புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவில் 8,000 ஆண்டுகள் அளவில் பருத்தி வேளாண்மை இருந்ததாக அறியப்பட்டுள்ளது. 9,000 ஆண்டுகள் பழமை மிக்க சிந்துவெளி தளம் மெகர்காரில் மணி கோர்க்கும் பருத்தி இழைகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவ்விரு நிகழ்வு இந்த இரு நில மக்களிடையே பருத்தி வேளாண்மை,, அதன் பயன்பாடு குறித்து தொடர்பு இருந்துள்ளதைக் காட்டுகின்றது.
செவ்விந்தியர் 4,000 ஆண்டுகள் அளவில் கணிதம், வானியல், கட்டடக் கலை ஆகியவற்றில் விழுமிய நாகரிகத்தை எய்தினர். நடுமெக்சிகோ முதல் கோஸ்டாரிகா வரை அமைந்த நிலப்பகுதியில் வளர்ந்த நாகரிகம் மெசோ அமெரிக்க நாகரிகம் என்றும், ஈக்குவடார் முதல் வட ஆர்சண்டைனா, சிலி பகுதி வரை அமைந்த நாகரிகம் ஆண்டியன் நாகரிகம் என்றும் பெயரிடப்பட்டு அவற்றுக்கு கால வரிசைப்படியான வரலாறு பதியப்பட்டு உள்ளது.
நாகரிக வளர்ச்சிக்கும் விளர்ச்சிக்கும் பொருள்களின் தேவையும், அவற்றின் செய்நுணுக்கமும் இன்றியமையாதன. அறிவு வழிப்பட்ட எல்லா செய்நுணுக்கமும் ஓர் இடத்தே ஒருவரிடம் தோன்றி அவரைச் சுற்றி உள்ளவரிடம் அது முதலில் பரவி பின் அவர் சார்ந்த குமுகம் முழுமைக்கும் பலரால் பரவலுறுகின்றது. இச் செய்நுணுக்கம் அறிந்த மக்களோடு வேற்று நிலத்தார் தொடர்பு கொண்டாலோ அல்லது செய்நுணுக்க அறிவு உடைய மக்கள் வேற்று நிலத்திற்கு பெயர்ந்தாலோ அவர்களிடம் உள்ள அறிவு அந்த வேற்று நில ம்க்களுக்கும் பரவும். இஃது அல்லாமல் செய்நுணுக்க அறிவு பண்டைக் காலத்தே பிறருக்குப் பரவிட வாய்ப்பு இல்லை. நாகரிக வளர்ச்சியும் அதன் பரவலும் அவ்வாறானதே. பண்டைய நாகரிகங்கள் யாவும் விழுமிய நாகரிகம் கொண்ட ஒரு மூல நாகரிகத்தாரால் அவர் பெயர்ந்த இடங்களுக்கு எல்லாம் பரவியது எனலாம்.
இந்த மூல நாகரிகத்தார் வெப்பமண்டில வாழுநராய் இருந்திருத்தல் வேண்டும் ஏனெனில், இவர்கள் அமைத்த பண்டைய நாகரிகங்கள் பலவும் நிலவுலக வெப்பமண்டிலங்களிலேயே, இதாவது, கடகத் திருப்பம் (Tropic of Cancer), நிலநடுக்கோடு (Equator), சுறவகத் திருப்பம் (Tropic of Capricon) இவற்றினிடையேயே அமைந்துள்ளன என்பது இவர்கள் வெப்பமண்டில வெதணநிலைக்கு(Climate) மிகவும் பழக்கப்பட்ட ஓர் இடத்து மக்கள் என்பதும் தமக்கு ஒத்துப்போகும் வெப்ப வெதணநிலை உள்ள உலகின் பிற வெப்ப மண்டிலப் பகுதிகளில் விழுமிய நாகரிகங்களை அங்கு வாழ்ந்த பிற மரபினப் பழங்குடிகளோடு இணைந்து ஏற்படுத்தினர் என்று முடிபு கொள்ளத் தூண்டுகிறது.
இந்த விழுமிய மூல நாகரிகத்தார் இவ்வாறு பிற புலங்களுக்குப் பெயர்வதற்கு நிலநடுக்கோடு பகுதியில் வெப்ப வெதண மிகை ஏற்றமும் ஒரு காரணி ஆகலாம். அதனால் அவர்கள் கடகத் திருப்பத்திற்கும் வடக்கே இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.
மேற்சொன்ன கருத்திற்கு வலுசேர்ப்பதாய் அமைந்திருப்பது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவினின்று கடலால் இருபுறமும் பிரிக்கப்பட்ட அமெரிக்கக் கண்டங்களில் செவ்விந்தியர் விழுமிய நாகரிகங்கள் நிலவுலக வெப்பமண்டிலங்களில் (Tropics) மட்டுமே எழும்பி இருப்பது தான்.
பிற உலக நாகரிகங்களிடம் இருந்து கடலால் பிரிக்கப்பட்ட மெசோ அமெரிக்க, ஆண்டிய நாகரிகங்களை உலக முதல் சுற்றுக் கடலோடிகளான மூல நாகரிகத் தமிழரே அமைத்தனர் என்று கொள்வதற்கு நேரடிச் சான்றாக அமைந்திருப்பது அங்கே ஆட்சிபுரிந்த அங்கத்து மன்னர் பெயர்கள் தமிழாய் இருப்பதே எனலாம். அப்பெயர்களில் க > ஹ என்றும், வ > ப என்றும் திரிந்துள்ளன. தமிழில் இக்கால் ஆண்பால் ஒருமை ஈறு அன் மட்டுமே செப்ப வடிவாய் நிலைத்துள்ளது. ஆயினும் தொன்மையில் அன் ஈறோடு அல், அம், அர், கன், மன், இ, உ, ஐ ஈறுகளும் செப்ப வடிவாய் ஏற்கபட்டு வழங்கிவநது பின் காலப் போக்கில் வழக்கொழிந்து போயின.
செவ்விந்தியர் பிற தொல் நாகரிகங்களோடு ஒப்ப சக்கரம், வண்டி, மாழை(உலோகம்) ஆகிய புலங்களில் (Faculty) பின்தஙகி இருந்தனர் என்ற சேதி தமிழர் இச் செவ்விந்திய நாகரிகங்களை 7,000 ஆண்டுகளுக்கு முன்னேயே ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று கருத இடம் தருகின்றது ஏனெனில் இப்புலங்கள் 6,000 ஆண்டுகள் அளவிலேயே தோன்றிப் பரவின.
இக்கட்டுரையில் செவ்விந்திய மன்னர் பெயர்கள் தமிழ் இலக்கியப் பெயர்கள், தமிழக ஊர்ப் பெயர்கள் மற்றும் கீழை நாகரிகங்களான கொரியா, சப்பான், சீன மன்னர் பெயர்களுடனும், மேலை நாகரிகங்களான சுமேரியா, ஈலம்,எகிபது, போனீசியா, எதியோபியா, துருக்கி மன்னர் பெயர்களுடனும் ஒப்பிட்டு அவற்றின் ஒத்ததன்மை ஒலி அடிப்படையில் ஆயப்படுகின்றது. மேலும், பேரா. இரா. மதிவாணன் Indus script Dravidian (IsD), 1995, எனும் பெயரில் படித்து வெளியிட்ட நூலில் இடம் பெறும் சிந்து முத்திரைப் பெயர்களும் இந்த ஒப்பாய்வில் சுட்டப்படுகின்றன.
