பதிவுகள் முகப்பு

இலை மறை காயாக இருந்து சாதனைகள் படைத்தவர் பிரேம்ஜி ஞானசுந்தரன் - த.சிவபாலு -

விவரங்கள்
- த.சிவபாலு
இலக்கியம்
20 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

திரு. பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களது ‘பிரேம்ஜி கட்டுரைகள்’ என்ற நூலின் வாயிலாக கனடிய மண்ணில் அவரைப்பற்றிய தெளிவும், அறிவும் வெளித்தோற்றமாக அனைவராலும் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிட்டியமையை நினைவு கூரமுடியும். இருப்பினும் பிரேம்ஜீ அவர்களுக்கு ஒரு அறிமுகம் தேவைதானா என்னும் கேள்வியும் என்மனதில் உதிக்கின்றது.

ஈழத்தில் உள்ளவர்களில் ‘பிரேம்ஜீ’ என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு அவரது எழுத்துப்பணி அவரை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் ஞானசுந்தரன் என்றால் எல்லோரும் இவர் யார் என்று மூக்கில் விரலை வைக்கக்கூடும். இலை மறைகாயாக இருந்து பெரும் பணிகளை ஆற்றி தமது சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர் பிரேம்ஜி எனப்படும் ஞானசுந்தரம் அவர்கள். அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஞானசுந்தரன். திருநெல்வேலியல் கற்ற அவர் கொழும்பு சென்று அங்கு பெம்புறூக் உயர் கல்வி நிறவனத்தில் இணைந்து பெற்ற கல்வியைத் தொடர்ந்து இந்தியாசென்று பட்டதாரியாகத் திரும்பினார்.

மேலும் படிக்க ...

இலைமறை காயாக இருந்து சாதனைகள் படைத்தவர் அ.ந.கந்தசாமி அவர்கள்! - த.சிவபாலு -

விவரங்கள்
- த.சிவபாலு -
இலக்கியம்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அ.ந.கந்தசாமி அவர்கள் ஈழத்தின் அவர் காலத்தில் வெளிவந்த பல்வேறு பத்திரிகைகளில் தனது இலக்கிய ஆக்கங்களைப் பதிவிட்டுள்ளதன் மூலம் அவரை அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்குப் பிரபலமடைந்திருந்தார். முற்போக்கு இலக்கியச் செய்தி இதழாக அவ்வேளை வெளிவந்த மொஸ்கோ சார்பு பத்திரிகையான ‘தேசாபிமானி’யில் அவரது படைப்புக்கள் வெளிவந்தன. அத்தோடு அப்பத்திரிகையின் ஆசிரிய பிடத்திலும் பணியாற்றியிருந்தார் என்பதனையும் அறியமுடிகின்றது.

1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி,  பின்னர் முறையே சுதந்திரன், வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை – பொதுவுடமைச் சேவையை – கைவிட்டிலர். ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி – மூலம் நாட்டின் சீர்கேடு,  பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க முயன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு முரசம் கட்டினார். தேசாபிமானி இனத்தின் விடுதலை பற்றி அதிகம் கருத்தூன்றிக் கவனிக்காத காரணமோ என்னவோ, அவர் அப்பத்திரிகையைக் கைவிட்டு சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடமேறினார் என்பதற்கு அவருள் தீச்சுவாலையாப் பதிந்த அவர் காலத்து இன விடுதலை வேட்கை என்றுதான் கொள்ளமுடிகின்றது. அதனால்தான் எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற முடிந்தது போலும். அத்தோடு கம்யூனிஸச் சித்தாந்த அடிப்படையில் சியோனிச வாதம் என்னும் ஒன்று தலைவிரித்தாடி பூர்சுவாக்களாக மொஸ்க்கோ சார்புப் பொதுவுடமைக் கட்சி பற்றிய விமர்சனங்கள் இவர் காலத்தில் எழுந்திருந்ததும், சிங்கள இனவாத்தைக் கண்டிக்காததும் பக்கச் சார்பற்று நடக்காததும் சிங்கள ஆதிக்கம் மொஸ்போ சார்பு போக்கில் காணப்பட்டதும் இவர் தேசாபிமானியின் ஆசிரிய பீடத்தில் இருந்து விலக் காரணமாயிருந்திருக்கலாம்.

