பெரும்பாலான கதிரவன் மண்டலங்கள் (எங்கள் கதிரவன் மண்டலம் உட்பட) பல கோள்களை உடையனவாய் அமைந்து, அக் கோள்கள் மையத்திலுள்ள விண்மீனைச் (சூரியன்) சுற்றி வருகின்றன. ஆனால் தனியான ஒரு கோள் பல விண்மீன்களைச் சுற்றி வரும் செய்தியானது இயல்பாக நிகழக்கூடியதென்பதை விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் அறிகின்றோம். இச் சமயத்தில் கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த புதுக் கோள் ஒன்றை ஓர் அருங்கலை வான்கணிப்பாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இக் கோளுக்கு நான்கு (04) வேறுபட்ட விண்மீன்கள் (சூரியன்கள்) உள்ளன. இக் கோளுக்கு பி.ஏச்1 ( PH1 =Planet Hunters1) என பெயரிடப்பட்டுள்ளது. இக் கோள் பூமியிலிருந்து 3,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சேண்மம் (நெப்தியூன் - Neptune) கோளையொத்த ‘ஆவி இராட்சதன்’ என்றும் கூறுவர். இக் கோள் நம் பூமிக் கோளை விட 6.2 மடங்கு பெரியதாகும்.
இந்த நான்கு (04) வெவ்வேறான விண்மீன்களால் ஒளியூட்டப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளது இக் கோளாகும். இந்த நான்கு விண்மீன்களில் இரண்டு விண்மீன்கள் மையப் பகுதியில் அமைந்துள்ளன. இக் கோளானது இவ்விரு விண்மீன்களையும் ஒவ்வொரு 138 பூமி நாட்களில் ஒரு சுற்றுச் சுற்றி வருகின்றது. இக் காலப் பகுதி இக் கோளுக்கு ஓர் ஆண்டாகும். இந்த இரு விண்மீன்களில் ஒன்று நமது பூமிச் சூரியனிலும் பார்க்க 1.5 மடங்கு பெரியதாகும். மற்ற விண்மீன் பூமிச் சூரியனிலும் பார்க்க 0.41 மடங்கு சிறியதாகும். இந்த இரு விண்மீன்களும் ஒவ்வொரு இருபது (20) பூமி நாட்களில் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.
மற்றைய இரு விண்மீன்களும் மையப்பகுதியில் இருந்து சுமார் 93,000,000,000 மைல் தொலைவில் அமைந்து மையப்பகுதியில் அமைந்துள்ள இரு விண்மீக்களையும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன. இத்தூர இடைவெளி பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்திலும் பார்க்க ஆயிரம் (1,000) மடங்கு பெரியதாகும். இக் கோளின் தட்பவெப்ப நிலையானது குறைந்தளவு 4840கு (2510ஊ) ஆகவும் கூடிய அளவு 6440கு (3400ஊ) ஆகவும் அமைந்துள்ளது. இவ்வாறான கடும் வெப்பத்தில் இக் கோளில் திரவ நிலையில் நீர் நிலைத்திருக்க முடியாது. எனவே உயிரினம் காண்டல் அரிதாகும்.
இந்த நான்கு விண்மீன்கள் அமைப்பை கே. ஐ. சி. 4862625 (KIC 4862625) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நான்கு விண்மீன் அமைப்பையும், இக் கோளையும் ஒரு பிரமாண்டமான கண்டுபிடிப்பு என்று விண்வெளியார் கருதுகின்றனர்.
நாசா கெப்லர் ஸ்பேஸ் மிசன் (NASA Kepler Space Mission) என்ற விண்கலம் பங்குனி மாதம் 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவி விடப்பட்டது. இது 2,300க்கு மேற்பட்ட விண்வெளிச் சான்றுகளையும், ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டு வந்துள்ளது.
அருங்கலை விஞ்ஞானிகளான கிஅன் ஜெக் (Kian Jek of San Francisco), றொபேர்ட் ஹக்லிஅனோ (Robert Gagliano of Cottonwood) என்பவர்களான இருவரும் இப் புதிய கோளைக் கண்டுபிடித்தனர். இவர்கள் நாசா நிறுவனத்தின் கெப்லர் தொலைநோக்காடி ( NASA’s $600 million Kepler Telescope) வழங்கிய தரவுகளைப் பிளானற் ஹன்ரேஸ் என்ற இணையத் தளத்தில் (at the website planet hunters.org) பார்த்தபொழுது இக் கோளையும், நான்கு விண்மீன்களையும் அவதானித்தனர்.
இன்னும், இக் கோள் ஒழுங்கற்ற தன்மை கொண்டதையும், விண்மீன்கள் சுடர் நடுக்கம் தருவதையும் அவதானித்தனர். இவர்கள் கண்டுபிடித்ததையும், அவதானித்தவற்றையும் யாழி ஆய்வாளர்கள் (Yale Researchers) ஏற்றுக் கொண்டு, வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த ஏடுகளில் பதிவாக்கம் (The Astrophysical Journal for Publication) செய்வதற்கு 15-10-2012 அன்று அனுப்பி வைத்துள்ளனர்.
இதுவரை விஞ்ஞானிகள் ஒரு சூரியனுக்குப் பதிலாக இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஆறு (06) கோள்களை (Circumbinary Planets)) இனம் கண்டுள்ளனர். ஆனால் இவற்றில் கோளைச் சுற்றும் சூரியன் ஒன்றுகூட இருக்கவில்லை.
அறிவியலார் விண்வெளியில் புகுந்து விட்டனர். இனி அவர்கள் திடுக்கிடும் அதிசயமான செய்திகளைத் தந்துதவுவர். நாமும் அவற்றைப் பார்த்துப் படித்து இன்புறுவோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.