தமிழ்-பிராமி கல்வெட்டுகள் எனும் நூலில் இடம் பெறும் ஒத்த பெயருடைய சில கல்வெட்டு குறிப்புகள் மேற்கோளாகத் தரப்பட்டு உள்ளன. இம்மன்னர் பெயர்கள் பேரனுக்கு பாட்டன், மூதாதையின் பெயரை இடுதல் என்ற அடிப்படையில் பதிவாகி உள்ளன. ஆதலால் இம்மன்னரின் முன்னோர் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு அங்கு குடியேறிய தமிழராய் இருந்தல் கூடும். அல்லாக்கால் தமிழ் மொழியின் ஒரு கூறாக விளங்கும் தமிழ்ப் பெயர்கள் வழிவழியாக தொடர்ந்து வர வாய்ப்பு இராது. இத்தமிழ் முன்னோரைக் கருதி தமிழ் மொழியின், தமிழரின் பழமை அடையாளத்தை இக்கட்டுரை அணுகுகின்றது. இது மொழி அமைப்பு, இலக்கணக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் மொழி ஆய்வு அல்ல என்று தெளியலாம். இந்த மன்னர் பெயர் ஒப்பாய்வு தமிழ் மொழி, தமிழர் பழமை அடையாளம் என்ற அளவிலேயே மட்டுப்படுகின்றது.
இனி, இடவாரியாக மன்னர் பெயர்கள் ஒவ்வொன்றாக ஒப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆங்கில எழுத்துகள் a, e, o, u அகரமாக படிக்கப்பட்டுள்ளன. அகரம் கீழை நாகரிகங்களில் ஒகரமாய் ஒலிக்கின்றன.
Tarascan state (S.W.Mexico), Caconzi rulers
Taríacuri (1300–1350AD) - தமிழில் தாரய்ய கரி > தாரய்யன் கரியன் என்பது செப்பமான வடிவம். தாரன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். 'கன்' ஈறு பெற்று தாரகன் என்றும் வழங்கும். இப்பெயரில் அமைந்த சில ஊர்கள் தாரமங்கலம் (சேலம்), தாராசுரம் ( கும்பகோணம்), தாராபுரம் (திருப்பூர்). ஒரு சப்பானிய வேந்தர் பெயர் Waka Tarasihiko 131–191 AD - தமிழில் வக்க தார சிகய்க > வக்கன் தாரன் சிகய்கன் என்பது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Awseya Tarakos 453-445 BC - தமிழில் அவ்சேய தாரக > அவ்வன் சேயன் தாரகன் என்பது.
ன் ஈற்றுக்கு பகரமாக 'S' ஈறு பெற்றுள்ளது. துடி முழக்குவோன் துடியன் எனப்பட்டது போல் தாரை கொட்டுவோன் தாரன் எனப்படிருக்கலாம். கரியன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். இப்பெயரில் அமைந்த ஊர் கரியன்சோலை (கூடலூர்).
Hiquingaje (1350AD) - தமிழில் கய்கய்யன் கக்கி > கய்கய்யன் கக்கன் என்பது செப்பமான வடிவம். கய்கய்யன் - கய்யன் மகன் கய்யன் என்ற வழக்காகலாம். ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் Gyeonghyo 1057-1030BC தமிழில் கய்யன் கய்ய(ன்) என்பது.
கக்கன் - இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். சிந்து முத்திரை H764B இல் பதிவாகி உள்ளது.
Hiripan (AD 1430) - தமிழில் கீர் இவன் > கீரன் இவ்வன் என்பது செப்பமான வடிவம். வ > ப திரிபு . கீரன் - சங்கப் புலவர் பலர் இப்பெயர் பெற்று இருந்தனர். புகளூர் தமிழ பிராமி கல்வெட்டு 20:12 "ணாகன் மகன் பெருங்கீரன்". இதை நாகன் மகன் பெருங்கீரன் என செப்பமாக்கலாம். இவ்வன் - சிந்து முத்திரை M1135 இல் பதிவாகி உள்ள பெயர், IsD பக்: 244. Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Taewon 972-968 BC - தமிழில் தா இவ்வன் என்பது. தா என்றால் உயரிய எனும் பொருள்.
Tangáxuan I (1430–1454) - தமிழில் தங்க குய்யன் என்பது செப்ப வடிவம். தங்கன் - சிந்து முத்திரை M110 இல் பதிவான பெயர்,IsD பக்.
231. முதல் கொரிய வேந்தன் பெயர் Dangun Wanggeom BC2333-2240 - தமிழில் தங்கன் வங்க் இயம் > தங்கன் வங்கன் இயன் என்பது.
தங்கன் என்பதற்கு வேந்தன் என பொருள் கூறுகின்றனர் கொரிய வரலாற்று ஆறிஞர். குய்யன் - சிந்து முத்திரை M1097 இல் பதிவான பெயர், IsD பக்.203. சீனாவின் ஒரு Qin ஆள்குடி மன்னன் பெயர் Sūn Quán 222–252 AD- தமிழில் சான் குய்யன் என்பது.
Tzitzipandáquare (1454–1479) - தமிழில் சிழி வண்டா குய்யரி > சிழியன் வண்டான் குய்யன் அரி என்பது செப்பமான வடிவம். சிழியன் - இன்றும் வழங்கும் பெயர். சில்லா வழிவந்த கொரிய மன்னன் பெயர் Jijeung(500–514 AD) தமிழில் சிழியன் என்பது. சீனத் தாக்கத்தால் னகர மெய் ன் > ங் என் ஒலிக்கிறது. சிழிவன் என அவன் ஈறு பெற்றும் வழங்கும். அரிட்டாப்பட்டி தமிழி கல்வெட்டு 2:1 இல் வழங்கும் பெயர், “நெல்வெளிஇய் சிழிவன் அத்தினன் வெளியன் மூழாகை கொடுபிதோன்” இதை நெல்வெளி சிழிவன் அத்தின்னன் வெளியன் முழாகை கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். வண்டான் - விளி ஈறு 'ஆன்' பெற்றுள்ளது. சிந்து முத்திரை H3701இல் வண்டன் பதிவாகி உள்ளது, IsD பக்.104. திருவண்ணாமலை செங்கம் வட்டம் ஆண்டிப் பட்டியில் கிட்டிய ஈய நாணயத்தில் சேந்தன் அதினன் எதிரான் என ஆன் ஈறு கொண்ட பெயர் பொறிக்கப்பட்டு இருப்பது நோக்கத்தக்கது. அரி - ஒரு பழந் தமிழ்ப் பெயர். அரியமங்கலம், அரியக்குடி, அரிட்டாபட்டி ஆகிய ஊர்கள் இப்பெயரில் அமைந்தவை.
Zuangua (1479–1520) - தமிழில் ச(ய்)யன்கய்ய > சைய்யன் கய்யன் என்பது செப்பமான வடிவம். சையன் - 'கன்' ஈறு பெற்று தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Saekbullu BC 1285-1237- தமிழில் சைய்கபுல்லு > சைய்கன் புல்லன் என்பது. புல்லய்யா, புல்லா ரெட்டி என்ற பெயர்களில் புல்லன் இன்றும் வழங்குகின்றது. புல்லம்(ன்) பாடியில் காவிரியின் குறுக்கே அணை உள்ளது. எகிபதில் 17 ஆம் ஆள்குடியில் 'மன்' ஈறு பெற்ற ஓர் அரசன் பெயர் Siamun 978-959BC தமிழில் சய்யமன் > சைய்யமன் என்பது. முத்துப்பட்டி தமிழி கல்வெட்டு 17:2 இல் பயிலும் பெயர். “சைய்அளன் விந்தை ஊர் கவிய்”. இதை சைய்அள்ளன் விந்தையூர் கவி என செப்பமாக்கலாம். கய்யன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஒரு கொரிய மன்னன் பெயர் Hyeonmun 315-290 BC - தமிழில் கய்யன் மன்(னன்).
