பதிவுகள் முகப்பு

வாரிசு! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
28 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.

வயதில் அறுபது தாண்டிய தென்றலுக்கு வாரிசு இல்லை. பிறந்ததிலிருந்தே தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தவன். எப்போதும் வாழ்வின் பாதையைப் பற்றி பெரிதாக யோசிக்காதவன். இப்பொழுது தான் காலம் நெருங்கும்போது, அவனுக்கு ஒரு உணர்வை மட்டும் அடித்துக் கொண்டது: இங்கே அவன் இல்லாதிருந்தால், ஏதாவது மாறுமா?

தோட்டத்தில் இருந்த வெள்ளைத்தாமரைப் பூவுகளை பார்த்து தென்றல் ஓரளவு சாந்தமாக இருந்தான். அவனை யாரும் வழிமொழிந்ததாக இல்லை. அவன் தந்தை, தாயின் நினைவுகள் எல்லாம் மங்கியதாய் ஆகிவிட்டன. "நான் என் வீட்டின் வாரிசு அல்ல, நானாகவே இங்கே இருக்கிறேன்," என்று அவன் சும்மா சிந்தித்தான்.

குழலிசையின் ஒலியை போலவே, தென்றலின் நினைவுகளில் பழைய வார்த்தைகள் சிதறியவையாக இருந்தன. அவருடைய வாழ்க்கை முழுவதும் கடந்து வந்த பாதைத் திசைமை இல்லாததாயிருந்தது. ஒரே நம்பிக்கை இருந்தது: காற்று நம்மை அடைவதற்குள் எதுவும் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க ...

மறக்காதீர்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இமயம் தொட்டாலும்
ஏணியை மறக்காதீர்
அபயம் அளித்தாரை
அரைக்கணமும் மறக்காதீர்
கவலை இருந்தாலும்
காரியத்தை மறக்காதீர்
கஷ்ட நிலையிலும்
கண்ணியத்தை இழக்காதீர்

ஆசானை மறக்காதீர்
அன்னையை ஒதுக்காதீர்
அரவணைக்கும் அனைவரையும்
அகமார வாழ்த்துங்கள்
மாசுகளைச் சேர்க்காதீர்
மனமிருளச் செய்யாதீர்
மயக்கமுடன் வாழாமல்
மனவெழுச்சி கொள்ளுங்கள்

மேலும் படிக்க ...

ஒரு மணிநேரத்தின் கதை (The Story of An Hour) - மூலக்கதை ஆங்கிலத்தில் கேட் சோபின் Kate Chopin (1894) | தமிழில் அகணி சுரேஸ் -

விவரங்கள்
- மூலக்கதை ஆங்கிலத்தில் கேட் சோபின் Kate Chopin (1894) | தமிழில் அகணி சுரேஸ் -
சிறுகதை
27 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

அந்த செய்தியை உடைந்து பேசும் வாக்கியங்களில் அவரது சகோதரி ஜோசெபின்(Josephin ) கூறினாள்; குறிப்புகள் மறைத்து வெளிப்படுத்தப்பட்டது.  அவரது கணவரின் நண்பர் ரிச்சர்ட்ஸ் (Richards ) அங்கேயும், அருகில் இருந்தான். ரயில்வே பேரழிவின் தகவல் வந்த போது, "கொல்லப்பட்டவர்களில்" பிரெண்ட்லி மல்லார்டின் (Brendly Mallard)  பெயர் முன்னணி இடத்தில் இருந்தது. அதன் உண்மையை உறுதிப்படுத்த அவர் இரண்டாவது டெலிகிராம் மூலம் உறுதி செய்யும் வரை மட்டும் நேரம் எடுத்துக் கொண்டான், மேலும் அந்த துக்கமான செய்தியைச் சொல்லும்போது, குறைவான கவனத்துடன், குறைவான அன்புடன் இருக்கும் நண்பரை முன்னேறச் செய்யாமல் விரைந்து வந்தான்.

அவர் இந்தக் கதையை ஏற்கெனவே பல பெண்கள் கேட்டது போல, அதன் முக்கியத்துவத்தை ஏற்க முடியாத நிலைமையில் கேட்டுக் கொண்டாள். உடனே, திடீரென, கள்ளத்துடன், தனது சகோதரியின் கைகளைப் பற்றியவாறு அழுதாள். துக்கத்தின் புயல் தன்னைத்  தழுவிய பிறகு, அவர் தனியாக தனது அறைக்கு சென்றாள். யாரும் அவரைத் தொடர்ந்து செல்லவில்லை.

