இன்று வெளியான 'காலைக்கதிர்' பத்திரிகையில் வெளியான செய்தியொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி செப்டம்பர் 1 வரை யாழ் வீரசிங்க மண்டபத்தில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணத்துக்கமைய நடைபெறவுள்ள 'யாழ் புத்தகத் திருவிழா' பற்றியது. பெரிய அளவில் நடைபெறவுள்ள இப்புத்தகத்திருவிழாவில் பாடப்புத்தகங்களுடன் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று அறிய முடிகின்றது.
ஆளுநர் அவர்கள் புத்தகக் கண்காட்சியுடன் நின்று விடாது இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளை (புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கியதாக) பதிப்பகங்கள் அல்லது அமைப்புகள் வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனை செய்வதற்கும் வசதிகள் செய்துகொடுத்தால் நன்றாகவிருக்கும். மேற்படி புத்தகத்திருவிழா மேற் குறிப்பிட்டவாறு புத்தக விற்பனையையும் உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடும்.
அத்துடன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பதிப்பகங்கள் வெளியிடுகையில் அவற்றை உடனுக்குடன் வடக்கிலுள்ள நூலகங்கள் வாங்கும் வகையிலான திட்டமொன்றினையும் உருவாக்கிச் செயற்படுத்த முன்வரவேண்டும். அவ்விதம் செய்தால் எழுத்தாளர்கள் தம் படைப்புகள் அதிக அளவில் நூலுருப்பெறும் சாத்தியங்களைப் பெறுவார்கள். பதிப்பகத்தினர் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாங்குவதற்கு முனைந்து நிற்பார்கள். செய்வாரா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.