Copán Rulers (Honduras)
K'ina Yax K'uk Mo' AD 426-436 - தமிழில் கீண யாக் கூக் மா > கீணன் யாக்கன் கூகன் மா என அன் ஈறு இட்டு செப்பமாக படிக்கலாம்.
கீணன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். இப்பெயரில் அமைந்த ஓர் ஊர் கீணனூர் (நெய்வேலி). சுமேரிய Ur நகரின் கடைசி மன்னன் Ur Ukagina - தமிழில் ஊர் உக்க கீண > உக்கன் கீணன் என்பது. ஏழாவது துருக்கி அதிபர் keˈnan evˈɾen 1982-1989 - தமிழில் கீணன் எ(வ்)வி(அ)ரண் > எவ்வி அரணன். யாக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் (Posthumus) பெயர் Tennō Yūryaku 456–479 AD - தமிழில் திண்ண ஊர்யாக்கு > திண்ணன் ஊரன் யாக்கன் என்பது. ஒரு தைரி (Tyre) நகர போனீசிய மன்னன் பெயர் Yakin baal 564 BC - தமிழில் யாக்கன் வால் என்பது. கூகன் - ஒரு பழந்நமிழ்ப் பெயர். ஐகார ஈறு பெற்று ஒரு Qin ஆள்குடி சீன மன்னன் பெயரில் வழங்குகிறது Yíng Húhài 209–207 BC - தமிழில் இன்(அன்) கூகை என்பது. மா - பெருமைக் கருத்து அல்லது மான் என்பதன் கடைக் குறையாகவும் இருக்கலாம்.
Mat Head, AD 445-485 - தமிழில் மத்(அன்) > மத்தன் என்பது செப்ப வடிவம். தய்ரி நகரை ஆண்ட ஒரு போனீசிய மன்னன் பெயர் Mattan I 840 - 832 B.C. - தமிழில் மத்தன் என அன் ஈறு பெற்று செப்பமாக உள்ளது. சிந்து முத்திரைகளில் மத், மத்தி என்றும் பதிவாகி உள்ளது. T. நரசிபூர் சிந்து எழுத்து பானை ஓட்டில் இப்பெயர் உள்ளது. சிந்து முத்திரை MS5065 இல் பதிவான பெயர்.
Muyal Jol 485 AD - தமிழில் மய்யல் சால் > மய்யன் சாலன் என செப்பமாகப் படிக்கலாம். பெயரில் அன் ஈற்றுக்கு பகரமாக அல் ஈறு பயின்றுள்ளது. மய்யன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Muyeol(654– 661AD) - தமிழில் மய்யல் > மய்யன் என்பது. சப்பானிய வேந்தர் பட்டங்களில் மய்காட(ன்) Mikado என்பதிலும் பயில்கின்றது. இரு நாள்கள் மன்னனாய் இருந்த ஒரு எதியோபியன் பெயர் Miamur 1358 BC - தமிழில் மய்யமர் > மய்யமன் என்பது. தய்ரி நகர் ஆண்ட ஒரு போனீசிய மன்னன் பெயர் Abi Milku 1350 - 1335 BC - தமிழில் அவ்வி மய்(ய)ல்(அ)க்கு > அவ்வன் மய்யல் அக்கு என்பது. சாலன் - சாலம்மாள், சாலப்பன் இன்றும் வழங்கும் பெயர். சாலக்குடி, சாலவாக்கம் இப்பெயரில் அமைந்த ஊர்கள். இசுரேலை ஆண்ட மன்னன் solomon 970 - 930 BC - தமிழில் சாலமன் என மன் ஈறு பெற்றுள்ளது. தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Solna BC 1150-1062 - தமிழில் சால்ண > சாலண்ண(ன்) என்பது செப்பமான வடிவம்.
K'ak' Chan Yopaat AD 578-628 - தமிழில் காக் சான் யாப்பத் > காக்கன் சானன் யாப்பத்தன் என செப்பமாகப் படிக்கலாம். காக்கன் - காகன், காக்கை என்றும் வழங்கும் ஒரு பழந்தமிழ்ப் பெயர். காக்கை வன்னியன் ஈழத்தை ஆண்ட பண்டார வன்னியனுக்கு எதிராய் செயல்பட்டவன். ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Kōgon 1331–1333 AD - தமிழில் காகன் என்பது. எகிபதின் 5 ஆம் ஆள்குடியில் மன்னன் Neferirkare Kakai 2477-2467 BC என்பானுடைய பிள்ளைப் பருவப் பெயர் kakai > தமிழில் காக்கை என்பது. யாப்பன் - இணைய வாக்காளர் பட்டியலில் தந்தை பெயர் யாப்பன் நாடார் என பதிவாகி உள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Etiyopus I 1854 – 1800 BC - தமிழில் எட்டி யாப்ப(ன்) என்பது. யா > ஆ திரிபில் யாப்பன் > ஆப்பன் என்று ஆகும். இப்பெயரில் அமைந்த சில தமிழக ஊர்கள் ஆப்பனூர் (மதுரை), ஆப்பக்கூடல்(ஈரோடு). புகளூர் கல்வெட்டு 20:6 இல் ஆ பிட்டந்தை என்பதில் உள்ள ஆ என்பது யா என்பதன் மருஉ என்று கருத இடம் தருகின்றது. அது யா(ப்)பிட்டந்தை என்று ஆதல் வேண்டும். அதே செய்தியை வேறு வகையில் புகலும் கல்வெட்டு 20:5 இல் ஆ பிட்டன் குறும்மகள் என்பது யா(ப்)பிட்டன் குறும்மகள் என்றாதல் வேண்டும். அத்தன் - அப்பன், அண்ணன், அக்கன், ஐயன் என்பது போல் மதிப்புரவு அடையாக பண்டு வழங்கியது.
Yax Pasah 763-820 - தமிழில் யாக் வசக் > யாக்கன் வசகன் என்பது செப்பமான வடிவம். வ > ப திரிபு. யாக்கன் - ஆக்கன் என யகர முன்மெய் இழந்தும் வழங்கும். சிந்து முத்திரை M2264 இல் ஆக்கப்பன் என்ற பெயர் பதிவாகி உள்ளது, IsD பக். 153. தமிழகத்தின் ஓர் ஊர் ஆக்கூர் (காஞ்சிபுரம்). இணைய வாக்காளர் பெயர் பட்டியலில் ஆக்கன் பதிவாகி உள்ளது. வசகன் - வசன் ' கன்' ஈறு பெற்றுள்ளது. Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Pasa (80–112AD) - தமிழில் வசன் (வ - ப திரிபு) . ஒரு துருக்கி Hittite மன்னன் பெயர் vashasatta 1300-1280BC - தமிழில் வச சாத்த > வசன் சாத்தன் என்பது.
Palanque Rulers
The dynastic rulers of Palenque begin with Bahlum-Kuk or K'uk Balahm, who took the throne of Palenque in southern mexico in 431 AD.
Ch'a Ruler I 252 BC - தமிழில் கா என்பது செப்ப வடிவம். சிந்து முத்திரைகள் பலவற்றுள் ஓரெழுத்தாக வழங்குகின்றது. இதற்கு தெய்வம் ஒத்த மதிப்புடைய வேந்தன் என பொருள் கொள்ளலாம். சீனத்தில் வேந்தர் பெயரிலும் இவ்வாறே தீ(Di) என்ற சிறப்படை இடப்பட்டு தெய்வம் ஒத்த வேந்தன் என பொருள் கூறுவர். இருக்கு வேதத்தில் கா என்பது தெய்வத்தை குறிப்பது என்பர் அறிஞர்.