திறந்த ஜன்னலுக்கு எதிராக, ஒரு வசதியான, பரந்த நாற்காலி  இருந்தது. இதில் அவர் மூழ்கினாள், தனது உடலை அடிக்கடி வாடவைக்கும் உடல் சோர்வால் அழுத்தப்பட்டு, அவரது ஆன்மாவை அடையுமாறு தோன்றியது.

மேலும் படிக்க ...

உணர்ச்சித் தமிழ்த்தேசியத்திலிருந்து புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை நோக்கி.... - நந்திவர்ம பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
24 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தினர் அனுபவித்துவரும் பிரச்சினைகளைப்பற்றிச் சிங்கள ஊடகவியலாளரான ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவையில் தெரிவித்த கருத்துகள் பி.பி.சி.சியின் தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பிரசுரமாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் ஷெலி உபுல் குமார யாழ்ப்பாணம் சென்று இது பற்றி ஆராய்ந்து இவ்வாவணத்தைத் தயாரித்துள்ளார்.

இதன்போது அவர் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது அவர் 'தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது' என்று பதிலளித்திருக்கின்றார். இது மிகவும் தவறான தகவல் என்பதை நாம் அனைவரும்  அறிவோம்., யாழ் மாவட்டக் கிராமங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் சாதி அடையாளங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் படிக்க ...

வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -

விவரங்கள்
- அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
ஆய்வு
24 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்

தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.

புலம்பெயர் இலக்கியம் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்புகள்தாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னொரு கட்ட வளர்ச்சி கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. புலம்பயர் படைப்புக்களில் கவிதை சிறுகதை நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையாகவும் காணப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியங்கள் புலம்பெயர்ந்து சென்று ஈழத்து சமூக பண்பாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவற்றை எதிர்கொண்ட விதங்கள் புல பாதிப்புக்கள் புலம்பெயர் அனுபவங்கள் பண்பாட்டுச் சிக்கல்கள் மொழி பிரச்சனை அகதியாக்கப்படுதல் போன்றவற்றை கூறுபொருளாகக் கொண்டு காணப்படுகின்றன.

மேலும் படிக்க ...

இலக்கியத் திறனாய்வாளர்கள், மாணவர்களின் கவனத்துக்கு -. எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் நூலகத்தில்..

விவரங்கள்
- ஊர்க்குருவி -
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
22 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பன்முக இலக்கியப் பங்களிப்பு காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்ழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. இதுவரை காலமும் அவரது படைப்புகளைத் தாங்கிய நூல்கள் வெளிவராமலிருந்ததால் அவற்றைத் திறனாய்வு செய்பவர்களுக்குப் போதிய உசாத்துணை நூல்கள் இல்லாத குறையிருந்தது. தற்போது அந்தக் குறை ஓரளவு நீங்குகின்றது.

இதுவரை காலமும் வெளியான நூல்கள் மதமாற்றம் ( நாடகம்) & வெற்றியின் இரகசியங்கள் (உளவியல்). இவற்றை முறையே தேசிய கலையிலக்கியப் பேரவை, பாரி நிலையம் ஆகியன வெளியிட்டிருந்தன.

தற்போது பதிவுகள்.காம் அவரது படைப்புகளைத் தாங்கிய மூன்று மின்னூல்களை அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்திலும் நீங்கள் வாசிக்கலாம். அவையாவன:

மேலும் படிக்க ...

'டொரோண்டோ'வில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது 2024 நிகழ்வு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
நிகழ்வுகள்
21 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                 - சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் -

இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ற்கான இயல்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. JC'S Banquet மண்டபத்தில் நடந்தது.  கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில்  வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், புனைவுக்கான விருது 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்' நூலுக்காக எழுத்தாளர் றஷ்மிக்கும், கவிதைக்கான விருது கவிஞர் இளவாலை விஜயேந்திரனுக்கும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது' நூலுக்கும்., அல்புனைவுக்கான விருது 'நினைவு நல்லது' நூலுக்காக வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரனுக்கும், மொழியாக்கத்துக்கான விருது ஜெகதீஷ்குமார் கேசவனுக்கும்,  இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது முனைவர் பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க ...

இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 1 - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
21 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுயமாக நடமாடக்கூடியதாக இருக்கும்வரை, வருடத்துக்கொரு தடவை எங்காவது ஒரு பயணம் செல்லவேண்டும் என்பது என் முதுமைக்கால இலக்குகளில் ஒன்றாகும். பயணங்களுக்கான ஆயத்தங்களையும், பயணங்களில் இருக்கும்போது நாளாந்தம் செய்யக்கூடியவற்றுக்கான பட்டியல்களையும் பிள்ளைகள் செய்துதந்தாலும்கூட, அவர்களில் ஒருவருடன் பயணிக்கும்போதே பயணங்கள் சிறப்புப் பெறுகின்றன. அதற்கு ஒத்த ரசனையுள்ளவர்கள் பயணிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது என்பதும், பயணத்தின்போது வரும் பிரச்சினைகளை பிள்ளைகள் தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் காரணங்கள் எனலாம். அவ்வகையில், இவ்வருடப் பயணத்தைப் பற்றிச் சிந்தித்தபோது, சின்ன மகளின் அடுத்த இரண்டு வருடக் கற்கையின்போது, சுற்றுலாவுக்கான நேரம் அவவுக்கு கிடைக்காது என்பதால், அவவுடன்தான் இம்முறை பயணிக்கவேண்டுமென நான் விரும்பினேன். அந்த விருப்பத்தைச் சாத்தியமாக்குவதானால் பயணம் ஒரு கிழமைக்குட்பட்ட செப்ரெம்பர் மாதப் பயணமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்கு San Francisco பொருத்தமாக ஓரிடமாக இருக்குமென மூத்த மகள் ஆலோசனை கூறினா.

அதன்படி, செப்ரெம்பர் 9ம் திகதி நாங்கள் San Franciscoக்குப் பயணமானோம். விமானநிலையத்திலிருந்து, Nob Hill என்ற இடத்திலிருந்த எங்களின் ஹோட்டலை நோக்கி Uberஇல் சென்றுகொண்டிருந்தபோது, அத்தனை கொள்ளை அழகையும் எப்படிக் கண்களுக்குள் அடக்குவதென நாங்கள் வியந்துபோனோம். முடிந்தளவில் அவற்றைப் படம்பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலில், வாகனத்தின் இருபக்கத்திலிரும் இருந்த எங்கள் இருவரினதும் தொலைபேசிக் கமெராக்களும் அடிக்கடி இயங்கிக்கொண்டிருந்தன. மலையும் மலைசார்ந்த இடமும் என்றால் அதன் அழகைச் சொல்லவும் வேண்டுமா எனப் பிரமித்துப் போயிருக்க, அதைத் தொடர்ந்த எல்லையற்ற நீலக் கடல், என் அழகு என்ன குறைவா எனப் போட்டிக்கு வந்தது போலத் தோன்றியது.

மேலும் படிக்க ...

அழைப்பு: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்; சுதர்சன் -
நிகழ்வுகள்
21 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், இலங்கைத் தமிழ் நாடக அரங்க ஆளுமையாளருமான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு

இந்தியத் தேசிய விருது பெற்ற ஆவணத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் கலை விமர்சகருமான திரு. அம்ஷன் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவான 'ஏ.சீ.தாசீசியஸ்' குறித்த ஆவணப் படம் திரையிடல் நிகழ்வு, 23.10.2024, காலை 9 மணிக்கு, கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மேலும் படிக்க ...

பயனுள்ள மீள்சுரம்: வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி! - அருண்மொழிவர்மன் -

விவரங்கள்
- அருண்மொழிவர்மன் -
இலக்கியம்
20 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர்.  காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன்.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர்.

