- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
Arun Ambalavanar: அனோஜன் இதில் பொய்யான தகவல் எதுவும் எழுதவில்லை. N.K. மஹாலிங்கம், மு. பொ ஆகியோர் அனோஜன் சொன்ன விடயத்தை ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். தயவு செய்து விடயத்தை முழுமையாக ஆராயாமல் சோபாசக்திக்கு வக்காலத்து வாங்குவதை கைவிடுங்கள்.
Annogen Balakrishnan: நீங்கள் புரிதல் இன்றி விவாதத்தை வேறுபக்கம் கொண்டு செல்கிறீர்கள். //ஜீவா மீது மல்லிகையில் மு.த கலந்துகொண்ட ஒரு சமூக, அரசியல் போராட்டம் பற்றிய செய்தியொன்றைப் போடவில்லையென்பதை எவ்விதம் முக்கியதொரு குற்றச்சாட்டாகக் கூறலாம்?// என்று வினவுகிறீர்கள், மு.தளையசிங்கம் என்ற இலக்கியவாதி ஈடுபட்ட முற்போக்கு நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது, வெறுமே சமூக, அரசியல் போராட்டம் என்று சுருக்கி, அதனை மல்லிகை செய்தியாகப் போடவில்லை என்று சொல்வது, பிரச்சினையை விளங்கிக்கொள்ளும் திறன் போதாமையால் வருவது. சாதி ஒழிப்புப் போராட்டம் காரணமாகத் தாக்கப்பட்ட தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அந்தச் செய்தியை மல்லிகை பிரசுரிக்கவில்லை என்பதற்குக் காரணம் க.கைலாசபதி மீதிருந்த அச்சம். இது திண்ணை உரையாடலில் பதிவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டக் காரணம், கைலாசபதியின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இலக்கிய உலகைக் கட்டுப்படுத்தியது என்று காட்டத்தானே தவிர, ஜீவாவை சிறுமை செய்ய அல்ல. முதலில் அதனை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் முற்போக்குப் போராட்டம் காரணமாக மிலேச்சத்தனமான வன்முறைக்கு உள்ளாகியபோது, அது சார்ந்த விடயங்களை பேசாமல் கடந்தமை சாதரணவிடயமல்ல. முற்போக்கு பத்திரிக்கை ஒன்று காரணம் இன்றி இதனைச் செய்யாது. பொது அறிவு இருந்தாலே இதனை விளங்கிக்கொள்ளலாம்.
தவிர ஜீவா மு.த வின் நண்பர். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் மதித்தனர். மு.த மரணித்த பின்னர், ஜீவா உளமார வருந்தியது மெய்யே. கைலாசபதியின் மீதான அச்சம் அந்த நேரத்தில் டொமினிக் ஜீவாவிடம் இருந்தது என்பதையே நான் குறிப்பிட்டு இருந்தேன். அதே நேரத்தில் தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில், மு.த விடமிருந்து கட்டுரை வாங்கி மல்லிகையிலும் பிரசுரித்து இருக்கிறார். ஆம், கைலாசபதிக்கு உவப்பாக இருக்காது என்று தெரிந்தும், அதைப்பற்றி கரிசனை கொள்ளாமல் அதனை இந்தமுறை செய்கிறார். அதன் பின்னர் அவருக்குப் பல அழுத்தங்கள் வருகின்றன. ஏன் தளையசிங்கத்தின் ஆக்கங்களை மல்லிகையில் பிரசுரிக்கப்பட்டன? என்று கண்டங்கள் வருகின்றன. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்த்தப்பட்ட மல்லிகைப் பந்தல் உரையாடலில் இதுபற்றி ஜீவாவே பேசியுள்ளார். அலை இதழ் ஆறில் ‘சில நேரங்களில் சில ஞானோதயங்கள்’ பகுதியில் இதனை வாசிக்க முடியும்.
//மு.தளையசிங்கத்திற்கும், மு.பொன்னம்பலத்திற்கும் எழுத இடம் கொடுத்ததற்காக என்னைக் கண்டிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரைகளுக்கு எதிராகக் கட்டுரை எழுதித் தாருங்கள் என்றுகேட்டால் எழுத ஒருவராலும் முடியவில்லை.//
//எல்லாக் கருத்துக்களுக்கும் களம் அமைப்போம். கருத்து மோதலில்தான் உண்மை பிறக்கும்// - ஜீவாவின் உரையிலிருந்து. மு.த, விமர்சன விக்கிரகங்கள் என்ற தொடரைத் தினகரனில் எழுதிய போது, கைலாசபதி, சிவத்தம்பி இருவர் பற்றிய மு.த வின்
விமர்சனங்கள் மட்டும் வெட்டப்பட்டன. அது ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்குப் பின் அதிகாரத்திலிருந்தது யார்? இதனைத் துணிச்சலாக உங்களால் சொல்ல இயலுமா? கைலாசபதியின் இலக்கியக் செல்வாக்கு எப்படியெல்லாம் பாதித்தது என்பதை விமர்சனப் பூர்வமாகப் பேசவந்தால், உரையை அறைகுறையாக விளங்கிக்கொண்டு வேறுபக்கம் செல்வது ஒரு கருத்தைக் கிரகிப்பதில் வரும் சிக்கலைக் காட்டுகிறது. இது பற்றி நீங்கள் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.
