இலங்கைப்புகலிடத் தமிழர்களின் 'நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism) : வ.ந.கிரிதரனின் தேர்தெடுத்த சிறுகதைகள் மீதான வாசிப்பு! - கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் (The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr. Gnanaseelan Jeyaseelan)
நாடு கடந்த அரசு, நாடு கடந்த தேசியம், நாடு கடந்த உற்பத்தி, நாடு கடந்த பொருளாதாரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். 'நாடு கடந்த உள்ளூர் தேசியம்' (Translocal Nationalism) என்னுமொரு சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கின்றீகளா? குறிப்பாக எமது விமர்சகர்களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கேட்டிருந்தால் அறியத்தாருங்கள். ஆனால் நான் முதலில் இச்சொற்றொடரை அறிந்து கொண்டது 2007இல். அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த கலாநிதி ஞானசீலன் ஜெயசீலனின் ஆய்வுக்கட்டுரையொன்றிலிருந்து. அக்கட்டுரையை அவர் மார்ச் 13, 2007 அன்று சென்னையில் 'நியூ காலே'ஜில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுக் கருத்தரங்கில் சமர்ப்பித்திருந்தார். அக்கருத்தரங்கானது ஆசியர்களின் புகலிடப் புனைவுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் கலாச்சாரப்பிரச்சினைகள் பற்றியது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்ட எனது சிறுகதைகளான 'ஒரு முடிவும் விடிவும்', 'ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை', 'மான்ஹோல்', 'வீடற்றவன்', 'சுண்டெலிகள்' மற்றும் where are you fom? ஆகியவையாகும்.
இதற்கு முதல் நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் என்றால் என்ன? என்று சிறிது பார்ப்போம். புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த குடிவரவாளர்கள் பலரும் பல்வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் அவர்கள் எதிர்நோக்கும் அடையாளச்சிக்கல்கள் பல்வகையின. மொழி, கலாச்சாரம், நிறம் என்று அவர்கள் பல்வகைப்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அதே சமயம் அவர்களால் அவர்கள் விட்டு விட்டு வந்த பிறந்த மண், அங்குள்ள அவர்களை உருவாக்கிய கலாச்சாரக் கூறுகளை, அரசியலை எல்லாம் மறந்து விட முடியாது. நாடு கடந்து வாழும் நிலையிலும் அவர்கள் கவனம் அவர்களது இழந்த மண்ணின் மீதிருக்கும். பிறந்த மண்ணின் அரசியலில் அவர்களது பங்களிப்பு இருக்கும். பிறந்த மண்ணின் பொருளாதாரத்தில் அவர்களது பங்கு இருக்கும். பிறந்த மண்ணின் சமூகத்தில் புகலிட அனுபவங்கள் மூலம் பல் வகை மாற்றங்கள் ஏற்படும் நிலைக்குக் காரணமாகவும் புகலிடக் குடிவரவாளர்களிருப்பார்கள்.
நாடு கடந்த நிலையிலும் புகலிடம் நாடிய குடிவரவாளர்கள்தம் வாழ்க்கையில் அவர்கள் பிரிந்து வந்த 'உள்ளூ'ரும் இருக்கும். இக்கருத்தாக்கத்தின் அடிப்படையில் என் சிறுகதைகளைக் கலாநிதி ஞானசீலம் ஜெயசீலன் ஆய்வுக்குட்படுத்தியிருந்தார். அது வரவேற்கத்தக்கது. கலாநிதி ஞானசீலன் ஜெயசீலனின் முழுக்கட்டுரையினையும் பின்வரும் இணையத்தளத்தில் வாசிக்கலாம்: The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr. Gnanaseelan Jeyaseelan http://jgspring.blogspot.com/2012/10/the-translocal-nationalism-of-sri.html
இவ்வாய்வுக் கட்டுரையானது கலாநிதி இரா.சீனிவாசனைப் பிரதம ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் சர்வதேச ஆய்விதழான 'புதிய பனுவல்' சஞ்சிகையிலும் வெளியாகியுள்ளது: http://www.indianfolklore.org/…/…/Panu/issue/view/81/showToc
என் புனைகதைகளை மையமாக வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட , நான் அறிந்த ஆய்வுக்கட்டுரைகள் சில வருமாறு (ஒரு பதிவுக்காக):
1. The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan
– By Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –
2. Nallur Rajadhani by K.S. Sivakumaran
3. Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Stories By M. Durairai
4. The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr.Gnanaseelan Jeyaseelan.
5. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan – Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –
6. ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan. – Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –
7. ‘SEEKING THE INVISIBLE HUMANNESS IN AN ALIEN LAND’ A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan – Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –
இவற்றை வாசிப்பதற்கு: https://vngiritharan23.wordpress.com/category/reviews/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.