- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -


 

- வெற்றிச்செல்வன் -- வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்களிப்புகளை, இந்திய உளவுத்துறையின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இது இவரது தனிப்பட்ட அனுபவங்களின் உளப்பதிவுகள். அதனையும் வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வகையில் விரிவான பதிவுகள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் சம்பவங்களை இவர் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கேற்பப் பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வனுபவங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகள் இவரது கருத்துகள். பதிவுகளின் கருத்துகளல்ல. இவற்றில் குறிப்பிடப்படும் பலர் இவற்றுக்கு மாற்றுக் கருத்துகள் கூறக் கூடும். ஆயினும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்னும் அடிப்படையில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -


பகுதி 1 எனக்கு நேரடியாகத் தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும்!

டெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போது அது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்றவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவுகளாகப் போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம் கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லா ஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்ட அறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை  இன்று வரை பலர் அறியவில்லை. அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் காரணமாமாகத் தாம் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.

1982 முதல் 1987 ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசு இலங்கை விடுதலை இயக்கங்களோடு இருந்த தொடர்புகள் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களும் நான் நேரடியாக பங்கு பற்றி அறிந்த விடயங்கள் இங்கு பதிவாக போட எண்ணியுள்ளேன். நான் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை  தவிர மற்ற எல்லா டெல்லி பேச்சுவார்த்தை களிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக கலந்து கொண்டிருக்கிறேன்.  தனிப்பட்ட முறையில் உமாமகேஸ்வரன் உடன் இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகள் வெளிநாட்டு தூதுவர்கள் , வெளிநாட்டு விடுதலை இயக்க பிரதிநிதிகள் பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் போன்றவர்களின் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதோடு காலத்துக்கு காலம் சித்தார்த்தன், பரதன், ராஜா நித்தியன், கவிஞர் ஜெயபாலன்,ஷிர்லி கந்தப்பா, அண்டன் பயர்ஸ் (சுமதி தென்னாப்பிரிக்கா) தோழர் சைமன் (ரவி), தோழர் சங்கர், லண்டன் சீனிவாசன் போன்றவர்கள் புதுடில்லி வரும்போது, எமக்குரிய தொடர்புகளை தலைமை கட்டளைப்படி, தேவைக்கு ஏற்றபடி சில குறிப்பிட்ட நபர்களை சந்தித்து, இலங்கை பிரச்சனை பற்றியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக நிலைப்பாடு பற்றியும் விபரம் கூற ஒழுங்குகள் செய்து கொடுப்பேன். முடிந்தளவு நானும் அவர்களோடு கலந்து கொள்வேன்.

1982 ஆண்டு பாண்டி பஜார் உமா, பிரபா துப்பாக்கிச் சண்டையின் பின்பு சென்னை மத்திய சிறைச்சாலையில் அவர்களை ரகசியமாக இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறையான IB (இன்டலிஜென்ஸ் பீரோ) இன் இரண்டு தமிழ் அதிகாரிகள் போய் அவர்களிடம் இலங்கை சம்பந்தமான முழு விபரங்கள் இவர்கள் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேட்டு, உடனடியாக டெல்லிக்கு அனுப்பினார்கள் ஐபி இயக்குனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் தினசரி காலையில் இந்திய பிரதம மந்திரியை சந்தித்து உள்நாட்டில் நடக்கும் சகலவிதமான ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் விடயங்களையும் பிரதம மந்திரி இடம்  விரிவாக கூறுவார்.

இது இன்று வரை நடக்கும் விடயம். இந்திய உளவுத்துறைகளைப் பற்றி கூற வேண்டுமானால், முதலில் வருவது ஐபி, அடுத்து ரா, ராணுவ உளவுத்துறை MI, கடற்படை உளவுத்துறை போன்றவை இலங்கை விஷயத்தில் தொடர்பில் இருந்தனர். மாநில அளவில் அதாவது தமிழ்நாடு q கியூ பிரான்ச், மற்றும் IS அமைப்பினர். பாண்டி பஜார் சம்பவத்தின்போது தமிழ்நாடு உளவுப்பிரிவு இயக்குனர்மோகனதாஸ் உமா, பிரபா மற்றவர்களையும் இலங்கையிடம் பிடித்து கொடுப்பதற்கு முயற்சி செய்தார் அக்காலத்தில் இலங்கை பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் அடிக்கடி தமிழ்நாடு வந்து மோகனதாஸ் சந்தித்து செல்வார். எம்ஜிஆர் நினைப்பதை செய்து காட்டுபவர் மோகனதாஸ். மோகனதாஸ் என்ன செய்தாலும் எம்ஜிஆர் தடுக்க மாட்டார்.

ஐபி ரிப்போர்ட்டை அடுத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் குறிப்பாக கருணாநிதி அழுத்தத்தை அடுத்து இந்திரா காந்தி நேரடியாக எம்ஜிஆருடன் பேசி, மோகனதாஸ், ருத்ரா ராஜசிங்கம் எண்ணத்தை தடுத்தார். இதையடுத்து இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா களம் இறக்கப்பட்டது. எம்ஜிஆர் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் பேசாமல் இருந்தார். ஆனால் மோகனதாஸ் தனது அதிகாரத்தை வைத்து பல இடைஞ்சல்களை செய்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் போய் சென்னை மெரினா கடற்கரையில் நடு இரவில் கலைஞரை சந்தித்து தங்கள் போராட்டம் போராட்டவரலாறுகளை கூறியுள்ளார் . அதற்கு முன்பே ஒரு இலங்கைத் தமிழர் பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன்போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தமிழக பல தலைவர்களை சந்தித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் பல தமிழக அரசியல்வாதிகள், அரசியல் சாராத தலைவர்கள் பொதுமக்கள் என பல பெயர்கள் உண்டு அவர்களிடம் உதவி பெற்ற விடுதலைப் புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் அவர்களை மறந்தே போய்விட்டனர்.

கா சுப்பு, செஞ்சி ராமச்சந்திரன் தஞ்சாவூர் எம்பி எல் கணேசன் அண்ணா ,வை கோபால்சாமி அண்ணா, எம்பி யாக இருந்த ஆலடி அருணா அண்ணா,தமிழ்நாடு சட்ட மேலவை துணைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன் மணவை தம்பி, தமிழ் மன்னன்..

பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ் மன்னன் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பும் இருவருக்கும் இவர் பல உதவிகளை செய்துள்ளார். ராகவனுக்கு இவரை மிக நன்றாக தெரியும் என நினைக்கிறேன் திமுக கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர். கலைஞர் பயப்படும் ஒரே ஆள். இரா ஜனார்த்தனம் பல உதவிகள் செய்தாலும், விடுதலை போராளிகளை தனது சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டவர் ஒரு முஸ்லீம் அன்பர் இலங்கை விடுதலை போராளிகள் வந்து தங்கிச் செல்ல தனது வீட்டை கொடுத்திருந்தார் அவர் தனதாக்கிக் கொண்டவர். ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர் பாண்டிச்சேரி காலத்திலிருந்து விடுதலை புலிகளுக்கும் உமா மகேஸ்வரனுக்கு உதவி புரிந்தவர். ஐயாவின் ஒரே நோக்கம் ஆரம்பத்தில் இருந்து அவர் சாகும்வரை இலங்கைத் தமிழருக்கு ஒரு தமிழ் ஈழம்வேண்டும் என்பதே. இலங்கை தமிழ் போராளிகளால் எந்த ஒரு பயனும், புகழும்பெறாமல் முடிந்தளவு அவரும் அவரின் குடும்பமும் பல உதவிகளை செய்து உள்ளார்கள். கடைசி காலத்தில் நான் அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் போராட்டம் இப்படித் திசைமாறிப் எதிரியிடம் போய் நிற்கிறது  எனகண்ணீர் விட்டு அழுதார். உமா மகேஸ்வரனின் மாற்றம்தான் அவரை மிக அதிர்ச்சி அடைய வைத்தது.eprlf இயக்கத்துக்கு தோழர் அரணமுறுவல் பல உதவிகள் செய்தபோதும், மற்ற இயக்கங்கள் உதவிகள் கேட்டாலும் ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர். தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் ரகசியமாக இருந்த காலத்தில் மேற் கூறியவர்கள் அரசாங்கத்துக்கு பயப்படாமல் உதவிகள் செய்தவர்கள். பல பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ராகவன் போன்றவர்கள் கட்டாயம் அந்த காலத்தில் உதவி செய்தவர்கள் பெயர்களை பதிவாக போட வேண்டும் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அதுதான்.


பகுதி இரண்டு!

ஜூலை 83 கலவரத்துக்கு முன் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாட்டு தொடர்புகள்அதிகரித்திருந்தன. தஞ்சாவூர் ஓரத நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி, தஞ்சாவூரைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் மறைமலையான் அவர்களும் இவர்கள் மூலம் தமிழ்நாட்டு அமைச்சர் தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ் டி சோமசுந்தரம், தமிழ்நாடுசட்ட மேலவை துணைத் தலைவர் சினிமா பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்புகள் மூலம் பலர் அறிமுகமானார்கள் நினைவில் நிற்கும் பெயர்கள் பாண்டிச்சேரியைச் சேர்ந்த அபிமன்யு என்கிற அபி, சீசர் ( எமது இயக்க மத்தியகுழு உறுப்பினர்) ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி சேகர் மாஸ்டர் போன்ற பலர் உதவி செய்தார்கள். இதில் இளவழகன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் வாங்கிய பிரின்டிங் பிரஸ் பாவாணர் அச்சகம் உரிமை அவர் பெயரில் இருந்தது. அங்க மேனேஜராகவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஐயர் சம்பளத்துக்காக வேலை செய்தார். ஐயா மறைமலையான்ஆசிரியராக கொண்டு நாங்கள் வெளியிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற மாதப் பத்திரிகை எமது பாவானர் அச்சகத்தில் தான் அச்சிடப்பட்டது. நான்தான் அப்பத்திரிகையின் பொறுப்பாளராகவும், கிட்டத்தட்ட மாதா மாதம்5000 புத்தகங்கள் வெளிநாட்டுக்கு பார்சல் செய்து அனுப்பும் வேலையும் நான்தான் செய்தேன். மாறன், சங்கிலி கந்தசாமி போன்றவர்கள் சில வேலைகளில் உதவி செய்வார்கள். பின்பு எனது பொறுப்பை மாதவன் அண்ணா  ஏற்றார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாம் மிக ரகசியமாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் தென்மொழி அச்சகத்தின் ஊடாகவே நடக்கும். அடிக்கடி போலீசாரின் அத்துமீறல்களை ஐயா அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் எங்களால் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையினர் தென்மொழி அச்சகத்தை தலைகீழாகப் புரட்டி விட்டு போன பின்பும் ஒரு மணி நேரத்தில் எமது தகவல் பரிமாற்றங்கள் நடக்கும். ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து எழுதுவதால் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் காவல்துறையினரால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காலமும் உண்டு.