Giritharan Navaratnam: Annogen Balakrishnan //, கைலாசபதி, சிவத்தம்பி இருவர் பற்றிய மு.த வின் விமர்சனங்கள் மட்டும் வெட்டப்பட்டன. அது ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்குப் பின் அதிகாரத்திலிருந்தது யார்? இதனைத் துணிச்சலாக உங்களால் சொல்ல இயலுமா? கைலாசபதியின் இலக்கியக் செல்வாக்கு எப்படியெல்லாம் பாதித்தது என்பதை விமர்சனப் பூர்வமாகப் பேசவந்தால், உரையை அறைகுறையாக விளங்கிக்கொண்டு வேறுபக்கம் செல்வது ஒரு கருத்தைக் கிரகிப்பதில் வரும் சிக்கலைக் காட்டுகிறது. இது பற்றி நீங்கள் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.// பேராசரியர் கைலாசபதியின் அதிகாரத்தை விமர்சிப்பதற்காக டொமினிக் ஜீவாவைப் பலிக்கடா ஆக்க வேண்டுமா? இங்கு நடைபெறும் விவாதம் டொமினிக் ஜீவா கைலாசபதியின் மீதான பயம் காரணமாக அவ்விதம் செயற்பட்டாரா என்பது பற்றியது. அதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் தமிழகத்தில் நடைபெற்ற மு.த பற்றிய கருத்தரங்கையொட்டி திண்ணையில் வெளியான பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளை. அவற்றை ஆதாரங்களாக எடுப்பதற்கு முன்னர் அவை உண்மையானவையா என்பதை நீங்கள் ஆராய்ந்திருக்க வேண்டும். நீங்கள் ஆராயவில்லை. போதிய ஆய்வுகள் இல்லாமல் நீங்கள் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக எடுத்துக்கொள்வது சரியான நிலைப்பாடு அல்ல.
Shoba Sakthi: Annogen Balakrishnan //இலக்கியவாதியின் ஆளுமை என்பது, அவர் பிறந்து வளர்ந்த சூழலுடன் இணைந்தது. சமூகக் கூட்டு உளவியல், தனிமனித உளவியலை எப்படித் தீர்மானிக்கிறது என்பதின் ஊடாக மதிப்பிடலாம்.// இதை நீங்கள் வேதசகாயகுமாரிடம் பெற்று எழுதுகிறீர்கள். //அன்றைய பொதுப்போகுகளைப்பற்றி பேசும்போது அதில் அங்குள்ள சமூக அமைப்பும் சூழல் எந்த பங்காற்றுகிறது , எழுத்தாளார்களின் தனிப்பட்ட ஆளுமை எப்படி அதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது என்றெல்லாம் (தளையசிங்கம் ) பேசுகிறார்// என்றார் வேதசகாயகுமார். இதொன்றும் அவ்வளவு பெரிய தத்துவ விகசிப்பெல்லாம் கிடையாது. 'சாதிப்புத்தி' எனப் பழிப்பதைத்தான் இருவரும் முறுக்கிப் பிழிந்து செய்துள்ளீர்கள். உங்களது ஆதிக்க சாதியப் பின்புலமே உங்களது தனிமனித உளவியலும் ஆளுமையும் என யாராவது சொன்னால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா அனோஜன்?
Giritharan Navaratnam: Annogen Balakrishnan //நீங்கள் யார் யாரை எந்தவகையில் மு.தா கேவலமாகத் தாக்கி எழுதினார் என்று தயவு செய்து தரவுகளுடன் தர்க்கப் பூர்வமாக வையுங்கள்.// மேற்படி நூலில் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. நீங்கள் வாசித்துக் கண்டு பிடியுங்கள். அவ்விதம் கண்டு பிடிப்பதில் சிரமங்கள் இருந்தால் அறியத்தாருங்கள் நான் அவற்றை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவேன்.
Sivananthan Muthulingam: கைலாசபதி இலக்கிய ஜாம்பவான் என்று கருதுவது தவறு. அவர் ஜீவாவை மிரட்டினார் என்பது சிரிப்பான செய்தி.
