சிறுகதை : பெண்மனம்! - கடல்புத்திரன் -
அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது .எழுத்து வேலையில் , ' மனசு இறங்க மாட்டேன் ' என முரண்டு பிடிக்கிறது .தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . , மரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் . எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் . முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா . அவன் நிறுத்தி விட்டால் , யார் கோகுலனா , அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால் , அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா , ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள் .ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான் . இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில் ...அடையாளமே இல்லை . தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள் , வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார் ....சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகம் இப்படி தான் இயங்கிறது .எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு ,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை . வெளியிலும் அதே தான் நிலமை .
அமெரிக்கத் தலைவர் ' சுப்பர் போல் ' ( கிரிக்கெட் ) வருணையாளர் போல ' ரஸ்யப் போரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் . கனடாத் தலைவர் மூச்சு விடாமல் எஸ் .பி . பாலசுப்பிரமணியம் சினிமா பாட்டு பாடுறது போல , தடை உத்தரவுகளை விதித்துக் கொண்டிருக்கிறார் . ஒரு கொசுறுச் செய்தி , கனடிய தலைவரின் தந்தையார் , சோவியத் ரஸ்யாவிற்கு யாலுவா , சீனாவிற்கு யாலுவா , கியூபாவிற்கும் யாலுவாக இருந்தவர் . நேட்டோ தோழர்கள் பரிகசித்த போதிலும் இருந்தவர் . தற்போதையவர் வாரிசாக இருந்திருந்தால் இந்தப்போரை நிகழ விட்டிருக்க மாட்டார் . உலக வெப்பதிற்கு குரல் கொடுத்தவர் " போரும் ஒரு காபன் பிரச்சனை தான் ! " என்பதை புரிந்து நிறுத்தி இருப்பார் . இனி , இந்த ஜென்மத்தில் இந்த நாடு இவ்விரு பிரச்சனைகள் பற்றிக் கதைத்தால் கை கொட்டிச் சிரிப்பார்கள் .