சப்பானில் மதுபானக்கூடங்களிலும் தேனீர் கடைகளிலும் வளர்தேடுக்கப்பட்ட கவிதை வகையே சென்ரியு. இக்கவிதை வகை தமிழில் நகைப்பா என்று வழங்கப்படுகின்றது. சென்ரியு கவிதைகள் மனித நடத்தைகளையும் சமுதாய அவலங்களையும் வெளிப்படையாக போட்டுடைப்பவை. கிண்டல், நகைச்சுவை, அங்கதத் தன்மை வாய்ந்ததாக இக்கவிதைகள் படைக்கப்படுகின்றன. ’கடவுளின் கடைசி கவிதை’ எனும் சென்ரியு கவிதை நூலானது வனிதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் மனித நடத்தைகள் யாவும் வெளிப்படையாக கவிதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. மேலும், லிமரைக்கூ, ஹைக்கூ கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
கவிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில கவிதைகள்,
மனிதர்களில்
சிலர் நாற்காலிகளாய்...
பலர் கருங்காலிகளாய்.
பிள்ளையின் அறிவுபசிக்காக
அடகுக்கடையில்...
சமையல் பாத்திரங்கள்.
யாருக்குமே பிடிக்காதவனை
விரும்பி பிடித்தது.....
ஏழரை சனி
தேவாலய மணியோசை
கேட்கும் பொழுதெல்லாம்...சாத்தானின் ஞாபகங்கள்.
எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்...
சாயம்போன வாழ்க்கை
அப்பா என்னை
அடிக்கும்பொழுதெல்லாம்...
அம்மாவிற்கும் வலிப்பதெப்படி?
நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது...
நாற்காலியில் பொம்மை.
ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்...
மரம் வெட்டும் தந்தை.
அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்...
மண் வாசனை.
கடும் கோடையிலும்
அம்மா எப்படி பொழிகிறாள்...
பாசமழை
இக்கவிதை தொகுப்பு 'மாமதயானை'யால் படைக்கப்பட்டுள்ளது .
புத்தகம் பெற விருப்புவோர்
வே.மணிகண்டன் 9994823183
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.