Shoba Sakthi: Annogen Balakrishnan அறுபதுகளின் மத்தியில் பொதுவுடமை இயக்கம் பிளவுற்ற பின்பு கைலாசபதி - ஜீவா இருவரும் வெவ்வேறு கட்சி (சீன - ரசிய) நிலைப்பாடுகளுடன் இயங்கினர். ஆனால், கைலாசபதியின் அல்லது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரின் அல்லது வேறு யாருடைய விமர்சனங்களுக்காகவோ ஜீவா அஞ்சினாரா இல்லையா என்பதுவே கேள்வி. அவர் அஞ்சவில்லை. தைரியமாக மு.தவுக்கும் மு.பொவுக்கும் மல்லிகையில் எழுத இடம் கொடுத்தார் என்பதுதானே உண்மை. நீங்கள் சுட்டிக்காட்டியவாறு "எல்லாக் கருத்துக்களுக்கும் களம் அமைப்போம். கருத்து மோதலில்தான் உண்மை பிறக்கும்" என்பதுதானே ஜீவாவின் நிலைப்பாடு. "முடிந்தால் பதில் எழுதிக்கொடுங்கள் பிரசுரிக்கிறேன்" என்றுதானே அவர் தைரியமாகச் சொன்னார். அவ்வாறான வீறுகொண்ட மனிதரிடம் 'கைலாசபதி மீதான அச்சம் இருந்தது' என நீங்கள் சொல்வது ஆதாரமற்ற பழிச்சொல். 'திண்ணை' இதழ் விவாதம் அவன் -இவன் என்ற வம்புப் பேச்சே தவிர 'அச்சம் கொண்டிருந்தார்' என்பதற்கு ஒருபோதும் ஆதாரமாகாது. ஜீவா கைலாசபதிக்கு அஞ்சினார் என்பதை நீங்கள் தெளிவுற நிரூபணம் செய்ய வேண்டும். அல்லது ஜீவாவின் மீது சுமத்தியிருக்கும் பழியை நீங்கள் திரும்பப்பெற வேண்டும். அதுவே யோக்கியம். நீங்கள் சொல்ல வந்ததை எங்களால் கிரகிக்க முடியவில்லை என்ற பேச்செல்லாம் இங்கு வேண்டாம். கிரகிக்க முடியாத அளவுக்கு நீங்களொன்றும் கம்ப சூத்திரம் சொல்லிவிடவில்லை. நீங்கள் சொன்னது மிக எளிமையான வம்புப் பேச்சு மட்டுமே.
Annogen Balakrishnan: Shoba Sakthiதிண்ணை உரையாடலை வம்புப் பேச்சாக நான் கருதவில்லை. ஜீவாவும், தளையசிங்கமும் நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒருமையில் அழைக்கும் உரிமையும் இருந்திருக்கும். எட்டு வயது வித்தியாசம் என்பது நட்பின் உரிமையில் ஒரு பொருட்டு அல்ல என்று அறிவீர்கள் என்று நினைக்கிறேன். நோய்வாய்ப்பட்டு மு.தா இருக்கும்போது, எதிர் கருத்தியல் முகாமிலிருந்தாலும், தான் தாக்கப்பட்ட செய்தி நண்பரின் இதழில் வரும் என்று நினைத்து, அது வராமல் போனதும்- அதற்குரிய காரணமாக தன் நண்பர்களிடையே அவ்வாறு சினத்துடன் ஒருமையில் பகிர காரணமாக இருந்திருக்கும் என்பதையும் கருத்தில் கொள்கிறேன். நீங்கள் எப்படி, ஜீவா உயிருடன் இருக்கும்போது திண்ணை உரையாடலை வாசிக்காமலிருந்திருப்பார் என்று நம்புகிறீர்களோ, அதேபோல அவர் வாசித்து அல்லது அறிந்து அவருக்கு இருக்கக்கூடிய நியாயத்துடன் எதிர்வினை புரியாமல் சென்றிருப்பார் என்று நான் நம்பலாம் அல்லவா. ஜீவா, மல்லிகை இதழ் ஆரம்பித்த காலத்திலிருந்து இறுதிவரை ஒரே பார்வையுடன் இருக்கவில்லை. அவர் வெவ்வேறு புரிதல்களை தன் அனுபவத்தின் ஊடாக அடைந்திருக்கிறார். மு.தா, மு.பொ போன்றவர்களின் கட்டுரைகளைக் காலம் கழித்தே மல்லிகையில் பிரசுரித்தார். ஆரம்பத்தில் அது நிகழவில்லை. ஆரம்ப காலங்களில் கடுமையாக கைலாசபதியை விமர்சித்து வந்த மு.தாவை அப்போதுள்ள தன் பார்வையில் ஜீவா அணுகவில்லை, விலகியே இருந்தார் என்றே தெரிகிறது.(நட்பு சார்ந்து அல்ல கருத்தியல் சார்ந்து) அது கைலாசபதியின் நட்பின் மீதான பயமா, அல்லது விமர்சனத்தின் மீதான பயமா என்று தெரியவில்லை. ஆனால், அந்த சமயத்தின் போது அவரிடம் கைலாசபதி மீது பயம் இருந்துள்ளது என்றே நான் நம்புகிறேன். பின்னர் காலப்போக்கில் முற்போக்கு அணியிடம் இருந்து அழுத்தங்கள் வந்த போதும் அதனை மீறி மு.தா, மு.பொ அவர்களின் ஆக்கங்களை வெளியிட்டு இருக்கிறார். அது இலக்கிய விவாதங்களில் அவர் அடைந்த விரிவைக் காட்டுகிறது. பின்னர் நீங்கள்
சொன்னதுபோல வீறுகொண்ட மனிதராகவே வாழ்ந்தார்.