1982 ஆண்டு கடைசிப் பகுதியில் சென்னை பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதி ரூம் நம்பர் 11 நான் சென்றபோதுஇந்த ரூம் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜனார்த்தன் அவர்களுக்கு உரியது. அக்காலத்தில் அங்குஇலங்கை விடுதலை போராளிகள் தான் தங்கியிருந்தார்கள். அப்போது அங்கு மாணவர் பேரவை ஆரம்பித்தஅவர்களில் ஒருவரான ஜீவா என்றழைக்கப்படும் ஜீவ ராஜா தங்கி இருந்தார். எந்த நேரமும் குடிவெறியில் தான் இருந்தார். அங்கு என்னை சந்தித்த தமிழ் மன்னன் திமுகவைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரனை சந்திக்க ஏற்பாடு செய்தார் முதலில் என்ன சந்தித்தவர் மாறன். மாறன் என்னை சந்திக்க வந்த நேரத்தில் அங்கு ராகவனும் பிரபாகரனும் வழக்குத் தவணைக்காக வந்து இருந்தார்கள். நான் ராகவன் முதலில் அங்குசந்தித்தபோது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எனக்கு சீனியர் என்ற முறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இதை பார்த்த மாறன் முதலில் என்னை சந்தேகப் பட்டார். தமிழ் மன்னன் தான்விளங்கப்படுத்தினார். ராகவன் இந்த சம்பவத்தை மறந்து இருக்கலாம். மாறன் தூர கூட்டிக்கொண்டு போய் என்னை பிரபாகரனையும் ராகவனின் காட்டி அவர்களோடு பேச வேண்டாம்கவனமாக இருக்கவும். எனக்கூறினார் பிரபாகரனைப் பற்றி குறிப்பிடும்போது பெயர் சொல்லாமல் முட்டை கண்ணன் என கூறுவர். இரண்டு நாட்களின் பின் உமாமகேஸ்வரன் என்னை சந்தித்த போது அவர் வேட்டி கட்டியிருந்தார். அவரை முதன் முதலில் சந்தித்த போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவரோடு வேலை செய்த எனது மிகநெருங்கிய உறவினர்கள் பெயரைச் சொன்ன போது சந்தோஷப்பட்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அதற்காக வேலை செய்யும்படியும், அது இவர்களைத் தவிர மற்றவர்கள் தலைமறைவு காலம் ஆகையால் தலைமறைவாக இருக்கும்படியும் மாறன் வந்துஅடிக்கடி சந்திப்பதாகவும் தேவையான பணத்தை மாறனிடம் கொடுப்பதாகவும்கூறிச் சென்றார். மாறன் நான் தங்கியிருந்த மவுண்ட் ரோட்  ராமச்சந்திரன் லொட்ஜ் வந்து என்னை சந்தித்து உணவுக்கும் லாஜிக்கும் பணம் கொடுத்து சில ரகசியமான வேலைகளையும் கொடுத்து செல்வார்.

ஒருநாள் உமா மகேஸ்வரனும் மாறனும் வந்து, கழக கடிதத் தலைப்புகளும் பல வெளிநாட்டு முகவரிகளும் கொடுத்து, முன்பு ஒன்றாய் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வேலை செய்த ஜெர்மனி பரமதேவா,, பிரான்ஸ் ஏரம்பு, லண்டன் கிருஷ்ணன் கிருஷ்ணன் ஊடாக சித்தார்த்தன் போன்றவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வளர்ச்சி பற்றியும் அவர்களை எமக்கு வேலை செய்யும் படியும் கடிதங்கள் எழுதினோம்.அதன் பின்புதான் வெளிநாட்டுக் கிளைகள் எமக்காக இயங்கத் தொடங்கின.

1983 மார்ச் மாதம் என நினைக்கிறேன், நூற்றுக்கணக்கான இலங்கை அரசுக்கு எதிரான ஆங்கில பிரசுரங்கள் புத்தகங்கள் நான் இருந்த அறையில் ஒளித்து வைத்தார்கள். டெல்லியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் நடைபெறப் போவதாகவும் அங்குபோய் எல்லா நாடுகளின் தலைவர்களுக்கும் கிடைக்கும்படி இந்த புத்தகங்களை வெளிநாட்டு தூதரகங்களுக்குகொடுக்கும்படியும்., அங்கு எமது சார்பாக பத்திரிகையாளர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரி என்பவர் ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் புத்தகங்களை கொடுக்கும்படியும் அதோடு இலங்கை பிரச்சனை சம்பந்தமாக நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஹரிகு உதவும் படியும் கூறினார்.


பகுதி மூன்று!

நான் டெல்லி போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு வந்த வேலை என்னோடு தமிழ் மன்னனும், எமது தமிழீழ விடுதலை அணி தலைவர் ஈழவேந்தன் உம் கூட வருவதாக மாறன் கூறி மூவருக்கும் சென்னையிலிருந்து டெல்லி போகும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை தந்தார் காலையில் ஏழு மணிக்கு புறப்பட்ட ரயிலில்நாங்கள் மூவரும் போனோம் ரயிலில் ஈழ வேந்தனுக்கு ம் தமிழ் மன்னனுக்கும் சரியான சண்டை.அமெரிக்காவில் வருடாவருடம் டாக்டர் பஞ்சாட்சரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை மாநாடுநடத்துவார்கள். மாநாட்டின் முடிவில் அடுத்த பொங்கலுக்கு அல்லது தீபாவளிக்கு அல்லது புதுவருஷத்துக்கு தமிழீழம் கிடைக்கும் என்று கூறி மாநாட்டை முடிப்பார்கள் இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழருக்கு சம்பந்தமில்லாத பெரிய அரசியல் வாதிகளை கூப்பிட்டு கௌரவிப்பார்கள் .இதற்குத்தான் தமிழ் மன்னன் உண்மையில் இலங்கை போராளிகளோடு சேர்ந்து நாங்கள்தான் உழைக்கிறோம் எங்களையெல்லாம் கூப்பிடக் கூடாதா. நாங்களெல்லாம் அமெரிக்கா பார்க்க கூடாதா என ஈழவேந்தன் இடம்சண்டை பிடித்தார். தமிழ் மன்னன் தூசண வார்த்தைகளால் ஏசினர் ஈழவேந்தன் கூனிக் குறுகிப் போனார்.

- வைகோ -அடுத்தநாள் மாலை ஐந்து மணி போல் எமது ரயில் புதுடெல்லியைச் சென்றடைந்தது. தமிழ் மன்னன் புதுடில்லி நோர்த்அவென்யூ என்ற இடத்தில் இந்திய பாராளுமன்ற எம்பிக்கள் கார் விடஒதுக்கப்பட்ட இடத்தில் உணவகம் நடத்தி வரும் நாராயணன் என்பவரோடு தங்குவதற்கு போன போது என்னையும் தன்னுடன் வரும்படி கூறினார் .ஆனால் ஈழவேந்தன் வை .கோபால்சாமி எம் பி யைதனக்கு நன்றாக தெரியும் என்றும் அவருக்குரியஎம்பி குவாட்டர் சில் தங்கலாம் என என்னையும் அழைத்துக்கொண்டு வை .கோபால்சாமி வீட்டுக்கு போனார். அங்கு நமக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வைகோ எம்பி நாங்கள் வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். ஈழவேந்தன் என்னைஅறிமுகப்படுத்திவிட்டு, நான் டெல்லி வந்த நோக்கத்தையும் கூறி மூன்று நாள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டார். உடன் கோபமடைந்த வைகோ எங்களை உடனடியாக வேறு இடம் பார்க்கச் சொன்னார் .கடுமையான குளிர் நேரம் இருட்டி விட்டது ஈழவேந்தன் கெஞ்சிக் கூத்தாடி இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டு வெற்றிபெற்றார் அடுத்த நாள் காலையில்தான் எழும்பும்போது நாங்கள் அங்கு இருக்க கூடாது என்றும் கூறினார். வைகோ அண்ணாவின் கோபத்துக்குக் காரணம் அவரும் அமெரிக்க மாநாட்டுக்கு தனக்கு ஏன் அழைப்பு இல்லை தேவையற்ற நபர்களுக்கு எல்லாம்அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.உதவி என்றால் மட்டும் என்னிடம் வந்து விடுங்கள் என்று கூறினார். ஈழவேந்தன் தனக்கும் அமெரிக்க மாநாட்டு காரர்களுக்கும் சம்பந்தம் இல்லை., என விளங்கப் படுத்தியும் வைகோசமாதானம் அடையவில்லை. பிற்காலத்தில் வைகோ அண்ணா எனக்கு மிக நெருங்கிய வராக இருந்தது பிற்கால கதை.

அடுத்த நாள் காலையிலேயே நாங்கள் எழும்பி வைகோவின் நண்பரும் உதவியாளரும் மான ஜார்ஜ்இடம் சொல்லி விட்டு வெளியில் வந்து ஈழவேந்தன் தனக்குத் தெரிந்த காந்தி பீஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பின் தங்கும் இடத்துக்கு சென்றார் நான் புத்தக கட்டுகளுடன் தமிழ் மன்னனை தேடிச் சென்றேன். என்னை பார்த்த தமிழ் மன்னனும் அவரின் நண்பர் நாராயணனும் கட்டிப்பிடித்து தம்பி நாங்கள் இருக்கிறோம் உனக்கு உதவி செய்ய ,தெரியாத இடம் என்று பயப்படாதே என்று கூறி,உடனடியாக காலைக்கடன்களை முடித்து குளிக்க நாராயணன் பொதுக்  குளியலறைகழிவறைக்கு அழைத்து சென்று உதவி செய்தார். சுடச்சுட காலை உணவு தந்தார். தான் வறுமையில் இருந்தாலும், அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை பிற்காலத்தில் குடித்து குடித்து இறந்து விட்டார்.

உடனடியாக நானும் தமிழ் மன்னனும் டெல்லி தொலைபேசி புத்தகத்தை எடுத்து டெல்லியில் இருந்து அனைத்து எம்பஸ்ஸி தூதர் வெளிநாட்டு தூதரகங்களுக்கு விலாசம் எடுத்து இலங்கை அரசுக்கு எதிரான நான் கொண்டு வந்த புத்தகங்களை பார்சல் செய்து தபாலில் போட்டேன். அதே மாதிரி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம்.

அன்று மாலை விமானத்தில் வந்த பத்திரிகையாளர் ஹரி டெல்லி பிரஸ் கிளப்பில் ஒரு மீட்டிங் நிறுத்தினார் அங்கும் புத்தகங்களைக் கொடுத்து ,அக்காலகட்டத்தில் இலங்கை பிரச்சனை பெரிதாக அதிகம் பேருக்குதெரியவில்லை நாங்கள் முதன்முறையாக டெல்லி பத்திரிகையாளர்களுக்கு இலங்கையில்இருக்கும் பிரச்சனைகளை விளங்கபடுத்தினோம். இதே நேரம் என்னிடம் பல புத்தகங்களை வாங்கிச் சென்ற ஈழவேந்தன் புத்தகங்களில் தனது தமிழீழ விடுதலை அணி என்ற விசிட்டிங் கார்டை வைத்து பத்திரிகை அலுவலகங்களில் கொடுத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் பத்திரிகைகளில் தமிழீழ விடுதலையை அணித்தலைவர் ஈழவேந்தன் இலங்கை அரசுக்கு எதிராக பிரசுரங்கள் விநியோகித்து உள்ளதாக போட்டார்கள். இதனால் மூன்று மாத விசாவில் இந்தியா வந்த ஈழவேந்தன் திரும்ப இலங்கை போகமுடியாமல் இந்தியாவில் தலைமறைவாகி விட்டது அது ஒரு செய்தி. எமது வேலைகளை முடித்துவிட்டு நானும் தமிழ் மன்னனும் ரயிலில்சென்னை நோக்கி பயணமானோம்.
சென்னையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


பகுதி நான்கு!

