தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள். மிகவும் சிறப்பாக நூலினை வெளியிட்டுள்ள ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் வதிலைப்பிரபாவுக்கும் நன்றி. எழுத்தாளர் ஒருவருக்கு அவரது படைப்பொன்றினை நூலுருவாகப்பார்க்கும்போது ஏற்படும் இன்பத்தை விபரிக்க வார்த்தைகளில்லையென்பேன். 'குடிவரவாளன்' நாவலினை வதிலைப்பிரபா கைகளில் பார்க்கையில் ஏற்படும் களிப்பும் அவ்வகையானதே.
நூலினைப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
முகநூல் பல ஆக்கபூர்வமான நன்மைகளை அதன் அங்கத்தவர்களுக்குத்தருகிறது. தம் பால்ய காலத்து நண்பர்களுடன், நண்பர்களுடன், சக எழுத்தாளர்களுடன், பதிப்பகத்தாருடன் எனப் பலருடன் ஆக்கபூர்வமான தொடர்ப்புகளைப் பேணுதற்கு உதவுகின்றது. ஓவியா பதிப்பகத்தையும், அதன் உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா அவர்களையும் நான் அறிந்து கொண்டதும் முகநூல் வாயிலாகத்தான். அதற்காக முகநூலுக்கும் நன்றி. முகநூல் மூலம் நான் அடைந்த நன்மைகளில் இதுவுமொன்று.
நீண்ட காலமாக நூலாக வெளிவரவேண்டுமென்று நான் விரும்பிய நாவல் 'குடிவரவாளன்' அதனைச் சாத்தியமாக்கிய ஓவியா பதிப்பகத்துக்கு மீண்டுமொருமுறை நன்றி. நூலின் அட்டைப்படத்திலிருந்து, பிழை திருத்தம் செய்வதுவரை, வதிலைப்பிரபா காட்டிய சிரத்தை என்னைப் பிரமிக்க வைக்கிறது. இயலுமானவரையில் எழுத்துப்பிழைகளைக் களைந்துள்ளோம். நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது.
ஓவியா பதிப்பக விபரங்கள் வருமாறு:
Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India
Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.