“ஜீவா என்னிடம் நட்பாக இருந்தார், அவரும் நானும் தேநீர் கடையில் தேநீர் அருந்துவிட்டு புத்தங்களை வாங்கி தடவிப்பார்த்துவிட்டுக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கம் வந்தது, அதன் போது அவர் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார் என்று நான் அபாண்டமான பழியைச் சுமத்தவில்லை”, இதற்கு முன்னர் இதழ்களில் நிகழ்ந்த விவாதங்களில் இருந்து இந்த முடிவை அடைந்திருக்கிறேன். திண்ணையில் பங்கு பற்றிய எழுத்தாளர்கள்தான் மேலதிகமாக இதனைச் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும்.
Shoba Sakthi: Annogen Balakrishnan மு.தளையசிங்கம் தாக்கப்பட்ட வருடம் 1971. அதற்கு முன்பே 1970 பெப்ரவரி தொடக்கம் தொடர்ச்சியாக அய்ந்து மல்லிகை இதழ்களில் மு.தவின் 'விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரையை ஜீவா பிரசுரித்துள்ளார். 1971-ல் மல்லிகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நடுவர் மு. தளையசிங்கம். கைலாசபதி குறித்து 'அச்சம்' இருந்தால் இவற்றையெல்லாம் ஜீவா பிரசுரித்திருப்பாரா என நீங்கள் சிந்திக்க வேண்டும். ஜீவாவின் அச்சம் குறித்த உங்களது சொற்கள் தவறானவை என்பதை இவை நிரூபிக்கின்றனவல்லவா. 'திண்ணை' உரையாடல் முழுவதையும் வம்புப் பேச்சு என்று நான் சொல்வதாக நீங்கள் கருத வேண்டியதில்லை. இந்த 'அச்சம்' குறித்த செய்தியைத்தான் வம்புப் பேச்சு என்கிறேன். இப்படியாக தளையசிங்கம் சொன்னார் என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டால்; தளையசிங்கமும் வம்புப் பேச்சுப் பேசினார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில், ஜீவா அச்சம் கொண்டிருந்தார் என்பதற்கு எந்தச் சான்றுகளும் கிடையாது. மாறாக அவர் எவருக்கும் அச்சமின்றி மு. தளையசிங்கத்தின் எழுத்துகளைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்துள்ளார் என்பதற்கு நம்மிடம் சான்றுகள் உள்ளனவே. தளையசிங்கம் ஜீவாவை ஒருமையில் அழைத்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை உண்மையிலேயே ஒருமையில் ஜீவாவை விளித்துத் திட்டியிருந்தால் 'நட்புரிமை' என்ற பெயரால் அதைப் பூசி மெழுகக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
Giritharan Navaratnam" Arun Ambalavanar //சோபாசக்திக்கு வக்காலத்து வாங்குவதை கைவிடுங்கள்.// முட்டாள்தனமான கருத்து. சோபாசக்திக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் குறிப்பிட்டது அனோஜன் பற்றிக் குறிப்பிட்டது. நான் நிகழ்வுக்குச் செல்லாததால் அதனைக் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதைக் குறிப்பிட்டுக் கருத்துகள் எழுதியிருப்பேன். //அனோஜன் இதில் பொய்யான தகவல் எதுவும் எழுதவில்லை. N.K. மஹாலிங்கம், மு. பொ ஆகியோர் அனோஜன் சொன்ன விடயத்தை ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். // ஒருவர் ஏற்கனவே பொய்யான தகவலைக் கூறியிருந்தால் , அது உண்மையா அல்லது பொய்யா
என்பதை ஆராய்ந்துக் கூறுவதே சரியானது. அவ்விதம் கூறாமால் அப்பொய்யான தகவலை வைத்துத் தர்க்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மு.த மறைந்த அதே ஆண்டு மல்லிகை நடத்திய சிறுகதைப்போட்டியின் நடுவர்களிலொருவராக மு.த
இருந்திருக்கின்றார். அதே ஆண்டில் மு.பொன்னம்பலத்தின் கட்டுரைகள் மல்லிகையில் வெளியாகியுள்ளன. கெ.எஸ்.சிவகுமாரனின் போர்ப்பறை பற்றிய விமர்சனம் மல்லிகையில் வெளியாகியுள்ளது. மு.த இறந்தபோது மல்லிகையில் அஞ்சலிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அஞ்சலிக்கூட்டத்திலும் டொமினிக் ஜீவா கலந்துகொண்டுள்ளார். இவையெல்லாம் நடந்தபோது பேராசிரியர் கைலாசபதி உயிருடன் இருந்திருக்கின்றார். மேலும் மு.த தாக்கப்பட்ட அதே ஆண்டில்தா மு.த மல்லிகை நடத்திய போட்டியின் நடுவர்களிலொருவராகவும் இருந்திருக்கின்றார். மு.பொ. சு.வில்வரத்தினத்தின் ஆக்கங்கள், போர்ப்பறை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் அதே ஆண்டில்தான் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஐம்பது வருடங்களுக்குப்பின்னர் இவ்விதமானதொரு பொய்யான தகவலைக்கூறுவதன் அர்த்தமென்ன? நீங்கள் பல விடயங்களை, தரவுகளைச் சேகரித்துக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதுபவர். இந்நிலையில் டொமினிக் ஜீவா கைலாசபதி மீதான பயம் காரணமாகவே இவ்விதம் நடந்துக்கொண்டார் என்னும் தகவலை நம்புகின்றீர்களா?