எகிபதின் முதல் ஆள்குடி வேந்தன் பெயர் Qa'a 3100-2890BC - தமிழில் கா என்பது.
Ahkal Mo' Nahb I AD 501-529 - தமிழில் அக்கல் மா நக்கவ > அக்கன் மா நக்கவன் என செப்பமாகப் படிக்கலாம். பண்டு அன் ஈறு போல் அல் ஈறு தமிழில் பெரு வழக்காக இருந்துள்ளது. அக்கன் - மதிப்புரவு அடையாக வழங்கியது. சிந்து முத்திரை H3372 இல் பதிவாகிய பெயர், IsD பக்.97. மா - பெருமைக் கருத்து. நக்கவன் - மன்னன்>மன்னவன் ஆவது போல் நக்கன் 'அவன்' ஈறு பெற்று உள்ளது.
பழுவூர் நக்கன் அம்பலவன் என்பான் அரியலூர் மாவட்ட கோவிந்தப் புத்தூர் சிவன் கோவிலை கற்றளியாக மாற்றியதாக அக்கோவிலின் ஒரு கல்வெட்டு கூறுகின்றது. ஒரு சப்பானிய வேந்தர் பெயர் Nukatabe 592–628 AD - தமிழில் நக்கத் அவ்வி > நக்கத்(தன்) அவ்வன் என்பது.
K'an Joy Chitam (K'an Xul I), 529-565 - தமிழில் கான் சாய் கித்தம் > கானன் சாயன் கித்தன் என்பது செப்பமான வடிவம். கானன் - சிந்து முத்திரை M2305 இல் பதிவான பெயர்,IsD பக். 87. சாயன் - அல் ஈறு பெற்று சாயல் குடி என்ற ஊர் பெயரில் வழங்குகின்றது. சிந்து முத்திரை M145 இல் பதிவான பெயர், IsD பக்.262 , கித்தன் - சப்பான், ஈலம் நாகரிக மன்னர் பெயர்களில் வழங்குகின்றது. இந்த மாயன் பெயர் அம் ஈறு பெற்று உள்ளது.
Kan Bahlam (Chan Bahlum I, Kan-Balam I) 572-583AD - தமிழில் கான் வல்லம் > கானன் வல்லன் என்பது செப்பமான வடிவம். மாயன் இலண்ட எழுத்தில் படித்தவர்கள் ககரத்தை ka, cha என்றும், balam என்பதை bahlam என்றும் குழம்பியவாறு படித்து உள்ளனர். கானன் - சென்னை கிழக்குக் கடற்கரை சாலை வழியில் அமைந்த ஓர் ஊர் கானத்தூர். வல்லன்(ம்) - வல்லம் என்றால் அமெரிக்கச் சிறுத்தைப் புலி என பொருள் தருகின்றனர் தொல்லியலாளர். இது ஒரு பழந் தமிழ்ப் பெயர். சில தமிழக ஊர்ப் பெயர்கள் வல்லம் (தஞ்சை), வல்லக் கோட்டை (காஞ்சிபுரம்).
Ix Yohl Ik'nal (Lady Kan, Lady Kanal Ikal) 583-604 AD - தமிழில் கானல் இக்கல் என்பது. அன் பெற்றால் கானன் இக்கன் என்றாகும்.
இவள் அரசி என்பதால் ஆண் பால் ஈறு அன் இடாமல் படிப்பதே பொருத்தம்.
Ajen Yohl Mat (Aahc-Kan, Ac-Kan, Ah K'an) 605-612 - தமிழில் அக்கன் யாக்கல் மத் > அக்கன் யாக்கன் மத்தன் என்பது செப்பமான வடிவம். (Ajen க -ச திரிபு). மேலே இப்பெயர்களுக்கு ஒப்பீடு தரப்பட்டுள்ளன காண்க.
Janab Pakal (Pacal I) 612-612AD - தமிழில் சானவ வக்கல் > சானவன் வக்கன் என்பது செப்பமான வடிவம். சானவன் - சானன் அவன் ஈறு பெற்று சானவன் ஆனது. சிந்து முத்திரைப் M1498 இல் பதிவான பெயர்,IsD பக்.260. வக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர் இன்றும் வழங்குகிறது. இப்பெயர் அல் ஈறு கொண்டு உள்ளது.
Upakal K'inich Janab Pakal - தமிழில் உப்பக்கல் கீண்க் கானவ் வக்கல் > உப்பக்கன் கீணகன் கானவன் வக்கன் என்பது செப்பமான வடிவம். உப்பக்கன் - உப்பன் 'அக்கன்' என்ற பெயரை அடையாக பெற்ற ஒரு பழந்தமிழ்ப் பெயர். கீணகன் - கீணன் 'கன்' ஈறு பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்க நாகரிகத் தொல்லியலாளர் ஞாயிறு தெய்வம் என்று பொருள் கூறுகின்றனர். கீல் > கீள் > கீண் > கீழ் என கீழ் நோக்க விழும் கதிர் என்ற பொருளில் கதிருடைய ஞாயிறுக்கு ஒரு பழஞ்சொல் இருந்திருக்கலாம் என ஊகிக்கத் தூண்டுகிறது.
க்ரணம்(சமற்கிருதம்) > கதிர்.
Mayapan Rulers (Mexico)
இது மெக்சிகோவின் உக்கடன்(Yucatan) தீபகற்பத்தில் அமைந்த நாகரிகம். இம்மன்னர் பெயர்கள் அன் ஈறு பெறாமல் உள்ளன. இவர்களின் முன்னோன் ஒருவன் கக்கம்(ன்) என பெயர் கொண்டிருத்தல் வேண்டும் ஆதலால் எல்லோரும் அப்பெயரை பின்னொட்டாக சேரன், சோழன், பாண்டியன் போல் கொண்டுள்ளனர்.
Cam Cocom AD 1079-1099 - தமிழில் சாம் கக்கம் > சாமன் கக்கன் என்பது செப்பமான வடிவம். சாமன் - சிந்து முத்திரை H3005 இல் பதிவான பெயர், IsD பக். 223.
Chem Cocom AD 1099-1109 - தமிழில் சேம் கக்கம் > சேமன் கக்கன் என்பது செப்பமான வடிவம். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Pino stem 1073 BC - தமிழில் பின்ன சேம் > பின்னன் சேமன் என செப்பமாக படிக்கலாம். ஏமன் என்ற பெயர் சகர முன்மெய்(Prothesis) பெற்று சேமன் என்றாகும். ஏமப்பூர் (திருவெண்ணைநல்லூர்) ஒரு விழுப்புரம் மாவட்ட ஊர்.
Cab Cocom (1) 1135-1142 - தமிழில் காப் கக்கம் > காப்பன் கக்கன் என்பது செப்பமான வடிவம். இணைய வாக்காளர் பட்டியலில் காப்பன் தெரு என்று பதிவாகி உள்ளது. எகிபதின் 3 ஆம் ஆள்குடி அரசன் பெயர் Khaba 2603 - 2599 BC - தமிழில் காப்ப(ன்) என்பது. ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Kōbun 672 AD - தமிழில் காப்பன் என்பது. காப்பன் சிந்து முத்திரை M2352 இல் பதிவான பெயர், IsD பக். 254.
Tam Cocom AD 1163-1170 - தமிழில் தாம் கக்கம் > தாமன் கக்கன் என்பது. தாமன் - அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Tomadyon Piyankihi III 647- 659BC - தமிழில் தாம் அதியன் வய்யன் கய்கய் > தாமன் அதியன் வய்யன் கய்கய்யன் என்பது.
