நீ பிழையா …?
நான் பிழையா…?
அல்ல
நாம் தாம் பிழையா…?
எல்லாம் பிழைதான்.
பிழையாய்போனோம்
பிழையாய் வாழ்கின்றோம்
தவறுகளை
தட்டிக்கேட்காமல்
தவறுகளோடு சரியாகின்றோம்.
தவறாய்போன
வழியில்
நோ்மை
எவ்விடத்தில்
அறியவே முற்படுகின்றோம்.
அரசன் பிழையா …?
ஆட்சி பிழையா…?
மக்கள் பிழையா…?
உரிமையை இழக்கும்
மக்களே பிழை.
யார் தான் பிழை
நாம் தாம் பிழை
தவறுகளை
தட்டிக்கேட்காமல்
சுட்டிக்காட்டாமல்
எடுத்துக்கூறாமல்
ஊமையாய்போகும்
மக்களே பிழைதான்.
பிழையாய்போன
மக்கள்
உரிமைகளை
நிலைநாட்ட
சீரிய வழியை
தேடுவதேனோ…?
தொலைதூரம்
நடக்கின்றான்
பாழான பாமரன்
சடலத்தோடு…?
யார் பிழை
நாம் தாம் பிழை.
அன்றாடம்
பொருளாதாரத்
தேவைகள்
மாயமாய்போனதே
மயானத்தின் முகப்பில்
பணம்
பிழையாய் போனதே…!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.