- எனது வலைப்பதிவுக்காக எழுதிய 'An object oriented program' கவிதையின் தமிழாக்கம். - வ.ந.கி - -
வீழும் இலை, பாடும் புட்கள்,
நீல வான், மரங்கள், சுடரும் நட்சத்திரங்கள்,
மானுடர்....
நாம் இயங்கும் வெளி-நேர
நிரலினை
எழுதியது யார்?
பொருள் சார்ந்த நிரல்.
ஏனைய நிரல்களைப் போல்
இந்த நிரலும் தவறுகளைக்
கொண்டதுதான்,
ஆனால் ஒரு விடயம் தவிர,
அது:
இது இதன் பொருட்களை
இதன் தவறுகளைச் சீராக்க
அனுமதிக்கிறது.
திருத்தங்கள் முழுமையானதோ அல்லது
இறுதியானதோ அல்லவென்றாலும்,
அவை தொடர்ச்சியான 'சேவைப்பொதி'களால்
இதன் பொருட்களால்
மேம்படுத்தப்படக் கூடியவை,
இதனை உருவாக்கிய
நிரல் வல்லுநர்களால் அல்ல.
அற்புதம்!
சேவைப்பொதிகள் - Service Packs
பொருட்கள் - Objects
நிரல் - Program
நிரல் வல்லுநர் - Programmer
An object oriented program!
- V.N.Giritharan -
Falling leaves, chirping birds,
blue skies, trees, lakes, twinkling stars,
humans..
Who wrote the code
of this program of space-time
where we all function?
An object oriented program.
This program has bugs like
all other programs,
but exceptional
in one aspect:
It allows
its objects
to fix its bugs.
Though the fixes
are not perfect and
final,
they can be upgraded
by continual service packs
by the objects themselves,
not by the programmer.
Amazing!
http://vngiritharan23.wordpress.com/2013/11/10/an-object-oriented-program/