நான் சென்னையில் வந்து இறங்கியதும் தமிழ் மன்னன் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றார். நான் நான் தங்கியிருந்த லாட்ஜு க்குப் போனேன். வாசலிலேயே என்ன பார்த்துவிட்ட லாட்ஜ் மனேஜர் கண்ணாலேயே திரும்பிப் போகும்படி சைகை காட்டினார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை .வெளியில் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் நின்றேன். டீ குடிப்பது போல் வெளியில் வந்த லாட்ஜ்மேனேஜர் என்னிடம் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் என்னைப்பற்றி விசாரித்ததாகவும் ஒரு அதிகாரி 24 .மணி நேரமும் என்னை பிடிப்பதற்காக லாட்ஜ்அலுவலகத்தில் வந்து அமர்ந்து இருப்பதாகவும் கூறி வரவேண்டாம் எனபோகச் சொன்னார். நான் உடனடியாக தமிழ் மன்னன் இடமும், பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் தென்மொழி அச்சகஅலுவலகம் போய்ஐயாவிடம் மாறன் ,கந்தசாமி வந்தால் தகவல் சொல்லும்படியும், நான் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இருக்கும் இடத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயில் பக்கத்தில் இருப்பதாகவும் கூறினேன்.

மாலையில் மாறன் தமிழ்மணி என்பவருடன் வந்தார். தமிழ் மணி எனக்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருவார் தகவல்கள் முக்கிய செய்திகள்  தமிழ்மணி மூலம் வரும் எனவும் கூறினார். (தமிழ் மணியை பற்றி கூற வேண்டும் இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சென்னை சட்டக் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தார் இளவழகன் ராமசாமி போன்றவர்களின் உறவினர் எமது ஈழ விடுதலைக்காக உதவி புரிந்தார் அவரைப் பற்றி ஒரு சம்பவம் ஒரு முக்கிய தகவலை கொடுப்பதற்காக புரசைவாக்கத்தில் அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எமது மறைமுக அலுவலகம் அமைந்திருந்த திருவல்லிக்கேணி கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் கையில் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நடந்தே வந்தார் வேர்க்க விருவிருக்க இப்போது தமிழ்மணி சென்னையில் வக்கீலாக இருக்கிறார்.)

என்னை கூட்டிக்கொண்டு போய் சென்னை மாநிலக் கல்லூரி இன்விக்டோரியாஆண்கள் விடுதி இல் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த பாண்டி தென்னவன் என்றமாணவனிடம் என்னைஅறிமுகப்படுத்தினார். அக்காலகட்டங்களில் இலங்கை பிரச்சனை பெரிதாக இல்லை உமா பிரபா சுடப்பட்ட பிரச்சனை ஓரளவு விளங்கியவர்கள். தமிழ்மணி பாண்டி தென்னவன் இடம்விபரம் கூறி என்னை கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார். அவரும் யாருக்கும் தெரியாமல் அவரது ஹாஸ்டல் ரூமில் என்னைத் தங்க வைத்துக் கொண்டு அவரது மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் என்னை பற்றிய விபரங்களைக் கூற அவர்களும் என்னை கவனமாக பார்த்துக் கொண்டார்கள். மற்ற மாணவர்கள் கேட்டால் ஊரிலிருந்து தங்கள் உறவினர் பையன் வந்திருப்பதாகக் கூறினார்கள். எனக்கு உணவு வாங்கி வருவதிலிருந்து ஒரு படத்துக்கும் கூட்டிப் போனார்கள் டி ராஜேந்தர் நடித்த உயிருள்ளவரை உஷா படம்.(இன்று பாண்டி தென்னவன் தஞ்சாவூரில் வக்கீலாக இருப்பதாக அறிந்தேன் தொடர்பு இல்லை)

கிட்டத்தட்ட இருபது நாட்கள் அங்கு தலைமறைவாக இருந்தேன். பின்பு உமா மகேஸ்வரனும் , மாறனும் வந்து வேலைகளுக்காக நிர்வாக வசதிக்காக ஒரு தலைமறைவு அலுவலகம் போட ஒரு வீடுதேடச் சொன்னார்கள். அப்போது நாங்கள் எடுத்த தலைமறைவு வீடுதான் 28CNKரோடு திருவல்லிக்கேணி.தமிழ்நாடு போலீஸ்உளவுத்துறைக்கு கண்ணில் மண் தூவி விட்டோமென்று சந்தோஷத்தோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இந்திய அலுவலகம் செயல்படத் தொடங்கியது.நானும் மாதவன் அண்ணனும் சேர்ந்து நிர்வாக வேலைகளை செய்தோம். பாவலரேறு பெருஞ் சித்தனார் ஐயாவின் தென்மொழி அச்சகமும் ,ஐயாவின் வீடும் நமக்கு மிக அருகாமையில் இருந்ததால் எமது தோழர்களுடன் தகவல் தொடர்புக்கு எளிதாக இருந்தது.

83ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்உமாமகேஸ்வரன் எனது பெயரை வெற்றிச்செல்வன் மாற்றினார். அந்தப் பேரோடு எனது இயக்க வேலைகள் தொடர்ந்தன. எனக்கு சென்னையின் வடசென்னை தென் சென்னை போன்ற எல்லா இடங்களையும் சைக்கிளில் போய்வர அறிமுகம் செய்தவர் குரு பாவலரேறு ஐயாவின் மகனும் எனது நண்பருமான பொழிலன் தான். உமா மகேஸ்வரன் நாங்கள் அச்சிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற பத்திரிகையை சென்னை கடைகளுக்கு விற்பனை செய்துபோடுவதற்கு பொழிலன் இடம் உதவி கேட்டார். பொழிலன் தென்மொழி வெளியீடுகளான தமில்நிலம் தமிழ்ச்சிட்டு தென்மொழி பத்திரிகை களை கடைகளுக்கு போடபோகும் போது, நானும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எமது புத்தகங்களை சைக்கிளில் கட்டி காலை மணி எட்டு மணி போல் முதலில் வடசென்னை பக்கம் போவோம். நாங்கள் சைக்கிளை எடுத்து புறப்படும் போது பெருஞ்சித்தனார் அய்யா வாசலில் வந்து தனது மகனைபார்த்து, தம்பியை மிகக்கவனமாக கூட்டிக்கொண்டு போ, தனியே விட்டு விடாதே என்று கூறும்போதுஅவருக்கு எங்கள் மேல் இருந்த அன்பும் பாசமும் தான். இதில் சிறப்பு என்னவென்றால் என்னை விட வயதில் சிறியவர் பொழிலன். இருவரும் முதல்நாள் வடசென்னை கடைகள் அடுத்த நாள் தென் சென்னைகடைகள் என போய் வருவோம். காலையில் போனால் மாலை ஏழு மணியாகும் வர. கையில் காசு இருந்தாலும் செலவழித்து சாப்பிட உரிமை இல்லை அதே நேரம் மனமும் நமக்கு இல்லை. அம்பது காசு எலுமிச்சை சர்பத் மட்டும் குடிப்போம். இக்காலகட்டங்களில் எமது முதல் செங்கல்பட்டு முகாம் ரகசியமாக இயங்கத் தொடங்கியது சந்ததியார் ஜான் மாஸ்டர். வந்து போவார்கள். கண்ணன் என்ற சோ திஸ் வரணும் நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன்ன்வெளியூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இவர்களும் சென்னை வந்துவிட்டார்கள் நிரஞ்சன் என்னோடு தங்க வைக்கப்பட்டார். கந்தசாமியும், மாறனும் தான் மிக மிக மிக ஓய்வு இன்றி வெளியூர் உள்ளூர் என்று பயணப்பட்டு கொண்டு திரிவார்கள். சந்ததியார் ரகசியமாக என்னிடமும் மாதவன் அண்ணாவிடம் மாறனும், கந்தனும் என்ன செய்கிறார்கள் எங்கு போய் வருகிறார்கள் என கேட்பார். நாங்கள் எமக்கு தெரியாது என கூறுவோம். சந்ததியார் நாங்கள் பொய்கூறுவதாக நினைத்து எங்களிடம் கோபப்படுவார். உண்மையில் எங்களுக்கு தெரியாது

இளவழகன் ராமசாமி சாமி தவுடன் தமிழ்மணி எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் போன்றவர்கள் அடிக்கடி வந்து போய் வருவார்கள் உமா. மகேஸ்வரனும் அடிக்கடி ரகசியமாக வந்து போவர். தமிழ்நாடு மேலவை துணைத் தலைவரும் கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் அடிக்கடி உமா மகேஸ்வரனை தனது வீட்டுக்கு கூப்பிடுவார். உமா என்னையும் கந்தசாமி யையும் சேர்த்துக் கூட்டி போவார். காரணம் காலை சாப்பாடாக இருந்தாள் என்ன பகல் சாப்பாடாக இருந்தால் என்ன, இரவு சாப்பாடாக இருந்தால் என்ன மீன் இறைச்சி கோழி என பல வகை உணவு வகைகளுடன் சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும் என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைப்பார் இதற்கு பயந்து தான் உமா எங்களைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடுவர். உமா தனக்கு வேலை இருப்பதாக கூறி போய்விடுவார். புலவர் புலமைப்பித்தன் கவலைப்பட்டாலும், புலவரும் குடும்பமும் மிக மிக அன்போடு உணவு பரிமாறுவார்கள். ஒருமுறை அவர் வீட்டு விசேஷத்துக்கு அழைத்து இருந்தார். மாறன் நான் உமா போயிருந்தோம். எப்போது சென்னைக்கு வழக்குதவணைக்காக வந்திருந்த பிரபாகரன் அவருடன் கூட பேபி சுப்ரமணியம் ராகவனும் என நினைக்கிறேன் அங்கு வந்தார்கள். அவர்கள் வந்து தங்குவதற்கு மொட்டை மாடியில் ஒரு அழகான குடிசை போட்டு வைத்திருந்தார். பிரபாகரன் குழுவினர் மொட்டை மாடிக்கு போய் விட்டார்கள். நாங்கள் அங்கு நிலைமை சரியில்லை என்று கூறிபுலவரிடம் சொல்லிக் கொண்டு எமது இடத்துக்கு திரும்புவதற்கு முயற்சி செய்தபோது புலவர் புலமைபித்தன் எங்களை விடவில்லைமிகவும் கவலைப்பட்டார், உமாமட்டும் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போக அவருக்கு பாதுகாப்பாக மாறனும் போய், பின்பு கந்தசாமியை அழைத்துக்கொண்டு வந்தார். கந்தன் ஆயுதத்தோடு வந்து இருந்தார். அந்த அசைவ விருந்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம். மாறன் கூறியபடி பிரபாகரன் ஆட்கள்போகும் வரை அங்கு இருந்தோம். நாங்கள் உரிமையோடு இருந்தது புலவருக்கும் மிக சந்தோசம். பின்பு தான் எனக்கு தெரிந்தது கந்தசாமி பிரபாகரன் போகும்போது ரோட்டில்வைத்து அவரை போடுவதற்கு முயற்சி செய்யப்போவதாக. எனக்கு ஆர்வமும் மிக பயமாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ மாறனும் கந்தசாமியும் அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.

