தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவருடனான சந்திப்பொன்று இன்று மாலை ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 5 ஸ்பைஸ் (5 Spice) உணவகத்தில் நிகழ்ந்தது. மேற்படி நிகழ்வில் எழுத்தாளர்கள் தேவகாந்தன், கடல்புத்திரன், நண்பர் எல்லாளன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். சுமார் இரண்டு மணித்தியாலம் வரை நிகழ்ந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களைப்பற்றிய எம் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டோம்; நனவிடை தோய்ந்தோம்.
சுதாகரனின் சிறுகதைகள் பற்றி, தேவகாந்தனின் நாவல்கள் பற்றி, ஒவ்வொருவரினதும் பால்ய காலத்து வாசிப்பு அனுபவங்கள பற்றியெல்லாம் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. படத்தில் இடமிருந்து வலமாக: வ.ந.கிரிதரன், தேவகாந்தன், சுதாகர், எல்லாளன் & கடல்புத்திரன். சந்திப்பு ஆரோக்கியமாக அமைந்திருந்தது மகிழ்ச்சியே.
5 ஸ்பைஸ் (5 Spice) உணவகப் பணியாளர்களின் பண்பான சேவையும், சுவையான உணவு வகைகளும் நினைவில் தொடர்ந்தும் நிற்கக் கூடியவை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.