தேவகாந்தன் எழுதி இதுவரை 12 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன, இவற்றில் லங்காபுரம், கதாகாலம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன அரசியல் பின்புலத்தினைக் கொண்டு கதைசொல்லும் பிரதிகளாக அமைகின்றன.  ஒடுக்குமுறைகள் குறித்தும் அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் பேச்சுக்களிலும் எழுத்துகளிலும் மிகவும் அரிதாகவே நேரடியான தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கும் தேவகாந்தனின் நாவல்களில் பெரும்பாலானவை ஒடுக்குமுறைகள் குறித்த கறாரான பார்வைகளையும் பதிவுகளையும் கொண்டவையாக இருப்பது குறிப்படவேண்டியது.  இவற்றில் லங்காபுரம், கதாகாலம் ஆகியன முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மறுவாசிப்புகளாக அமைகின்றன.  யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கனவுச் சிறை, கலிங்கு ஆகியன ஈழத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் போராட்டங்களைக் கருவாகவும் களமாகவும் கொண்ட Triology ஆகச் சொல்லத்தக்கன.  இந்நாவல்களை இவ்வடிவில் எழுதவேண்டும் என்கிற திட்டமிடலும் எழுதுவதற்குத் தான் திட்டமிடவில்லை என்று தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார் என்றாலும் இந்த மூன்று நாவல்களும் ஒருமித்து 1800 – 2015 வரையான நீண்ட காலப்பகுதிகள் வரையான மக்களின் கதையைச் சொல்கின்றன.

மேலும் படிக்க ...

ஜோர்ஜ் இ.குருஷேவின் 'ஒரு துரோகியின் இறுதிக்கணங்கள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
20 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகளைப் பொறுத்தவரையில் பலர் அதற்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இவர்களைப் பட்டியலிட்டால் ஒரு பக்கம் போதாது. பொதுவாகக் கனடாச் சிறுகதைகளைப் பற்றி எழுதிய இலக்கியத் திறனாய்வாளர்களில் பலர் தவிர்த்திருக்கும் எழுத்தாளர் ஒருவர் தவிர்க்கப்பட  முடியாதவர். அவர் குறைவாகவே சிறுகதைகள் எழுதியிருந்தாலும், கனடாவில் சிறுகதைகள் வளர, வளம் பெறப் பங்களிப்பு செய்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். கலை, இலக்கிய, அரசியல் இதழான, பத்திரிகையான 'தாயகம்' பத்திரிகையின் , சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கிய எழுத்தாளர் ஜோர்ஜ். இ.குருஷேவைத்தான் குறிப்பிடுகின்றேன்.

மேலும் படிக்க ...

கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.

வெளியரங்குகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இனி பனிக்காலம் முடியும் வரை அனேகமாக நடைபெற மாட்டாது. மீண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியரங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான உள்ளக அரங்குகள் பல இருந்தன. விவசாயத்தை முதன்மைப் படுத்தி, அது சார்ந்த காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இளைய தலைமுறையினர் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்றது போல காட்சிகள் அமைந்திருந்தன. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளையும், மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களையும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். குறிப்பாக மேப்பிள் மரத்திலிருந்து பெறும் மேப்பிள் பாணியைப் பலரும் வரிசையில் நின்று வாங்கினார்கள். நன்றி சொல்லும் நாள், கலோவீன் தினம் போன்றவை வருவதால் பூசணிக்காயும் விற்பனையாகியது.

மேலும் படிக்க ...

வதனம் மஞ்சரி - கனடா சிறப்பிதழ் வெளியீடு - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.

மேலும் படிக்க ...

மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்! - கவிஞர் மதுராந்தகன் -

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை -

 நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய  இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..

 இதில்  ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார்.  92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல  பொம்மக்கா மாதிரி பெண்களைச் சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .

மேலும் படிக்க ...

‘நாமசங்கீர்த்தன மரபு’ - ‘அபங்’ பாடல் வகை பற்றிய அறிமுகம்.

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 865 5516 7525 |Passcode: 903772

மேலும் படிக்க ...

கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு வழக்கறிஞரின் இலக்கிய யாத்திரை - நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.-

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
வேந்தனார் இளஞ்சேய்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.

