நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

அப்போதுதான் பேய் மழை பெய்து ஓய்ந்திருந்தது! அடர்ந்த காடு. கதிரவன் வெளியே வரட்டுமா வேண்டாமா என தயங்கும் அதிகாலை வேளை. ஏதோ 'சர, சர' என்ற சப்தம் அந்தக் காட்டின் நிசப்தத்தை மெதுவாய் கலைத்தது. ஒரு செந்நிற கம்பளம் மெதுவாய் அக்காட்டில் இருந்து பரந்து விரிந்து கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கிற்று. இது என்ன மாயம்? அருகில் சென்றுதான் பார்ப்போமே. அட, அந்த செந்நிறத்தை தந்தது மையும் அல்ல.... மந்திரமும் அல்ல. அவைதான் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு செந்நிற நண்டுகள். 43.7 மில்லியன் நண்டுகள் இத்தீவு வாசிகள்! ஆஸ்திரேலியாவின் சனத்தொகையை விட (25.9 மி) ஏறத்தாள இரண்டு மடங்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!
இவை இத்தீவிற்கு தனித்துவமானவை. இவை ஜிகார்கோய்டியா (Gecarcodea) எனும் நிலநண்டு பேரினங்களுள் அடங்கும் உயிரினங்கள். இவை ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளிலும் வாழ்ந்தாலும் கிறிஸ்மஸ் தீவுதான் இவைகளின் ஹெட் ஆபீஸ்! அது சரி, இந்த கிறிஸ்மஸ் தீவு எங்குதான் இருக்கிறதாம்? பூமிசாத்திர வகுப்பினுள் நுழைவோமா?


கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா - உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும், தாக்குதல் வாகனங்களும் குவிக்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். எந்த நேரமும் ரஸ்யா உக்ரைன் மீது படை எடுக்கலாம் என்றதொரு மாயை இதன் மூலம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. ஊரிலே நடக்கும் வேலிச் சண்டை போல இதுவும் ஒரு எல்லைச் சண்டைதான். இதற்கு முக்கிய காரணம் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் அங்கத்தவராகச் சேர்வதை ரஸ்யா தனது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை. அதை அனுமதித்தால் தங்கள் எல்லையில் நேட்டோ நாடுகள் ஏவுகணைகளை நிலை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம் ரஸ்யாவுக்கு இருக்கின்றது. எனவேதான் உக்ரைன் மட்டுமல்ல, எல்லைநாடுகள் நேட்டோவில் இணைவதையும் ரஸ்யா விரும்பவில்லை. இதைவிட 2015 ஆம் ஆண்டு நடந்த மின்ஸ்க் உடன்படிக்கையின் தொடராகவே இந்த ரஸ்யா – உக்ரைன் எல்லைப் பிரச்சனை மீண்டும் உருவெடுத்திருக்கின்றது என்றும் சொல்லலாம்.

வீட்டின் முன்னால் நின்ற மாமரம் நிறைபூ கொண்டிருந்தது. நெடிய மாரியின் பின் காகம்கூட அதிலே வந்தமர்ந்து கத்தியது அவள் கண்டதில்லை. இப்போது வந்து அணில்கள் பாயத் துவங்கியிருக்கின்றன. என்ன வாழ்க்கையிது என அலுத்திருக்கிறபோது பிரபஞ்சத்தின் இயக்கம் இவ்வாறுதான் வாழ்க்கை என்கின்ற தத்துவத்தைப் புரிதலாக்குகிறது. சந்திரிகாவுக்கும் அவ்வாறான தெளி -வு அப்போது ஏற்பட்டிருந்தது. அடைந்த துன்பங்களாலும், துயரங்களாலும், இறுதியாக வந்து விழுந்த தனிமையாலும்தான், வந்த ஞானம் அது. தனிமை, புரிய முடிந்தவர்களுக்கு பெரும் ஞான வித்தாகிறதுதான்.
- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும், வெற்றியின் இரகசியங்கள், எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -



தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.




எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (அறிஞர் அ.ந.கந்தசாமி என்ற அழைக்கப்பட்டவர்) அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் நினைவாக இந்நினைவுக் குறிப்பு வெளியாகினறது. கதை, கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் காத்திரமாகக் கால் பதித்தவர் அ.ந.க. பத்திரிகையாசிரியராக (தேசாபிமானி, ஆரம்பகால சுதந்திரன், இதழாசிரியராகவும் (இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடான ஶ்ரீலங்கா சஞ்சிகை) அவரது பங்களிப்பு பரந்து பட்டது. இதுவரை அவரது வெளிவந்த படைப்புகள்: வெற்றியின் இரகசியங்கள் , உளவியல் நூல் (பாரி நிலையம், 1966), மதமாற்றம் (நாடகம், வெளியீடு: தேசிய கலையிலக்கியப் பேரவை), மனக்கண் (மின்னூல்,அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு: பதிவுகள்.காம்), 'நான் ஏன் எழுதுகிறேன்' (மின்னூல், அமேசன்-கிண்டில் பதிப்பு, 14 கட்டுரைகளின் தொகுப்பு), எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு, மின்னூல்: அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு : பதிவுகள்.காம்). மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அ.ந.க சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர். 

இசையமைப்பாளர் வேதா காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் பலவற்றை வழங்கியவர். ஒரு சில மேனாட்டுப் பாடல்களின் தழுவல்களுமுண்டு. தமிழ்த்திரையுலக இசையில் தழுவாதவர்கள் யாருளர்?
கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கின்றன என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கான ஆவணங்களாகவும் நிலைத்து நிற்கப் போகின்றன என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முதலிடம் தந்து, புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் வெள்ளிவிழாக் கொண்டாடும் உதயன் பத்திரிகை, செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், மற்றும் இருசு பத்திரிகை, பதிவுகள், திண்ணை போன்ற இணையத்தளங்களில் வெளிவந்த பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள், சில புதினங்கள் பற்றி அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