Giritharan Navaratnam: Annogen Balakrishnan //சாதி ஒழிப்புப் போராட்டம் காரணமாகத் தாக்கப்பட்ட தளையசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அந்தச் செய்தியை மல்லிகை பிரசுரிக்கவில்லை என்பதற்குக் காரணம் க.கைலாசபதி மீதிருந்த அச்சம். இது திண்ணை உரையாடலில் பதிவாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டக் காரணம், கைலாசபதியின் சர்வாதிகாரப் போக்கு எப்படி இலக்கிய உலகைக் கட்டுப்படுத்தியது என்று காட்டத்தானே தவிர, ஜீவாவை சிறுமை செய்ய அல்ல. முதலில் அதனை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்// என்று கூறுகின்றீர்கள். முதலாவது திண்ணையில் வெளியான ஒரு செய்தியை எப்படி முற்று முழுதான உண்மையென்று ஏற்றுக்கொண்டீர்கள்? அதனை ஆதாரமாக வைத்துத் தர்க்கமொன்றைக் கட்டமைக்கும்போது , அது தவறென்றால் , முழுத்தர்க்கமுமே நிலைகுலைந்து போய்விடாதா? முதலில் அத்தகவல் உண்மையா,இல்லையா என்பதை ஆராய்ந்து , முடிவுக்கு வந்து , அதன் அடிப்படையில் தர்க்கத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அந்தத் தகவல் உண்மையாகவிருந்தால், மு.த, மு.பொ & சு.வில்வரத்தினத்தின் படைப்புகள் எல்லாம் மல்லிகையில் வெளிவந்திருக்காது. மு.த மல்லிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நடுவராக இருந்திருக்க மாட்டார். பேராசிரியர் கைலாசபதி இருந்திருக்கக் கூடும். மு.த எழுதிய போர்ப்பறை பற்றிய விமர்சனம் மல்லிகையில் வெளிவந்திருக்க மாட்டாது. இவையெல்லாம் வெளிவந்த ஆண்டில்தான் மு.த தாக்குதல்களுக்குள்ளாகினார்.
Giritharan Navaratnam: Annogen Balakrishnan //மு.தளையசிங்கம் என்ற இலக்கியவாதி ஈடுபட்ட முற்போக்கு நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பது, வெறுமே சமூக, அரசியல் போராட்டம் என்று சுருக்கி, // மு.த இலக்கியவாதி மட்டுமல்லர். சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் கூட. சர்வோதய அமைப்பு மூலம் தனது சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். அவற்றினூடுதான் அவர் தன் போராட்டங்களை முன்னெடுத்தபோது தாக்கப்பட்டார். மாத இதழாக வெளிவருவது மல்லிகை இதழ். தினசரிப்பத்திரிகை அல்ல. இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே போடாமல் இருந்திருக்கலாம். அரசியல்ரீதியாகவும் இதனை அணுகியிருக்கலாம். இதுபோல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆலய தரிசனங்களுக்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. பலர் தாக்கப்பட்டுள்ளனர். இவை பற்றியெல்லாம் மு.த தன் கலை, இலக்கிய அரசியல் சித்தாந்தங்களை மறந்து கட்டுரைகள் எழுதியிருக்கின்றாரா? நான் இதுவரை அறியவில்லை. எழுதியிருந்தால் அறியத்தாருங்கள். அதே சமயம் மு.த தாக்கப்பட்டதை மல்லிகையில் எழுதாவிட்டாலும், நேரில் அவரைச்சந்தித்திருக்கலாம். வருத்தம் தெரிவித்திருக்கலாம். யாருக்கும் தெரியுமா? ஆராயப்பட வேண்டிய விடயம்.
