பெரியார் திருமணத்தை எதிர்த்தாராம்..
அதனால்
பெரியார் குடும்பத்தை எதிர்த்தாராம்.
மனிதர் மிருகங்கள் போல்
மாறி மாறி உறவு கொள்ளலாமாம் என்றாராம்.
மூடரே!
பெரியார் எதிர்த்தது குடும்பத்தை அல்ல.
பின்
திருமணம் என்னும் சடங்கை.
ஏன்?
அது பெண்ணை அடிமையாக்கியது
என்பதனினால்.
சடங்கைத்தான் எதிர்த்தார்.
சேர்ந்த் வாழ்ந்து சந்ததி
பெருக்கும் அன்புமிகு
உறவை அல்ல.
சடங்கை ஏன் எதிர்த்தார்.
சடங்கு எப்படி பெண்ணை
அடிமையாக்கிய்து?
வெள்ளைக்காரன் சட்டம் போடும் வரைக்கும்
வெங்காயங்களே
பெண்களை உடன் கட்டை ஏற்றினார்களே
ஏன்? அந்தச் சடங்கால்தானே.
அதனால்.
உடன் கட்டை ஏற்றுவதற்காகப்
பாடையில் படுக்க வைத்து மனைவியைக்
கை ,கால் கட்டி தூக்கிச் செல்வார்களாம்.
கூடவே ஒருத்தன் பின்னால் தடியுடன் செல்வானாம்.
எதற்கு?
அப்பெண்ணின் கை, கால் அசைந்தால்
அடிப்பதற்காம். அதற்காகவாம்.
அதனால்தான் அதனை அனுமதிக்கிற
சடங்கை எதிர்த்தார் பெரியார்.
அதனால்தான் அவர் தந்தை.
அவர் பெண்கள் மேல் அன்பு வைத்திருந்த
தந்தை. அதனால் பெரியார்.
ஆணைப்போல் பெண்ணும் சுதந்திரமாக
ஆக வேண்டுமென்றவர் பெரியார்.
அதனால் பெண்களை
அடிமையாக்கி வைத்திருக்கும் திருமணச்சடங்கை
அடியோடு வெறுத்தார். எதிர்த்தார்.
ஆனால்
மனமொத்துக் கூடி வாழ்ந்து , குழந்தை பெறுவதை
அவர் எதிர்க்கவில்லை.
'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. ' என்றார் வள்ளுவர்.
அதனால் அவர் குறளை விமர்சித்தார்.
குறள்
ஆக்கியோனையும் விமர்சித்தார்.
அதிலென்ன தவறு?
வள்ளுவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?
தன்னையே விமர்சி. பகுத்தறி என்றவர் பெரியார்.
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென்றால் பெய்யுமாம் மழை.
ஏன் கொழுநள் தொழுதெழுவான்
பெய்யென்றால் பெய்யக்கூடாது
பெருமழை?
பெரியார் நாடுகள் சுற்றிப் பயணித்தவர்.
அந்தக் காலம்
காலனிகள் பல இருந்த காலம்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில்
அகிலம் இருந்த காலம்.
ஆகாயத்தைக் கண்டு பிடித்தார் மேனாட்டார்.
அறிவியலில் சாதனை செய்தார் மேனாட்டார்.
அறிவியலில் நாமென்ன செய்தோம் என்று
உள்ம் வதங்கினார் பெரியார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு
இந்தியர் காட்டுமிராண்டிகள் என்று
போதிக்கப்பட்டது கண்டு மனம்
புழுங்கினார் அவர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மொழி
அறிவியலில் சாதித்தது என்ன இலக்கியம் தவிர
என்றார்.
இலக்கியத்திலும் கூட ஆரியரின் ஆதிக்கம் என்றார்.
உடனே நம் மொழி வெறியர் ஓடி வந்துவிடுவார்.
கல்லணை கட்டிய கரிகாலன் திறன் பற்றி மெச்சுவார்.
இவர்களில் பலர் இலக்கியம் படித்திரார்.
இன் தமிழ்க் கவிதைகள் படித்திரார்.
இவ்வெறியர்களை மேடைக்கு வாதிட அழைத்துப் பாருங்கள்.
உண்மை புரியும்.
இவர்களது ஆதாரங்கள் எல்லாம் யு டியூப் காணொளிகளும்,
அங்கு நடைபெறும் வம்பளப்புகளும்தாம்.
நான் கூறுவதை அப்படியே நம்பி விடாதே என்றார் பெரியார்.
நான் கூறுவதைப் பற்றிச் சிந்தித்து முடிவெடு என்றார் பெரியார்.
நல்லவை என்று நீ நம்புவதை ஏற்றுக்கொள்.
நம்பாதவற்றை தள்ளி விடு என்றார் பெரியார்.
மொழிவெறியரே! பெரியாரை
மொழிக்குள்.
இனத்துக்குள்,
வர்ணத்துக்குள்,
வர்க்கத்துக்குள்
வைத்துச் சிறுமை செய்யாதீர்.
ஏன் என்றால்
அவர்
மனிதருக்காக
மனிதர்தம் விடுதலைக்காகச் சிந்தித்த
மகா மனிதர்.