மேலும் படிக்க ...

கனடாவில் மார்க்கம் விவசாயக் கண்காட்சி – 2024 - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.

வெளியரங்குகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இனி பனிக்காலம் முடியும் வரை அனேகமாக நடைபெற மாட்டாது. மீண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியரங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறுவர்களுக்கான உள்ளக அரங்குகள் பல இருந்தன. விவசாயத்தை முதன்மைப் படுத்தி, அது சார்ந்த காட்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இளைய தலைமுறையினர் விவசாயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஏற்றது போல காட்சிகள் அமைந்திருந்தன. இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளையும், மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களையும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். குறிப்பாக மேப்பிள் மரத்திலிருந்து பெறும் மேப்பிள் பாணியைப் பலரும் வரிசையில் நின்று வாங்கினார்கள். நன்றி சொல்லும் நாள், கலோவீன் தினம் போன்றவை வருவதால் பூசணிக்காயும் விற்பனையாகியது.

மேலும் படிக்க ...

வதனம் மஞ்சரி - கனடா சிறப்பிதழ் வெளியீடு - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.

மேலும் படிக்க ...

மாயாறு : நெடுங்கவிதைகள் சுப்ரபாரதிமணியன்! - கவிஞர் மதுராந்தகன் -

விவரங்கள்
Administrator
நூல் அறிமுகம்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



- 11/10/24 திருப்பூர் நற்பவி வாசகர் வட்டம் நடத்திய நூல்கள் அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் மதுராந்தகன் படித்த கட்டுரை -

 நெடுங்கவிதைகள் கூறிய இலக்கணத்தை உடைத்து புதிய  இலக்கணத்தை அமைத்துவிட்டார் சுப்ரபாரதிமணியன். நெடுங்கவிதைகள் என்றால் நீள நீளமாகத்தான் இருக்க வேண்டுமா . ஒரே பொருள் குறித்த குறுஞ்கவிதைகளாகக் கூட இருக்கலாமே என்கிறார் ..

 இதில்  ஆதிவாசிக் கவிதைகள் என்று பெயரிட்டவர் ஆதிவாசி ஆகவே மாறிவிட்டார். ஆதிவாசிகள் குரலில் அவர்களின் பிரச்சினையைப் பற்றிப்பேசுகிறார்.  92 கவிதைகளில் 92 பிரச்சனைகளின் உருவங்களைச் சொல்கிறார். இயற்கையோடு இணைந்து ஆனந்தமாக வாழும் ஆதிவாசிகளை அழிப்பதற்காகவே சிலர் சந்தன மரங்களை வெட்டுவதும் மிருகங்களை வேட்டையாடுவது ஆதிவாசிகளை அச்சம் அடைய வைக்கின்றன .சிங்கம் புலி பூனை எனும் விலங்குகளில் கார்ப்பரேட்டுகள் எந்த இனம் என்பதில் இவருடைய உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறார் .யானை மிதித்து செத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் என்பது ஆதிவாசிகளின் ஒட்டுமொத்த உணர்வுகளும் வெள்ளையர்களும் , கொள்ளையர்களும் வேட்டையாடிவிட்டு மிருகங்களை மட்டுமல்ல  பொம்மக்கா மாதிரி பெண்களைச் சீரழித்தது எத்தனை எத்தனையோ பேரை .கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கமும் போலீஸ் முதலான பாதுகாப்பு உள்ளதால் அவர்கள் மரங்களை வெட்டி வளங்களை அழித்து கட்டிடம் கட்டவும் புதிய தொழில் தொடங்கவும் ஆதரவு கிடைத்தது .ஆகவே ஆதிவாசிகள் அவர்களை எதிர்க்கும் சக்தி அற்றவர்களாக வாழ்கிறார்கள் .