Ek Cocom AD 1170-1176 - தமிழில் இக்(கன்) கக்கன் என்பது. இக்கன் - ஒரு மேலை நாகரிக மன்னன் பெயர் Igur Kap Kapu > தமிழில் இக்கர் காப் காப்பு > இக்கன் காப்பன் காப்பு என்பது.
Hkin Cocom AD 1183-1191 - தமிழில் கக்கன் கக்கம் என்பது. கக்கன் - இன்றும் தமிழக ஊர்ப்புறங்களில் வழங்கும் பெயர். தங்கன் வழிவந்த அல் ஈறு பெற்ற ஒரு கொரிய மன்னன் பெயர் Gohol BC 1380-1337 - தமிழில் கக்கல் > கக்கன் என்பது. ஒரு ஈலம் நாகரிக மன்னன் பெயர் Kukka Nasher > தமிழில் கக்க ந சேர் > கக்கன் ந சேரன். கக்கன் - சிந்து முத்திரை H764B பெயர். ந - சிந்து முத்திரையில் பதிவாகும் ஒற்றை எழுத்துச் சொல். சேரன்- சேரர் குடிப் பெயர்.
Kuh Cocom AD 1194-1197 - தமிழில் கூக் கக்கம் > கூகன் கக்கன் என்பது செப்பமான வடிவம். அவன் ஈறு பெற்று கூவன் எனவும் வழங்கும். Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Gwanghaegun (1608–1623AD) - தமிழில் கூவன் கய்கன் என்பது.
Dzaay Cocom AD 1197-1203 - தமிழில் திசை கக்கம் > திசையன் கக்கன் என்பது. திசையன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஒரு எதியோபிய மன்னன் பெயர் Zagun Tsion Hegez 192-197 AD - தமிழில் சாக்கன் திசையன் இக்கி என்பது. சோழர் திசையன் என பெயர் கொண்டனர்.
Mooch Cocom AD 1203-1211 - தமிழில் மூக் கக்கம் > மூக்கன் கக்கன் என்பது. மூக்கன்- இன்றும் தமிழக ஊர்ப் புறங்களில் வழங்கும் பெயர். காட்டாக, மூக்கைய்யா தேவர்.
Lobeh Cocom AD 1222-1224 - தமிழில் (இ)ள பிக் கக்கம் > (இ)ள பிக்கன் கக்கன் என்பது செப்பமான வடிவம். (இ)ள - இளமைக் கருத்து.
முதல் உயிரெழுத்தை எழுதாமல் விடுவது பண்டைய தமிழ் எழுத்து மரபு. பிக்கன் - விக்கிரமங்கலம் தமிழ் பிராமி கல்வெட்டு 8:3 இல் "அந்தைய் பிகன் மகன் வெந்அதன்" என பதிவாகி உள்ளது . இதை அந்தை பிக்கன் மகன் வெண் ஆதன் என செப்பமாக்கலாம். ஒரு தய்ரி நகர் ஆண்ட போனீசிய மன்னன் பெயர் Pygmalion (Pummay) 831 - 785 BC - தமிழில் பிக்கமல்லய்யன் (பம்மய்) என்பது. மல்லன் - அழகர் மலை தமிழி கல்வெட்டு12:6 "பாணித வாணிகன் நெடுமலன்". இதை பாணித வாணிகன் நெடு மல்லன் என செப்பமாக்கி படிக்க வேண்டும். போனீசிய மன்னனின் ஐகார ஈறு கொண்ட மற்றொரு பெயர் பம்மய் செப்ப வழக்கில் பம்மன் என்றாகும். பம்மல் என்ற ஊர் சென்னையில் உள்ளது. இப்பெயர் இடம் பெறும் மற்றொரு அழகர்மலைக் கல்வெட்டு 12:5 "சபமிதா ஈன பமித்தி" இதில் அக்கால எழுதும் முறைப்படி ஒன்றெழுத்துகள் பொறிக்கப்படாது விடப்பட்டுள்ளன. இதை சப்பமித்தா ஈன பம்மித்தி (பம்+இத்தி) என செப்பமாக்கலாம். சப்பன், ஈனன், பம்மன், இத்தன் ஆகிய தூய தமிழ்ப்பெயர்கள் பிற நாகரிகங்களிலும் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும குகைத்தளங்கள் சமணத் துறவாளருக்கு ஏற்படுத்தப்பட்டன என்ற ஒரே காரணத்தைக் கொண்டு சபமிதா என்பதை சர்பமித்ரா என்ற சமற்கிருத பெயரோடு தொடர்புபடுத்தி அதுவே பிராகிருதத்தில் சப்மிதா என திரிந்ததாகக் கொண்டு இக்கல்வெட்டுச் செய்தியை சப்மிதா, பமித்தி ஆகிய இரு சமண துறவாட்டியர்(Nuns) ஏற்படுத்தியதாக பொருள் உரைப்பது கேள்விக்கு உரியது மேலும் ஆய்விற்கு உரியது.
Keuel Cocom 1232-1238 - தமிழில் குய்யல் கக்கம் > குய்யன் கக்கன் என்பது செப்பமான வடிவம். குய்யன் - சிந்து முத்திரை M1097 இல் பதிவான பெயர், IsD பக். 203.
Cho Cocom AD 1352-1365 - தமிழில் சோ கக்கன் என்பது செப்பமான வடிவம். சோ - ஒற்றை எழுத்துப் பெயர். சிந்து முத்திரை 5042 இல் பதிவாகி உள்ளது, IsD, பக். 86. இப் பெயரில் உள்ள சில தமிழக ஊர்கள் சோவூர் (திருவண்ணாமலை), சோபட்டினம் (மரக்காணம்), சோமங்கலம் (காஞ்சிபுரம்). Silla வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Soseong (798–800 AD) - தமிழில் சோ சேயன் என்பது.
Tucul Cocom AD 1387-1392 - தமிழில் தக்கல் கக்கம் > தக்கன் கக்கன் என்பது செப்பமான வடிவம். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Dohae BC 1891-1834 - தமிழில் தக்கை > தக்கன் என்பது. அன் ஈறு அன்றி ஐகார ஈறு பெற்று உள்ளது. கோவை சூலூரில் கிட்டிய மட்கலத்தில் தக்க இன்னன் என சிந்து எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது Cuzam Cocom AD 1396-1401 - தமிழில் கூழம் கக்கம் > கூழன் கக்கன் என்பது செப்பமான வடிவம். ஒரு Hittite மன்னன் பெயர் Huzziya I 1530-1525 BCE – தமிழில் கூழய்யன் என்பது செப்ப வடிவம். கூழைமன் ஒரு சோழ அரசன் பெயர். கூழ்பான் தண்டலம் (திருக்கழுக்குன்றம்) ஓர் ஊர். நன்னூல் மூலத்திற்கு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியவர் கூழங்கை தம்பிரான்.
Hool Cocom AD 1406-1410 - தமிழில் கூல கக்கம் > கூலன் கக்கன் என்பது செப்பமான வடிவம். இன்றும் வழங்கும் தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M2141 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 230.
Cilich Cocom AD 1410-1416 - தமிழில் கிள்ளிக் கக்கம் > கிள்ளிகன் கக்கன் என்பது. கிள்ளிகன் - இங்கு 'கன்' ஈறு பெற்ற இப்பெயர் அன் ஈறு பெற்று கிள்ளியன் எனவும் பயிலும். சோழர் பலர் கிள்ளி என்ற பெயர் கொண்டனர். சீனத்தில் Xia பேரரசில் 407-431 AD வரை மூன்று வேந்தர்கள் தம் பெயர் முன் Helian > கிள்ளியன் / கிளியன் என்ற பட்டம் கொண்டிருந்தனர். தமிழகத்தில் கிளியனூர், கிள்ளியனூர் எனும் ஊர்கள் உள்ளன.
