இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னால்....
கொரோனா நெருக்கடி உலகை மீளமைக்கும் மாற்றத்திற்கான வாய்ப்பு! ஒரு சமூகமானிடவியல் பார்வை!
“ பொருத்தமான தெரிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கொரோனா நெருக்கடிக்குள்ளிருந்து சில நன்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. வேலை, நுகர்வு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் வாழ்வைத் தாண்டிய விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதானமான வாழ்வைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை இந்த நெருக்கடி வழங்கக்கூடும்” என நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியர் Thomas Hylland Eriksen, அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறுகியகாலத்திற்குள் நாம் அறியப்படாத ஒரு அவசர நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம். நோர்வேயில் பெரும்பான்மையான விடயங்கள் தண்டவாளத்தில் நேர்த்தியாகப் போய்கொண்டிருந்த நிலைக்குப் பழகிவிட்டோம். தடம் புரள்வதென்பது எமக்கு மிக அரிதாக நேர்வது. அதனைச் சரிப்படுத்துவதென்பது சவாலானது. இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு முகம் கொடுக்கின்றோம். இனி இருக்கப்போகும் சமூகம் முன்னர் இருந்ததைப் போல் இருக்கப் போவதில்லை. நோர்வே மக்களைவிட மோசமான நெருக்கடியை ஏனைய மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
எனவே முறைப்பாடு செய்வதற்குரிய உரிமை எமக்கில்லை. மொறீசியஸ் தனது ஒரேயொரு விமானநிலையத்தினையும் மூடநேர்ந்திருக்கிறது. வெளியுலகத்துடனான நடமாட்டத் தொடர்புக்கு விமானப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஒரு சிறிய தீவுத் தேசத்திற்கு இதுவொரு பாரிய விளைவு. அமெரிக்காவின் சமூகசமத்துவமின்மை மிகப்பெரியது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்கள் சுகதேகிகளோ அன்றி நோய்வாய்ப் பட்டவர்களோ வெறுந்தரையில் நிற்கவேண்டி ஏற்படும். காங்கோ போன்ற நாடுகளில் இத்தகைய தொற்றுப் பரம்பல்களைக் கையாள்வதற்குரிய வளங்கள் குறைபாடாகவுள்ளன. வறியநாடுகளில் அனைத்துச் சமூகத் தொழிற்பாடுகளையும் வியாபாரத்தையும் நிறுத்துவது கடினமானது. இருந்தும் கிழக்காசிய நாடுகள் இது விடயத்தில் செயற்திறனைக் காட்டியுள்ளன.
‘இனமானப் பேராசிரியர்’ அமரர் க. அன்பழகன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்’
கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா அறிவாலயம்’
சென்னை, தமிழ்நாடு
திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கியவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவைக் கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம்.
தமிழினம், திராவிடம், கழகம் என அனைத்துத் தளங்களிலும் தனது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் காரணமாக செல்வாக்குச் செலுத்தி பெற்றவரும், சிறந்த சொல்லாண்மையும், எழுத்தாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவருமான பேராசிரியர் அவர்களின் மறைவு தாங்கள் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும்கூட இழப்பாகும். தங்கள் தந்தை தலைவர் கலைஞருடன் எழுபத்தைந்து ஆண்டு காலம் தோழமையுடன் செயற்பட்டு, தமிழ் வரலாறு கூறும் தலைவர் கலைஞரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் உறுதுணையாய் விளங்கியதோடு ஈழத்தமிழர் விடயத்திலும் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னெடுத்த சாத்தியமான அனைத்து விடயங்களிலும் துணை நின்று செயற்பட்டதை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் மறந்து விட முடியாது.
அஞ்சலி: பேராசிரியர் க.அன்பழகன் - அவர் ஏன் ஓர் இனமானப் பேராசிரியாராக ஆனார்?
பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மீண்டும் அவரது பழைய நூலொன்றை எடுத்து மின்னல் வேகத்தில் படித்துமுடித்தேன். அந்த நூலை உங்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலமாகவே எனது இரங்கலை பதிய வைக்கலாம் என்று தோன்றுகிறது.
"வளரும் கிளர்ச்சி". - இன்று மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் 1953 இல், திமுகவின் வரலாற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் எழுதிய ஒரு குறுநூல்.
அப்போது திராவிட நாட்டு விடுதலைக்கான வரலாற்றுத் தேவைகளை வலியுறுத்தி பல நூல்கள் எழுதப்பட்டன. அண்ணாவின் பணத்தோட்டம் முதலான நூல்கள் உருவாக்கிய ஒரு கோட்பாட்டுச் சட்டகத்தில், அன்பழகன் எழுதிய - இன்று பலரும் மறந்துபோன - ஒரு நூல்தான் "வளரும் கிளர்ச்சி".