நாங்கள் ரகசிய அறை அலுவலகம் என்று நினைத்திருந்த வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அமர்ந்திருப்பார் அவருடன் நாங்களும் வேலைகளை கொடுப்போம். கிட்டத்தட்ட அந்த இடத்தை நாங்கள்மூன்று வருடங்கள் வைத்திருந்தோம். 1988 ஆம் ஆண்டு நான் டெல்லிஅலுவலகத்தை மூடிவிட்டு சென்னை வந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இந்திய பிரதிநிதியாக பொறுப்பேற்ற போது மரியாதை நிமித்தம் தமிழ்நாடுஉளவுத்துறை ஐஜி சந்திக்கச் சென்றபோதுஅங்கு ஒருவர் வந்து என்னை சுகம் விசாரித்து விட்டு என்னை தெரிகிறதா என்று கேட்டார். நான் மறந்துவிட்டேன் தெரியவில்லை என்று கூறினேன்.அப்போதுதான் அவர் கூறினார் நான் தான் உங்கள் திருவல்லிக்கேணி அலுவலகம் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளி என்று. அப்போதுதான் தெரியும் அப்போதே எங்களைகண்காணிக்க தமிழ்நாடு உளவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது என்று. ஆனால் நாங்கள் அது ரகசிய இடம் என்று நினைத்திருந்தோம்.

உமாமகேஸ்வரன் மற்றும்மற்றவர்களின் வழக்குகளை அப்போது தோழர் கணபதி என்ற விக்கி என்ற விக்னேஷ் வரன்பார்த்து கொண்டார் அதைப் பற்றி பின்பு எழுதுகிறேன். உமது தமிழகத்தின் குரல் வானொலி இயங்க முழு மூச்சாக வேலை செய்த டெக்னிக்கல் வேலை முழுவதும் தோழர் பார்த்திபன் தான் பொறுப்பு ஜூலை கலவரத்துக்கு முன் நடந்த பல சுவாரசியமான விடயங்கள் அவருக்கு தெரியும் அவரும் தனது பங்களிப்பை பற்றியும் தனக்குத் தெரிந்த விடயங்களை  எழுதினால் பல செய்திகள் எமக்கு அறியக்கூடியதாக இருக்கும்.இந்த பதிவை படித்தால் கட்டாயம் பழைய செய்திகளை எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.


பகுதி ஐந்து!

சென்னையில் எனதும் மாதவன் அண்ணாவின் வினதும்வேலைகள் கூடிக்கொண்டு போய் குடிகொண்டிருந்தன கடிதத் தொடர்புகள் எங்கள் வெளியீடுகள் போன்ற பல வேலைகள். நாங்கள் எமது இறந்த தோழர்களின் நினைவாக சுந்தரம் , ஊர்மிளா தேவி, காத்தான் கிருஷ்ணகுமார் போன்றவர்களின் நினைவுத் தபால்தலைகளை சிவகாசியில் அச்சடித்து பார்சல் சென்னைக்கு வரும் வழியில் மணப்பாறை வருவாய்த்துறை செக்போஸ்டில் பிடித்துவிட்டார்கள்.

உமா மகேஸ்வரன் எமது பயிற்சியாளர் சேகரை கூப்பிட்டு இரண்டு நாளில் மதுரை போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் மணப்பாறை விஷயத்தை கவனிக்க சொன்னார் சேகரும்நானும் மதுரை போய் சேகர் மதுரையில் தனது உறவுக்காரர் இன் மொத்த விற்பனைக் கடையில் என்னைத் தங்க வைத்தார் சேகர் முத்திரை பார்சல் பிடிப்பட்ட காரணத்தை அறிந்து வந்து கூறினார் வரி கட்டாததால் பிடிபட்டதாக ,பின்பு நான் மட்டும் மணப்பாறை போய் செக்போஸ்ட் அலுவலகத்தில் விவரம் கோரி வரி விபரங்கள் கேட்டுகொண்டிருக்கும்போது. தூரத்தில் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் என்ன விஷயம் என விபரம் கேட்டார்.பின்பு நீங்கள் சிலோன் ஆ என கேட்டார். நான் மறுத்துவிட்டு பின்பு உண்மையை ஒத்துக் கொண்டேன் நீங்கள் விடுதலைப் புலிகளா எனக்கேட்க நான் ஆம் என்றேன்.அக்காலத்தில் எல்லா இயக்கங்களையும் விடுதலைபுலிகள் என்றே கூறுவார்கள்.

நான் துணிந்து ஒரு பொய்யை கூறினேன் வருவாய்த்துறை அமைச்சர் எஸ் டி சோமசுந்தரம் தான் அனுப்பினார் என்று. உடனடியாக என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் வருவாய் துறை அதிகாரிகளிடம் போய் ,ரகசியம் பேசிவிட்டு வரி கட்டாமல் முத்திரைத்தாள் வெளியில் எடுப்பதற்கு உரிய ஆவணங்களை எனது கையில் கொடுத்தார் அடுத்து வரும் லாரியில் சென்னைக்கு அனுப்பி விடுவதாகவும் சென்னையில் பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார் பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தேநீர் சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து சென்னை போகும் பஸ்ஸில் அனுப்பி வைத்தார் பஸ் புறப்படும் முன் தன்னை யாரென்று அறிமுகப்படுத்தினர் அவர் மணப்பாறை கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர். அவருக்கு நன்றி கூறி சென்னை புறப்பட்டு வந்தேன்.

சென்னையில் எங்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா படி, ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் சாப்பாட்டு செலவுக்கு தந்துவிடுவார்கள். நானும் மாதவன் அண்ணாவும் காலை உணவு சின்னபிரெட் ஐம்பது காசு, தேநீர் 25 காசு. கடலை மிட்டாய் 10 காசு நமக்கு காலை உணவு ஒரு ரூபாய்க்குள் முடிந்துவிடும். மதியம் எப்பவும் சைவ அளவு சாப்பாடு தான் அளவுச் சாப்பாடு ஒரு ரூபாய் 50 காசு நாங்கள் சர்வர் நண்பரை நன்றாக பழகிக்கொண்டு, அவரிடம் சாம்பார் திரும்பத் திரும்பக் பெறுவோம் கடை முதலாளிக்கு தெரிந்தால் திட்டுவார் இப்படியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியில் வந்து கடலைமிட்டாய் வாழை பழம் சாப்பிடுவோம்.இரவு உணவு பக்கத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ் க்கு போ அளவுச் சாப்பாடு அங்கு மீன் குழம்பு மட்டன் குழம்பு கோழி குழம்பு கிடைக்கும் வெறும்குழம்பும் மட்டும்தான். அளவு சாப்பாடு விலை ஒரு ரூபாய் 75 காசு.அங்கு மீன் மட்டும் வாங்க சாப்பிட ஆசை இருந்தாலும் வாங்கி சாப்பிட காசு பத்தாது. மீன் கோழி மட்டன் எல்லாம் ஐந்து ரூபாய் தான் இருக்கும். சிலவேளைகளில் நமது உணவு செலவு கூடிவிட்டால் ( பத்து ரூபாய்க்கு) நானும் மாதவன் அண்ணாவும் போய் சைக்கிள் ரிக்ஷாகாரன் சாப்பிடும் கதம்ப சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம் சாப்பாடு என்பது சாப்பாட்டு கூடை காரர்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் ஆட்களுக்கு அவரவர் வீடுகளிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பி சாப்பாட்டு கேரியரை எடுத்து வரும்போது நிச்சயம் மிச்சம் இருக்கும் உணவு வகைகளை ஒன்றாகப் பிசைந்து மிக பெரிய ஒரு கைப்பிடி அளவு தரும் உணவுதான் கதம்ப சாப்பாடு விலை 50 காசு..

எமது வீட்டில் வைத்து உமா மகேஸ்வரனுக்கு நிரஞ்சன்னுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வளர்ந்து பிற்காலத்தில் நிரஞ்சன்கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது. அது சம்பந்தமாக தொடர்கள் முடிந்த பின்பு எழுதுவேன்.
எமது வேலைகள் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும்தமது தலைவர்களை ஜாமீனை ரத்து செய்து திரும்ப கைது செய்வதற்காக எம்ஜிஆர் அரசு ,மோகனதாஸ் உளவுத்துறை தலைவர் முயற்சி செய்வதாக தகவல்கள் வந்தன.

ஒரு நாள் புலவர் புலமைபித்தன் இடம் ஒரு செய்தியை எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் அவர்கள் கொண்டு வந்தார் அவசரமாக உமா மகேஸ்வரனை ,மாறனை.  சந்திக்க வேண்டுமென மிகஅவசரமும் கூட என, மாறன் வந்த பின்பு மாறன் என்னையும் கூட்டிக்கொண்டு புலவர் புலமைப்பித்தன் வீட்டை போனபோது, மிக பதட்டத்தோடு, மதுரையில் இருந்து பிரபாகரன் அமைச்சர் காளிமுத்து மூலம் ரகசியசெய்தி அனுப்பி இருப்பதாக. தங்கள் ஜாமீன் ரத்து செய்து திரும்ப கைது செய்யும் முன் தானும் ராகவனும் இலங்கைக்கு தப்பி செல்வதாகவும் உமாமகேஸ்வரன் யும் நண்பர்களையும் உடன் தப்பிப் போகும் படியும் செய்தி அனுப்பியிருந்தார். நாங்களும் நன்றி கூறி வந்து உமா மகேஸ்வரன் இடம்விபரத்தை கூறினோம். உமா பிரபாகரனை நம்ப முடியாது எங்களை தப்பிப் போக சொல்லிவிட்டு தான் போக மாட்டான் அப்படி செய்தால் எங்களுக்கு தான் பிரச்சனை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார். பிரபாகரன் தப்பிப் போன செய்தி இரண்டு நாளில் எனக்கு கிடைத்தது. உடனடியாக நாங்களும் பரபரப்பாக அடுத்தகட்ட நிலைக்கு வேலைகளைத் தொடங்கினோம் உமா மகேஸ்வரன் அமைந்தகரையில் மிக ரகசியமாக தங்கியிருந்தார் வீட்டிலிருந்து இடம் மாறினார் மாறன் என்னை முதல் முறையாக அந்த இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்த முக்கிய பொருட்கள் ஆவணங்கள் டைப்ரைட்டர் ரேடியோ போன்றவற்றை என்னிடம் ஒப்படைத்தார். நான் எமது ரகசிய அலுவலகம் என நினைத்த இடத்தில் அப்பொருட்களை கொண்டுவந்து வைத்தேன். உமா மகேஸ்வரன் தலைமறைவாக முடிவு செய்தார் எமது அலுவலகம் வந்து பணம் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பவர் குறித்துக் கொடுத்த அதே நேரம் மாறன் கந்தசாமி பெரிய செந்தில செங்கல்பட்டு முகாம் வேலைகள் எப்படி எப்படி செய்ய வேண்டும் என  நாங்கள் ஒருவருக்கொருவர் தேவையேற்படின் எப்படி  தொடர்பு கொள்ள வேண்டும்கூறினார்.