மேலும் படிக்க ...

‘நாமசங்கீர்த்தன மரபு’ - ‘அபங்’ பாடல் வகை பற்றிய அறிமுகம்.

விவரங்கள்
-தகவல்;பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
18 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 865 5516 7525 |Passcode: 903772

மேலும் படிக்க ...

கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஐங்கரன் விக்கினேஸ்வரா -
நிகழ்வுகள்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு வழக்கறிஞரின் இலக்கிய யாத்திரை - நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.-

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
வேந்தனார் இளஞ்சேய்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

   

இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.

      ஆனால் அண்மையில் அவரது 85ஆவது பிறந்தநாள் ஆவணத் தொகுப்பை பார்வையிட்டபோது நான் அசந்துதான் போனேன். நம் தமிழர் மத்தியில் வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டியவர்களில் சிறீகந்தராசா மிக முக்கியமானவர் என்பதனை இதனைப் பார்வையிடும் போது என்னால் உணர முடிந்தது. இவ்வேளை எனது தந்தை அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்தவேளை இற்றைக்கு இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் குறித்த ஆவணப் பதிவொன்றை விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கலைச்செல்வனுடன் இணைந்து ஆவணப்படுத்தியமையும் என்னுள்; வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனோ அவை சாத்தியப்படுவது சிரமமாகக் காணப்பபட்டது. ஆனால் தொழில்நுட்ப வசதிகள் கோலோச்சி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வரலாற்று ஆவணங்கள் தமிழர்களிடையே பதியப்படுவது முக்கியமானதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  

      அவரின் அன்புத்துணைவி மாதினியின் இனிமையான குரலின் இன்னிசையோடு;ம், விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தான் அறிந்த அதாவது இவருக்கு இருந்த கோவலனாரின் ஓலைச்சுவட்டின் அனுபவத்தைக் கேட்கும் கேள்வியோடும் ஆரம்பித்தபோது என்னை விழிப்படையச்செய்து அப்பதிவை உடன் பார்க்கவேண்டும் என அதில் கட்டிப்போட்டது.

மேலும் படிக்க ...

சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களே! உங்களுக்குத் தாழ்மையான ஒரு வேண்டுகோள். உங்கள் பத்திரிகைகளை நிச்சயம் நீங்கள் உங்கள் நிறுவன நூலகங்களில் ஆவணப்படுத்தி வைத்திருப்பீர்கள். அப்படி வைத்திருந்தால் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வையுங்கள். உங்கள் பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்ய விரும்பும் எவருக்கும் உறுதுணையாக இருங்கள். படைப்புகளைத் தேடி வேண்டுகோள்கள் வரும்போது நிச்சயம் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சேவைக்கு இலவசமாக உதவிகளைச் செய்யத்தேவையில்லை. சேவைக்குரிய நியாயமான கட்டணங்களை நீங்கள் அறவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பத்திரிகைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த உதவி செய்கின்றீர்கள்.

நான் முன்பு பல தடவைகள் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மனக்கண் நாவல் பிரதிகளுக்காக தினகரன் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை எவற்றுக்கும் பதில்  கிடைத்ததேயில்லை. பின்னர் இலங்கைச் சுவடிகள் திணக்களத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அக்காலகட்டத்தில் அதன் இயக்குநராகவிருந்த K.D.G.விமலரட்ன அவர்கள் உண்மையிலேயே சிறந்த பண்பு மிக்கவர் மட்டுமல்லர்.உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்தார். அதனால் அவர் எனக்குச் சுவடிகள் திணக்களத்திலிருந்து மனக்கண் நாவல் வெளியான பக்கங்களைப் புகைப்படப் பிரதிகளாக எடுத்து , நியாயமான கட்டணத்துக்கு அனுப்பி உதவினார். அதை ஒருபோதுமே மறக்க மாட்டேன்.

- சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி.விமலரட்ன -

அவ்விதம் அவர் அனுப்பிய மனக்கண் அத்தியாயங்கள் அத்தியாயம் முப்பது மட்டும் கிடைக்கவில்லை. அதன் பிரதி சுவடிகள் திணைக்களத்தில் இல்லை.  அதன் பின்னர் அதனைத்தேடிப் பல தடவைகள் தினகரன் பத்திரிகை ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். பதில்கள் வந்ததேயில்லை. பின்னர் எழுத்தாளர் காத்யான அமரசிங்கவிடம் இது பற்றிக் கூறியபோது அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நூலகத்திலிருந்து அந்த தேடப்பட்ட அத்தியாயத்தை எடுத்து அனுப்பினார். இவரையும் ஒருபோதுமே மறக்க மாட்டேன். இவர்கள் இருவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இன்று அ.ந.கந்தசாமியின் வெளியான ஒரேயொரு முக்கிய நாவலான 'மனக்கண்' நாவலை நீங்கள் யாவரும் வாசிக்க முடிகின்றது.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் பாடல்கள்! (தொகுப்பு 2) - இன்று புதிதாய்ப் பிறந்தேன்'

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது யு டியூப் சானலான 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் வெளியான பாடல்களின் இரண்டாவது தொகுதி 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்னும் தலைப்பில் , பதிவுகள்.காம் வெளியீடாக அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. தொகுப்பினை முழுமையாக வாசிக்க

புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! - அ.எப்தா நிஷான் ( A.Abdhan Nishan ), மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -

விவரங்கள்
- அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
ஆய்வு
11 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அ.எப்தா நிஷான் A.bdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற  விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள்.  இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன. அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -


தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சு10ழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் 

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே 'புலம்பெயர் இலக்கியம்" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் இல் பொருள் உவமை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
ஆய்வு
11 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

இல் பொருள் உவமை அணி

உலகில் இல்லாத, நடைபெற முடியாத ஒன்றினை உவமையாகக் கொண்டு ஒரு பொருளை விளக்கிக் காட்டுவது இல் பொருள் உவமை அணி எனப்படும்.

தேய்வுஇலா முகமதி

கைகேயியிடம் கூனி வந்து இராமனுக்கு முடிசூட்ட இருப்பதை கூறுகிறாள். உடனே கைகேயியின் அன்பு எனும் கடல் ஆரவாரித்தது. தேய்வில்லாத முகமாகிய திங்கள் ஒளியுடன் விளங்கி தோன்றியது. ஞாயிறு முதலிய சுடர்களுக்கு எல்லாம் தலைமை என்று சொல்லத்தக்க அளவு ஒளி வீசும் பொன்மணிமாலை ஒன்றை கைகேயி, கூனிக்குக் கொடுத்தாள்.

“ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வுஇலா முகமதி விளங்கித் தேசுர “
(மந்தரை சூழ்ச்சிப் படலம் 145)

இதில் தேயாத மதி என்று புலவர் பாடியுள்ளார். தேயாதமதி என்பது உலகில் இல்லாத ஒன்று. ஆகவே இப்பாடல் இல் பொருள் உவமையாகும்.

கமலம் பூத்த தொடுகடல்

இராமன், சீதை திருமணத்தைக் காண அயோத்தியிலிருந்து அனைவரும் மிதிலை நோக்கிச் செல்கின்றனர். பொன் வளையல்கள் அணிந்த மகளிர் கூட்டம் கிண்கிணிமாலை அணிந்த குதிரைக் கூட்டங்களில் சுற்றிலும் வருகின்றனர். இக்காட்சி தாமரைப் பூக்கள் மலர்ந்த கடல் அலை போல இருந்தது. கடலில் தாமரை பூக்காது.

மேலும் படிக்க ...

கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் இலங்கைத் தமிழ்க் கவிதையின் முன்னோடிகள் பற்றிய கருத்துகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் பக்கம்
10 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய  தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.