Arun Ambalavanar
(பகுதி 01)
சோபாசக்தி வரலாற்றையும் கருத்துக்களையும் திரிக்கிறார். டொமினிக் ஜீவா மாஸ்கோ சார்பு, கைலாசபதி சீன சார்பு. ஆகவே கைலாசபதி ஜீவாவை கட்டுப்பகுத்தியிருக்க முடியாது என்று அர்த்தம்பட எழுதுகிறார். அடிப்படையில் கைலாசபதி(சீன சார்பு)
சிவத்தம்பி( ரூசிய சார்பு) இருவரும் மார்க்சிஸ்டுகளே. ஆனால் கைலாசபதி Elite என்பதாலும், தினகரன் ஆசிரியராக இருந்தவர் என்பதாலும் சிவத்தம்பிக்கு முதலே PhD பெற்றவர் என்பதாலும் சிவத்தம்பியைவிட அதிகாரம் மிக்கவராக இருந்தவர். முக்கியமாக அறுபதின் பிற்பகுதியில் சிவத்தம்பி இலங்கையில் இல்லை. லண்டன் சீமையில் கலாநிதிப்பட்டம் படித்துக்கொட்டிருக்கிறார். ஊரில் இருந்த ஒரே இலக்கிய நாட்டாமை கைலாசபதிதான். முக்கியமாக சிவத்தம்பி ஐயா என் அயல் வீட்டுக்காரர். அவரிடம் கைலாசபதிபோல் உசார் இல்லை. இதைவிட காழ்ப்பை வைத்து பழிவாங்கும் குணம் சிவத்தம்பியிடம் அறவே இல்லை. தன்னை காலங்கடந்தும் திருத்தும் குறைந்தபட்ச நேர்மை சிவத்தம்பியிடம் உண்டு. தொண்ணூறுகளுக்குப்பிறகு சிவத்தம்பி மார்க்சியத்தின குறைபாடுகளை ஏற்றுக்கொள்கிறார். இறக்கும்போது சிவத்தம்பி Post Mordernism ஐ அதன் குறைபாடுகளோடு ஏற்றுக்கொண்டு ஒரு போஸ்ற் மொடேனிஸ்ற் ஆகத்தான் இறந்தார்.
சோபாசக்திக்கு தன்னைவிட பல வயது குறைந்த அனோஜனின் அளவு ஈழ இலக்கிய வரலாற்றுப்படிப்பு கூட இல்லை. யேசுராசாவின் அலை இதழ்களில் நடந்த முக்கியமான ஈழ இலக்கிய விவாதங்களையோ தளையசிங்கத்தினதும் 20ம் நூற்றாண்டின் முக்கியமான விமர்சகரான தளையசிங்கத்தினது Masterpiece களான ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, விமர்சன விக்கிரகங்கள் என்ற நூல்களை சோபா படிக்கவில்லை என்பது அவரது பின்னூட்டங்களிலிருந்து துலங்குகிறது. சோபா "தனிமனித தாக்குதல்" " அவதூறு" " பழிச்சொல்" "மன்னிப்பு கேட்டு வாதத்தை மீளப்பெறவேண்டும்" என்று இலக்கிய கமிசாராக Tribal "நியாயங்களை" வைத்து கம்புசுற்றவே முடியும்.
(பகுதி 2 தொடரும்)
Arun Ambalavanar
(பகுதி 02)
20ம் நூற்றாண்டின் ஈழ இலக்கிய விமர்சன வரலாறு என்கிற ஒரு பாடத்தை/கற்கை நெறியை திட்டமிட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்னை அமர்த்தினால் நான் அப்பாடத்தின் Text Books ஆக பின்வரும் புத்தகங்களை தெரிவேன்.
1. யேசுராசாவின் முழு அலை சஞ்சிகைகள்
2. மு.தவின் விமர்சன விக்கிரகங்கள்
3. மு.தவின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி.
4. ஏ.ஜே கனகரட்ணாவின் மார்க்சியமும் இலக்கியமும் தொகுப்பு/மொழிபெயர்ப்பு நூல்( அலை வெளியீடு)
5. Dr. கா. சிவத்தம்பி உயிர்ப்புகள் சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய நீண்ட விரிவான பின்னுரை(1987)
6. இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழிலக்கியம். (எம்.ஏ. நுகமான், மௌனகுரு, சித்திரலேகா)
7. மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
( எம். ஏ. நுகமான்)
8. திறனாய்வுக் கட்டுரைகள்( எம்.ஏ. நுகமான்)
(இது ஒரு திட்டம் மட்டுமே. இதில் உள்ளடக்கவேண்டிய வேறு புத்தகங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் சொல்லுங்கள். கருத்திலெடுக்கிறோம்). சோபாசக்தி அண்ணன் இவற்றை எவற்றையேனும் படித்திருக்கிறாரா என்று கேட்கிறேன். பபித்திருந்தால்
இப்படி மொட்டுச் சந்தில் மூக்குடைபட்டிருக்கமாட்டார். சோபாசக்திக்கு ஈழ இலக்கியத்தில் ஒரு மறைகரமாக தொழிற்பட்ட மனச்சாட்சியின் கைதி/அறவான் ஏ.ஜே கனகரட்ணா வின் பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. டொமினிக் ஜீவாவுக்கும் எஸ்.