Itan Kambul Cocom AD 1431-1464 - தமிழில் இத்தன் கம்பள கக்கம் > இத்தன் கம்பளன் கக்கன் என்பது செப்ப வடிவம். இத்தன் - ஒரு பழந்தமிழப் பெயர். தய்ரி நகர் ஆண்ட போனீசிய மன்னன் பெயர் Itho baal I 878 - 847 BC - தமிழில் இத்த வால் > இத்தன் வால் என்பது. 'மன்' ஈறு பெற்றும் வழங்கும் இப்பெயரில் கி.மு. 160 - 150 இல் ஆட்சி புரிந்தவன் பாண்டியன் இத்தமன் - புலிமான் வழுதி என்பான். கம்பளன் - மணிமேகலை காப்பியத்துள் குறிக்கப்படும் பெயர்.
Och Cocom (1) AD 1468-1470 - தமிழில் ஒச் கக்கம் - ஒச்சன் கக்கன் என்பது. ஒச்சன் - இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. காட்டு, ஒச்ச தேவர். தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Osa BC 2137- 2099 - தமிழில் ஒச்ச(ன்) என்பது.
Nachi Cocom AD 1551 1543- - தமிழில் நச்சி கக்கம் > நச்சன் கக்கன் என்பது செப்பமான வடிவம். நச்சன் - சிந்து முத்திரை H4100 இல் பதிவான பெயர், IsD பக். 89. இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.
Olmec Male Names ( south central Mexico)
அமெரிக்காவின் மிகப் பழம்நாகரிகமாக அறியப்படுவது. கி.மு. 1250 முதல் கி.பி. 400 வரை நிலைத்ததாக சொல்லப்படுகின்றது.
Bada - Ku or governor of Rio Pesquero Veracruz. (4) - தமிழில் பட்ட(ன்) என்பது. இப்பெயர் கொண்ட சில ஊர்கள் பட்டச்சேரி(பாலக்காடு), பட்டனூர் (விழுப்புரம்), பட்டமங்கலம்(சிவகங்கை).
Bu (4) - தமிழில் பூ என்பது. சிந்து முத்திரை M2301 இல் பதிவான பெயர், Isd பக்.109. ஒரு சோழன் பெயர் பூ வந்திசோழன்.
Kele - An Epi-Olmec ruler buried at Tikal (4) - தமிழில் கிள்ளி அல்லது கிளி > கிள்ளியன் அல்லது கிளியன் என்பது செப்பமான வடிவம்.
சோழருள் கிள்ளி என்று ஒரு மரபினர் இருந்தனர்.
Ki - An Epi-Olmec ruler from Guatemala (4) - தமிழில் கய் > கய்யன் என்பது. மேலே பல ஒப்பீடு காட்டப்பட்டு உள்ளன.
Po Ngbe - A ruler from between 900 and 600 BC(4) - தமிழில் புங்கவ்வி > புங்கன் அவ்வி (அவ்வன்) என்பது செப்பமான வடிவம். உ > ஒ திரிபு. புங்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். புங்கனூர் (திருச்சி) ஓர் ஊர். அவ்வன் - தேனி மாவட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடுகல்லில் "வேள் ஊர் அவ்வன் பதவன்" என பொறிக்கப்பட்டு உள்ளது.
Yo Pe - King of Mojarra, 143 AD - தமிழில் யாப்பி > யாப்பன் என்பது செப்பமான வடிவம். ஒரு எதியோபிய அரசியின் பெயர் Kosi Yope (queen) 1871 - 1890 BC - தமிழில் அரசி காசி யாப்பி என்பது. காய் > காயி > காசி, ய > ச திரிபு. காய் என்றால் ஒளிர்தல் எனப் பொருள்.
Chimu ruler
Tacaynamo – 850AD The legendary founder of the Chimu Empire. He is said to have arrived from the sea. - தமிழில் தக்கய் நம்ம > தக்கன் நம்மன் என்பது செப்பமான வடிவம். இவன் கடலில் இருந்து வந்தவன் என்பது வேற்று நிலத்தவன் என்பதைக் குறிக்கின்றது. தக்கன் - Gija வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Dohoe 778-776 BC - தமிழில் தக்கை > தக்கன் என்பது. ஒரு சப்பானிய வேந்தர் பெயர் Takaharu 1318–1339 AD - தமிழில் தக்க கரு > தக்கன் கரியன் என்பது செப்ப வடிவம். நம்மன் - சிந்து முத்திரை 8205 காணப்படும் பெயர், IsD பக்.135. ஒரு மெசபெடோமிய மன்னன் பெயர் Ur nammu 2112-2095 BC > தமிழில் ஊர் நம்மு > நம்மன் என செப்பமாகப் படிக்கலாம்.
Ñançen Pinco 1370 AD - தமிழில் நஞ்சன் பிங்க(ன்) என்பது செப்பமான வடிவம். கல்லா ஊர்ப்புற மக்கள் நஞ்சென், குப்பென் என அன் ஈற்றை 'என்' என பலுக்குவதை இன்றும் நோக்கலாம். நஞ்சன் - நஞ்சய்யன், நஞ்சப்பன் ஆகியன இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர்கள். பிங்கன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். ஆவினத்தில் பிங்கனூர் குட்டைரகம் என்று ஒரு வகை உண்டு.
Minchançaman - தமிழில் மீஞ்சன் சாமன் என்பது செப்ப வடிவம். மீஞ்சன் - ஒரு தமிழக ஊர்ப் பெயர் மீஞ்சூர்(திருவள்ளூர்). சாமன் - சிந்து முத்திரை M2594 இல் பதிவான பெயர், IsD பக்.91.
Inca empire Rulers
தென் அமெரிக்காவின் பெரு,பொலிவியா, ஈக்குவடார், வடக்கு சிலி மற்றும் அர்சண்டினா வரை பரவி இருந்த பேரரசு.
Manco Cápac I 1200AD - தமிழில் மங்க காப்பக் > மங்கன் காப்பன் அக்கன் என்பது செப்பமான வடிவம். மங்கன் - மங்கபதி, மங்கதேவன் ஆகியன இன்றும் வழங்கும் பெயர்கள். ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் Munhye 843-793 BC தமிழில் மங்கை > மங்கன் என்பது. ஒரு தமிழக ஊர் மங்கனூர் (கந்தர்வக் கோட்டை). காப்பக்கன் எனவும் சேர்த்து வழங்கலாம்.
Hurin Sinchi Roca 1230 AD - தமிழல் கரின் சிங்கி (அ)ரக்க > கரியன் சிங்கன் (அ)ரக்கன் என்பது செப்பமான வடிவம். கரியன் - கருமை நிறம் குறித்து சனிக் கோளின் ஒரு பெயர். சிங்கன் - சின்னன் 'கன்' ஈறு பெற்று சின்கன் > சிங்கன் என்றாகும். குற்றாலக் குறவஞ்சி இலக்கிய மாந்தர் சிங்கன், சிங்கி. ஒரு பல்லவ வழிவந்த காடவ மன்னன் பெயர் கோப்பெருஞ் சிங்கன்1216- 1243 AD. ஒரு தமிழக ஊர் சிங்காநல்லூர். அரக்கன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். அர் செம்மைக் கருத்து வேர். அரக்கப்பன் > ராக்கப்பன், அரக்காயி > ராக்காயி என திரிந்து இன்றும் தமிழகத்தில் வழங்குகின்றது.
