நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட "லெனின் விருது" இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், புதுவை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரையிடல் நடைபெறும்.
அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணலும், லெனின் விருது அவருக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் பற்றிய விரிவான கட்டுரையும் விரைவில் தமிழ் ஸ்டுடியோவில் வெளியாகும்.
லெனின் விருது 10, 000 ரூபாய் ரொக்கப்பரிசும், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியது. லெனின் விருது பெறுபவர்கள் குறித்த ஒரு ஆவணப்படமும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்படும்.
அம்ஷன் குமார் அவர்களை வாழ்த்த விரும்புபவர்கள் அவரது மின்னஞ்சலுக்கு உங்கள் வாழ்த்துகளை அனுப்புங்கள்: அம்ஷன் குமாரின் மின்னஞ்சல் முகவரி:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு: http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_3.php
அன்புடன்
www.thamizhstudio.com
+919840698236, +919894422268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.