அஞ்சலி: நாட்டுப்புறப்பாடகரும்,, நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் (23 ஜூலை 1933 – 5 மே 2021) மறைவு! - ஊர்க்குருவி -
"என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்"
இந்த ஒரு பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகின் இரசிகர்களையெல்லாம் கவர்ந்தவர் நாட்டுப்புறப்பாடகர் டி.கே.எஸ்.நடராஜன். இவர் பாடிய கொட்டாம்பட்டி றோட்டிலே பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல்.
'ரத்தபாசம்' திரைப்படத்தின் மூலம் நடிகராகத் திரையூலகில் நுழைந்தவர் ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக விக்கிபீடியா கூறுகின்றது. அவர் நேற்று (மே 5) மறைந்த செய்தியினை அறிந்தபோது அவரது பாடல்களை மீண்டுமொருமுறை மனது அசை போட்டது.
இள வயதில் வயதில் டி.கே.எஸ் நாடகக் குழுவில் பல நாடகங்களில் நடித்த காரணத்தினால் டி.கே.எஸ்.நடராஜன் என்று அழைக்கப்பட்டார்.
'வாங்க மாப்பிள்ளை வாங்க' திரைப்படத்தில் இடம் பெற்ற இவரது 'என்னடி முனியம்மா' பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.
இப்பாடல் பின்னர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த வாத்தியார் திரைப்படத்திலும், இமான் இசையில் சிறப்பாக ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. அப்பாடலைப்பாடியவர்கள் பாடகர் கார்த்திக், பிலாஸ் (Blaaze). அதில் கெளரவத்தோற்றத்தில் டி.கே.எஸ்.நடராஜனும் இடம் பெற்றுள்ளார்.