பொன்னுத்துரைக்கும் ஏன் அ.யேசுராசா, நுஃமான் போனறோருக்கும் ஆலோசகர்/ Mentor ஆக இருந்தது பற்றி எதுவும் தெரியாது. ஏ.ஜே கனகரட்ணா டொமினிக் ஜீவாவின் மனச்சாட்சியை தட்டி திறந்தவர். இந்த இடத்தில் என் முதல் இலக்கிய குரு அ.யேசுராசாவும் தளையசிங்கத்தின் வரலாற்றை நன்கறிந்த மு. பொன்னம்பலமும் என்.கே மஹாலிங்கமும் நேர்மையோடு இந்த விவாதத்தில் இறங்கினால் முழு உண்மைகளும் வெளிவரும். பாவம் சு.வில்வரத்தினம்தான் இப்போது உயிரோடு இல்லையே
Giritharan Navaratnam: அருண் அம்பலவாணருக்கு, மேலுள்ள பதிவு மு.த பற்றிய கருத்தரங்கில் அனோஜன் பாலகிருஷ்ணன் டொமினிக் ஜீவா பற்றியக் கூறியது சம்பந்தப்பட்டது. எழுத்தாளர் சோபா சக்தி பற்றியது அல்ல. சோபாசக்தி பற்றி நீங்கள் கருத்திட விரும்பினால் அதனை உங்கள் முகநூல் பக்கத்தில் இடுவதே சிறந்தது. மேலும் ஒருவரைப்பற்றி அவரது படைப்புகளூடு விமர்சனம் செய்வதையே ஏற்றுக்கொள்பவன் நான். தனிப்பட்டரீதியிலான விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி என் முகநூற் பக்கத்தில் பதிவுகளை இடுபவன் நான். நீங்கள் இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள் நண்பரே. மேலும் கலை, இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள், பங்களிப்புகளூடு அவர்களை அணுகுங்கள். அவர்கள்தம் சமூகப்பின்னணிகளை வைத்துத் தர்க்கம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்விதமான தர்க்கங்களை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு தவிர்த்துக்கொள்ளுங்கள்.
Arun Ambalavanar: Giritharan Navaratnam சோபா சக்தி உங்களது பின்னூட்டத்தில் பதிவிட்டதற்கு தான் நான் பதிலிட்டுள்ளேன். என் சனநாயக மனித உரிமையை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Giritharan Navaratnam: Arun Ambalavanar உங்களது உரிமையினை மதிக்கின்றேன். ஆனாலும் சில சொற்பதங்கள் ஈட்டிகளாக வெளிப்படுகின்றன. இங்கு அனைவரும் நண்பர்களாகவிருக்கின்றோம். நண்பர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாறல்களாகவே எம் கருத்துகள் இருப்பதும் சரியானதென்று கருதுகின்றேன். நாம் ஒருவருக்கொருவர் முட்டி மோதும் வகையில் இருக்கக்கூடாதென்றும் கருதுகின்றேன். எவ்வளவு முரண்பட்ட கருத்துகளையும் ஆரோக்கியமான தொனியில் வெளியிடுவதே நல்லதென்பது என் எண்ணம்.
Arun Ambalavanar: Giritharan Navaratnam ஈட்டிகளாக இருக்கிற சொற்பதங்கள் எவையென்று சொல்லுங்கள். பரிசுலித்து விவாதிக்க ஞான் தயார்
Giritharan Navaratnam: Arun Ambalavanar //சோபாசக்திக்கு தன்னைவிட பல வயது குறைந்த அனோஜனின் அளவு ஈழ இலக்கிய வரலாற்றுப்படிப்பு கூட இல்லை// இது தனிப்பட்ட தாக்குதல். தேவையற்றதொன்று. //ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, விமர்சன விக்கிரகங்கள் என்ற நூல்களை சோபா படிக்கவில்லை என்பது அவரது பின்னூட்டங்களிலிருந்து துலங்குகிறது// அவர் தனது எதிர்வினையொன்றில் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கின்றார். ஆக அந்நூலை அவர் படித்திருக்கின்றார். இவை சில.. மேலும் நீங்கள் என் பதிவை சோபாசக்தி பற்றிய உங்கள் விமர்சனமாகத் திசை திருப்புகின்றீர்கள். மு.த & டொமினிக் ஜீவா பற்றிய திசையில் செல்லுங்கள்.
Arun Ambalavanar: Giritharan Navaratnam நான் சோபாசக்தி பற்றிய விமர்சனமாக திருப்பவில்லை. நீங்கள் தான் அனோஜன் மீதான தனிப்பட்ட தாக்குதலாக அவன் மீதான Age Discrimination ஆக்குகிறீர்கள். சோபா ஒரு நூலை குறிப்பிடுவது வேறு. அதனை படித்து கிரகித்திருப்பது வேறு.
Giritharan Navaratnam: Arun Ambalavanar //நீங்கள் தான் அனோஜன் மீதான தனிப்பட்ட தாக்குதலாக அவன் மீதான Age Discrimination ஆக்குகிறீர்கள்.// எங்கு என் பதிவில் அவ்விதமுள்ளது? இளம் எழுத்தாளர் என்று குறிப்பிட்டுள்ளதைக் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அது அவ்விதமான அர்த்தத்தைத் தருமானால் அதனை நீக்கி விடுகின்றேன். "எதற்காக எழுத்தாளர் அனோஜன் இவ்விதம் அமரர் ஜீவா மீது சேற்றை வாரியிறைத்திருக்கின்றார்? அவர் இன்னும் வளர வேண்டும்." என்று மாற்றியுள்ளேன்.
