எழுத்தாள நண்பர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலை வாங்கி வைத்திருக்கும்படியும் , டொராண்டோ வரும்போது நூலினைப்பெற்றுக்கொள்வதாகவும் நண்பரும், அரசியற் செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் கூறியிருந்தார். அவ்விதம் வாங்கி வைக்கப்பட்டிருந்த நூலை இன்றுதான் அவரிடம் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
விக்டோரியா பார்க் மற்றும ஃபிஞ்ச் வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மக்டானல்ஸ்ட்ஸ் உணவகத்தில் மாலை எட்டு மணியளவில் சந்தித்தோம்.
வழக்கம் போல் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். உயிர்ப்பு 5இல் வெளிவந்த தன்னியல்பு, பொதுப்புத்தி பற்றிய ஏகலைவனின் நீண்ட பயனுள்ள கட்டுரை பற்றி, உயிர்ப்பு இதழ்களின் தொகுப்பின் வெளியீடு பற்றி, எண்பதுகளிலிருந்து இன்று வரையிலான கலை, இலக்கிய மற்றும் அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக உரையாடல் அமைந்திருந்தது.
உரையாடலின் முக்கிய பங்கினை சம்பூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையம் எடுத்துக்கொண்டது. விரைவில் இது பற்றியொரு கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும், தானும் அந்நிகழ்வில் உரையாட இருப்பதாகவும் ஜான் மாஸ்டர் எடுத்துரைத்தார். சீனாவுக்குப் போட்டியாக ஏற்கனவே வடக்கில் கா பதித்த இந்தியாவின் பதில் நடவடிக்கையாகவே ஜான் மாஸ்ட்டர் கருதுவதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களைப்பை இணைக்கும் வகையில் புகையிரதப்பாதை அமைப்பதில் கவனம் செலுத்துவது பற்றியும் , இலாபநோக்கற்ற நிலையில் இயங்கும் அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும், ஜான் மாஸ்ட்டருடன் கருத்துகளைப்பகிர்ந்துகொண்டேன்.
மேலும் சூழலைப்பாதிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையொன்று செயற்படுவது பற்றியும் அவர் தனது உரையாடலில் சுட்டிக்காட்டினார். சூழல் பாதுகாப்பும், பாதிப்பும் உண்மையிலேயே இலங்கை போன்ற நாடுகளில் தொழி்ற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் மிகுந்த கவனத்துக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள். தேவையற்ற வகையில் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் தொழிற்சாலைகள் நிறுவப்படுவது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஜான் மாஸ்ட்டருனான சந்திப்பு என் கவனத்தைச் சம்பூர் அனல் மின்நிலையம் பற்றி என் கவனத்தைத்திருப்பி விட்டது. இது பற்றிய என் கூகுள் தேடல் சம்பூர் அனல் மின்நிலையம் பற்றிய இணையத்தளங்கள் பற்றிய விபரங்களைதந்தது. அவற்றிலொரு கட்டுரை CTR24.Com இணையத்தளத்தி;ல் பிரசுரமாகியுள்ளது. அது பற்றிய விபரங்கள் வருமாறு:
கட்டுரை: சம்பூர் அனல்மின் நிலையம்- மக்களைவிட மின்சாரம் மேலானதா! இக்கட்டுரையை எழுதியவர்: கலாநிதி. கோ. அமிர்தலிங்கம்கொழும்புப் பல்கலைக்கழகம்
http://ctr24.com/…/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%…
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.