முன்னுரை
கழுதை என்று ஒருவரைக் கோபத்தோடு திட்டும் போது அது வசவு வார்த்தையாகவே பயன்படுகின்றது. என்பது உண்மைதான் நாம் தேவையில்லாமல் கழுதையின் பெயரைக் கெடுக்கிறோம். கழுதை நமக்கு எவ்வாறு பயன்படுகிறது. அது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கிய வரை எவ்வாறு உழைத்து நமக்கு பயனுள்ள விலங்காக உள்ளத்தைப் பற்றியும், கழுதையின் வாழ்விடம், உணவு, விவசாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதையும் இக்கட்டுரை விளக்கிறது.
கழுதை வாழ்விடம்
ஒரு கழுதைக்கு 2-3 ச.மீ வீதம் இடம் தேவைப்படும் கழுதைகளைக் கட்டி வைக்கும் இடம் சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும். கழுதைக் கொட்டிலில் வெளிச்சம் மற்றும் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியமாகயிருக்கிறது. கழுதைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ளன. கழுதைகள் இயற்கையான வாழ்விடங்களைக் கொண்டிருக்கவில்லை. மனிதா்கள் கொண்டு வந்த எந்த இடத்திலும் அவற்றைக் காணலாம்.
கழுதை உணவு
ஆடு மாடுகளைப் போல மேயும் குணமுள்ளது. நார்ச்சத்து மிக்க புல், செடிகள் போன்றவற்றை மேயும், இவற்றை எளிதாகச் செரிக்கும் திறன் கழுதைக்கு இருப்பதால், இதன் எரிசக்தித் தேவை குறைவாகவே இருக்கும். இதன் உடல் எடையில் 1.5 சதவிகீதம் அளவில் உலா் பொருளைத் தீவனமாகத் தர வேண்டும் . மேய்ச்சலுக்குப் போகும் கழுதைகளுக்கு வைக்கோல் மட்டும் தரப்படுகிறது.
நார்ச்சத்து மிகுந்த தீவனங்கள் கழுதைக்கு ஏற்றவையாக இருப்பதால், இதன் சத்துத் தேவையைப் பசும்புல் ஈடு செய்யும், கழுதைக்கு 1-2 கிலோ உளுந்து வீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு கழுதைக்கு 25 சென்ட் மேய்ச்சல் நிலம் தேவைப்படும் மேய்ச்சலக்குச் செல்லாத கழுதையின் உணவில் 75சதவிகீதம் பசும்புல்லும், 25சதவீதம் உலா் தீவனம் கொடுக்கப்படுகிறது.
இலக்கியங்களில் கழுதை
சங்க காலத்தில் வணிகா்கள் தாங்கள் விற்கும் பொருள்களை அதன் முதுகில் ஏற்றிச் செல்ல கழுதையை பயன்படுத்தினா். வணிகா்கள் இவ்வாறு கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்றனா். (அகம் 899-14) மாங்குடி மருதனா்.
கழுதைக்கு வாய் வெள்ளையாக இருப்பதால் 'வெள்வாய்க் கழுதைப் புல்லினம்' (புறம் 392 ) என்று புறநானூறு கூறுகிறது. ஆண் கழுதை ஏற்றை (அகம் 343 – 12-13) என அழைக்கப்படுகிறது.
மிளகுகை மூட்டைகளாளக் கட்டப்பட்டு கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வணிகக் கூட்டத்தினா் சென்றனா். பெரும்பாணாற்றுப்படை 77-82 கூறுகிறது மிளகு மூட்டைகளையும் (அகம் 207, 1-6) அது தாக்கிச் சென்றிருக்கிறது.
கழுதைகளில் இன்னொரு வகை அத்திரி என்று பெயா் பெறும். இதை ”கோவேறு கழுதை” எனவும் கூறுவா். இது வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்ல பயன்படவில்லை செல்வம் மிகுந்தவா்கள் தாம் செல்ல ஊர்தியாகப் பயன்படுத்தினா். அத்திரிக்கு “இராசவாகனம்” என்று பெயா் வழங்கப்பட்டது. இது வண்டியிலும் பூட்டப்பட்டு வண்டியிழுக்கப் பயன்பட்டது. (அகநானூறு 350, 6-7)
பாண்டிய நாட்டுக் கொற்கைக்கு அருகில் பரதவா் ஊருக்கு அத்திரிப்பூட்டிய வண்டியில் சென்றான் என்று சேந்தன் கண்ணனார் கூறுகிறார். அத்திரியின் மீது ஒருவன் உப்பளங்கழி வழியாக செல்லும் பொழுது சுறாமீன் அதைத் தாக்கியதாக (அகநானூறு 120, 10-11) பதிவு செய்துள்ளது.
தலைவன் நெய்தல் நிலத்திலுள்ள தன் தலைவியைக்காண அத்திரியின் மீது ஏறிச் சென்றான். தலைவனை ஏற்றிக்கொண்டு சேறு நிலத்தில் சென்றதால், அதன் உடம்பின் மீது சேறு படிந்திருக்கும். அதன் கால் குளம்பில் சிவந்த இறாமீன் ஒடுங்கிக் கிடக்கும் என்று நற்றினை (278, 7-9) கூறுகிறது.
இந்திர விழாவின்போது மாதவியோடு நீராடச் சென்ற கோவலன் கோவேறு கழுதை மேல் ஏறிச் சென்றதாக (சிலம்பு கடலாடு காதை, அடி 119) கூறப்பட்டுள்ளது. மதுரையில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவில் சிலா் அத்திரியூா்ந்து வந்தார்கள் என்று (பரிபாடல் பா 10, அடி 17) கூறுகிறது.