Arun Ambalavanar: Giritharan Navaratnam அவர் இன்னும் வளவேண்டும் என்று நீங்கள் எழுதுவது Age Discrimination.
Giritharan Navaratnam: Arun Ambalavanar அப்படிக் கூற முடியாது. வளரும் என்பதற்கு அதுதான் அர்த்தமென்று நீங்கள் கருதினால் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வளரும் என்பது விடயமொன்றைப்பற்றிய புரிதலின் வளர்ச்சியையும் குறிக்கும். அது ஒருவரின் வயதினை மட்டும் குறிக்கவில்லை.
Giritharan Navaratnam: Arun Ambalavanar , நீங்கள் இன்னும் தவறாகவே வயதை வைத்துக் கணிப்பிடுகின்றீர்கள். வயதுக்கப்பால் ஒருவரின் புரிதலை மட்டுமே கவனத்திலெடுத்து, அப்புரிதலை ஆராய வேண்டும். நீங்கள் முதலில் வயதை முதலில் கவனத்திலெடுத்துக்கொண்டு ஆராயப்புறப்படுகின்றீர்கள். பாரதியாரின் கவிதைகளை நான் மிகவும் மதிக்கின்றேன். அவற்றை அவர் இருபதுகளில், முப்பதுகளில் எழுதி முப்பத்தொன்பதில் மறைந்து விட்டார். அவரது எழுத்திலுள்ள தெளிவு, தர்க்கநியாயம் , புலமை இவைதாம் என்னைக் கவர்ந்தவை. எந்த வயதில் அவற்றை எழுதினார் என்பதை வைத்தல்ல அவரை நான் எடைபோடுவது. அனோஜனின் கூற்றுகளை வைத்துத்தான் நான் என் கருத்துகளைக் கூறுகின்றேன். மு.தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்த வாதம் போன்ற சிந்தனைகளை, அவரது அறிவுத் தேடலை நான் மதிப்பவன். அதே சமயம் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களை நான் ஏற்றுக்கொள்ளாதவன்.
Sivananthan Muthulingam: யாழ்ப்பாண இலக்கிய கர்த்தாக்கள் என்பவர்கள் சகலரும் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கருத்துக்கு இடமளித்த அளவுக்கு சமூக பிரச்சனைகளை அலசவில்லை என்றே தோன்றுகிறது.தங்களுடைய படைப்புக்கள் பிரசுரமாகியவுடன் அது மக்களை சென்றடைந்து எல்லோரும் வாசித்து விட்டனர் என்று நம்பும் பாமரர்களாகவே உள்ளனர்.
Chinniah Rajeshkumar: டொமினிக் ஜீவாவையும் தளையசிங்கத்தையும் கைலாசபதியையும் தெரிந்த இலங்கை எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்கள் அனோஜனின் கூற்று தவறு என்று சொன்னாலும் அல்லது டொமினிக் ஜீவாவே உயிருடன் திரும்பி வந்து சொன்னாலும் அனோஜன் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏனெனில் ஜெயமோகன் சொல்லீட்டாரல்லவா
Vickneaswaran Sk: இதை நீங்கள் குறிப்பிட்டது நல்லது கிரி. இந்த விடயம் எனக்கும் தெரியுமானாலும் எப்போது வந்ததென ஞாபகம் இருக்கவில்லை. அதை தேடும் அவகாசமும் என்னிடம் இருக்கவில்லை. ஆனால் காலம் இதழுக்காக முன்பொருமுறை நான் ஜீவாவை நேர்காணல் செய்தபோது அவர் இந்தமாதிரி விடயங்களில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். கைலாசபதிக்கும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் பிடிக்காது என்றாலும் தான் கொழும்பு சென்று மஹாகவியின் புகைப்படத்தை வாங்கிவந்து அதை அட்டைப்படமாகப் பிரசுரித்தேன் என்று என்னிடம் தெரிவித்தார். அவர் மல்லிகையை சுதந்திரமாகவே நடத்த விரும்பினார். எல்லாவிதமான ஆற்றலுள்ள எழுத்தாளர்களுக்கும் முடிந்தளவில் மல்லிகையில் இடம் கொடுத்தார்!
Chinniah Rajeshkumar: மெய்யும் உள்ளும் மெய்', 'பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்' ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972 இன் கடைசிக் காலங்களில் எழுதப் பட்டவையாகும். 'மெய்யுள் உள்ளும் மெய்' 72 ஜூன் 'மல்லிகை' யில் வெளிவந்தது. - சுந்தரராமசாமி , மு. பொ. எழுதிய தளையசிங்கம் ஒரு அறிமுகம் நூலிலிருந்து. கைலாசபதிக்கு எரிச்சல் வருவதெனில் இதற்கு தான் வந்திருக்க நியாயம். ஒருவர் பொலிசில் அடிவாங்கியதை செய்தியாக போடாமல் விட்டது கைலாசபதி மேலான அச்சம் என்பது மோசமான அவதூறும் சாதிய மன நிலையும் தான்.