1981-1982 காலகட்டம் என் வாசிப்பைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியமானது. அக்காலகட்டத்தில்தான் எனக்கு மார்க்சிய நூல்களுடனான அறிமுகம் ஏற்பட்டது. சிந்தனையை விரிவடைய வைத்த நூல்கள். மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பிரச்சினைகளப்பற்றிய தெளிவினை ஏற்படுத்திய நூல்கள். கொம்பனித்தெருவிலுள்ள மார்க்சிய நூல்களை விற்கும் புத்தகைக்கடையொன்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, டூரிங்கிற்கு மறுப்பு, வரலாற்றுப் பொருள்முதவாதமும், இயக்கவியல் பொருள்முதல்வாதமும் (ருஷிய அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு), லெனின் நூல்கள் பல என்று வாங்கி வாசித்தேன். கூடவே டால்ஸ்டாயின் புத்தியிர்ப்பு', தத்யயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், துர்க்னேவின் நாவல்கள், அன்டன் செகாவின் சிறுகதைகள், புஷ்கினின் படைப்புகளை உள்ளடக்கிய நூல் என்று புனைகதைகளையும் வாங்கி வாசித்தேன்.
இவ்விதமாக அவற்றில் மூழ்கியிருந்த நான் அவற்றை வாசித்ததால் என்னுள் எழுந்த எண்ணங்களை 'சிஆர் கொப்பி'களில் எழுதத்தொடங்கினேன். இலங்கைத் தமிழ்ப்பிரச்சினை பற்றிய மார்க்சிய அடிப்படையிலான எனது எண்ணங்கள், கவிதைகள், என் தனிப்பட்ட உணர்வுக்கவிதைகள் என்று நேரம் கிடைத்தபோதெல்லாம் எழுதினேன். அக்குறிப்பேடுகளில் சில என்னிடமின்றும் உள்ளன. அவற்றை அப்படியே எனது கையெழுத்துப்பிரதிகளாகவே இங்கு பதிவு செய்தால் என்ன என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் முதல்படியாக இந்நீண்ட கட்டுரையினை உங்களுக்கு வாசிக்கத் தருகின்றேன்.
இதனை எழுதிய காலத்தில் என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் இக்கட்டுரையினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்து என் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு என்னும் வகையில் இவை என்னைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியம் மிக்கவை. என் குறிப்பேட்டிலுள்ள இக்கட்டுரையை எழுதிய நிலையிலேயே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் இருக்கக்கூடும். இருந்தால் அறியத்தாருங்கள். கருத்துகளில் ஏதாவது குழப்பங்கள் இருப்பினும் அறியத்தாருங்கள். இக்கட்டுரை அன்று என் மனத்தில் எழுந்த சிந்தனைகளின், கேள்விகளின் பிரதிபலிப்பு. இக்கட்டுரை எழுதிய திகதி 29.12.1982
நெடுங்கட்டுரை: மார்க்சியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஒன்று: கம்யூனிஸ்ட்ட்டுகளும், கடவுளும் மதவாதிகளும், பரிணாமமும்
அத்தியாயம் இரண்டு: மார்க்ஸிசமும் , அதன் மீதான நாத்திகள், பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுகளும்.
அத்தியாயம் மூன்று: மானுட வர்க்கப் பிரச்சினைகளும் , அக உணர்வுகளும் பற்றியதொரு கற்பனாவாதம்.
அத்தியாயம் நான்கு: புரட்சிகளும், புரட்சிகர எதிர்ப் புரட்சிகர சக்திகளும் (இலங்கைத் தமிழர் பிரச்சினையுட்பட)
கட்டுரையை இணையக் காப்பகத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.