விவசாயத்தில் கழுதை
பண்டைக்காலத்தில் வெற்றி கொண்ட அரசன் பகை அரசனுடைய கோட்டையைக் கைப்பற்றி கோட்டையில் உள்ள அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி கழுதை பூட்டிய ஏரினால் கொள், வெள்வரகு ஆகியவற்றை விதைப்பான் இவ்வாறு செய்வது தோல்வியுற்ற அரசனை இகழ்ந்த செயலாகும். இவ்வாறு ”கழுதை ஏா் ஓட்டல்” புறப்பொருள் இலக்கணத்தில் ” உழிஞை படலத்தில் ஒரு துணையாகக் கூறப்பகிறது”
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியின் வீரத்தைப் புகழும்பொழுது, அவன் பகைவா் அரண்களை வென்று, கைப்பற்றி அவற்றை இடித்துப் பாழ்படுத்தி கழுதையால் ஏா் உழுது செய்தியைப் (புறநானூறும் பா.15) பதிற்றுப்பத்து 3 5) கூறுகின்றன.
அதியமான் மகன் பொருட்டெழினி பகைவா் அரண்களைப் போரிலே வென்று வீரா்கள் சிந்திய குருதியாகிய நீர் பாய்ந்து ஈரம் புலராதிருந்த அந்நிலத்தைக் கழுதை பூட்டிய ஏரினால் உழுது கொள்ளையும், வரகையும் விதைத்ததை ஔவையார் (புறம் 392) சிறப்பித்துப் பாடியுள்ளார்.
சேரன் செங்குட்டுவன் வடநாட்டரசரை வென்று அவா்களுடைய கோட்டைகளில் கழுதையால் ஏா் உழுது தன் சினம் தீர்த்தான் என சிலப்பதிகாரம் (நீா்படைக் காதை 225 -226) கூறுகிறது.
கல்வெட்டு
கல்வெட்டுகளிலும் ”கழுதை ஏா் ஓட்டல்” பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன. ” தஞ்சை வட்டம் திருவேதிக்குடி வேதபுரீசுவரா் கோவிலுள்ள இராஜராஜ தேவரின் 32 ஆவது ஆண்டு கல்வெட்டில் கழுதை ஏா் செல நடாத்தி வார்கை விதைத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவையாறு கோயிலுள்ள இராஜாதிராஜனுடைய 32-வது ஆண்டு கல்வெட்டில் கழுதை ஏா் செல நடத்தி வாரடிதை விதைத்து எனக் காணப்படுகிற வடநாட்டில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் ஆண்ட காரவேலன் என்னும் அரசனுடைய (ஹாதிகும்பா) கல்வெட்டில் இவ்வரசனுடைய மெய்க்கீா்த்தியால் அவ்ராஜாகளால் அமைக்கப்பட்ட பிதுண்டம் என்னும் நகரத்தை அழித்து அதனைக் கத்தபம்(கழுதை) பூட்டிய ஏரினால் காரவேலன் உழுதான் எனக் கூறப்பட்டுள்ளது.
ஊா் சபையின் வாரிய் பெருமக்களாக இருப்பதற்குத் தகுதி என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும், என்னென்ன தகுதிகள் இல்லாதவா் தோ்தலுக்கு நிற்கக்கூடாது என்பதையும் உத்திரமேரூா்க் கல்வெட்டு கூறுகிறது. இதில் கழுதை மீது ஏறியவா்கள் தோ்தலுக்கு நிற்கக்கூடாது என்றுள்ளது. ஆகவே தவறு செய்தவா்கள் கழுதை மீது எற்றி ஊா்வலமாக அழைத்து செல்லப்பட்டனா். அவ்வாறு தண்டனை விதிக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்து வந்தி எனவே, “கழுதை இக்காலத்தில் சமுதாயத்தில் ஒரு முதன்மை இடத்தைப் பெற்று வந்திருக்கிறது. என்பதை வரலாற்றுச் சான்றுகளால் அறியமுடிகிறது.
முடிவுரை
கழுதை மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்து. பயன்களைத் தரவல்ல கழுதையினம் அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில் மூவகைக் கழுதை இனங்கள் மட்டுமே அறியப்பட்ட உள்ளன. ஆனால், நாடு முழுவதும் பலவகை நாட்டினக் கழுதைகள் வளா்ப்பில் உள்ளன. அறிவியல் வளா்ச்சி மற்றும் எந்திர வண்டிகள் பயன்பாடு காரணமாக,கழுதைகளும் அவற்றை வளா்ப்போரும் குறைந்து வருகின்றனா். இந்நிலையில் பல்வேறு இடா்களைத் தாங்கி, பலவிதப் பயன்களை வழங்கும் கழுதைகளைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பயன் பட்ட நூல்கள்:
புலியூா்க்கேசிகன் (தெளிவுரையுடன்) சிலப்பதிகாரம்
பாரி நிலையம்
184, பிராட்வே
சென்னை – 108
பதினான்காம் பதிப்பு 1991
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் புறநானூறு (மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் நற்றிணை (மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் பரிபாடல் (மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் பதிற்றுப்பத்து(மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் பெரும்பாணாற்றுபடை (மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன் அகநானூறு (மூலமும் உரையும்)
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்
அம்பத்தூா், சென்னை – 600 098
பதிப்பு 2004
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.