      ஆனால் அண்மையில் அவரது 85ஆவது பிறந்தநாள் ஆவணத் தொகுப்பை பார்வையிட்டபோது நான் அசந்துதான் போனேன். நம் தமிழர் மத்தியில் வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டியவர்களில் சிறீகந்தராசா மிக முக்கியமானவர் என்பதனை இதனைப் பார்வையிடும் போது என்னால் உணர முடிந்தது. இவ்வேளை எனது தந்தை அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்தவேளை இற்றைக்கு இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் குறித்த ஆவணப் பதிவொன்றை விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கலைச்செல்வனுடன் இணைந்து ஆவணப்படுத்தியமையும் என்னுள்; வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனோ அவை சாத்தியப்படுவது சிரமமாகக் காணப்பபட்டது. ஆனால் தொழில்நுட்ப வசதிகள் கோலோச்சி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வரலாற்று ஆவணங்கள் தமிழர்களிடையே பதியப்படுவது முக்கியமானதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  

      அவரின் அன்புத்துணைவி மாதினியின் இனிமையான குரலின் இன்னிசையோடு;ம், விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தான் அறிந்த அதாவது இவருக்கு இருந்த கோவலனாரின் ஓலைச்சுவட்டின் அனுபவத்தைக் கேட்கும் கேள்வியோடும் ஆரம்பித்தபோது என்னை விழிப்படையச்செய்து அப்பதிவை உடன் பார்க்கவேண்டும் என அதில் கட்டிப்போட்டது.

மேலும் படிக்க ...

சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களே! உங்களுக்குத் தாழ்மையான ஒரு வேண்டுகோள். உங்கள் பத்திரிகைகளை நிச்சயம் நீங்கள் உங்கள் நிறுவன நூலகங்களில் ஆவணப்படுத்தி வைத்திருப்பீர்கள். அப்படி வைத்திருந்தால் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வையுங்கள். உங்கள் பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்ய விரும்பும் எவருக்கும் உறுதுணையாக இருங்கள். படைப்புகளைத் தேடி வேண்டுகோள்கள் வரும்போது நிச்சயம் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சேவைக்கு இலவசமாக உதவிகளைச் செய்யத்தேவையில்லை. சேவைக்குரிய நியாயமான கட்டணங்களை நீங்கள் அறவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பத்திரிகைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த உதவி செய்கின்றீர்கள்.

நான் முன்பு பல தடவைகள் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மனக்கண் நாவல் பிரதிகளுக்காக தினகரன் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை எவற்றுக்கும் பதில்  கிடைத்ததேயில்லை. பின்னர் இலங்கைச் சுவடிகள் திணக்களத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அக்காலகட்டத்தில் அதன் இயக்குநராகவிருந்த K.D.G.விமலரட்ன அவர்கள் உண்மையிலேயே சிறந்த பண்பு மிக்கவர் மட்டுமல்லர்.உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்தார். அதனால் அவர் எனக்குச் சுவடிகள் திணக்களத்திலிருந்து மனக்கண் நாவல் வெளியான பக்கங்களைப் புகைப்படப் பிரதிகளாக எடுத்து , நியாயமான கட்டணத்துக்கு அனுப்பி உதவினார். அதை ஒருபோதுமே மறக்க மாட்டேன்.

- சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி.விமலரட்ன -

அவ்விதம் அவர் அனுப்பிய மனக்கண் அத்தியாயங்கள் அத்தியாயம் முப்பது மட்டும் கிடைக்கவில்லை. அதன் பிரதி சுவடிகள் திணைக்களத்தில் இல்லை.  அதன் பின்னர் அதனைத்தேடிப் பல தடவைகள் தினகரன் பத்திரிகை ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். பதில்கள் வந்ததேயில்லை. பின்னர் எழுத்தாளர் காத்யான அமரசிங்கவிடம் இது பற்றிக் கூறியபோது அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நூலகத்திலிருந்து அந்த தேடப்பட்ட அத்தியாயத்தை எடுத்து அனுப்பினார். இவரையும் ஒருபோதுமே மறக்க மாட்டேன். இவர்கள் இருவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இன்று அ.ந.கந்தசாமியின் வெளியான ஒரேயொரு முக்கிய நாவலான 'மனக்கண்' நாவலை நீங்கள் யாவரும் வாசிக்க முடிகின்றது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல்கள்! (தொகுப்பு 2) - இன்று புதிதாய்ப் பிறந்தேன்'

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது யு டியூப் சானலான 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் வெளியான பாடல்களின் இரண்டாவது தொகுதி 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்னும் தலைப்பில் , பதிவுகள்.காம் வெளியீடாக அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. தொகுப்பினை முழுமையாக வாசிக்க

புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! - அ.எப்தா நிஷான் ( A.Abdhan Nishan ), மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -

விவரங்கள்
- அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
ஆய்வு
11 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அ.எப்தா நிஷான் A.bdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற  விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள்.  இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன. அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -


தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சு10ழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் 

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே 'புலம்பெயர் இலக்கியம்" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் இல் பொருள் உவமை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
ஆய்வு
11 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

இல் பொருள் உவமை அணி

உலகில் இல்லாத, நடைபெற முடியாத ஒன்றினை உவமையாகக் கொண்டு ஒரு பொருளை விளக்கிக் காட்டுவது இல் பொருள் உவமை அணி எனப்படும்.

தேய்வுஇலா முகமதி

கைகேயியிடம் கூனி வந்து இராமனுக்கு முடிசூட்ட இருப்பதை கூறுகிறாள். உடனே கைகேயியின் அன்பு எனும் கடல் ஆரவாரித்தது. தேய்வில்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கி தோன்றியது. ஞாயிறு முதலிய சுடர்களுக்கு எல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன்மணிமாலை ஒன்றை கைகேயி, கூனிக்குக் கொடுத்தாள்.

“ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வுஇலா முகமதி விளங்கித் தேசுர “
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 145)

இதில் தேயாத மதி என்று புலவர் பாடியுள்ளார். தேயாதமதி என்பது உலகில் இல்லாத ஒன்று. ஆகவே இப்பாடல் இல் பொருள் உவமையாகும்.

கமலம் பூத்த தொடுகடல்

இராமன், சீதை திருமணத்தைக் காண அயோத்தியிலிருந்து அனைவரும் மிதிலை நோக்கிச் செல்கின்றனர். பொன் வளையல்கள் அணிந்த மகளிர் கூட்டம் கிண்கிணிமாலை அணிந்த குதிரைக் கூட்டங்களில் சுற்றிலும் வருகின்றனர். இக்காட்சி தாமரைப் பூக்கள் மலர்ந்த கடல் அலை போல இருந்தது. கடலில் தாமரை பூக்காது.

மேலும் படிக்க ...

கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிகள் பற்றிய கருத்துகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
10 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய  தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.


அண்மையில் நிகழ்ந்த இலக்கியவெளி அமைப்பின்  மெய்நிகர் நிகழ்வான '“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாக மூவரை குறிப்பிட்டிருந்தார்கள். கவிஞர்களான மஹாகவி, இ.முருகையன் மற்றும் நீலாவணன் ஆகியோரே அவர்கள். ஒரு தவறான கூற்று. இதற்குக் காரணம் இவர்கள் இம்முடிவுக்கு வர இவர்கள் தம் தேடலை நம்பியிருக்காமல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், எழுத்தாளர் அ.யேசுராசா மற்றும்  கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிந்தனைகளே இம்முடிவுக்கு வரக் காரணமாகவிருந்ததுதான் எனத் தமது உரைகளில் இவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள்.

நுஃமான், அ.யேசுராசா மற்றும் குழந்தை சண்முகலிங்கன் நிச்சயம் இம்மூவரையும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாகக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நிச்சயம் முக்கியமான கவிஞர்களாக இவர்களை இனங்கண்டு திறனாய்வுக் கட்டுரைகள் பலர் எழுதியிருக்கின்றார்கள். இலங்கையின் நவீனத்  தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் அறிவியல் மின்னூல்: 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னுடைய அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' நூல் மின்னூலாக இணையக்  காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. மின்னூலை இணையக் காப்பகத்தில் அல்லது பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைப்பு 

இணையக் காப்பகம் (archive.org) எழுத்தாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாகப் பாவிக்க வேண்டிய ஆவணத்தளம். உங்கள் படைப்புகளின் பிடிஃப் கோப்புகளை அங்கு சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் இணையத்தில் உங்கள் படைப்புகள் நிலைத்து நிற்கப் போகின்றன. இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, உங்கள் படைப்புகளையும் சேகரித்து வையுங்கள்.
இத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை... இலங்கை அரசியல் ஓர் அலசல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.  ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை...

இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).

