"ஓவியம் எனது ஜீவிதம்! ஓவியத்தினால் இவ்வுலகை எனதாக்குவேன்!" என்னும் தாரகமந்திரத்துடன் காட்சியளிக்கிறது ஓவியர் பிருந்தாயினி பிரபாகரனின் முகநூற் பக்கம். தாரக மந்திரம் ""ஓவியம் எனது ஜீவன்! ஓவியத்தினால் இவ்வுலகை எனதாக்குவேன்!" என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதென் கருத்து. உண்மையான கலைஞர்களுக்கு அவர்களது கலை அவர்கள்தம் ஜீவன். ஜீவிதத்துக்கு அது உதவுவதென்பது அடுத்தபடிதான். அண்மையில் என்னைக் கவர்ந்த இவரது ஓவியங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். வாழ்த்துகள்.
இவரை எமக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் 'நடு' இணைய இதழாசிரியர் கோமகன். அதற்காக அவருக்கும் பாராட்டுகள்.
இங்குள்ள அவரது மூன்று ஓவியங்களை, தாயும், குழந்தையும் (போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் ஓவியம்) ,
1. தாயும், குழந்தையும் : (போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் ஓவியம்)
2. ஓவியர் தன் தாயாரை மகளிர் தினத்துக்காக வரைந்தது.
3. ஓவியரின் சுய ஓவியம்!