என் மாணவப்பருவத்தில் என் போன்றவர்களையெல்லாம் சிரிக்க வைத்த எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார் என்னும் வினாவுக்கான விடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ' ப்ன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த. இந்திரலிங்கம்' என்னுமொரு பதிவினைப் 'பதிவுகள்' இணைய இதழிலும், முகநூலிலுமிட்டிருந்தேன்.
என் 'பதிவுகள்' இணைய இதற் பதிவினைப் பார்த்த நாடகவியலாளர் க.பாலேந்திரா இவருக்கு அப்பதிவின அனுப்பியிருக்கின்றார். அத்துடன் என் மின்னஞ்சல் முகவரியையும் அவருக்கு அறியத்தந்திருக்கின்றார். அவர் உடனேயே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு தன் எண்ணங்களைக் குறிப்பிட்டிருந்தார்:
மின்னஞ்சல் 1:
"Hi Giritharan, I am plesantly surprised to read your kind notes about me. K. Balendra emailed me your notes about me on Pathivugal. Even I have forgotten about some of my writings in Virakesari, Chinthamani and Jothi, in which my humorous moon-landing story was serialized. Virakesari and Chintamani had been very kind to me and published pages and pages of my articles. I now live in Buffalo, NY, not far from you. Lately I have been working on a novel ( In English) and was lazy with it. Your notes inspired me this morning and I have resumed working on it. If you like, I am willing to write humorous pieces for your Pathivugal.com. It will keep me in touch with Tamil writing. Please tell me about you. Hope to hear from you soon. All best.
sinerely,
T. Indralingam"
என்னை வியப்புக்குள்ளாக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதமிது.
எழுபதுகளில் தினமணி, நவீன விஞ்ஞானி, ஜோதி, ஆனந்த விகடன் , ரீடர்ஸ் டையஸ்ட், மற்றும் பி.பி.சி உலகச் சேவை ஆகியவற்றில் எழுதிய ஒருவர் இவர். அறிவியல் புனைகதை எழுத்தாளரும், அறிவியல் அறிஞருமான ஆர்தர் சி கிளார்க்கினால் பல் வகையிலும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்பட்ட எழுத்தாளர் த.இந்திரலிங்கம். நகைச்சுவைப் படைப்புகளுடன் அறிவியற் புனைவுகளையும், அபுனைவுகளையும் எழுதிய ஒருவர் இவர். அத்துடன் 'செங்கதிர்' என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இவர் இருந்திருக்கின்றார். இருந்தாலும் இவரது படைப்புகள் எவையும் நூலுருப்பெற்றதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் இவர் எழுதியிருக்கின்றார். தற்போதும் ஆங்கில நாவலொன்றினை எழுதிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இருந்தும் இவரைப்பற்றிப் போதிய விபரங்களை எம் புகழ்பெற்ற திறனாய்வாளர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர்களில் பலர் தம்மை முதுகு சொறிபவர்களைத் தட்டிக்கொடுப்பதில் ஈடுபடுவதன் மூலம் தம்மை வளர்ப்பவர்கள். ஆனால் உண்மையான திறமை மிக்க எழுத்தாளர்களைக் காலம் மறப்பதில்லை. மீண்டும் தகுந்ததொரு தருணத்தில் இனங்காணவே செய்யும் . அவரது சிறந்த படைப்புகளில் தம்மைப்பறிகொடுத்த வாசகர்களால் மீண்டும் உயிர் பெறுவார்கள்.
இந்திரலிங்கம் அவர்கள் தன் கடிதத்தில் தன் படைப்புகள் பலவற்றை இழந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார், ஆனால் சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில், ஆனந்தவிகடன் போன்றவற்றில் எழுதியவற்றை அவர் முயற்சி செய்தால் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கைத் சுவடிகள் திணைக்களத்தில் நிச்சயம் அவை இருக்கும்.
அத்துடன் பதிவுகள் இணைய இதழிலும் தமிழில் நகைச்சுவைப்படைப்புகளை எழுத விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றார். மகிழ்ச்சியான தகவலிது. எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் இந்திரலிங்கம் அவர்களே. அத்துடன் எனது பதிவு மீண்டும் தன்னை எழுதத்தூண்டியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். அதுவும் மகிழ்ச்சியினைத்தரும் இன்னுமொரு விடயம்.
தற்போது 'பவல்லோ, நியூயார்க்கில் வசிக்கும் இவரது புகழ்பெற்ற நகைச்சுவைத்தொடரான யாழ்ப்பாண மணிக்கூட்டுக்கோபுரத்துகண்மையிலிருந்து சந்திரனுக்குப் பயணித்த எம்மவரின் விண்வெளிப்பயணம் பற்றிய புனைகதையை மீண்டும் படிக்க வேண்டுமென்ற பேராசை எனக்குண்டு. அந்நாவலை அவர் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து பெற்று நூலாக்க வேண்டும். பதிவுகளில் அதனைத்தொடராக வெளியிட வேண்டும். அதனை வாசித்து அனைவரும் ஆனந்தக்கூத்தாட வேண்டும்.
இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி: இந்திரலிங்கம் அவர்கள் முகநூலிலும் இருக்கின்றார். அவரது முகநூல் அடையாளம்: tham indralingam.
எனது பதிவினைப்பார்த்து நாடகவியலாளர் க.பாலேந்திரா அவர்களும் தகவல் அனுப்பியிருந்தார். அதிலவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"அவர் எனது ஊர் அரியாலையை சேர்ந்தவர். 68 ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அப்போதிருந்தே எழுதி வருகிறார்.தற்போது New York இல் இருக்கிறார். முகநூலில் தொடர்பு கொள்ளலாம். "
நன்றி பாலேந்திரா! உங்களது முயற்சியால்தான் எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார் என்பதையும் , அவர் பற்றிய நிகழ்காலத்தகவல்களும், அவருடனான தொடர்பும் கிடைத்தன. அவ்வகையில் உங்கள் பங்களிப்பு ஒருவிதத்தில் எழுத்தாளர் த.இந்திரலிங்கத்தை மீள இனங்காண வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.