இரவு அம்பாசடர் காரில் கந்தசாமி யோடு வந்து என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணி போல் கலைஞர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு சென்றோம். அங்கு கலைஞர் எல்லா விபரங்களையும் கேட்டு விட்டு தப்பி ஓடுவது தவறு என்றும் அது உங்களை இந்தியாவில் ஒரு குற்றவாளி போல் காட்டும் நீங்கள் பிற்காலத்தில் இந்தியாவில் உங்கள் போராட்டத்தை தொடர முடியாது உங்களை திரும்ப கைது செய்தால் பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணையாக நின்று போராட்டம் நடத்துவோம் உங்களை அவ்வளவு எளிதில் இலங்கைக்கு ஒப்படைக்க முடியாது நாங்கள் மத்திய அரசோடும் அதைப்பற்றி பேசுகிறோம் என எங்களுக்கு தைரியம் சொன்னார்.

உமா மகேஸ்வரன் தலைமறைவாக எண்ணத்தைக் கைவிட்டு எமது வேலைகளை எச்சரிக்கையாக செய்தோம். ஆனால் அடுத்த நாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உமா கண்ணன் நிரஞ்சன் கையெழுத்துப் போட போகும் போது அவர்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டார்கள். மாறன் உடனடியாக எங்களுக்கு செய்தியை பரிமாறிவிட்டு, மிகத் திறமையாக எங்களை எங்களுக்குரியவேலைகளை ஒழுங்குபடுத்தினார. ஆனாலும் நாங்கள் திகிலோடு ஒரு வித பயத்தோடு தான் இருந்தோம்.


பகுதி ஆறு!

நான் தொடரை எழுதும் போது முகமறியா சில தோழர்கள் நான் என்னை முன்னிலைப்படுத்தி எழுதுவதாக வசை பாடினார்கள். அவர்களது கருத்துக்களை எடுத்து விட்டேன், நான் நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தான் எழுதுகிறேன். நான் கேள்விப்பட்ட செய்திகளை இத்தொடரில் எழுதமாட்டேன் நான் கேள்விப்பட்ட செய்திகள் நிகழ்ச்சிகளைபின்பு எழுதுவேன்.

எமது  தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு சந்ததியார் வந்து இங்கு அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். நான் எனது நாலாவது பதிவில் குறிப்பிட்டது போல் சந்ததியாரைபற்றிய தகவல்கள் இந்தப் பதிவில் தான் வரவேண்டும். சந்ததியார் தனது கட்டுப்பாட்டில் என்னையும் மாதவன் அண்ணாவையும் வைத்திருந்தார். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய அரசியல்வாதிகளை பார்க்கப் போகும்போது என்னைஅல்லது மாதவன் அண்ணாவை கூட்டிப் போவார். ஒரு நாள் சந்ததியார் இலங்கையில் இருந்த விமானத்தில் வந்த ஜான் மாஸ்டரை கூட்டி வந்தார் எங்களிடம் இதான் மாஸ்டரை காட்டிமருத்துவக்கல்லூரி மாணவர் கழகத்தின் முக்கிய ஒருவர் எனக் கூறினார். நாங்கள் சந்தோஷப்பட்ட அளவுக்கு ஜான் மாஸ்டர் எங்களுடன் பழகவில்லை. எங்களை முட்டாள் போராளிகள் மாதிரிதான் பார்த்தார்.

ஆனால் சந்ததியார் அப்படி அல்ல. தவறு என்றால் கடுமையாக கண்டிப்பாய் இருப்பார். சில வேலைகளை நாங்கள் திறமையாக செய்யும்போது எங்களை மிக மகிழ்ச்சியாக தட்டிக் கொடுப்பார். சந்ததியார் உடன்பழகும்போது எச்சரிக்கையாக இருப்போம். துரையப்பா கொலை வழக்கில் சந்ததியார் சிறை சென்று மீண்டு வந்த பின்பு எழுபத்தாறு ,77ஆம் ஆண்டு காலங்களில் மானிப்பாய் நவாலியில் அவரும் இன்பமும் சேர்ந்து இரவு ரகசிய வகுப்புகள் எடுப்பார்கள். நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எமது தோழர் பார்த்திபனும் கலந்து கொண்டதை நானும்பார்த்திருக்கிறேன். பார்த்திபன் உம்மானிப்பாய்இந்துக்கல்லூரி மாணவன் தான்.

அக்கால கட்டங்களில் வழக்கு சம்பந்தமான எல்லா வேலைகளையும் எமது தோழர் கணபதி என்கிற விக்கி பார்த்துக் கொண்டார். நிரஞ்சன் கண்ணன் எக்மோர் கோர்ட்டிலும், உமா மகேஸ்வரன் வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு நடத்தியவர் புகழ்பெற்ற இடதுசாரி சிந்தனைகள் உள்ள வழக்கறிஞர் என் டி வானமாமலை அவர்கள். வழக்கு நடக்கும்போது எங்களிடம் இருந்து ஒரு பைசா பணமும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் போகும்போது தோழர் கணபதி காரை ஏற்பாடு செய்து கூட்டிக்கொண்டு போய் வருவார் கணபதி போக நேரம் ஆகிவிட்டால் தனது காரிலேயே போய்விடுகிறார் அதற்காக எங்களிடம் காசு கூட கேட்பதில்லை. எம் ஜி ஆர் எம் ஆர் ராதா சுடப்பட்ட வழக்கில் எம் ஆர் ராதா வுக்கு ஆதரவாகஆஜராகி வழக்குநடத்தியவர். இவரைப் போன்றவர்கள் மிக அபூர்வமான மனிதர்கள். வேறு பல அரசியல்வழக்கறிஞர்கள் உமா பிரபா வழக்கில் உதவி செய்வதாக கூறிபணம் பார்த்த விடயமும் உண்டு. ஓரத்த நாட்டைச் சேர்ந்த இளவழகன், ராமசாமி , தமிழ்மணிபோன்றவர்களும் எம்மோடு ஓடி திரிந்தார்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயா தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என கேட்டு ஆதரவு திரட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த  இரா.இரத்தினகிரி கால்நடை மருத்துவரும், திராவிடர் கழக பகுத்தறிவாளர்சங்கத் தலைவருமாக இருந்தவர். சந்ததி யாரையும் என்னையும் அழைத்துப் போய் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இடம்அறிமுகப்படுத்தினார் அப்போது திராவிடர் கழக வருடாந்த மாநாடு நடக்க இருந்தது 1983 ஆண்டு மே மாதம் ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அந்த மாநாட்டில் இவர்களை விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றுவதாக பெரியவர் வீரமணி அய்யா கூறினார் அதோடு மாநாடு ஊர்வலத்திலும் மாநாட்டிலும் வைக்க, பிடிக்க அட்டைகள் தயாரித்து தரும்படி சொன்னார். மாறனும் உடனடியாக உமா மகேஸ்வரன், கண்ணன், நிரஞ்சன் விடுதலை செய். விடுதலைப் புலிகளை விடுதலை செய். நாடு கடத்தாதே விடுதலைப் போராளிகளை. இந்திய அரசே தமிழ் ஈழத்தை ஆதரிக்க வேண்டும். போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான அட்டைகளை  கொடுக்க நாங்களும் அதை திராவிடர் கழகத் தோழர்களிடம் கொடுத்தோம்கொடுத்தோம். மாநாட்டுக்கு கலந்துகொள்ள வந்த கோவைராமகிருஷ்ணன் என்ற இளைஞரை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ரத்தினகிரி அறிமுகம் செய்து வைத்த அந்த இளைஞர் ராமகிருஷ்ணன் மிக ஆர்வமாக இலங்கை அரசுக்கு எதிரான போட்டோக்கள் செய்திகள் இருந்தால் கேட்டார் ஆனால் சந்ததியார் தட்டிக் கழித்து விட்டார் பின்பு தருவதாக. பின்புசந்ததியார் இடம் காரணம் நான் கேட்டபோது,இவர்களை எல்லாம் நாங்கள் ஆதரிக்க கூடாது எங்கள் படங்களை வைத்து இவர்கள் கண்காட்சிகள் வைத்து பணம் சம்பாதித்துக் கொள்வார்கள் எனக் கூறினார். நாங்கள் தவறவிட்ட அந்த சந்தர்ப்பத்தை விடுதலை புலிகள் குறிப்பாக பேபி சுப்பிரமணியம் பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுக்க விடுதலைப்புலிகளை ஆதரித்தும் பணமும் சேகரித்தும் கொடுத்தார்  ..அவர் தனது திறமையால் விடுதலைப்புலிகளுக்கு நினைத்துபார்க்க முடியாதஉதவிகளைச் செய்து கொடுத்தார். இன்றும்அவர் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துவார். பெரியார் திடலில் முதன்முதலில் பேபி சுப்பிரமணியத்தை (பிற்காலத்தில் இவர் இளங்குமரன் விடுதலைப்புலிகளின் கல்வி பொறுப்பாளராக இருந்தார் என நினைக்கிறேன்)தூர இருந்து மாறன் காட்டினார். ஒரு பையுடன் வந்த பேபி சுப்ரமணியம் தனியாக ஒரு இடத்துக்குப் போய் தான் போட்டிருந்த பேன்ட் சட்டையை கழட்டி மடித்து பையில் வைத்து விட்டு பையிலிருந்து ஒரு கசங்கிய அழுக்கான வேட்டி, சட்டையை எடுத்துஅணிந்துகொண்டு திராவிடர் கழக தலைவர்களை சந்திக்க போவார்.

திராவிடர் கழக மாநாடு நடக்கும் நாள் பெரியார் திடலில் நானும் கந்தசாமியும் எமது புத்தகங்கள், இலங்கை அரசுக்கு எதிரான புத்தகங்கள், காந்தளகம் வெளியீடுகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்தோம். நமக்கு அருகில், இன்று திராவிடர் கழக வழக்கறிஞர் அணி தலைவராக இருக்கும் திருமதி அருள்மொழி என்பவர் சிறுமியாக அவரின்தாயுடன்திராவிடர் கழகம் பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார் ரத்தினகிரி அவர்களிடம் விற்பனையில் எங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். பகல் 2 மணிக்கு போல் ஊர்வலம் தொடங்கியது எமதுநூற்றுக்கணக்கான அட்டைகள் பொதுமக்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தன மத்திய மாநில உளவுத் துறை அதிகாரிகள் போட்டோ எடுத்து குறிப்புகள் எடுத்தார்கள். சென்னை மெரினா பீச்சில் மிகப் பெரிய மாநாடு நடக்க இருந்தது. ஆனால் ஊர்வலம் மெரினா கடற்கரையைநெருங்கியதும் பெரியமழை பிடித்துக் கொண்டது மழையில் நனைந்து கொண்டே எல்லோரும் திரும்ப பெரியார் திடலுக்கு ஓடினோம் அங்கு இரவு 12 மணி வரை மாநாடு நடந்தது நமக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பகுதி ஏழு!