Lloque Yupanqui 1260AD - தமிழில் (அ)ள்ளக்கி யாப்பங்கை > அள்ளன் அக்கன் யாப்பன் அங்கன் என்பதன் மாற்று வடிவம். பண்டு முதல் உயிர் எழுத்தை எழுதாமல் விடுவது சிந்து, பிராமி எழுத்து முறையில் கடை பிடிக்கப்பட்டது. அள்ளன் - சிந்து முத்திரை 9301 இல் பதிவான பெயர், IsD பக். 202. அள்ளக்கன் எனவும் சேர்ந்து வழங்கும். அங்கன் - அங்கைய்யன், அங்கப்பன் என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. சிந்து முத்திரை M2566 இல் பதிவான பெயர், IsD பக்.117. இங்கு யாப்பங்கை என புணர்ந்து வழங்குகிறது.
யாப்பன்>ஆப்பன் ஆகும்.
Mayta Cápac 1290AD - தமிழில் மாய்ட காப்பக் > மாயட்ட காப்பக்கன் என்பது செப்பமான வடிவம். மாயன் அட்டன் புணர்ந்து மாயட்ட என்றானது. மாயன் - சிந்து முத்திரை M384 இல் பதிவான பெயர், IsD பக். 111. மாயக்கூத்தன், மாயவன் ஆகிய பெயர்கள் இன்றும தமிழரிடையே வழங்குகின்றன. அட்டன் - சிந்து முத்திரை M706 இல் பதிவான பெயர், IsD பக். 96. அட்டத்தூர் (மதுரை) ஓர் ஊர்.
Yahuár Huacác 1380AD - யாக்குய்யார் குய்யகாக் > யாக்கன் குய்யான் குய்யகாக்கன் என்பது செப்பமான வடிவம். குய்யான் - தமிழில் விளி ஈறாக 'ஆன்' வருவதுண்டு. குய்யன் - சிந்து முத்திரை M1097 இல் பதிவான பெயர்,IsD பக். 203. ஒரு Qin ஆள்குடி சீன மன்னன் பெயர் Sūn Quán 222–252 AD - தமிழில் சான் குய்யான் என்பது. காக்கன் - ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Kōgen 214 BC–158 BC - தமிழில் காக்கன் என்பது.
Viracocha 1410-1438AD his heir Urcon - தமிழில் வய்ர காக்(கன்), அவன் மகன் அரக்கன் என்பதும் செப்பமான வடிவம். வய்ரன் - வய்ரவன் என இன்றும் அவன் ஈறு பெற்று வழங்குகின்றது. காக்கன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Kōgon 1331–1333 AD - தமிழில் கா(க்)கன் என்பது.
Túpac Inca Yupanqui 1471-1493AD - தமிழில் தூவாக் இன்க யாப்பங்கை > தூவாகன் இன்கன் யாப்பங்கன் என்பது செப்பமான வடிவம்.
தூவான் - இப்பெயர் 'கன்' ஈறு பெற்றுள்ளது. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD – தமிழில் தூவா ருதன் > தூவான் (எ)ருதன் என செப்பமாக படிக்கலாம். வ>ப> fa திரிபு. இப்பெயருள்ள சில தமிழக ஊர்கள் தூவாக்குடி(திருச்சி, கும்பகோணம்).
Huayna Cápac 1493-1525 AD - தமிழில் குய்யண்ண காப்பக > குய்யண்ணன் காப்பக்கன் என்பது செப்பமான வடிவம். குய்யண்ணன் - சிந்து முத்திரை M2065 இல் பதிவான பெயர், IsD பக். 203.
Ninan Cuyuchi 1525 AD - தமிழில் நின்னன் குய்யக்கி என்பது. நின்னன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Nintoku 313–399 AD - தமிழில் நின்தக்கு > நின்னன் தக்கன் என்பது. ஒரு மேலை நாகரிக மன்னன் பெயர் Tukulti Ninib 1290 BC > தமிழில் துக்கல் இத்தி நின் இவ் > துக்கன் இத்தன் நின்னன் இவ்வன் என்பது.
Huascár 1525-1532 AD - தமிழில் குய்யழகார் > குய்யன் அழகன் என்பதன் புணர்ச்சி வடிவம். அழகன் - மதிப்படையாக ஆர் ஈறு பெற்றுள்ளது. ஒரு எதியோபிய மன்னன பெயர் Azegan Malbagad 200 – 207 AD - தமிழில் அழகன் மால் பகடு என்பது. ஒரு கொரிய மன்னன் பெயர் Goyeolga BC 295-237 -தமிழல் காயி அழக > காயன் அழகன் என்பது.
Atahuallpa 1525-1533 AD - தமிழில் அடகுய்யல்லப்ப > அட்ட குய்யலப்பன் என்பது செப்பமான வடிவம். அட்டன் - அழகர்மலை தமிழ்பிராமி கல்வெட்டு 12:10 "வெண்ப(ளி)இ அறுவை வணிகன் எளய அடன்". இதை வெண்பள்ளி அறுவை வணிகன் இளய அட்டன் என செப்பமாக்கலாம். குய்யல் - தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Gueul BC 2099-2083 - தமிழில் குய்யல் > குய்யன் என்பது. அன் ஈறு அன்றி அல் ஈறு பயின்று உள்ளதுடன் அப்பன் என்ற மதிப்படைப் பெயரையும் கொண்டு உள்ளது இப்பெயர்.
Tópa Huallpa 1525-1533 AD - தமிழில் தாவ குய்யல்லப்ப > தாவன் குய்யலப்பன் என்பது செப்பமான வடிவம். ஆங்கிலச் சொல் டாப் (Top) என்பதில் ஒகரம் ஆகாரமாய் ஒலிப்பதை நோக்குக. வ > ப திரிபு. தாவன் - ஒரு பழந்தமிழப் பெயர். புகளூர் தமிழி கல்வெட்டு 20:3 இல் பயின்றுள்ள பெயர், “யாற்றூர் செங்காயபன் தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் ன் அறுபித்த அதிட்டானம்”. இதை யாற்றூர் செங்காயபன் தாவனூர்ப் பின்னன் கூற்றன் அறுப்பித்த அதிட்டானம் என செப்பமாக்கலாம். தாவனூர்(மலப்புரம்), தாவன்கரை (Davangere, Karnataka). ஒரு சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Go-Toba 1183–1198 AD - தமிழில் கோ தாவ(ன்) என்பது.
Tikal rulers (Guatemala)
Lady Une' B'alam 360-378AD - தமிழில் அரசி உன்னி வல்லம் என்பது செப்பமான வடிவம். பெண் பால் என்பதால் ஆண் பால் விளக்கம் தேவையில்லை. உன்னி - சிந்து முத்திரை M2038 இல் பதிவாகி உள்ளது, IsD பக். 104. கேரளத்தில் இன்றும் வழங்கும் பெயர் உன்னி.
Yax Nuun Ayiin I 379-404AD - தமிழில் யாக் நுவ்வன் ஆயன் > யாக்கன் நுவ்வன் ஆயன் என்பது செப்பமான வடிவம். யாக்கன் - யாற்றூர் > ஆற்றூர்(ஆத்தூர்) எனத் திரிவது போல யாக்கன் ஆக்கன் என திரியும். ஆக்கன் என்ற பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. நுவ்வன் - சிந்து முத்திரை M2264 இல் பதிவான பெயர், IsD பக். 153. ஆயன் - ஒரு சப்பானிய வேந்தர் பெயர் Ayahito 1817– 1846 AD -தமிழில் ஆயகித்த > ஆய(ன்)கித்த(ன்) என்பது. சிந்து முத்திரை K7086 இல் பதிவான பெயர், IsD பக். 139.
