அன்பிற்குரியவர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழா, பாரிஸ் மாநகரில் , வரும் 23.06.2019 , ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இவ் விழாவினை " வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - பிரான்ஸ்" அமைப்பினர் பொறுப்பெடுத்து நடத்துகின்றார்கள். இதற்கான அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளேன்.
பாரிசில் வாழ்கின்ற வேலணை உறவுகள்- புங்குடுதீவு உறவுகள், வேந்தனாரின் மாணவர்கள், வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்கள், மற்றும் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் பாடசாலை நிர்வாகிகள்- ஆசிரியர்கள் அனைவரையும் , இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பாரிசில் வாழும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் இதனை அனுப்பி பகிர்ந்து கொள்ளும்படியும், அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்
venthanar ilansei <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>