எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.
எப்பொழுதும் ஏதாவது ஆக்கமொன்று தேவையென்றால் 'வணக்கம் கிரிதரன், உங்களால் எனக்கு ஓர் உதவி வேண்டும் .' என்று உட்பெட்டியில் தகவல் அனுப்புவார். ஆனால் அவ்விதமான தகவல்கள் அவரிடமிருந்து இனி வரபோவதில்லை என்பது துயர் தருவது.
'நடு' இதழ் வெளியானபோது அதற்கான படைப்புகளை அவர் எழுத்தாளர்களை அணுகிப் பெற்று வெளியிட்டார். பின்னர் அது முக்கிய இதழாக நன்கறியப்பட்டதும் அதற்கான தேவை இருந்திருக்காது. பலரும் படைப்புகளைத் தாமே விரும்பி அனுப்பியிருப்பார்கள். 'நடு' இதழ் மீது அவர் காட்டிய ஆர்வத்தை, அதை வெளியிடுவதில் அவர் கொடுத்த உழைப்பினை இவ்வுரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அதனால் இலக்கியப் பெறுமதி மிக்கவை.
எழுத்தாளர் கோமகனுடனுடனோர் 'உட்பெட்டி' உரையாடல்!
11/29/14, 10:29 AM
Thiagarajah Thiagarajah Rajarajan
வணக்கம் , கிரிதரன் இங்கிருந்து ஆக்காட்டி இலக்கிய சஞ்சிகை வருவதை அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.அதன் ஆசிரியர் குழுமத்தில் அடியேனும் ஒருவன். வரும் தை மாசி இதழை மறைந்த எஸ் பொ வின் நினைவு சிறப்பிதழாக வெளியிட இருக்கின்றோம். அதற்கு உங்களிடம் இருந்து " ஈழத்து இலக்கியத்துறையில் எஸ் பொ வின் தாக்கம் " என்ற தலைப்பில் ஓர் ஆக்கம் வேண்டி நிற்கின்றேன். ஆக்கத்தை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு மார்கழி மாதம் 15 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன் .
நேசமுடன் கோமகன்
ஆக்காட்டி ஆசிரியர் குழுமம்
11/29/14, 4:45 PM
[ அனுப்புவதாக் கூறியிருந்தேன். ஆனால் கட்டுரையை அக்குறிப்பிட்ட காலத்தில் எழுதி அனுப்ப முடியாமல் போயிற்று. ]
1/15/15, 7:20 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் . உங்களுக்கு இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் . நிற்க, யோ கர்ணனுடான எனதுநேர்காணல் ஆக்காட்டியில் வெளிவந்துள்ளது. படித்துப் பார்த்து உங்கள் கருத்தை தாருங்கள் .
நேசமுடன் கோமகன்
http://koomagan.blogspot.fr/2015/01/blog-post.html
எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை. ( யோ கர்ணனுடனான நேர்காணல்) | ந�
2/18/16, 5:21 PM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரிதரன் , நான் செய்த நேர்காணல்களை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன் . நீங்கள் லெ முருகபூபதிக்கு வைத்த எதிர்வினையை தொகுப்பில் போடுவதற்கு அனுமதி கிடைக்குமா ? நன்றி .
நேசமுடன் கோமகன்
2/18/16, 6:31 PM
நான்: நண்பரே, தாராளமாகப்பாவியுங்கள். - அன்புடன், கிரிதரன்
4/20/16, 8:16 AM
Thiagarajah Thiagarajah Rajarajan
வணக்கம் கிரிதரன், உங்களால் எனக்கு ஓர் உதவி வேண்டும் . Flip Book வடிவமைப்பில் எம்மவர் மின்னிதழ் சஞ்சிகைகள் உங்களுக்குத் தெரிந்து வந்திருக்கின்றதா ? உங்களுக்கு மாதிரி ஒன்று அனுப்புகின்றேன் .இதில் பக்கங்களைப் புரட்ட முடியும் .ஓர் நேரடி வாசிப்பு அனுபவத்தை ஓரளவுக்கு கொடுக்க முடியும் உங்கள் தகவல் எனது நடு சஞ்சிகைக்கான வடிவமைப்புக்காக தேவைப்படுகின்றது .நன்றி . நேசமுடன் கோமகன்
4/20/16, 8:48 PM
நான்:
வணக்கம் கோமகன், magzter.comம் இது போன்ற சேவையினை மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றது. மாதத்திற்கு $10 ற்கும் குறைந்த செலவிலான திட்டங்களுள்ளன. கணையாழி, காலச்சுவடு போன்ற தமிழகச்சஞ்சிகைகள் இச்சேவையினைப் பாவிக்கின்றன. நீங்கள் உங்கள் சஞ்சிகைகளை குறிப்பிட்ட விலைக்கு விற்கவும் முடியும். இலவசமாக வழங்கவும் முடியும்.
1/23/17, 10:44 AM
Thiagarajah Rajarajan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!
1/23/17, 5:28 PM
நான்:
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.
8/2/17, 3:41 PM
நான்:
நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் தங்கள் இலக்கியப்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
Thiagarajah Rajarajan
மிக்க நன்றி தோழர்
1/23/18, 5:32 PM
Thiagarajah Rajarajan
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் !!
