பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 - 07 - 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy - 75018 Paris) ''இலக்கிய மாலை" நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ்பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா", 'தினக்குரல்" பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்", நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்"ää இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் 'தோட்டத்து மேசையில் பறவைகள்", இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் 'சங்கம்" நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ''''Le Réveil" ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் வாழும் பல படைப்பாளிகள் இந்நூல்கள் குறித்து உரைநிகழ்த்துவர். தமிழகத்திலிருந்து வருகைதரும் நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிää கவிஞர் இந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றுவர். கு. சின்னப்ப பாரதியின் தமிழ் நாவல்கள் பல பிரெஞ்;சுää ஆங்கிலம், இந்தி, மராட்டி, மலையாளம், சிங்களம் உட்படப் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவரது இலக்கியப் பணியைப் பாராட்டி இந்நிகழ்வில் கு. சின்னப்ப பாரதி கௌரவிக்கப்படவுள்ளார். ஐரோப்பாவில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸ் மாநகரில் மாதம் தோறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இலக்கிய மாலை நிகழ்வையும் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தினரும்ää பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரும் மேற்கொண்டுள்ளனர் என ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.