அண்மையில் நிகழ்ந்த இலக்கியவெளி அமைப்பின்  மெய்நிகர் நிகழ்வான '“நீலாவணன் குறித்து வந்த திறனாய்வுக் கட்டுரைகள்” நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி எம்.எம்.ஜெய்சீலன், திறனாய்வாளர் எஸ்.கேசவன் ஆகியோரின் உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அதில் அவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாக மூவரை குறிப்பிட்டிருந்தார்கள். கவிஞர்களான மஹாகவி, இ.முருகையன் மற்றும் நீலாவணன் ஆகியோரே அவர்கள். ஒரு தவறான கூற்று. இதற்குக் காரணம் இவர்கள் இம்முடிவுக்கு வர இவர்கள் தம் தேடலை நம்பியிருக்காமல் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், எழுத்தாளர் அ.யேசுராசா மற்றும்  கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிந்தனைகளே இம்முடிவுக்கு வரக் காரணமாகவிருந்ததுதான் எனத் தமது உரைகளில் இவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள்.

நுஃமான், அ.யேசுராசா மற்றும் குழந்தை சண்முகலிங்கன் நிச்சயம் இம்மூவரையும் இலங்கையின் நவீனத்தமிழ்க் கவிதையின் முன்னோடிகளாகக் குறிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நிச்சயம் முக்கியமான கவிஞர்களாக இவர்களை இனங்கண்டு திறனாய்வுக் கட்டுரைகள் பலர் எழுதியிருக்கின்றார்கள். இலங்கையின் நவீனத்  தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் அறிவியல் மின்னூல்: 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்'

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னுடைய அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' நூல் மின்னூலாக இணையக்  காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. மின்னூலை இணையக் காப்பகத்தில் அல்லது பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைப்பு 

இணையக் காப்பகம் (archive.org) எழுத்தாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாகப் பாவிக்க வேண்டிய ஆவணத்தளம். உங்கள் படைப்புகளின் பிடிஃப் கோப்புகளை அங்கு சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் இணையத்தில் உங்கள் படைப்புகள் நிலைத்து நிற்கப் போகின்றன. இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, உங்கள் படைப்புகளையும் சேகரித்து வையுங்கள்.
இத்தளத்தில் பல அரிய தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை... இலங்கை அரசியல் ஓர் அலசல்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
08 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1.  ஜே.வி.பி. இன்று மாறிவிட்டது... இல்லை. இன்னும் மாறவில்லை...

இப்படியான வாதங்கள், இலங்கை அரசியலில் இன்றும் தொடர்வதாய் உள்ளன. ரணில் விக்ரமசிங்க முதல் பல்வேறு தரப்பினரும், இவ்வாதங்களை மிகுந்த விருப்புடனேயே அவ்வப்போது முன்வைத்துள்ளார்கள். இதில் உண்மை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காணப்படும் மாற்றங்கள், வெறும் மேலோட்டமானவையே, அன்றி உள்ளடக்கத்தில் அதே அரசியல்தான் இன்னமும் ஓடுகின்றது என்ற வாதமும் இது போலவே தொடர்வதாக உள்ளது. ஆனால், மக்களின் விருப்பு என்பது எப்பொழுதும் போல ஆபத்தான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே, அதனை ஜே.வி.பி. ஏற்றாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கு உண்டு. இவ்விருப்பை மாற்றியமைக்க முயலும் செயற்பாடுகள் இருக்கலாம் என்றாலும், அவை யதார்த்த நிலைமைகளை மீறும்போது, பொருந்திவராமல், தமது அழிவுக்கான அஸ்திவாரங்களை இட்டுவிடுகின்றன. (இங்கே யதார்த்தம் என்பது, உள்நாட்டு-வெளிநாட்டுச் சக்திகளையும் உள்ளடக்கவே செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை).