1/24/18, 8:09 AM
நான்:
நன்றி நண்பரே!
நான்:
(பதிவுகள்.காம்) படித்தோம் சொல்கின்றோம்: கோமகன் தொகுத்திருக்கும் "குரலற்றவரின் குரல்" .பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்து கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்! - முருகபூபதி -
கட்டுரையை முழுமையாக வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4367:-q-q-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68
Thiagarajah
பார்த்தேன் எனது பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன் முருகபூபதியும் அறியத்தந்தார் மிக்க நன்றி
Thiagarajah Rajarajan
உங்கள் இணையத்தளம் பார்த்தேன் புதிய பாணியில் வடிவமைப்பு செய்தால் இன்னும் தரமாக இருக்கும் என எண்ணுகின்றேன். நடுவின் புதிய தளவடிவமைப்பு நான் தான் செய்தேன் விரும்பினால் சொல்லுங்கள் புதியவடிவமைப்பில் செய்து தருகின்றேன்
1/24/18, 9:09 AM
நான்:
நன்றி கோமகன். பதிவுகள் இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் கவனம் செலுத்துவேன்.
Thiagarajah Rajarajan
okay
8/1/18, 12:18 PM
நான்:
நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வளமும், நலமும் வாழ்வில் தொடரட்டும்.
8/2/18, 4:16 PM
Thiagarajah Rajarajan
இந்தத் தோழமையும் அன்பும் நிலைத்திருக்க வேண்டும் . வாழ்த்துக்கு மிக்க நன்றி .
1/23/19, 2:58 PM
Thiagarajah Rajarajan
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் !
1/23/19, 7:27 PM
நான்:
நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.
2/22/19, 1:22 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரிதரன் , உங்களால் எனக்கொரு சிறிய உதவி வேண்டும். எனது சிறுகதை தொகுதி கடந்த மாதம் வெளியாகியிருந்தது அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன். அதன் பிடிஎப் உங்களுக்கு அனுப்பினால் அந்த நூல் பற்றி உங்கள் பார்வையை தரமுடியுமா? நடுவில் அல்லது வல்லினத்தில் பிரசுரம் செய்கின்றேன். உங்கள் பதில் கண்டு மிகுதி தொடர்கின்றேன்.நன்றி . நேசமுடன் கோமகன்
நான்:
அனுப்பவும். என் பார்வையை அனுப்புவேன்.
2/22/19, 5:07 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரிதரன் , உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். மறைந்த கவிஞர் திருமாவளவன் தொடர்பாக ஒரு நினைவுக்கட்டுரை ஒன்று நடுவுக்காக தரமுடியுமா? கட்டுரை அவரது கவிதைகள் தொடர்பாக ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இருந்தால் நல்லது. எனக்கு வரும் 14 ஆம் திகதி தந்தால் போதுமானது. உங்கள் பதில் கண்டு மிகுதி தொடர்கின்றேன். நேசமுடன் கோமகன்
2/22/19, 8:33 AM
நான்:
அனுப்பி வைக்கின்றேன் நண்பரே.
2/22/19, 9:08 AM
Thiagarajah Rajarajan
Thanks a lot kiri
3/5/19, 9:00 AM
Thiagarajah Rajarajan
Hi i need your article on next Wednesday kiri. And is it possible to giveme your book review in April. Because I will make my book launch in Srilanka.
3/13/19, 7:39 AM
Thiagarajah Rajarajan
கட்டுரை படித்தேன் நன்றாக வந்து இருக்கிறது இந்த புகைப்படத்தையே எடுத்து இருக்கின்றேன். இளங்கோவும் ஒரு கட்டுரை தந்திருக்கிறார் இருவருக்கும் மிக்க நன்றிகள்
நான்:
கட்டுரையின் இறுதி வசனத்தைப் பின்வருமாறு மாற்றி விடவும்: "தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு மற்றும் கன்டாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கிய படைப்பாளிகளில், கவிஞர்களிலொருவர் கவிஞர் திருமாவளவன். கூறு பொருளுக்காக, படிமச் சிறப்புக்காக, , பாவிக்கப்பட்டுள்ள மொழிக்காக அவரது கவிதைகள் எப்பொழுதும் நினைவு கூரப்படும். "
Thiagarajah Rajarajan
okay done
3/13/19, 8:04 AM
Thiagarajah Rajarajan
நூல் விமர்சனம் மே மாதத்தில் நடு இதழில் பிரசுரம் செய்ய சாத்தியப்படுமா
நான்:
எப்பொழுது உங்களுக்கு வேண்டும்?
Thiagarajah Rajarajan
i need may 14th
5/28/19, 10:31 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரி, நலம் நலமறிய ஆவல்.நிற்க , எனது சிறுகதை தொகுதி பிடிஎப் உங்கள் பார்வைக்காக அனுப்பியிருந்தேன். அது தொடர்பாக உங்கள் பார்வையினை அனுப்ப முடியுமா? அதனை நடுவில் நூல் விமர்சனமாக படிப்பதற்கு உதவியாக இருக்கும். உங்கள் பதில் மிகுதி தொடர்கின்றேன் நன்றி .
