ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: "தமிழில் சில வினை வகைப்பாடுகளும் கூட்டு வினைகளும் - ஒரு பார்வை"
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது.
கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி,இலக்கிய ஆர்வலர், எழுத்தாளருமான திரு. க. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத் தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அண்மையில் அவரைப்பற்றி எழுதிய எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை பற்றி, 'அக்கினிக்குஞ்சு' பாஸ்கர், அமரர் எஸ்.பொ, ஓவியர் செள, ஓவியர் மூர்த்தி, ஓவியர் கனகலிங்கம் , கவிஞர் மஹாகவி, 'மஹாகவி'யின் குறும்பா, சில்லையூர் செல்வராசன், காவலூர் இராசதுரை, செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், மு.தளையசிங்கம், அவரது 'புது யுகம் பிறக்கிறது' (அரசு வெளியீடாக வெளியான சிறுகதைத்தொகுப்பு), யாழ் தேவன், சொக்கன், பத்மநாப ஐயர் என அவரது உரையாடல் பல்வேறு இலக்கிய ஆளுமைகளைத் தொட்டுச் சென்ற நனவிடை தோய்தலாக அமைந்திருந்தது.
முன்னுரைமனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
1.தோல் இசைக்கருவிகள்
முரசம், துந்துவி, முரசு, தண்ணுமை, படகம், ஆகுளி, சிறுகட்பறை பேரி பம்பை, துடி திமிலை, தட்டி, தொண்டகம் குறிஞ்சிப்பறை தாளக்கருவிகளுக்குப் பொதுவாக பறை குறிக்கப்படுகிறது. வாரால் விசித்துக் கட்டப்பட்டது. இக்கருவி ஒரு முகம், இருமுகம் உடையது. போர்ப்பறை வெறுப்பறை, வெறியாட்டப் பறை என பல வகைப்படும். வீர முரசு, போர் முரசு, விருந்துன்ன குருதி பலி கொடுக்கும்போது என்று முரசின் பயன் நீண்டது.
என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
அன்னராஜ் பாதிரியார் எனது மாமனாரிடமும், அத்தையிடமும்ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.
“சாரி ஜோசப்…. சாரி ரெஜினா…..மணப்பொண்ணே கலியாணத்தில இஸ்டமில்லைங்கிறப்ப என்னால எதுவுமே பண்ண முடியாது….. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் உங்களுக்கு புரியவைக்கணும்னு இல்லை…. உங்க பொண்ணுகிட்ட பேசி, அவளை ஒத்துக்க வையுங்க….”
“அவள்கிட்ட பேசமுடியாது பாதர்…. சொன்னதையே சாதிப்பா….”
“பெத்தவங்க உங்களாலையே பேசமுடியல்லைங்கிறப்போ, நான் பேசிமட்டும் என்ன ஆகப்போவுது…. ஆனா ஒண்ணைய்யா ஜோசப்… உங்க பெரியமவ ஸ்டெல்லாவால நீங்க குனிஞ்ச தலையை, உங்க சின்னமவ திரேசா, அவ சொன்னமாதிரியே நிமித்திப்புட்டாயா…. ஆனா தாலிகட்டுறப்ப பாத்து ஏன் கலியாணம் வேண்டாங்கிறாண்ணு தெரியலியே....”
திரேசாவைச் சரிசெய்யும் பொறுப்பிலே நான்.
“ கலியாணப் பேச்சு எடுத்த நாளிலயிருந்து இப்போ கடைசி நிமிசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.…ஸ்டீபன் அப்பிடி என்னதான்டி பண்ணிப்புட்டாரு…..”
இந்த சம்மந்தத்தை பேசி ஒழுங்குபண்ணுறதுக்கு உங்க அண்ணன் என்னபாடெல்லாம் பட்டாருன்னு தெரியுமா….”
என்னை வேண்டாவெறுப்புடன் பார்ப்பதுபோல பார்த்தாள் திரேசா.
“அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சம்பவத்தைநெனைச்சுப் பாக்கணும் அண்ணி…. ஒரு வருசத்துக்கு முன்னாடி இதேசர்ச்சில வெச்சு, எல்லாரு முன்னாடியும் ஒரு சத்தியம் பண்ணினேனில்லியா….”