சந்ததியார் மாறன் போன்றவர்கள் சிறையில் இருப்பவர்களை மீட்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செல்வாக்கான தலைவர்களை போய் பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். புலவர் புலமைப்பித்தன் எம்ஜிஆருக்கு மிக மிக நெருங்கியவராக, இருந்தாலும் அவர் முகுந்தன் மற்றவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தான் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்ஜிஆர் அரசுக்கு எதிராக போராடுவேன் என கூறினார். எம்ஜிஆர் அரசின் மந்திரியாக இருந்த காளிமுத்து ஒரு படி மேலே போய், சிறையில் இருப்பவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பினால் தான் பறந்து போய் தடுப்பேன் எனக் கூறியதோடு அதை ஒரு கவிதையாகவும் படித்து பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தார். அடுத்து என்ன நடக்குமோ என்ற மனநிலையோடு நாங்கள் எங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்தோம். இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தமிழ் அறிஞர் அருளி அவர்கள்பிறர் தொந்தரவு இல்லாமல் தமிழ் ஆராய்ச்சி புத்தகத்தை எழுத எங்களோடு வந்து தங்கியிருந்தார். அவர் தமிழ்ச் சொற்கள் பிற வெளிநாட்டு மொழிகளோடு எப்படி அடிப்படையாக இருந்தது என்று எழுதும்போது எங்களுக்கும் விளங்கப்படுத்தினார். சந்ததியார் , மொழி ஆராய்ச்சி பற்றி அருளியோடு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.

..நாங்கள் எமது அலுவலகத்தில் நாங்களே சமைப்பதற்கு உரிய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினோம் அருளி அண்ணாவும்உதவி செய்தார். பகல் உணவு மட்டும் தயார் செய்தோம். சோறு, பருப்பு கறி அல்லது மாட்டு இறைச்சி இதுதான் நாங்கள் சமைத்து சாப்பிடுவது.சந்ததியாருக்கு நாங்கள் பருப்பு கறி சமைத்து இருந்தாள் இருந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார். சாப்பாட்டில் உப்பு புளி இல்லாவிட்டாலும் எங்களைஎங்களை பாராட்டி சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று அவர் சாப்பிடும் நாட்களில் கூறித் தான் செல்வார். அவர் அப்படிச் சொல்வது எமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மாறன் ,கந்தசாமி சிலவேளைகளில் என்ன அடிக்கடி காலையில் வந்து மாட்டு இறைச்சி வாங்கி தந்து போவார்கள்.வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பகல்சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள்.

தமிழ்நாடு காவல்துறை எங்களை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை ஆனால் உளவுத்துறை டிஜிபி மோகனதாஸ் உமா மகேஸ்வரன் மற்றும் தோழர்களை இலங்கைக்கு பிடித்துக் கொடுப்பது பற்றியே தீவிரமாக இருந்தார். அதே நேரம் மத்திய உளவுத்துறை IB உயர் அதிகாரிகள் இருவரும் எங்களை வந்து சந்தித்து நிலைமைகளை செய்திகள் சேகரித்து செல்வார்கள். அவர்கள் எங்களிடம் உளவுத்துறை என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சகம் என்றுதான் கூறுவார்கள் உண்மையும் அதுதான். மத்திய உள்துறையின் கையில்தான் IB இயங்கியது. நாங்கள் இவர்களின் முக்கியத்துவம் அறியாமல் இவர்களை அலட்சியமாக தான் நடத்தினோம். ஆனால் இந்த இரண்டு தமிழ் அதிகாரிகளும் மிகமிக நேர்மையானவர்கள். இவர்களின் ஆரம்ப கால அறிக்கைதான் இந்திரா காந்திக்கு போன முதல் ரிப்போர்ட். ஆனால் நாங்கள் தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறைக்கு மிக பயந்தோம்.

சிறையில் இருப்பவர்கள் இலங்கைக்கு நாடு கடத்த படுவார்கள் என்ற வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நேரம். சந்ததியார் இடம் மாறன் ,கந்தசாமி பல ஆலோசனை செய்து முகுந்தனை மட்டுமாவது வழக்குக்காக திருவள்ளூர் கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது அல்லது திரும்ப வரும்போது தாக்குதல் நடத்தி மீட்பது என ரகசிய திட்டம் போட்டார்கள். இதைபற்றி கேள்விப்பட்ட கணபதிஎதிர்த்தார் காரணம் அவர்தான் வழக்கமாகப் கோர்ட்டுக்குப் போய் வருவது அது எல்லோருக்கும் தெரியும்.

மாறன் என்னை கூட்டிக்கொண்டு போய் பல நாட்கள் சென்னை மத்திய சிறைச்சாலையின் வெளியில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நிறுத்தி விடுவார். எனது வேலை சிறைக்காவலர்கள் மாறும் நேரத்தை தினசரி பதிவு செய்வது எத்தனை பேர் கைதிகளை எந்த வாகனத்தில்கூட்டிப் போகிறார் கள் எத்தனை போலீசார் போகிறார்கள் என்பது போன்ற தரவுகளை எடுக்கச் சொன்னார்கள். உண்மையில் அன்று அது எனக்கு மிகப் பெரிய சாகசம் போல் தோன்றியது. இன்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன காரணமோ இந்த திட்டம் கைவிடப்பட்டு சந்ததியார் விடா முயற்சியாக அரசியல் வாதிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

நான் மாறன் கந்தசாமி மாதவன் அண்ணா  மத்திய ஜெயிலுக்கு உமா மகேஸ்வரன் மற்றவர்களை பார்க்க போய் வருவோம். தினசரி மாறன் அல்லது கந்தசாமி போய் வருவார்கள் சில வேலைகளைப் பற்றி கதைப்பது ஆயின் என்னை அல்லதுமாதவன் அன்னையை வரச்சொல்லி நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் பற்றி பேசுவார். சந்ததியார் இந்தியாவந்த பின்பு முதன்முறையாக உமா மகேஸ்வரனைசந்திக்க போகும்போது நானும் கூட போனேன். நாங்கள் அவர்களை சிறையில் சந்திக்கும் போது என்னை தள்ளிப்போய் நிரஞ்சன்உடன் பேசிகொண்டு இருக்கும் படி கூறினார். நிரஞ்சன் என்னிடம் ரகசியமாக பெரியவருக்கும் தனக்கும் உள்ளே சரியான சண்டை எனவும் சண்டையை கண்ணன் தனக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் கூறி கவலைப் பட்டார்.

அதேநேரம் சந்ததியார் உமாமகேஸ்வரன் இடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். இரண்டு விஷயங்கள் சம்பந்தமாக, முதலாவது இறைகுமாரன் உமைகுமரன் கொலை, வவுனியாவில் வைத்து விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல். எமது இயக்க முக்கிய தளமாக இருக்கும் வவுனியாவில் வைத்து தாக்குதல் விமானப்படை வீரர்கள் மீது செய்யும்போது வவுனியாவில் எமது செயற்பாடுகள் எல்லாம் அழிந்து விடும். என்று கடுமையாக சந்ததியார உடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் இருவரும் பலவித மன குழப்பத்தில் வீடு திரும்பினோம்.

எங்களிடம்பல நண்பர்கள் கலைஞரை நேரடியாக சந்தித்து இதைப் பற்றி பேசும் படி கூறினார் சந்ததியார்கலைஞரை சந்தித்தார். இதன் பின்பு நடந்த செய்திகளை நான் முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன் . அதைப் பின்பு எட்டாவது பதிவாக போடுவேன்.


பகுதி எட்டு!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தில் சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்!

1983 ஆண்டு மார்சில்  பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில்  உமாமகேஸ்வரன் ,கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.  எம்ஜிஆர் ஆட்சியில் இவர்கள் கைது செய்யப்பட்டதோடு  இலங்கை போலீசாரோடு தமிழ்நாட்டு டிஜிபி மோகனதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பதற்ற சூழலில் பல உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைப்படி ஜூலை மாதம் சந்ததியர் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பொழுது அவரின் ஆலோசனைப்படி, பின்பு  என்னையும் கூட்டிக்கொண்டு செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ சந்தித்தோம். அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த டெல்லி ராஜ்யசபா எம்பி ஆன L.கணேசன் அவர்களை எமக்குஅறிமுகப்படுத்தினார். அவர் தான் 22 ஆம் தேதி ஜூலை மாசம் டெல்லி போவதாகவும் தனக்கு முழு விபரங்களையும் கூறி உதவி செய்ய ஒருவரை தன்னோடு அனுப்பும்படி கூறினார். சந்ததியார் என்னைத்தான் அனுப்பினார்.  23ஆம் தேதி காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், L.கணேசன் எம்பி, செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ, திமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் டெல்லி பயணமானோம்.

24ஆம் தேதி மாலை டெல்லியில் இறங்கியவுடன், இல கணேசனின்டெல்லி வீட்டுக்குப்போய் விட்டு, உடன் கணேசன் எம்பி எங்களைக் கூட்டிக்கொண்டு பாராளுமன்ற திமுக அலுவலகத்திற்கு போனோம். அங்கு பல திமுக எம்பிக்கள் இருந்தார்கள் குறிப்பாக முரசொலி மாறன், வை. கோபாலசாமி, மாயத்தேவர் தி மு க பாராளமன்ற குழுத் தலைவர் அண்ணன் C.T தண்டபாணி இவர்களோடு என்னை அறிமுகப்படுத்திவிட்டு எல் கணேசன் அண்ணா இவர்களோடு தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யும் சதி பற்றி ஆலோசனை நடத்தி அடுத்தநாள் பாராளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏற்பாடு நடத்தினார்

அதோடு பிரதம மந்திரி இந்திரா காந்தியை சந்தித்து உமா மகேஸ்வரன் உட்பட மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என ஒரு மனு தயாரித்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். அடுத்த நாள் விடியும் போது நிலைமையே வேறு, வெலிக்கடை சிறையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் பரபரப்பாக இருந்தது. உடனடியாக என் கணேசன் என்னையும் செஞ்சி ராமச்சந்திரன் கூட்டிக்கொண்டு மற்றவர்களையும் உடன் பாராளுமன்ற திமுக அலுவலகத்துக்கு வரும்படி கூறி அங்கு ஆலோசனையில் ஈடு பட்டார். உடனடியாக பாராளுமன்றத்தில் இலங்கை இனப் படுகொலையையும் சேர்த்து பேசவும் பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்படி கேட்கவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

அன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் ராஜ்யசபா அமர்வில் என்னையும் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்கள் இடத்தில் என்னை வை கோபால்சாமி அண்ணா அமர்த்தினார் பாராளுமன்றத்தில் கணேசன் வை கோபால்சாமி மிக உணர்ச்சி வசமாக பேசினார்கள் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையார் எழுந்து தனது கட்சிக்காரர்களை அமைதியாக இருக்கும்படி கூறி இவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார். பின்பு அவர் பதிலளிக்கும்போது முதல்முறையாக இலங்கையில் நடப்பதுஇனக்கலவரம் இல்லை, இனப்படுகொலை என பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறினார்