5/28/19, 10:19 PM
நான்:
இன்னும் ஏழெட்டு நாள்கள் தர முடியுமா?
5/29/19, 12:34 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரி பதிலுக்கு மிக்க நன்றி. எனக்கு வரும் 10 ஆம் திகதியளவில் அனுப்பி வைத்தால் நல்லது. ஆக்கம் வரும் 15 ஆம் திகதி அளவில் பிரசுரம் செய்யப்படும். நன்றி.
6/10/19, 10:48 AM
நான்:
நண்பரே, கட்டுரை அனுப்பியுள்ளேன். வாசித்துப்பார்க்கவும்.
Thiagarajah Rajarajan
வாசித்தேன் கிரிதரன் மிக்க நன்றி உங்கள் விமர்சனத்துக்கு. உங்கள் கருத்துக்கள் மனதிற்கு ஊக்கமாக இருக்கின்றது. முக்கியமாக இங்கு வங்கி அட்டைகளை 'கிரெடிட் கார்ட்' என்றுதான் எம்மவர்கள் சொல்லுவார்கள். பிரித்து சொல்வதில்லை. நானும் அப்படியே எழுதி விட்டேன். அது பொருள் மயக்கத்தைக் கொடுத்து விட்டிருக்கின்றது என்பதை இப்பொழுதுதான் உணர முடிகின்றது. நிற்க, உட்க்கொள்ளும் மருந்துகளின் வீரியம் என்னை அதிகம் பாதிக்கச்செய்வதால் பரிசோதனை குழாய் குழந்தை . சிகிச்சை தொடர்ச்சியாக செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டே செய்வர். மிக்க நன்றி நூல் விமர்சனம் 14 ஆம் திகதியளவில் வெளியாகும்
6/15/19, 11:39 AM
Thiagarajah Rajarajan
வணக்கம் கிரிதரன் , உங்கள் மெயில் பார்த்தேன். உரிமையுடன் தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. இந்த இனையத்தளத்தை யாருடைய உதவியும் இல்லாது நானாக வடிவமைத்தேன் அதற்கு யூ ரியூப் உம் உதவி செய்தது. இப்பொழுது அனைத்து எழுத்தாளர்களது பெயர்களும் தெரிகின்றது. முக்கியமான நேரத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
3/28/20, 3:34 AM
Thiagarajah
Thiagarajah Rajarajan
வணக்கம், பிரான்சில் இருந்து கோமகன், நடு ஆசிரியர் குழுமம். உங்களால் ஒரு உதவி வேணும் . இப்பொழுது இருக்கின்ற விடுமுறையில் நீங்கள் வாசித்த நூல்கள் , சினிமா அல்லது இலக்கியம் தொடர்பாக எதுவாகினும் ஒரு 5/10 நிமிட ஒளிப்பதிவில் உங்கள் வாசிப்பு அனுபவத்தை சொல்ல முடியுமா ? ஒளிப்பதிவு முடிவில் உங்களுக்கு விரும்பிய நண்பர்களை நீங்கள் முமொழிவு செய்யலாம் நடுவில் ஒரு பகுதியை திறந்து ( கொரோனா காலத்து இலக்கியப் பதிவுகள் ) என்று அவணப்படுத்தலாம் என இருக்கின்றேன். இது யூ டியூப்பிலும் தொடராக வெளியாகின்றது .
ஐபோன் அல்லது கலக்சி கமராக்கள் நன்றாக இருக்கும் ஏனைய போன்களினது கேமராவும் வேலை செய்யும் . வீடியோ எடுக்கும் பொழுது போன் கமராவை குறுக்கு பாடாக வைத்து கதையுங்கள் அப்பொழுதுதான் திரை முழுவதும் வரும். நான் தரும் சுட்டியில் போய் ஒரு பயனர் கணக்கை திறந்து விட்டு அதில் எனது மெயில் முகவரியை போட்டு விட்டு உங்கள் பைலை தரவேற்றம் செய்தால் அது எனக்கு அனுப்பி வைக்கும். உங்களுக்கும் அனுப்பியதாக செய்தியினை அனுப்பி வைக்கும் . இந்த முறை பெரிய பைல்களை அனுப்புவதற்கு சுலபமானது .நன்றி . நெட் பிரச்னை கொடுத்தால் வாட்ஸ் ஆப்பில் துண்டுதுண்டாக ஓடரின் படி அனுப்புங்கள் எனது வாட்ஸ் அப் தொடர்பு : +33623666554. உங்கள் பதில் கண்டு மிகுதி தொடர்கின்றேன்.நன்றி . நேசமுடன் கோமகன்
[ இந்தச் செய்தியை உடனடியாக என்னால் காண முடியவில்லை. உட்பெட்டியை நிறைத்துப் பல குழுமங்களின் செய்திகளிருந்து உடன் பார்ப்பதைத் தடுத்து விட்டன. சில மாதங்களின் பின்னரே கண்டேன். இதுதான் என் உட்பெட்டியில் அவர் அனுப்பிய கடைசிச் செய்தி. ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.