K'an Ak 458-486AD - தமிழில் கான் அக் > கானன் அக்கன் என்பது செப்பமான வடிவம். கானன் - சில தமிழக ஊர்கள் கானங்குப்பம், கானஞ்சாவடி (பண்ருட்டி). பெயர் கானக்கன் என புணர்த்தும் வரும்.
Wak Chan K'awil 537-562AD - தமிழில் வக் சான் காவல் > வக்கன் சானன் காவன் என்பது செப்பமான வடிவம். வக்கன் - இன்றும் வழங்கும் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. சானன் - சிந்து முத்திரை M1498 இல் பதிவான பெயர், IsD பக். 260, சானூர் (மதுராந்தகம்) முதுமக்கள் ஈமக்காடு அமைந்த ஊர். காவன் - சிந்து முத்திரை 8074 இல் பதிவான பெயர், IsD பக். 205. சில தமிழக ஊர்கள் காவனூர்(புதுச்சேரி), காவலூர்(சவ்வாது மலை).
Nuun Ujol Chaak 650-679 AD - தமிழில் நுவ்வன் உக்கல் சாக் > நுவ்வன் உக்கன் சாக்கன் என்பது செப்பமான வடிவம். க - ச - ஜ திரிபு. சாக்கன் - சிந்து முத்திரை H3363 இல் பதிவான பெயர், IsD பக்.100. ஒரு எதியோபிய மன்னன் பெயர் Zagun Tsion Hegez 192- 197 AD - தமிழில் சாக்கன் திசையன் இக்கி. இப்பெயரில் அமைந்த சில தமிழக ஊர்கள் சாக்கம்பட்டி (தேனி), சாக்கூர் (காளையார்கோவில்).
Yo'nal Ahk III, Piedras Negras Ruler, 758-767 AD - தமிழில் யாணல் அக்க(ன்) > யாணன் அக்கன் என்பது செப்பமான வடிவம். யாணன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை L6052 இல் பதிவான பெயர், IsD பக். 118. ஒரு Zhou ஆள்குடி சீன மன்னன் பெயர் Ji Yan 314 –256 BC - தமிழில் தீ யாண்(அன்) என்பது.
Tekum Uman, a lord from Totonicapan, of Q'umarkaj - தமிழில் திக்கம் உமன் > திக்கன் உம்மன் என்பது செப்பமான வடிவம். பெயர் அம் ஈறு பெற்று உள்ளது. திக்கன் - தெலுங்கில் மகாபாரதம் இயற்றியவர் Tikkana Somayaji (Telugu:తిక్కన్న) 1205–1288AD - தமிழில் திக்கண்ணா சோமயாஜி என்பது. மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு 1:4 இல் "கணிஇ நதஸிரிய் குவ(ன்) -- வெள்அறைய் நிகமது காவிதி காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்" என உள்ளது. இதை கணி நந்தாசிரிய குவ்வன் வெள்ளறை நிகமத்து காவிதி காழிதிக்க அந்தை அஸுதன் பிணவு கொடுப்பித்தோன் என செப்பமாக்கலாம். சிந்து முத்திரை H3231 இல் பதிவான பெயர், IsD பக். 139. உம்மன் - இகர ஈறு பெற்று உம்மி என்றும் வழங்கும். எடக்கல் தமிழ் பிராமி கல்வெட்டு 26:2 "கடும்மி புத சேர கோ ". இதை கடு உம்மி பூத சேர கோ என செப்பமாக்கலாம். சிந்து முத்திரை M1537 இல் பதிவான பெயர், IsD பக்.114.
Ajaw B'ot 771 AD Seibal ruler - தமிழில் அகவ வத் > அகவன் வத்தன் என்பது செப்பமான வடிவம். க > ச > ஜ திரிபு. அகவன் - சிந்து முத்திரை H3599 இல் பதிவான பெயர், IsD பக். 270. வத்தன் - சிந்து முத்திரை M108 இல் பதிவான பெயர், IsD பக். 142.
Wat'ul Chatel 830-889 AD Seibal ruler - தமிழில் வத்தல் கத்தல் > வத்தன் கத்தன் என்பது செப்பமான வடிவம். கத்தன் - ஓர் ஊர் கத்தப்பட்டி(மதுரை). சிந்து முத்திரை M1532 இல் பதிவான பெயர், IsD பக். 81. வத்தன் - சிந்து முத்திரை M2532 இல் பதிவான பெயர், IsD பக்.143. ஓர் ஊர் வத்தல்பட்டி(பென்னாகரம்), வத்தலகுண்டு(தேனி).
Yuknoom Ch'een II 636-686 AD calakmul ruler - தமிழில் யாக்கன் ஊம் சேயன் > யாக்கன் ஊமன் சேயன் என்பது செப்பமான வடிவம்.
ஊமன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். சேயன் - அன் ஈறு பெற்றும் பெறாமலும் சிந்து முத்திரைகளில் பயில்கிறது. யானைக் கண் சேய் ஒரு சேர மன்னன்.
மேலே காட்டிய பெயர்கள் தமிழே என்பதும், இன்கா, மாய நாகரிகங்கள் தமிழர் அமைத்த நாகரிகங்களே என்பதும் இக்கட்டுரையை படிக்கும் அறிஞர் முடிபிற்கு விடப்படுகின்றது.
பின் குறிப்பு:
1. பார்வை நூல் - 'தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 2006, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
2. தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பியர் கொண்டு வந்ததாக சொல்லப்படும் சோளம் ஒய்சாளர் ஆட்சியில் இருந்ததாக சொல்லும் வலைத்தளம் http://econ.ohio-state.edu/jhm/arch/maize.html
3. பேரா. இரா. மதிவாணன் எழுதி வெளியிட்ட ஆங்கில நூல் Indian script Dravidian,1995.
4.Meso American cultures - Wikipedia
5.. மேல் உள்ள மன்னர் பெயர்களைக் கொண்ட சில சிந்து முத்திரைகள் படித்து படம் ஒட்டப்பட்டு உள்ளன..
M595a U வடிவில் இருபுறம் இரு கோடுகள் - கா, சூலம் - உ, ஆள் - அ, ஐந்து முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், "
இரு மேல் கோடுகள் - அ , சக்கரம் - ன். இதில் உள்ள ஒலிகள் காஉஅ யாணன் > காவ யாணன் > காவ(ன்) யாணன்.
துருக்குமேனித்தான் கோனூர் திப்பி எனும் இடத்தில் கிட்டிய சிந்து முத்திரை இது. U வடிவில் இருபுறம் இரு கோடுகள் - கா, சூலம் - உ. செவ்வகத்தின் மேல் நெடு கோடு - ண், செவ்வகம் - ட, ஆள் உரு - அ, கோடு ஊடுருவிய ஆங்கில D - தி, இரு செதில் உள்ள மீன் - சா , மீனுள் சிறு கோடு - ன், மீண்டும் இரு செதில் மீன் - சா, மீன் மேல் கூரை - ம், இணையான இரு சிறு கோடு - அ, வேர் கிழங்கு - ன். இதில் உள்ள ஒலிகள் காஉண்ட அதி சான் சாம்அன் என்பது. இதை கா உண்ட அதி(அன்) சான்(அன்) சாமன் என செப்பமாக்கலாம்.
கோடு வலித்த முக்கோணம் - மா, முன்று இணையான நெடுங் கோடு - த, நடுவில் நெடுங் கோடுள்ள U - ன்க(ங்க), கால் மடித்து உட்கார்ந்த ஆள் - ன். இதில் உள்ள ஒலிகள் மா தங்கன்.
கோடு ஊடுருவிய ஆங்கில D - தி, ஆங்கில U வடிவு - க். அன் ஈறு சேர்த்து திக்அன் > திக்கன் என படிக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.