இந்தப் பின்னணியில்தான் அநுரகுமார திசாநாயக்க அவர்கள், இன்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாட்சி நீடிக்குமா அல்லது இழுபறிக்குள்ளாகுமா, அல்லது தோல்வியைத் தழுவுமா என்பனவெல்லாம் இனி நடக்கப்போகும் சங்கதிகளாகின்றன. இருந்தும், யதார்த்தங்களை மறக்கநினைக்கும் யாறொருவருக்கும் வரலாறு மிகக்கடுமையான தண்டனைகளையே வழங்கி வருவது சாசுவதமாகின்றது. (இதற்கான உதாரணம் எண்ணில் அடங்காதன என்பதும், அவை இலங்கை அரசியலில் இடம்பெறாமலும் இல்லை என்பதும் தெளிவு).

1970ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீமாவோ தலைமையில் இடதுசாரி கூட்டணி அமையப்பெற்றது. என்.எம்.பெரேரா-கொல்வின் ஆகியோரின் சமசமாஜ கட்சியும், பீட்டர் கெனமனின் கம்யூனிஸ கட்சியும் கூட்டணி அமைத்திருந்த காலமது. இருந்தும் இவ்வாட்சி, 1977ல் படுதோல்வியைக்கண்டு ஜே.ஆர். இன் 17வருட கேவலமான ஆட்சிக்கு வித்திட்டது (1977-1994). வித்தியாசம், இவை அனைத்தும் நடந்தபோது இருந்த இந்தியா, இன்று இருப்பதாகத் தெரியவில்லை. மாறியுள்ளது. அதாவது, விடயங்கள் மாறியுள்ளன.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: ஆறு. சிறீகாந்தனின் ஆய்வுத் தொகுப்பு - 'திரை இசை இலக்கியமும், வாழ்வியலும்'

விவரங்கள்
- தகவல்: பாலேந்திரா -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பு உறவுகளுக்கு, இந்த நூல் வெளியீட்டு விழாவில், கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் நிறைந்துள்ள, தொன்தமிழின்கலாச்சாரம், பண்பாடு; பெண்ணியம், காதல், வீரம் கூறும் இலக்கியம் என ஒர் ஆய்வு அரங்கேறுகிறது. ஆர்வலர்களுக்கு பகிருங்கள்.அரங்கத்தை மெருகேற்றுங்கள்,

நன்றி.
ஆறு. சிறீகாந்தன்.

மற்ற கட்டுரைகள் ...

  1. நூல் வெளியீட்டு விழா: அகணி சுரேஷ் எழுதிய நான்கு நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா!
  2. ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல் - “மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” - தகவல்: அகில் -
  3. வ.ந..கிரிதரன் பாடல்கள்: சிந்திப்போம்!,விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்!, அன்பே வாழ்வின் அடிப்படை!,புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
  4. காரைக்கவி. கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு' துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை - கட்டுரைத் தொகுப்பு பற்றிய ரசனைக் குறிப்பு! பிரதேச வழக்கு நூலுக்குப் பிரதேச வழக்கில் ஒரு விமர்சனம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  5. கவிதை: இளைஞர்களின் மூலதனம். - ரவி அல்லது -
  6. எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -
  7. ‘ஆக்குவாய் காப்பாய்’ கனடியத் தமிழ்த் திரைப்படம் - குரு அரவிந்தன் -
  8. கணேஷின் கவிதைகள்
  9. கவிதை: சிந்தாதேவி - அஞ்சல் அட்டைக் குறிப்புகள் - செ.சுதர்சன் (இலங்கை) -
  10. மீள் பிரசுரம் : அநுர குமார திசாநாயக்க - இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் - ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -
  11. 23 - 24ஆம் வயதில் பாரதி (4) - ஜோதிகுமார் -
  12. ஜேவிபி ஓர் இனவெறிக் கட்சியா? செயற்கை அறிவுடன் ஓர் உரையாடலும், கேள்விக்கான அதன் பதிலும்! - வ.ந.கிரிதரன் -
  13. அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி.... - வ.ந.கிரிதரன் -
  14. கவிதை: ஆதுரமேகிய அகத்துணை - ரவி அல்லது -
பக்கம் 41 / 130
  • முதல்
  • முந்தைய
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • அடுத்த
  • கடைசி