* ஓவியம் - AI
மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.
இத்தகைய மொழியின் வெளிப்பாடுகளை நாம் நூல்களின் வழியாகவே அதிகமாகப்; பார்க்கமுடிகின்றது. இதுபோன்ற நடைமுறைகள் சமூகத்தில் இவை மிக முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. கல்வி வேறு அறிவு வேறு என்பதை முதலில் நாம் புரிதல் அவசியமாகின்றது. வெளியில் இருந்து உள்ளே செல்வது கல்வி. அந்தக் கல்வியைப் பயன்படுத்தி உள்ளிருந்து வெளியில் வருவதுதான் அறிவு என அனுபவ வாயிலாக உணர்வதை நாம் அவதானிக்கலாம்..
புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பதுபோல எனக் கூறலாம். புத்தகம் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். வாசிப்பு என்பது மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். புத்தக வாசிப்பு என்பது மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். அதிகமான அறிஞர்கள் புத்தக வாசிப்பினால்த் தான் உலகில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் தலைசிறந்த அறிஞர்களாகத் திகழ்கின்றார்கள் அந்த வகையில் உலகில் உயர்ந்த மனிதர்கள் சிலரைக் குறிப்பிட்டு இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.
நிறையப் பட்டங்களைப் பெற்று தனது பெயரை அலங்கரிப்பதை விட்டுவிட்டு நல்ல புத்தகங்களைப் படித்து தமது மனத்தை அலங்கரிப்பவர்கள்தான் உலகின் மேன்மையானவர்கள் என்பதையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்கலாம்;. நஞ்சு கொடுக்கப்படும் நேரம் வரை கிரேக்க நாட்டுக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தாராம் சோக்ரட்டீஸ் என்றும், தூக்கு மேடையை முத்தமிடும்வரை புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் உமர் முத்தார் என்றும், படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க வேண்டுமே என்று தனது சத்திரசிகிச்சையைப் பின்போட்டார் அறிஞர் அண்ணா என்றும், பயணம் போகும் வேளைகளில் எல்லாம் புத்தகங்களை வாசிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் பாரதத்தின் முதல் பிரதமராகத் திகழ்ந்த ஜகவர்லால் நேரு என்றும், முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு மேல் நூலகத்திலேயே மூழ்கிக்கிடந்தவர் கார்ல்மாக்ஸ். இன்றும் விதைந்துரைக்கப்படும் ‘மூலதனம்’ என்ற வேதாந்தத்தை கண்டு பிடித்தார் கார்ல்மாக்ஸ் என்பதையும் நாம் அறிந்து ஆச்சரியப்பட முடிகின்றது. அப்படிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தவர்கள் தான் அறிஞர்களாக, படைப்பாளிகளாக திகழ்ந்தனர் என்பதை நாம் உணர முடியும்.
சிறுவயதிலிருந்தே புத்க வாசிப்பு என்பது எமது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. வீட்டுச்சூழல் புத்தகங்களோடு அமைவதால் அந்த ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருவதை அவதானிக்கலாம். இன்றைய நவீன காலத்திலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதனை ஊட்டி வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆசிரியர்கள் இந்த வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தார்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது. பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமும் பலருக்கு வாசிப்பபு; பழக்கத்தைத் தூண்டியிருக்கிறது. இத்தகைய பல பின்னணிகளிலிருந்தான் வாசிப்புப் பழக்கம் ஆரம்பிககி;றது. அந்த வயதில் அந்தச் அழகான வாசனை வரவில்லையென்றால் பின்னர் அவை ஏற்படுவது சற்றுக் கடினமாகத்தான் காணப்படும்.
மாற்றங்கள்தான் வரலாறாக மாறுகின்றது.
தற்போது நூலகங்கள் மூடப்பட்டும் தொழில் நுட்பங்கள் பெருகி பல்வேறு தளங்களில் வாசிப்புப் பழக்கம் பரவி வந்தாலும், பல்வேறு தளங்கள்pல் மனிதர்கள் வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். முன்பை விட தற்போதுதான் கூடுதலாக வாசிக்கிறார்கள் என்று அறியமுடிகின்றது. இளைஞர்கள் வாசிப்பதில்லை என்று கூறுகின்றார்கள். அது உண்மையல்ல என்றும் இளையவர்கள் தெரிவு செய்து வாசிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். அதனை விட மிக முக்கியமான விடயம் பெண்கள் முன்பைவிடக் கூடுதலாக வாசனையைக் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
மெடிற்ரேஷன் என்று நிகழ்வுகளை செய்வதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன் காரணம். ஒரு நூலை நாம் வாசிப்பதுகூட ஒரு மெடிற்ரேஷன்தான். உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி அதில் மூழ்கி முழுமையாகத்தான் வாசிக்கவேண்டும்.
பொது நூலகங்களிலும் நமது பாடசாலை நூலகங்களிலும் நாம் வாசிக்கும்போது அந்த சுவை அற்புதமானவை. நமக்கு என்னென்ன தேவையோ அதை ஒரு அன்னை தருவதுபோல அள்ளித் தரக்கூடிய சக்தி நூலகத்தின் அந்தப் புத்தகத்திற்கு உண்டு. நூல்களை கையில் வைத்து வாசிக்கும்போது அந்த எழுத்து தரும் சக்தி அற்புதமானது. பல நூல்களை வாசிக்கும்போது நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். சில புத்தகங்கள் எனக்குள் கோபத்தை உண்டுபண்ணியிருக்கிறது. சில புத்;தகங்களை வாசித்துக் மிகவும் வேதனைப்பட்டிருக்கிறேன், அழுதிருக்கிறேன், பரவசப்பட்டிருக்கிறேன். அப்படிப் பல மாலாஜாலங்களை புத்தகங்கள்களை வாசிக்கும்போது ஏற்படுத்தும். எமது மனத்தேவையை வாசிப்பின் மூலம் கிடைக்கும்; அறிவு கொடுத்திருக்கிறது.