இந்தப் பின்னணியில்தான் அநுரகுமார திசாநாயக்க அவர்கள், இன்று இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இவ்வாட்சி நீடிக்குமா அல்லது இழுபறிக்குள்ளாகுமா, அல்லது தோல்வியைத் தழுவுமா என்பனவெல்லாம் இனி நடக்கப்போகும் சங்கதிகளாகின்றன. இருந்தும், யதார்த்தங்களை மறக்கநினைக்கும் யாறொருவருக்கும் வரலாறு மிகக்கடுமையான தண்டனைகளையே வழங்கி வருவது சாசுவதமாகின்றது. (இதற்கான உதாரணம் எண்ணில் அடங்காதன என்பதும், அவை இலங்கை அரசியலில் இடம்பெறாமலும் இல்லை என்பதும் தெளிவு).

1970ல் ஆட்சியைக் கைப்பற்றிய ஸ்ரீமாவோ தலைமையில் இடதுசாரி கூட்டணி அமையப்பெற்றது. என்.எம்.பெரேரா-கொல்வின் ஆகியோரின் சமசமாஜ கட்சியும், பீட்டர் கெனமனின் கம்யூனிஸ கட்சியும் கூட்டணி அமைத்திருந்த காலமது. இருந்தும் இவ்வாட்சி, 1977ல் படுதோல்வியைக்கண்டு ஜே.ஆர். இன் 17வருட கேவலமான ஆட்சிக்கு வித்திட்டது (1977-1994). வித்தியாசம், இவை அனைத்தும் நடந்தபோது இருந்த இந்தியா, இன்று இருப்பதாகத் தெரியவில்லை. மாறியுள்ளது. அதாவது, விடயங்கள் மாறியுள்ளன.

மேலும் படிக்க ...

நூல் வெளியீட்டு விழா: ஆறு. சிறீகாந்தனின் ஆய்வுத் தொகுப்பு - 'திரை இசை இலக்கியமும், வாழ்வியலும்'

விவரங்கள்
- தகவல்: பாலேந்திரா -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பு உறவுகளுக்கு, இந்த நூல் வெளியீட்டு விழாவில், கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளில் நிறைந்துள்ள, தொன்தமிழின்கலாச்சாரம், பண்பாடு; பெண்ணியம், காதல், வீரம் கூறும் இலக்கியம் என ஒர் ஆய்வு அரங்கேறுகிறது. ஆர்வலர்களுக்கு பகிருங்கள்.அரங்கத்தை மெருகேற்றுங்கள்,

நன்றி.
ஆறு. சிறீகாந்தன்.

நூல் வெளியீட்டு விழா: அகணி சுரேஷ் எழுதிய நான்கு நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- தகவல்:அகணி சுரேஷ் -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல் - “மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” - தகவல்: அகில் -

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
06 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வ.ந..கிரிதரன் பாடல்கள்: சிந்திப்போம்!,விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்!, அன்பே வாழ்வின் அடிப்படை!,புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                      இசை &  குரல்: AI SUNO | ஓவியம்: AI

1. சிந்திப்போம்!

யு டியூப்பில் கேட்டுக் களிக்க

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

இருப்பு இருக்கும் அண்டம் பற்றி
விருப்புடன் சிந்திப்பேன் சலிப்பு அற்று.
சிந்திப்பது போலோர் இன்பம் உண்டோ!
செகத்தில் சிந்திப்பது தான் பேரின்பம்.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

சிந்திப்போம் இங்குநாம் உள்ள வரையில்.
சிந்திப்பதால் தெளிவு பிறக்கும் மேலும்
சிந்திப்பதால் அறிவு பெருகும் எனவே
சிந்திப்போம் இருக்கும் வரையில் நாமே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

மேலும் படிக்க ...

