குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -
அத்தியாயம் ஒன்று: அன்னலிங்கம் (அன்னர்) வாத்தியாரின் வருகை!
அனஂனர் ,மலையகத்தில் படித்து ஆசிரியர் பரீட்சையும் எழுதி ஒருவாறு ஆசிரியரான பிறகு ஐந்து ஆண்டுகள் கரைய மலையகத்திற்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாண எழுத்தாளர்களின் எழுத்தில் ஏற்பட்ட காதலில் வடக்கு .கிழக்கிற்கு மாற்றம் கேட்டு வெளியிலும் செல்லாமே எனத் தோன்ற விண்ணப்பித்தார் . இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருந்தது . இலங்கை பஞஂசக் கோட்டுள் வீழ்ந்து கொண்டிருதது .மீள்வதற்கு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது . மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தது . அராலி கிராமம் தொடர்ச்சியாக தமிழ் ஆசிரியர் ஒருவரை அனுப்பச் சொல்லி பல தடவைகள் கோரி வர இங்கே பொட்டலமாக கட்டி அனுப்பி விட்டார்கள் . கொழும்பைப் போல கிராமங்களில் அறைகள் வாடகைக்கு இல்லை . வீடுகளில் சாப்பாட்டு ஒழுங்கு எல்லாம் பண்ண முடியாது . யாழ்ப்பாணம் பழைய நகரம் . அவருடைய மனைவியின் தம்பி சேகர் ஏற்கனவே அங்கேயிருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கணக்கியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தான் . நகரத்து சிறுகடைகளுக்கு வரித் தேவைகளுக்கான .... கணக்குகளை எழுதியும் , டியூசனஂ கொடுதஂதும் சமாளிக்கிறானஂ. இவருக்கு பஸ் செலவு தான் . வாழ்க்கை ஒரு போராட்டமே! " என்ற காண்டேகரின் வரி அவருக்கு நிறைய பிடிக்கும் . யாழ்ப்பாணம் வந்து விட்டார் . இனஂனமும் நிறைய , நிறைய பிடிக்க... வேண்டும்.