பின்பு 88ஆம் ஆண்டு வரை பல எம்பி மார் என்னை இலங்கை விவாதம் நடக்கும்போது பாராளுமன்றத்துக்கு ராஜ்ய சபா லோக் சபா பார்வையாளர் அரங்கில் கூட்டிக் கொண்டு போவார்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்னிடம் தான் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டு திமுக எம்பிக்கள் இலங்கை விடயமாக பரபரப்பாக இருந்த போது ,27ஆம் திகதி காலை அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. திரும்பவும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை இந்திய பாராளுமன்றமே இலங்கைப் பிரச்சினையில் பரபரப்பாக இருந்தது வேறு எந்த விடயங்களும் பாராளுமன்றத்தில் எடுக்கவில்லை. .கலைஞரின் வேண்டுகோளின்படி டெல்லியில் மிகப் பிரம்மாண்ட எதிர்ப்பு ஊர்வலம்இலங்கை தூதுவர் ஆலயத்திற்கு முன்பாகநடத்த முடிவு செய்தனர். இரவோடிரவாக கணேசனின் உறவினர் பையன் நான் மற்றும் சில தமிழ் இளைஞர்கள் சேர்ந்து விடிய விடிய கருப்பு , சிவப்புதுணி வாங்கி கையாலேயே திமுக கொடி தயாரித்து கிட்டத்தட்ட 150 கொடிகள்.அடுத்த நாள் மிக பிரம்மாண்டமான ஊர்வலம் டெல்லி வாழ் தமிழர்கள் எல்லாப் பகுதியிலிருந்தும் வந்தார்கள்.  டெல்லி வாழ் மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ,நோர்த் அவென்யூ எம்பி மார் குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அளவிலிருந்த சாணக்கிய puri என்ற இடத்தில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு ஊர்வலமாக எதிர்ப்பு கோஷங்களோடு போனோம். நாம் அங்கும் போகும் போது எமக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லிக் கிளையினர் இலங்கை அரசின் தூதுவராலயத்தின்முன்பாக மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் எம் பசியின் வெளியில் உள்ள கேட்டை உடைக்கும்அளவுக்குப் போய்விட்டார்கள். நான் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சென்னை வந்தபோது தான் ,முதல் நாள் 31ஆம் திகதி எம்ஜிஆர் அவசர அவசரமாக உமா மகேஸ்வரனையும்.தோழர்களையும் விடுதலை செய்தார்.

விடுதலை செய்த உடன் உமா மகேஸ்வரன் கலைஞரிடம் போகாமல் இருக்க, தனது மந்திரி சபையில் இருந்த காளிமுத்து வையும் அவரின் தம்பியையும்அனுப்பி ஜெயிலில் இருந்து நேரடியாக உமாமகேஸ்வரனை தனது தோட்டத்துக்கு கூட்டி வரச் செய்து கட்டிப்பிடித்து கவலைப்பட்டு தான் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னார். பல மாதங்கள் உமாமகேஸ்வரன் இடம் மிக நெருக்கமாக இருந்தவர் தான் எம்ஜிஆர் . எம்ஜிஆர் உமா மகேஸ்வரன் கூட்டை திட்டமிட்டு பிரித்தவர் டிஜபி மோகனதாஸ்.

மேலே கூறிய சம்பவங்களுக்கு பின்பு டெல்லியில் ஏற்பட்ட தொடர்புகளால் நான் டெல்லியில் எல் கணேசன் எம்பி வீட்டிலும் பின்னர் ஆலடி அருணா எம்பி வீட்டிலும் தமிழீழ மக்கள் விடுதலை கழக டில்லி அலுவலகத்தைத் திறந்து 1988 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட முடிந்தது. கீழே உள்ள இரு படங்களும் திமுக எம்பிக்கள் டெல்லியில் நடத்திய போராட்டங்களின் போது எடுத்தது


பகுதி ஒன்பது!

நான் டெல்லியிலிருந்து வந்திறங்கிய போது இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு கொந்தளிப்பாக இருந்தது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள். சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தார்கள் உமா மகேஸ்வரன் கண்ணன் நிரஞ்சன் மூவரும். மாலையில் உமாமகேஸ்வரன் வந்து என்னை சந்தித்து டெல்லியில் நடந்த விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு என்னை கூட்டிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் எல் கணேசனை சந்திக்கச் சென்றோம். அவர் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தார். உமா அண்ணாஅவரிடம் நன்றி கூறி, பழைய நண்பரான செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்து பேசினார். செஞ்சி ராமச்சந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் யாரையும் பிரபாகரன், உமாமகேஸ்வரன் யாரையும் முகம் கொடுத்து பேசுவதற்கு விருப்பம் இல்லை. பிற்காலத்தில் அவரை சந்தித்து பேசும்போது கூறினார் ஆரம்ப காலத்தில் தாங்கள் நல்ல உதவி செய்ததாகவும் இவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருப்பது தாங்கள் எதிர்பார்க்காதது நிகழ்வு என்றும், தான் பிரபாகரனிடம் ஒற்றுமை பற்றி பேசும்போது பிரபாகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வரும்போது பாலசிங்கம் தான் பிரபாகரனைக் குழப்பியது. இதெல்லாம் தங்களுக்கு மன வருத்தம் என்றும் கூறினார்

எல் கணேசன் அண்ணா கலைஞரை சந்தித்து நன்றி கூறி, இன்றுள்ள நிலைமையில் கலைஞரின் ஆலோசனையை பெறசொன்னார். உமா தனியா போய் கலைஞரை சந்தித்து உரையாடினார். கலைஞரை சந்தித்த செய்திபத்திரிகையில் வரவும். எம்ஜிஆருக்கு எரிச்சலைக் கொடுத்தது. எம்ஜிஆர்எமக்கு ஆதரவான நிலையை எடுக்க காரணம் இந்திராகாந்தி அம்மையார் இலங்கைப் பிரச்சினையில் தீவிரமாக இறங்கி விட்டதுதான். இக்காலகட்டத்தில்தான் 83 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமே இந்திய வெளிநாட்டு உளவுத்துறை RAW அதிகாரிகள் முதன்முறையாக களத்தில் இறக்கி விடப்பட்டு இயக்கத் தலைவர்களை ரகசியமாக சந்திக்கத் தொடங்கினார்கள்.

இப்போது மாதிரி அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தால் தகவல் தொடர்புக்காக நல்ல ஒரு இடம் எங்களுக்கு தேவைப்பட்டது. உடனடியாக உமா அண்ணா என்னை கூட்டிக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மதிப்புக்குரிய பெரியவர் ராசாராம் அவர்களை போய் சந்தித்தோம். அவரும் எங்களை அன்போடு வரவேற்று உபசரித்தார். தன்னால் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்ட பொழுது உமா அண்ணா பழைய சட்டமன்ற விடுதியில் (பழைய எம்எல்ஏ ஹாஸ்டல்) எமக்கு அலுவலகம் அமைக்க ஒரு அறை தர முடியுமா என கேட்டார். அவரும் உடனடியாக எமக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.(சபாநாயகரின் கட்டுப்பாட்டில்தான் சட்டசபை உறுப்பினர் உறுதி எல்லாம் உள்ளன)

முதலாம் மாடியில் 84 நம்பர் ரூம் எமது இயக்கத்துக்காக ஒதுக்கி தரப்பட்டது.. எல்லா வசதிகளும் நமக்குத்தான் முதல் கிடைத்தது ஆனால் அதை கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு உடைத்து விட்டோம். வேறு எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு அரசு விடுதி கிடைக்கவில்லை.இனி நான் எழுதும் செய்திகள் வரிசை முன்பின்னாக இருக்கலாம் நினைவில் இல்லை நடந்த சம்பவங்கள் பதிய வேண்டிய தேவை உள்ளது.

எம்எல்ஏ விடுதி எமது அலுவலக அறையாக மாற்றப்பட்டது.அதன் முதல் பொறுப்பாளராக நான்நியமிக்கப்பட்டு, அங்கேயே தங்கியும் இருந்தேன்திருவல்லிக்கேணியில் இருந்த எமது இரகசிய இடத்தில்மாதவன் அண்ணா அங்குதான்தங்கி இருந்தார்முக்கிய ஆவணங்கள் அங்குதான் இருந்தன

இந்திய ரா அதிகாரிகள் தகவல் தொடர்பும் எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகம் ஊடாகவே நடந்தன. சீலிடப்பட்ட கவர்கள் ரகசியமாக என்னிடம் கொடுக்கப்படும் நான் அதை உமா அண்ணாவிடம் கொடுத்துவிடு வேன். உமா கொடுக்கும்கடிதங்கள் செய்திகளையும் ராஅதிகாரிகள் வரும்போது அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

மாதவன் அண்ணாவும் காலையில் வந்து விடுவார். அங்கு IB அதிகாரிகள் வந்து உமா அண்ணாவை சந்திப்பதோடு ,என்னோடு , மாதவன் அண்ணா ஓடும் நீண்ட நேரம் அந்த நேரம் இலங்கையில் நடக்கும் செய்திகளை கேட்டு. கொள்வார்கள். தமிழ்நாடு உளவுத்துறை கியூ பிராஞ்ச் அதிகாரி கள் எங்களை சந்திக்க வருபவர்களை விசாரிப்பதும் எங்களை முறைத்துப் பார்ப்பது மாறி இருப்பார்கள்.

பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் முதல் தளத்தில் பழ நெடுமாறன் ஐயாவின் கட்சி அலுவலகம் இருந்தது. நெடுமாறன் ஐயா எங்களைப் பார்த்து சிரித்தாள் நாங்கள் சிரித்து விட்டு போய் விடுவோம் ஒரு நாளும் அவரோடு போய் கதைப்பதில்லை காரணம் அவர் பிரபாகரனுக்கு மதுரையில் உதவி செய்வதால். அந்த நேரம் நெடுமாறன் ஐயாவும் இலங்கை அரசுக்கு எதிராக படகில் இலங்கைக்குப் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அதிரடி அறிவிப்பு செய்து, போராட போனபோது ராமேஸ்வரத்தில் என நினைக்கிறேன் அவர் போகும் படகை எம்ஜிஆர் அரசு பெரியஓட்டை போட்டு, படகு நகராத படிசெய்துவிட்டார்கள். நெடுமாறன் அய்யாவின் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லின் செல்வர் குமரி ஆனந்தன் போய் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்மணி சென்னையில் ஒரு பெரிய மாணவர் போராட்டத்தை நடத்தினார்.

