளன.
மேற்படி மகாவம்ச வெளியீடு குறித்து தமிழில் இந்த முக்கிய நிகழ்வு குறித்து செய்தியாகக் கூட எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்பது இன்னொரு கதை.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கிரிபத்கொட ஞானானந்த தேரரின் உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“சிங்கள இனமின்றி பௌத்தமும் இல்லை. பௌத்தமின்றி சிங்கள இனமுமில்லை. இதனை தெளிவாக்குகின்ற நூலே மகாவம்சம்.”
இனத்தின் ஆதிக்கமும், மதத்தின் ஆதிக்கமும் ஒரு சேர கோலோச்சும் மரபுக்கு மகாவம்சத்தையே அவர்கள் மூலமாகக் கொள்வதை அறிந்திருப்பீர்கள்.
முதல் பிரதியை கோட்டபாயவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ஞானானந்த தேரர் மீண்டும் இப்படி கூறுகிறார்.
“துட்டகைமுனு எல்லாளனுடன் போர் புரிவதற்கு புறப்பட்ட போது மூன்று முக்கிய பௌத்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு சென்றார். இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு தான் துட்டகைமுனு எல்லாளனுடனான போரில் வென்றார். இப்போது நாம் எல்லோரும் அந்த உச்சாடனத்தை கோட்டாபய அவர்களின் தலைமையில் செய்யப்போகிறோம். சகல எதிரிகளையும் வீழ்த்தி அரசை அமைப்பதற்கு பௌத்த முப்பீடங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.”

இலங்கையில் நான் மிகத் தீவிரமாக இயங்கிய 76-82 காலப் பகுதியில் , நாடகங்களை தொடர்ந்துமேடையேற்றியது மட்டுமல்ல , நாடகங்கள் பற்றிய விமர்சன கூட்டங்கள் , பத்திரிகை வாயிலாக நாடகங்கள் பற்றிய விவாதங்கள் போன்ற பலவற்றையும் நடத்தினோம்.நாடகம் குறித்து மிக உக்கிரமான விவாதங்கள் நடந்த காலம் அது.விவாதத்தின் மையப் புள்ளியாக நான் நெறிப்படுத்தி மேடையேற்றிய நாடகங்கள் அமைந்தன.
என் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை, சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது (என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல் இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே வாட்டிக் கொண்டிருக்கிறது கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான் நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.
பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். 'ஏழாவது சொர்க்கம்' என்றொரு நாவல் எழுதியுள்ளார். 
இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கிக் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.
எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் முக்கிய அம்சங்களாக நான் கருதுவது: ஆழமான விடயங்களை மிகவும் இலகுவான நடையில் சாதாரண வெகுசன வாசகர்களுக்கு வழங்கியது, சிறு சிறு வசனங்களை வாசகர்களைக் கவரும் வகையில் அவற்றில் புதுமைகளைப் புகுத்தி மொழிக்கு வளம் சேர்த்தமை, பல்வேறு அறிவியல் துறைகளையும் சாதாரண வெகுசன ஊடக வாசகர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையான , புரிந்துகொள்ளும் நடையில் வழங்கியமை இதன் மூலம் மொழியை வளப்படுத்தியதுடன், ஒரு தலைமுறையை அறிவியல் எழுத்துகளில் ஆர்வம் கொள்ள வைத்தமை ஆகியவற்றைக் கூறுவேன்.
சுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .
சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.
- முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள் அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. - பதிவுகள் -
- முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. - பதிவுகள்.காம் -
முகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்' பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன் -
நான் மௌனமாகவும்
விமர்சனம் என்றால் என்ன என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். நான் ஒரு வாசகன். எனக்கு என்கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தவித சங்கோசமும் இருந்ததில்லை.. எனக்கு வேண்டியவர், என்னோடு ஒன்றாகப் படித்தவர்.. எனது கொள்கையை ஏற்று கொண்டவர்...என்பதற்காக ஒரு படைப்பாளியை ஏற்றி போற்றவோ....விரோதமானவார் உடன்பாடற்றவர் என்பதற்காக அவரது நல்ல படைப்புகளை நிராகரிக்கவோ நான் ஒருப்படேன். விமர்சனம் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதிலும் நான்காட்டமான கருத்துள்ளவன்..

மதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்...புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture' உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture'க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture'களுக்குத் தான் இடம்.
தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய "மகேந்திர வர்மன்" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற ஊரில் பாறைகளை குடைந்து "குடவரைக் கோயில்" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது "மாடிபோல் அமைந்த கோயில்" என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள "வைகுண்டப் பெருமாள் கோயில்" மற்றொன்று உத்திரமேரூர் "சுந்தரவரதப் பெருமாள் கோயில்" இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









