முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய படையினரின் மனித உரிமை மீறலகள்! (ஓவியம் - AI) - நந்திவர்மப் பல்லவன் -

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள். . - வ.ந.கிரிதரன் -
- ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -
83 ஜூலை இனப்படுகொலை இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனை. இலங்கையை 26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது. போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே. இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை' ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம்.
அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.
இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல் நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்) இணைத்திருக்கின்றேன். இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் , ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.
இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.
உலகம் அமைதி பெற! - சந்திரகெளரி சிவபாலன் -
* ஓவியம் - AIஇன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய பாரதநாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.
டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (2) - ஜோதிகுமார் -
“அடிமைகளை கொண்டிருந்தால், இசையை நீங்கள் இன்னும் மெருகூட்டி இசைக்கலாம்…”
வாதத்துக்குரிய இவ்வரிகள் டால்ஸ்டாயினுடைது.
இப்பின்னணியில், இளையராஜா முதலானோர் சிற்சில சவால்களை முன்னிறுத்த செய்யலாம். ஆனால், யதார்த்த விதிகளை ஒட்டி பயணிக்கும் டால்ஸ்டாய், விடயங்களை சற்று ஆழமாகவே அணுகுவது போல் தெரிகின்றது. இங்குதான், கார்க்கியின் தேர்வும் முக்கியத்துவம் எய்துகின்றது.
அடித்தட்டு மக்களிடையே இருந்து வந்த விஞ்ஞானிகளை போற்றி புகழ்ந்திருக்கும் கார்க்கி, தன் இறுதி நூலான ‘கிளிம்மில்’ கூட இவ்விடயத்தை தொடாமல் இல்லை. ‘கிளிம்மில்’ காணப்படும், புத்திஜீவியின் வேர்கள் வித்தியாசப்பட்டிருக்கலாம். ஆனால், வேர்களை கார்க்கி, தொட்டு விசாரிக்கும் முறைமையும், காலத்துடன் அவர் பயணிப்பதும், இதன் பயனாக வெவ்வேறு வேர்களை அவர் தொடத்துணிவதும் தர்க்கபூர்வமாகின்றது.
இதற்கு உறுதுணையாக டால்ஸ்டாயின் சிந்தனைகளும் கார்க்கிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
டால்ஸ்டாய் கூறுவார்:
“இசை மனித ஆத்மாவை அடக்கி, மந்தப்படுத்தி செயலின்மையை ஊக்குவித்து, போதையை ஏற்றுகின்றது… கத்தோலிக்க திருச்சபை, யாவரையும் விட அதிகமாய், இம்முக்கிய குணாம்சத்தை உணர்ந்ததாய் உளது…”
எழுத்தாளர் சிவராசா கருணாகரனின் தேசிய மக்கள் சக்தி பற்றிய கேள்விகள் சில பற்றி..... - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் சிவராசா கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.
1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?
2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?
3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?
4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?
5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?
6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?
7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?
8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.
9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?
இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் அல்லது கருத்துகள் இவை
இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்காவின் இனவாதத்துக்கெதிரான ஆரோக்கியமான அரசியல்! - நந்திவர்மப்பல்லவன் -
- இலங்கை ஜனாதிபதி அனுர குமார் திசாநாயக்கா -
முகநூலில் எம்.எல்.எம். மன்சூர் ( MLM Mansoor) என்பவரின் இப்பதிவு என் கண்களில் பட்டது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. இவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையை வேண்டுபவை. அதனால் பகிர்ந்து கொள்கின்றேன்.
தற்போது ஆட்சியிலிருக்கும் அநுரா குமார திசாநாயக்கவின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ளன. இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கைகளிலிருந்த ஆட்சி முதன் முறையாக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவரின் கையில் சென்றிருக்கின்றது. மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றம். இதனை இதுவரை அதிகாரத்தைத் தம் கைகளில் வைத்திருந்த தமிழ், சிங்கள அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுத்து அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி எடுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும் பதிவு.
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இனவாதத்தை அநுரா அரசால் பதிலுக்குப் பதில் தோலுரித்து காட்ட முடியும். மேலும் அநுராவின் பலம் அவரது வர்க்கத்துப் பின்னணி. இதனால் தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செயயும் ஒருவர் அதிகாரத்தில் இருப்பதையே அம்மக்களும் விரும்புவார்கள். எனவே அவ்வளவு இலகுவாக அநுரா அரசைப் பதவியிலிருந்து கலைக்க முடியாது. அவர்களுக்குப் பின்னால் ஒழுங்காக,அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டமொனறு அணி திரண்டு நிற்கிறது.
இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சிந்தனைகளும், அதனை நிரூபிப்பதில் உள்ள சவால்களும் பற்றி.... - நந்திவர்மப்பல்லவன் -
அண்மையில் பிராம்டன் மேயர் பற்றிக் பிரவுண் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தபோது இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றி சில வார்த்தைகளை உதிர்த்தார். யாராவது அதனை மறுத்தால் இலங்கைக்குச் செல்லலாம் என்னும் கருத்துப்பட அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தார். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவு என்ப்து மிகப்பெரிய சோகம் துயரம். மானுட அழிவு. தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஓர் இனப்படுகொலையாகவே கருதுகின்றார்கள். பற்றிக் பிறவுண் போன்ற் அரசியல்வாதிகள் தம் அரசியல் நலன்களுக்காக அதனைப் பாவிக்கின்றார்கள். ஆனால் ஏன் சர்வதேச அரங்கில் இதனை ஓர் இனப்படுகொலையாக இதுவரையில் ஏற்கச்செய்ய முடியவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. ஏன்? ஏன் ஐக்கிய நாடுகள் சபையில் முள்ளிவாய்க்கால் அழிவை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் இருக்கிறது?