காரைக்கவி. கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு' துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை - கட்டுரைத் தொகுப்பு பற்றிய ரசனைக் குறிப்பு! பிரதேச வழக்கு நூலுக்குப் பிரதேச வழக்கில் ஒரு விமர்சனம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
03 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தொன்மையான தமிழர் பண்பாடும் கிராமிய பேச்சுவழக்கும் எங்கட வாழ்வியல்ல வழக்கொழிந்து செல்கிற அல்லது திட்டமிட்டு அழிக்கப்படுகிற இந்தக் காலத்தில , அந்தக் காலத்து அருமை பெருமைகளை , சம்பிரதாயங்களை அதற்கான காரணங்களை எதிர்கால தலைமுறையினரும் அறிஞ்சு கொள்ளுற விதமாக 'சீத்துவக்கேடு துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை' என்று  ஆவணமாக்கி , அப்புவின்ரை ஆச்சியின்ரை வாய்மொழியாக்கி , எங்களுக்கெல்லாம் வள்ளிசாகக் கதை சொல்ல வந்திருக்கிறார் ஒரு காரைநகர் இளந்தாரி.

இவர் கிராமத்துக் காட்சிகளை விவரிக்கிற அழகில அந்தக் கிராமமும் எளிமையான மனிசரும் , ஆடுமாடு நாய் பூனையளும் , அப்புவும் ஆச்சியும் , எழுதியவரும் அவர் வேலிப் பொட்டுக்கால  சில்மிசம் பண்ணுற  பக்கத்து வீட்டு பதின்மத்துக் காதலி மலரும்  கண்ணுக்கு முன்னால கலைப்படம்  மாதிரி வந்து வந்து போகினம். அப்பிடி ஒரு சரளமான இயல்பான எழுத்து. இந்த எழுத்தில மலர் மாதிரி கொஞ்சம் மயங்கிப் போகாத ஆக்கள் இருக்கேலாது.

வடக்கின்ரை பிரதேச வழக்கிலையே முழுப்புத்தகத்தையும் எழுதி, அந்த மொழிவழக்குக்கு ஆவணப் பெறுமதி சேர்த்த   உவருக்கு , உண்ணாண நாங்கள் எல்லாரும்  ஒருக்கா  நன்றி சொல்லத்தான் வேணும்.

மேலும் படிக்க ...

கவிதை: இளைஞர்களின் மூலதனம். - ரவி அல்லது -

விவரங்கள்
- ரவி அல்லது -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனவுகள்
யாவும்
மெய்ப்படப் போகிறதென்ற
மீய்ந்த
கொஞ்சம்
நம்பிக்கைகள்
கொடுத்திருப்பது தான்
இவ் வாய்ப்பு.

குழுமிக் கலைந்தோம்
கொள்கை இல்லையென்றென
வஞ்சித்த கூட்டத்தின் முகத்தில்
பூசிய
கரியெனக் கொள்ளலாம்
மனிதம்
துளிர்த்ததை.

மலையக துயரங்கள்
மாறுமென்று
இணுக்கிக்கொண்டே
இருக்கிறது
இலைகளை
எஞ்சிய வாழ்க்கையில்
ஏதாவது
நடக்குமென்று.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                    - எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி.நடராசன் -

எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப  எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு.உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.  

அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்  என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர்.  இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம்.  இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்.  மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, "மறுமலர்ச்சி" என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."

இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.

மேலும் படிக்க ...

‘ஆக்குவாய் காப்பாய்’ கனடியத் தமிழ்த் திரைப்படம் - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.

லூனார் மோஸன் பிக்சர்ஸ் மற்றும் ஆர். புரொடக்ஸன்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம் கனடா எஸ். மதிவாசனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தமிழ்ப்படம் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி யோர்க் சினிமா திரையரங்கில் மதியம் ஒரு மணிக்குத் திரையிடப்பட இருக்கின்றது.

