அன்புடையீர், உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் தொல்காப்பியம் பற்றிய கருத்தரங்கினையும் முத்தமிழ் விழாவினையும் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அழைப்பதில் பெருமகிழ்வு எய்துகின்றோம். இத்துடன் இருநாள் நிகழ்வுகளக்கான நிகழ்;ச்சித் தொகு;பபுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து வருகை தரும்வண்ணம் பணிவன்போடு கேட்டக்கொள்கின்றோம்.
த.சிவபாலு , தலைவர்
கார்த்திகா மகாதேவன், செயலாளர்
தமிழால் இணைவோம்! தமிழால் வளர்வோம்! தமிழை வளர்ப்போம்!
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முகநூல்: கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!
- கம்பன் கழகம், பிரான்ஸ் -
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.
முதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.
மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.
சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.
மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில் புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன.
முகநூல் பதிவு: கம்பன் கழகம், பிரான்ஸ்