திராவிட நாடு கோரிக்கைக்கான வரலாற்றுத் தேவையை இந்த குறு நூலில் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார் அன்பழகன்.
1947 க்கு முன் இந்திய விடுதலைப் போராட்டம் உருவான காலத்தை முதலில் குறிப்பிட்டு, எப்படி உலகளாவிய சூழல் மாற்றங்களாலும் இந்தியாவிலுள்ள மக்களின் விடுதலைப் போராட்டத்தாலும் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிப்பிடும் அன்பழகன், இந்து மதம்சார்ந்த ஆதிக்கத்துக்கு மாறாக பாகிஸ்தான் கோரிக்கை எழுந்ததையும் சுட்டிக்காட்டி 1947 இல் இரண்டு நாடுகள் - பாரதமும் பாகிஸ்தானும் - உருவானதைச் சுட்டிக்காட்டுகிறார்.
'பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்'
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.
பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே 'காமவெறிபிடித்த சில காவாலிகளின்' சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.
சீனநாட்டு மக்கள் விரைவாகக் குணமடைந்திட வாழ்த்துகள்.
'யாரும் ஊரே! யாவரும் கேளிர்' என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் 'கொரோனா' வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக'ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.
ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று ( 31.1.2020 ) நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா'
இரண்டாம் உலக யுத்தத்தின்பின், ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக 'ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி' ஆரம்பிக்கப் பட்டது.அதில் பிரான்ஸ்,ஜேர்மனி,பெல்ஜியம்,நெதர்லாந்து,இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான 'பனிப்போர்' உச்ச நிலையிலிருந்தது. பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததால்,பிரித்தானியாவின் பொருளாதாரநிலை மிகவும் சிதைந்த நிலையிலிருந்தது.
ஐரோப்பாவுடனிணைந்திருப்பது பிரித்தானியாவுக்குப் பல விதத்திலும் பாதுகாப்பாகவிருக்கும் என்பதால்.பிரித்தானியா 'ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டியுடன்' இணைவதற்கான கோரிக்கையை 1961ம் ஆண்டு முன்வைத்தபோது,ஆங்கிலேயர்களைப் பிடிக்காத பிரான்ஸ் நாட்டின் தலைவர் சார்ள்ஸ் டி கோல், பிரித்தானியா தங்களுடன் சேர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரித்தானியாவின் கோரிக்கையை 63லும் 1967லும் நிராகரித்தார்.1969ல் பிரான்ஸ் தலைவர் பதவியிலிருந்த சார்ள்ஸ் டிகோல் இராஜினாமா செய்தபின் நிலைமை மாறியது.
1.1.1973ல்; ஆண்டு பிரித்தானியா, 'ஐரோப்பிய எக்கானமிக் கொம்யூனிட்டி நாடுகளுடணிணைந்தது .இங்கிலாந்தில் இடதுசாரி பாராளுமன்றவாதியான ரோனி பென் (ஜேரமி கோர்பினின் குரு) போன்ற இடதுசாரித்தலைவர்கள் அதை எதிர்த்தார்கள்.
இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு! கலாஷேத்ராவுக்கு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
31.01.2020
இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசை குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து உறுதியாக குரலெழுப்பி வருபவர். அது குறித்த தம் கருத்துக்களைத் துணிச்சலாகப் பொதுவெளியில், கட்டுரைகள், ஊடக உரையாடல்கள், உரைகள் மூலம் முன்வைப்பவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது போல், 02.02.2020 அன்று நடக்க இருந்த அவரது சென்னை புத்தக வெளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.
‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற அவருடைய சமீபத்திய நூல் மிருதங்கம் மற்றும் அதனை உருவாக்குபவர்கள் குறித்ததாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிருதங்கம் உருவாக்குவதற்கான மாட்டுத்தோலை பதப்படுத்தி கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், மிருதங்கம் குறித்த வரலாற்றில் அவர்களது பங்கு, பாத்திரம் இடம் பெறுவதே கிடையாது என்ற சாதிய பாகுபாட்டு கோணத்தை பின்புலமாக எழுதியுள்ளார். மிருதங்க வரலாற்றில் இதுவரை கொண்டாடப்படாத அவர்களை கொண்டாடுவது என்பதே இந்த நூலின் முக்கிய அம்சம் என்று ஒரு ஊடக பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 2 அன்று மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனமான கலாஷேத்ரா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கடைசி நேரத்தில் கலாஷேத்ரா நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கான தங்களது அரங்கத்தை தர முடியாது என மறுத்து விட்டது. மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கலாஷேத்ரா நிர்வாகம் இவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதென கருத வேண்டியுள்ளது. கலைகளை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கலாஷேத்ரா நிறுவனம் சிறந்த இசைக்கலைஞரின் ஆய்வு பூர்வமான நூலை வெளியிட அனுமதி மறுத்திருப்பதை ஏற்கவே முடியாது.