‘கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் மட்டுமன்றி இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் தனது நாட்டியத் திறமையால் கலாநர்த்தகியாகத் திகழும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா லண்டனில் விடாமுயற்சியுடன் தனது ‘சலங்கை நர்த்தனாலயா’ நடனப் பள்ளி மாணவர்களுக்குக் களம் அமைத்து, அவர்களின் நாட்டியத் திறமைகளை வெளிக்கொண்டுவருவது பாராட்டுக்குரிய விடயம்’ என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் விரிவுரையாளரும், சுயவயெஅ குழரனெயவழைn ஐ நடாத்தி வரும் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அண்மையில் லண்டன் வின்சன்சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்ற சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்பு வழங்கிய ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியில் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கணேச ஸ்துதி, அலாரிப்பு, .பதம், குறத்தி நடனம், சீதா கல்யாணம், முருகன் கௌத்வம், சிவ கிருத்தி போன்ற நாட்டிய வடிவங்களால் அலங்கரித்தமை மிக மெச்சத்தக்க விடயம். இதற்கு பார்வையாளர்கள்; மேலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் தலைவியான நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அவரது மகளான உயிரியல் பட்டதாரியான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் மாணவர்களுடன் இணைந்து உறவும் மரபும் சேர்வதுபோல் வாழ்க்கையிலும், மகத்தான நாட்டியக் கலையிலும் ஒன்றிணைவது பார்வையாளர்களை மேலும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற பாரதியாரின் பாடலைப் படம் பிடித்து நாட்டிய நாடக வடிவில் காட்சிப்படுத்தியமை சிறப்பாக இருந்தது. உணர்வு ரீதியாக பாடல்களின் உள்ளடக்கமும்; வெளிப்பாடுகளும் பார்வையாளர்களை நவீனமாக உணர வைத்தது. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபற்றிய இந்த நாட்டிய நாடகத்தில் பெங்களுரில் ‘மாயா’ நடனக்குழுவை இயக்கிவரும் நாட்டிய ரூபன் றூபேஷ். கே.சி. யும், சலங்கை நர்த்தனாலயா நடனப் பள்ளியின் ஆசிரியை நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் முக்கிய பாத்திரங்களை அற்புதமான அபிநயங்களாலும், பாவத்தாலும் வெளிப்படுத்தியமை வசீகரமாகக் காணப்பட்டது. நாட்டிய நாடகத்தின் உடை அமைப்புக்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப அமைந்து நடனத்தின் பொருளை மட்டுமன்றி இசையின் உணர்வையும் வெளிப்படுத்தியமை மிகச்சிறப்பான விடயம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
லண்டன் ழுநுடீடு அமைப்பின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீமதி அனனியா ஐங்கரன், ஸ்ரீமதி சாந்தி பிரதாபன், சுவிஸ் இருந்து வருகை தந்த ஸ்ரீமதி லிடியா மயூரன் போன்ற பலவேறு இசை, நாட்டியக் கலைஞர்களால் நிறைந்த வின்சன் சேர்ச்;சில் மண்டபத்தில், எழுத்தாளரும் அறிவிப்பாளருமான நவஜோதி ஜோகரட்னம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார். சலங்கை நர்த்னாலாயா நடனப்பள்ளி ஆசிரியையான சஸ்கியா யோகராஜாவின் நன்றி உரையுடன் ‘சலங்கைகளின் சங்கமம்’ மகிழ்வோடு விடை பெற்றது.
14.12.2017 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.