அவள் சொல்லும்போது, நடந்த சம்பவமெல்லாம் மனத்துள்ளே படமாக ஓடின.
எனது கணவர் ஆபிரகாமின் மூத்த தங்கை ஸ்டெல்லாவின் திருமண நிகழ்வு இரண்டு ஆண்டுக்குமுன் நடைபெற்றது.
ஒரு தடவை தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில் ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் அக்கதை பிரசுரமானது. பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும், Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.
4
7-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.
கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நூல்களைப் பார்வையிட்டும், வாங்கியும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைய இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. அரங்கு எண் 604, 605 இன் முதல் விற்பனையாகிய ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ ஆகிய நூல்களைப் பிரபல கவிஞர் இந்திரன் அவர்கள் கவிஞர் மு. முருகேஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள் குறித்த் ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன் அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை, நாடகம் என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.
திண்ணை இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் இவரது அறிவியல் கட்டுரைகள், இலக்கியப் படைப்புகள் பதிவுகல் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார், இவர் பல அறிவியல் நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். பெர்னாட்ஷாவின் நாடகமொன்றினையும் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் திரு.ஜெயபாரனை வாழ்த்துகினறோம். மேலும் இவரது இலக்கியப்பணி தொடரட்டும்; சிறக்கட்டும்.
தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்
நன்றி சொல்லும் பெருவிழாதான் பொங்கலாகுமே
நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
உயர்வான எங்களது பொங்கல் விழாவே
வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே
- ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இளம்பிறை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. 'இவரது அரசு பதிப்பகமும் பல சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குத் தன் பங்களிப்பினை நல்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'இளம்பிறை'யின் இதழ்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்: - பதிவுகள்.காம்-
மூத்த தலைமுறையினருக்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தென்னிலங்கையில் நடந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக்கிளர்ச்சி பற்றி நன்கு தெரிந்திருக்கும். கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஃபிடல் காஷ்ரோவுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தினால் ஏற்படுத்திய புரட்சி இளைஞர் சேகுவேராவின் பெயரை அக்கால ஊடகங்கள் அப்போது அதற்குச் சூட்டி, சேகுவேரா போரட்டம் என்று வர்ணித்தன. ஏர்ணஸ்ட் சேகுவேராவுக்கும் அந்தக்கிளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ! அப்போது நான் படித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இருந்தேன். எம்மைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாடுவதற்கும் அப்போது அஞ்சினோம்.
எமது வீட்டிலே வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களுக்கிடையில் நூல்களை பரிமாறிப் படித்தோம். அந்த நூலகத்தில் இணைந்திருந்தவர்கள் மல்லிகை இதழையும் யாழ்ப்பாணத்திலிருந்து தபாலில் வரவழைத்து படித்தோம். 1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம். அதில் எமது நூலகம் பற்றி ஒரு சிறிய கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.
'
நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்' என்று எனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன். இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள். சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர், சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும் எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு, உருவாகியிருக்கிறார்கள். அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.
எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய ‘ பூரணி ‘ ‘ மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன், வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.
இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா. இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.
Join Zoom Meeting | Meeting ID: 842 3057 8587 | Passcode: 525751
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.
88 களில் முருகபூபதி கேட்தற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. தற்போதைய இந்தியாவை இணைப்பது மதமோ கலாச்சாரமோ அல்ல தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல்க் கட்டுரை “நடுகாட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில்( 1987 வைகாசியில்) வந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள் , சிறுகதைகள், நாவல்கள் அவரே சீர் பாத்திருப்பார். கடைசியாக வந்த தாத்தாவின் வீடு நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்த இடத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம் .