தாகூர் என்ற மிகப் பெரிய கவிஞர் கூறுகின்றார். இளமை என்பது மலர். அதனைப்பார்த்து ரசிக்கிறோம் ஆனந்தம் கொள்கின்றோம். ஆனால் அது கனியாக மாறும்போதுதான் அதனைச் சுவைக்க முடியும் என்கின்றார். அதுபோலத்தான் எழுத்தாளர்கள் தமது வாழ்க்கை அனுபவங்களை, தமது சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை உணர்த்தி இலக்கியங்களைப் படைக்கும்போது அது கனிபோன்று மக்கள் மனதை ருசிப்படுத்துகின்றது என்று நம்புகின்றேன். மனித மனதில் நிட்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கவிதைகளைப் படிக்கும்போது பரவசம் தராது ஆனால் அதை மூடி வைக்கும்போது அவை தரும் பரவசம் வர்ணிக்க முடியாதவை. சின்னச் சின்னத் துணுக்குகளாக ஆறாகப் பெருகி, ஆழகு தரும் சக்தி கவிதையை வாசித்தால்தான் உணரமுடியும். உலகத்தின் வாயில்களை திறந்து வைப்பது புத்தகங்கள்தான் என்பதை நம்மால் புரிய முடியும். ‘எந்தப் புரட்சியின் ஆயுதங்களையும் விட புத்தகங்கள் மிகவும் பயங்கரமானவை’ என்று ரஷ்யர்புரட்சித் தலைவர் லெனின் கூறியதை நாம் அவாதானிக்கலாம். எழுத்தின் வல்லமையும் சக்தியும் எத்ததகையன என்பதைப் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தால்த்தான் அப்பரவசத்தைப் உணரமுடியும். உண்மையில் நாங்கள் ஒரு கதையைப் படித்தோமேயானால் அதனூடாக ஒரு நிஜம் இருக்கிறது. வாழ்க்கையின் உண்மைகளைப் பதிவு செய்வதற்கு புத்தகத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது? உங்கள் அறிவு உங்கள் காலத்தோடு முடிந்துவிடும் அதனை எமது அடுத்த சந்ததியினருக்குக் கடத்த வேணும் என்றால் உணர்வு மூலமாக புத்தகத்தில் பதிவு செய்வதுதான் நமக்குக் கைகோடுக்கும். வட்ஸ்அப்பின் மூலம் கடத்த முடியுமா? இல்லை நாம் ஒரு நூலில் பதிவு செய்திருந்தால்தான் அதனை நாம் மற்றவர்களுக்குக் கடத்த முடியும்.
படிக்காமலே மேதை ஆக முடியுமா? முன்னைய காலத்தில் அறிவைத் தேடித்தேடி அலைந்து வளர்த்துக்கொண்டார்கள். இன்றைய காலம் போல அச்சு நூல்களே இல்லாத காலங்களில் துணிகளிலும் ஓலைச்சுவடுகளிலும்தான் எழுத்துக்களை எழுதி வாசித்தார்கள். அத்தகைய வழிகாட்டலுக்கு அவைகள் வழிகோலியது மட்டுமன்றி இன்றும் அவர்களது இலக்கியங்கள் விதந்துரைக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்று பாரதியார் கவிதைகளையோ திருக்குறளையோ காப்பியங்களையோ அதிசயமாகத்தான் பார்க்கின்றார்கள். சிலர் இன்றைய காலத்தில் பணம்தான் முக்கியம் என்று கூறுகின்றார்கள். புத்தகம்தானே பணத்தையும் எப்படிச் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றது. புத்தகம்தான் உலகையே மாற்றியிருக்கின்றது. உடல் மட்டும் உறதியாக இருந்தால் மாத்திரம் போதாது. மனம் உறுதியாக இருக்க வேண்டுமென்றால் நாம் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
பண்பாட்டில் தற்போது பெரிய மாற்றம் வந்துவிட்டது. கதைகளை வாசிக்கும்போது அங்கே நிஜம் இருக்கிறது. உண்மையைப் பதிவு செய்வதற்கு புத்தகத்தைத் தவிர வேறு ஒன்றுமே இருக்க முடியாது. நாம் செல்வங்களை சேர்த்து வைக்கின்றோம். ஆனால் அவை நிலைத்திருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் புகழை அலைந்து அலைந்து சேர்த்துக் கொள்கின்றோம்; அது கூடச் சிறிது காலத்திற்குத்தான் அதுகூட நிலையில்லாதது. அடுத்து மிக முக்கியமான விடயம் நமது ஆரோக்கியம் நிலையானதா? நாம் இன்று உயிரோடு இருப்பதுவோ இன்றை ஒரு சாதனை என்றுதான் கூறவேண்டும்;. அதுவுமே நிலையில்லாதது. இன்று எமது உறவுகள் என்று கொண்டாடுகிறோமே அது நிலையானதா? அதுகூட நிலையில்லாதது என்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய நிலையாமைகளைத்தான் இலக்கியம் பேசுகின்றது. அதனை நாம் வாசித்தால்தானே புரியும் என்று கூறி நிற்கின்றேன்.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.