தற்போது இலங்கையில் வெளியாகிக்கொண்டிருக்கும் சிறுவர் இதழ் 'அறிந்திரன்'. 'அறிந்திரன்' சிறுவர் சஞ்சிகையின் ஆறாவது இதழ் நாட்டுச் சூழல் காரணமாகச் சிறிது தாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வெண்பா பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம். உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இச்சஞ்சிகையினை வாங்கி வாசிக்கக் கொடுத்தால் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும்.
புகலிட நாடுகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிபுரிவோர் கவனத்துக்கு: "உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இச்சஞ்சிகையினை வாங்கி வாசிக்கக் கொடுத்தால் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும்."
இச்சஞ்சிகையினை வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் கணபதி சர்வானந்தா அவர்கள். அவர் முகநூலிலுமுள்ளார். அவரது முகநூல் அடையாளம்: Kanapathy Sarvananda
தமிழ்முரசு (ஆஸ்திரேலியா) இணையத்தளத்தில் இவருடனான நேர்காணலொன்று முன்பு வெளியாகியிருந்தது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்: https://youtu.be/J59Kf31BigY
இந்நேர்காணலிலிருந்து சஞ்சிகையின் ஆசிரியரின் சமுதாயப்பிரக்ஞையினை உணர முடிகின்றது. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதன் அவசியத்தை, அதற்கான சமூகப்பொறுப்பின் அவசியத்தின் அடிப்படையில் இச்சஞ்சிகையினை அவர் வெளியிட்டு வருவதை உணர முடிகின்றது.
'அறிந்திரன்' சஞ்சிகையினை 'வெண்பா' பதிப்பகத்தின் மூலம் வாங்க: https://www.venpaa.lk/book/arinthiran-ithazh-6