இப்படியான போராட்டங்கள் தமிழ்நாடு எம்ஜிஆர் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது, எம்ஜிஆர் விரும்பவில்லை. இந்தப் போராட்டங்களில் முன்னிலை நின்றவை, எம்ஜிஆர் அரசுக்கு எதிரான கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல்  பெரிய போராட்டத்தை அறிவித்தார். இரண்டு நாளில் அந்தப் போராட்டம் நடக்க விருந்தது. எம்ஜிஆர் ஆதரவு பத்திரிகையான சுதேசமித்திரன் என நினைக்கிறேன் அதன் ஆசிரியர் ஜெபமணி என்பவர் வந்து உமா மகேஸ்வரனை சந்தித்து சும்மா பேசிக் கொண்டிருந்தார். அவரது பத்திரிகை மாலை பத்திரிகை.அன்று மாலையில் சுதேசமித்திரன் பத்திரிகை தலைப்புச் செய்தி விடுதலைப்புலி உமா மகேஸ்வரன் கருணாநிதிக்கு கடும் கண்டனம். ரயில் மறியல் போராட்டம் தேவையற்றது. கருணாநிதி எமக்கு ஆக்கபூர்வமான வழியில் ஆதரவு தர வேண்டும், இச் செய்தி வந்தவுடன் எல் கனேசன் அண்ணாஎங்களை வரச் சொல்லி என்னப்பா உமா இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார்  என கடுமையாக கேட்டார். நாங்கள் இச்செய்திதவறு என்று கூறிவிட்டு, உமா அண்ணாவுக்குசெய்தி பற்றி அறிவித்தோம். உடனடியாக உமா அண்ணா வந்து எல். கணேசன்அண்ணாவையும் சந்தித்துவிட்டு,உடனடியாக என்னையும் கந்தசாமியும் கூட்டிக்கொண்டு கலைஞரிடம் நேரில் போய் இது பொய் செய்தி பத்திரிகை ஆசிரியர் என்னை வந்து சந்தித்தது உண்மை ஆனால் ரயில் மறியல் ஐ பற்றி இருவரும் பேசவில்லை. இந்தச் செய்தி வேணும் என்று போடப்பட்டது என்று கூறினார். கலைஞர் கருணாநிதி அமைதியாக எனக்கு தெரியும் இன்னும் எந்தெந்த வழிகளில் உங்களை சம்பந்தப்படுத்தி எனக்கு எதிராக செய்திகளை போடுவார்கள்.நாங்கள் நடத்தும் போராட்டங்களை நசுக்குவதற்கு எம்ஜிஆர் பல முறைகளை கையாண்டு வருகிறார் அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் மத்திய அரசு இப்போது எடுத்துள்ள புதிய ஆதரவு நிலையை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனஆலோசனை கூறினார்.

..  .உமா மகேஸ்வரனுக்கு மனம் ஆறவில்லை வெளியில் வந்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஜெபமணியைச் சுடப் போகிறேன் என ஆவேசப்பட்டார். கந்தசாமியும் நானும் அவரை சமாதானப்படுத்தி கந்தசாமி தான் போய் பத்திரிகை ஆசிரியர் ஜெபமணி யை எச்சரிக்கை செய்து மறுப்பு செய்தி போட சொல்வதாககூறினார்.ராயப்பேட்டையில் இருந்த பத்திரிகை அலுவலகத்திற்குநானும் கந்தசாமியும் போனோம். ஆசிரியர் ஜெபமணி திமிராகப் பேசினார் கந்தசாமி கைத்துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நாளை மாலை பத்திரிகையில் மறுப்பு செய்தி வராவிட்டால்நாளை இதே நேரம் வருவேன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தோம்.அதே நேரம் மற்ற பத்திரிகை அலுவலகங்களுக்கும் போய் இச்செய்தியின் மறுப்பறிக்கை எமது கடிதத் தலைப்பில் கொடுத்தோம்.அடுத்தநாள் சுதேசமித்திரன் பத்திரிகையில் முன்பக்கத்தில் ஆனால் சிறிதாக மறுப்பறிக்கை கொடுத்து மன்னிப்பு கேட்டிருந்தார். திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது. மத்திய அரசு தமிழ்நாட்டில் அன்று ரயில்களை இயக்க வில்லை.


பகுதி பத்து!

காலகட்டத்தில் பல முக்கிய சம்பவங்கள் நடக்கத் தொடங்கி விட்டன. இந்திய அதிகாரிகள் ஆயுதபயிற்சிகள் ஏற்பாடு செய்து தருவதாக உமா விடம் கூறியதால் தளத்தில் வேலை செய்த தோழர்களுக்கு விபரம்அறிவிக்கப்பட்டுஇந்தியாவுக்கு.,  பயிற்சிக்காக தோழர்கள் அனுப்பப்பட்டார்கள். எமது கழக நிர்வாகம் தூங்க,சாப்பிட நேரமில்லாமல் ஓடி திரிந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் அடிக்கடி தனது ராமாபுரம் தோட்டத்துக்கு உமா மகேஸ்வரனை அழைத்துப் பேசுவார்.காரணம் கலைஞருடன் நெருக்கமாக கூடாது என்ற நோக்கத்தோடு தான்.ஆனால் தஞ்சாவூரில் சேர்ந்த அதிமுக மந்திரி எஸ்டி சோமசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை எங்களுக்கும் முகாம்போட சகல உதவிகளும் செய்யச் சொல்லி எமக்கு மிக மிக உதவி செய்தார். அதோடு சென்னையில் இருந்த தனது அதிகாரபூர்வ அரசு வீட்டில் சென்னை வந்த எமது தோழர்களை தங்கவும் வைத்து இருந்தார்

எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது இந்தியாவிலிருந்து கலைஞர் ஆட்சியில் குட்டிமணியை நாடு கடத்தாமல் இருந்தால் குட்டிமணி வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று. உடன் அரசு ஆதரவு பற்றிய பத்திரிகைகள், எம்ஜிஆர் ஆதரவுத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியை துரோகி எனவசை பாடத் தொடங்கினார்கள்.உண்மையில் அது நடந்தது 1972 ஆம் ஆண்டு அல்லது 1974ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப் பட்டார்.அப்போது குட்டிமணியை இலங்கையில் கூட கடத்தல்காரர் என்ற அளவில்தான் சிலருக்குத் தெரிந்திருந்தது. பலபேருக்கு குட்டிமணி என்ற பெயர் கூட தெரியாது.

இந்தநிலையில் கலைஞருக்கு நெருக்கமான தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் டெலோ இயக்கத்தின் இரட்டைதலைவர்களான ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ராசுபிள்ளை ஆகியோரை கலைஞரிடம் அழைத்துப்போய் கலைஞருக்கு ஆதரவாக அறிக்கை விட வைத்தார். அதில் குட்டிமணி அந்த காலத்தில் தன்னை ஒரு விடுதலை இயக்கப் போராளி என்று பகிரங்கமாய் தெரிவதை விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்தியாவில் தன் கைது செய்யப்படும் போது தன்னை ஒரு கடத்தல்காரன் ஆக காட்டிக் கொண்டார் என்றும் அறிக்கையில் இருந்தத. அதோடு கலைஞருக்கு ஆதரவாக குட்டிமணியின் மனைவியின் கடிதத்தையும் பத்திரிகைகளில் வெளியிட்டார்கள் அன்றிலிருந்து எம்ஜிஆருக்கு சிறி சபாரத்தினம் telo இயக்கமும் எதிரியாகி விட்டனர்.எம்ஜிஆரை தவறான வழியில் இட்டுச் சென்றது உளவுத்துறை ஐஜி திரு . மோகனதாஸ் அவர்கள். மத்திய அரசு மத்திய உளவுத் துறைகளால் IB மற்றும் ரா மட்டுமே தமிழ்நாட்டில் இலங்கை சம்பந்தப்பட்ட வேலைகளை தொடர்புகளை கையாண்டன. தமிழ்நாட்டு போலீசாருக்கு உளவுத்துறைக்கு அனுமதி இருக்கவில்லை. இது தமிழ்நாட்டு மிகப்  ஃபுல்லான அதிகாரி மோகன்தாஸ் மிக கோபமாக இருந்தார்அதனால்தான் எம்ஜிஆரை தவறாக வழி நடத்துவதாக நடுநிலையான அண்ணா திமுக மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாங்கள் அவர்களுடன் பேசும்போதுகருத்துகளைச் சொன்னார்கள்.

ரா, சந்திரஹாசன் மூலம் ஈபிஆர்எல்எஃப், telo, ஈரோஸ் அமைப்புகளை பயிற்சிக்காக தொடர்பு கொண்டு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்கள். இந்திய பயிற்சிகள் நடக்கப் போவதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் திடீரென மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது மகன் பகீரதன்தலைமையில் ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கி பெயர் கூட tena என நினைக்கிறேன். இதற்கு அமிர்தலிங்கத்தை திசைதிருப்பி வைத்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என பேசிக்கொண்டார்கள். ஆனால் அமிர்தலிங்கம் எடுத்தமுயற்சி நடக்கவில்லை. விடுதலைப்புலி பிரபாகரன் தன்னைத்தான் அமிர்தலிங்கம் பரிந்துரைப்பார் என நினைத்து வைத்திருந்தவர். அமிர்தலிங்கத்தின்புது இயக்கத்தைப் பற்றி அறிந்த பிரபாகரன் இதுவரை மிக மிக நெருக்கமாக அமிர்தலிங்கத்தை தோடு நெருக்கமாக இருந்தவர்பின்பு அமிர்தலிங்கத்தை எதிரியாக பாவிக்க தொடங்கினார். இந்த விடயங்கள் எல்லாம் அப்போது இயக்க தோழர்களோடு பரிமாறப்பட்ட விஷயங்கள். நெடுமாறன் முயற்சியால் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது ஆயுதப் பயிற்சியும்பெற்றார்கள்.

சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சம்பவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். இலங்கையிலிருந்து அமிர்தலிங்கம் விமானத்தில் வரும்போது மாறுவேடத்தில் பெண் போல் வேடமிட்டு வந்ததாக பல செய்திகள் அப்போது பத்திரிகைகளில் வந்தன உண்மையில் அப்படி வந்ததாக தெரியவில்லை.சென்னை வந்தவுடன் எம்ஜிஆர் அப்பொழுது தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இரா ஜனார்த்தனம் அவர்களை விமான நிலையம் அனுப்பி அமிர்தலிங்கம் கலைஞரிடம் போகாமல் தன்னை மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டார். ஜனார்த்தனம் எதை கூறி பயமுறுத்தி இருந்தாரோதெரியாது. அமிர்தலிங்கம் கலைஞரை சந்திக்க முதலில் பயந்தார் பின்பு பலமுறை சந்தித்தார்.

இந்தப் செய்திகள் தெரிந்த பல தோழர்கள் இன்னும் இருக்கிறார்கள் இதற்கு மேலும் பல செய்திகளை கழக செய்திகள் மற்ற இயக்க செய்திகள் நேரடியாக தெரிந்த தோழர்கள் மௌனமாக இருப்பது சரியல்ல நீங்களும் உங்கள்நேரடி பங்களிப்பைப் பற்றி எழுதினால் வருங்காலத்தில் பலர் இங்கு நடந்த உண்மையான செய்திகளை படிக்க உதவியாக இருக்கும். நான் எழுதுவது எனது சொந்த நேரடிஅனுபவங்களை என்றபடியால். நான் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுத வில்லை. தயவுசெய்து ஆரம்பகால எமது இயக்கத் தோழர் பார்த்திபன், பெரிய மென்டிஸ்கணபதி ஆர் ஆர்போன்றோர் 83ஆண்டு கலவரத்துக்குமுன்புமுன்பு நடந்த அவர்களின் பங்களிப்பைப் பற்றி எழுதினால் நானும் அறிய ஆவலாக இருக்கிறேன். உங்கள அவர்களுக்கும் பல முக்கிய தகவல்கள் தெரியும். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை செய்திகளை ஒரு பதிவாக போட்டாள் எல்லோருக்கும் நல்லது அறியக்கூடியதாக இருக்கும்

தொடரும்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here