இதில் கதாபாத்திரங்களாக கிருந்துஜா ஸ்ரீகாந், ஜெயப்பிரகாஸ், டேனிஸ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி யோகநாதன், ஆஸ்லி சுரேஸ்குமார், ஆதியா தயாளன், தனிஸா, சுதர்ஸி இக்னேஸியஸ், ரிஸீத் தலீம், மார்க் டிபேக்கர், டாக்டர் கரு கந்தையா, டாக்டர் கதிர் துரைசிங்கம், டாக்டர் வரகுணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜீவன் ராம்ஜெயம் மற்றும் தீபன் ராஜலிங்கம் ஆகியோர் ஒளிப்திவு செய்திருக்கிறார்கள். ரியூ ஆர். கிருஸ்ணா இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கின்றார். மகாஜனா கல்லூரியின் பிரபல நாடக நடிகரும், வைத்திய கலாநிதியுமான கதிர் துரைசிங்கம் இந்தப் படத்தில் வைத்தியராகக் கௌரவப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றார்.

மேலும் படிக்க ...

கணேஷின் கவிதைகள்

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்பு மகளுக்கு அப்பாவின் கீதை !

மகளே ,
வாழ்க்கை பல​ வண்ணங்கள்
நிறைந்தது ,அதனை ரசிக்கவும்
அதன் அர்த்தங்களைப் புரிந்து
கொள்ளவும் என்றும்
முயற்சித்துக் கொண்டே இரு !

விஞ்ஞானம் சொல்லாத
கோணங்களில் வாழ்வு பல​
பரிமாணங்களை கொண்டது
அவை காலத்தோடு புரிந்தும்
சில​ கடந்தும் போய் விடும் .

கலைகளில் என்றும் ஈடுபாட்டை
வைத்துக் கொள் அவை உனக்கு
தெரியாமலே ஒரு தியான​ நிலையை
ஏற்படுத்திச் செல்லும் .

நல்ல​ ரசிககர்களே சிறந்த​
கலைஞர்கள் ஆக​ முடியும் என்பதை
புரிந்து கொள் .​

மேலும் படிக்க ...

கவிதை: சிந்தாதேவி - அஞ்சல் அட்டைக் குறிப்புகள் - செ.சுதர்சன் (இலங்கை) -

விவரங்கள்
- செ.சுதர்சன் (இலங்கை) -
கவிதை
02 அக்டோபர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



01. சிந்தாதேவி!

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
ஓலங்களும் ஒப்பாரிகளும்
கரைந்தொழுகும் வெளியில்;
ஏந்துவதற்கான கைகளும்
சொல்வதற்கான குரல்களும்
பிடுங்கி எறியப்பட்டிருந்தபோது...
எமக்கான பாத்திரம்
எதுவாக இருந்திருக்கும்?

அறிவாயா?

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மீள் பிரசுரம் : அநுர குமார திசாநாயக்க - இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் - ஆங்கிலத்தில்: டி.பி.எஸ். ஜெயராஜ் | தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம் -
  2. 23 - 24ஆம் வயதில் பாரதி (4) - ஜோதிகுமார் -
  3. ஜேவிபி ஓர் இனவெறிக் கட்சியா? செயற்கை அறிவுடன் ஓர் உரையாடலும், கேள்விக்கான அதன் பதிலும்! - வ.ந.கிரிதரன் -
  4. அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி.... - வ.ந.கிரிதரன் -
  5. கவிதை: ஆதுரமேகிய அகத்துணை - ரவி அல்லது -
  6. கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு! - குரு அரவிந்தன் -
  7. வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பூபதி அண்ணா! - ஶ்ரீரஞ்சனி -
  8. பெண் பேயாக அலையும் சிறை! - நடேசன் -
  9. இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா!
  10. நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...
  11. வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
  12. புதிய மாற்றத்தின் குறியீடு அநுரா குமார திசாநாயக்க! - வ.ந.கி -
  13. எழுத்தாளர் திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!
  14. எழுத்தாளர் செம்மனச்செல்வி தேசிகன் மறைந்தார்!
பக்கம் 26 / 115
  • முதல்
  • முந்தைய
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • அடுத்த
  • கடைசி