உலக மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டமும், சுப்ரபாரதிமணியனின் 'நைரா' நாவல் வெளியீடும்! - சுப்ரபாரதிமணியன் -
திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஏற்பாட்டில் 1/10/23 அன்று மொழிபெயர்ப்பு தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது .அதை ஒட்டி சுப்ரபாதி மணியனின் 'நைரா' நாவல் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. மற்றும் தூரிகை சின்னராஜ் அவர்கள் மொழி பெயர்ப்பு நூல்கள் தரும் புதிய வாசல்கள் பற்றி விரிவாக பேசினார்.
முத்து பாரதி தொடர் சொற்பொழிவு ' சுதந்திரப் போரில் தமிழகம்' , அ.அருணாச்சலம் தினேஷ் லோகேஷ் கவிதை வாசிப்பு , சர்ச்சைக்குரிய அழகு பாண்டி அரசப்பனின் எம் எஸ் சுவாமிநாதன் விஞ்ஞானி சேர்க்கை உரங்களின் தந்தை. அவர் விவசாய புரட்சியாளரா என்ற சர்ச்சைக்குரிய பேச்சு , சாமக்கோடங்கி ரவியின் எழுத்தறிவு அனுபவம் ஆகியவை இடம்பெற்ன.
சுப்ரபாரதிமணியனின் 'நைரா' நாவலை கோவை ஸ்டான்லி மொழிபெயர்த்திருக்கிறார் . கோழிக்கோடு லிபி பதிப்பகம் வெளியிட்டுள்ளது..தூரிகை சின்னராஜ் வெளியிட்ட, ஆர்.பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு செய்த உலகச்சிறுகதைகள் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.சுப்ரபாரதி மணியனின் ஐந்து நாவல்கள் முன்பு மலையாள மொழியில் வந்துள்ளன என்பது பற்றி சின்னராஜ் விரிவாக எடுத்துரைத்தது சிறப்பாக அமைந்திருந்தது. சிவதாசன் திருப்பூர் வரலாறு அனுபவம் பற்றி பேசினார். தங்கபூபதி பிரபுவின் சிறந்த ஒருங்கிணைப்பு சிறப்பாகவிருந்தது.