Join Zoom Meeting | Meeting ID: 826 0364 5021 | Passcode: 383598
அன்புடையீர் வணக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். எமது சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, இம்மாதம் 14 ஆம் திகதி ( 14-01-2024 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக மெய்நிகரில் இடம்பெறும். சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எனது புதிய ஆங்கில வலைப்பதிவு 'vngiritharancorner' - 'My English Journey (எனது ஆங்கிலப் பயணம்') என்னும் தலைப்பில் எனது ஆங்கில வலைப்பதிவில் பதிவொன்றினை இட்டிருந்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.
உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை வாழ்க்கைக்கு அதீதமான விஷயங்களைப்பேசிவந்த இலக்கியம் சட்டென்று நேரடியான அன்றாட யதார்த்ததை நோக்கி திரும்பியது. யதார்த்தவாதம் இலக்கியத்தில் பிறந்தது. குஜராத்தி யதார்த்தவாதத்தில் காந்தியத்தாக்கம் மிகவும் அதிகம்.
காந்திய யுக படைப்பாளிகளில் முதன்மையானவர் பன்னாலால் பட்டேல். அவரது வாழ்க்கை ஒரு நாடகம் , மூலத்தில் ‘மானவீனீ பவாயி ‘ குஜராத்தி யதார்த்தவாதத்தின் ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. 1946ல் எழுதப்பட்டு 1973ல் தமிழில் மொழியாக்கம்செய்யபப்ட்ட இந்நாவல் இன்றும் அதன் அடிப்படையான சத்திய வேகத்தால் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.
- எழுத்தாளர் புஸ்பா கிறிஸ்ரி என்று அறியப்பட்ட புட்பா கிறிட்டி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (கனடா) முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம்) 'மறையியல் வளர்ச்சிக்கும், தமிழியல் வளர்ச்சிக்கும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர். அவருக்கு எம் வாழ்த்துகள். -
முன்னுரைபண்பாடு என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடினால், அது மக்கள் தமது சமூக வரலாற்று வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் பெளதீகப் பொருட்கள், கருத்துக்கள், மத நம்பிக்கைகள், சமூகப் பெறுமானங்கள் என்பனவாகும். பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை என்பது தமிழரின் வாக்கு. மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை, கல்வி, விஞ்ஞானம். இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் அனைத்துமே பண்பாட்டினுள் அடங்குவன
தமிழரின் நாகரிகம் பழமை வாய்ந்தது. முன்னர் சிந்து நாகரிகம், ஆரிய நாகரிகம் சிறந்தது எனச் சொன்னவர்கள், கீழடியின் நாகரிரீகம் கண்டு, திகைத்துள்ளனர். தமிழர்தான் நாகரிகவாதி என்கின்றனர். தமிழைச் சர்வதேச மட்டத்தில் வைத்து பார்க்க, முன்னின்ற மேற்குலகத் தொடர்பு காரணமாகத் தமிழ் சர்வதேச நிலைப்படுத்தப்பட்டது. முதலில் தமிழைக் கற்று, அதன் மேன்மை கண்டு, அதனை உலகறியச் செய்தனர் மேற்குலகினர். இப்போது உலக நாடுகள் எங்கும், குறிப்பாகத் தமிழர்கள் செல்கின்றனர். நமக்குள் நமது புகழைப் பேசிக்கொள்ளாமல், தமிழை, தமிழ்பண்பாட்டை உலகப் பொதுமேடையில் பேசி, மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆராய்ச்சியாளர் சங்கங்கள், ஆய்வுக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும் வள்ளுவரை பல கட்டங்களில் ஆராய்கின்றனர். வள்ளுவத்தை உலகப் பொதுமறையாக்க முனைகின்றனர். திருவள்ளுவர் தந்த திருமறை வாழ்வின் நெறிகளைக் கற்றுத் தருவது தனிமனித ஒழுக்கத்தை, சமுகத்திற்குக் கற்றுத் தந்தவர் வள்ளுவர்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்னும் பாரதி வாக்கு, திருக்குறளை உலத் தரத்திற்கு உயர்த்தி வைத்தது. பாரதி பாடிய அன்றே இந்தூல் உலகெங்கும் பரவி விட்டது எனலாம்.
இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமைதாங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் கவிஞர் பாலரவியின் தங்கை சசிகலா தனது மாணவி என்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்க்கும் இவர்களைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை, இலக்கியச் சாதனையாளர் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024 ஜனவரி மாதம் 7 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது. 112 High St, Berwick VIC - 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள, மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்த விழாவில், முருகபூபதியின் இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள் என்பவற்றைப்பற்றி, அறிஞர்களும், இலக்கியவாதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் உரையாற்றவுள்ளனர்.
“செயற்கைப் புலமை” (AI) என்பது இன்று பிரபல்யமான ஒரு வார்த்தையாக உலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. அண்மையில், தமிழ் அரசியலில், சக்கைப் போடு கண்டுவிட்ட துவாரகாவின் வரவு கூட செயற்கைப் புலமையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அமர்களப்படுத்தப்பட தவறவில்லை. துவாரகாவின் உரை பற்றிக் குறிக்கும் போது பேராசிரியர் கீதபொன்கலன், AIயின் தொடர்புக் குறித்து கருத்து தெரிவித்திருந்த போதிலும், இதற்கு முன்னதாகவே மேஜர் மதன்குமாரிடம் துவரகாவின் உரையானது செயற்கைப் புலமையால் தாயரிக்கப்பட்ட ஒன்றுதானா என்று கேட்கப்பட்ட போது, அக்கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து சாமார்த்தியமாக அவர் விலகிக் கொண்ட செயல் குறிக்கத்தக்கதுதான்.
ஆனால் இக்கட்டுரை விவாதிக்க முற்படுவது, துவாரகாவின் உரையானது செயற்கைப் புலமை கொண்டு தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. மாறாக இன்று புது வரவாக கருதப்படும் செயற்கைப் புலமை எனும் தொழிநுட்பம், இனி எவ்விதம் உலகில் கோலோச்சப்போகின்றது என்ற கேள்வியேயாகும்.
கிட்டத்தட்ட, பத்து தினங்களின் முன்னர் மோடி அவர்கள் தனது காசி உரையில், பாஷ்னி எனும், AIயின் உதவி கொண்டு உடனுக்குடன் தமிழுக்கு பரிவர்த்தனை செய்தார் எனக் கூறப்பட்டது. இதனை அவர் AIயின் உதவி கொண்டுதான் ஆற்றக்கூடியதாக இருந்தது என்பதும் உலகளவில் இச்செய்தியானது பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பரவலாக்கப்பட்ட ஒரு விடயமாயிற்று (19.12.2023).
இதனாலோ என்னவோ ஏட்டிக்குப் போட்டியாக நாங்களும் இருக்கின்றோம் என்று காட்டும் வகையில் மோடி பேசி முடிந்த சில தினங்களிலேயே பாகிஸ்தானின் இம்ரான்கான் சிறையில் இருந்தவாறே AIயை பாவித்துத் தன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்ததாக செய்தி வந்தது.
நல்லன நடக்க வேண்டும்.
நாடெலாம் சிறக்க வேண்டும்.
வல்லமை பெருக வேண்டும்.
வாழ்வது உயர வேண்டும்.
தொல்லைகள் தொலைய வேண்டும்.
தோல்விகள் அகல வேண்டும்.
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்.
போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்.
மாசுடை ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும்.
ஊழலும் ஒழிய வேண்டும்.
உண்மையே நிலைக்க வேண்டும்.
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்.
உழைபவர் உயர வேண்டும்.
நல்லூதியம் கிடைக்க வேண்டும்.
கொடுப்பவர் பெருக வேண்டும்.
குவலயம் சிறக்க வேண்டும்.
கல்வியில் உயர்வு வேண்டும்.
கசடுகள் அகல வேண்டும்.
கண்ணியம் என்றும் வாழ்வில்
கட்டாயம் அமர வேண்டும்.
கவிஞர் வேந்தனாரின் மகன் வேந்தனார் இளஞ்சேய். அவரது மகனே இளமைந்தன் இளஞ்சேய். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரைப்பற்றிய குறிப்பொன்றினை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இளமைந்தன் இளஞ்சேய் தன் இசைப்பயணத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.