நண்பர்களே மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளிவரும் இணைய இதழான பேசாமொழியின் 18வது இதழ் இன்று (16-07-2014) வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனின் மிக விரிவான நேர்காணல் ஒன்றை யமுனா ராஜேந்திரன் எடுத்திருக்கிறார். மிக விரிவான இந்த நேர்காணல் இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் படிக்கும்போது கிடைக்கும் தீவிரத் தன்மையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டால் அது கெடுத்துவிடும் என்று கருதி, ஒரே இதழில் முழு நேர்காணலையும் கொடுத்திருக்கிறேன். தவறவிடாமல் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல். தவிர தியடோர் பாஸ்கரன் சில மாதங்களுக்கு எனக்கு படிக்க பரிந்துரைத்த ஜான் பெர்ஜரின் "Ways of Seeing", புத்தகத்தை மொழியாக்கம் செய்து, இந்த இதழில் இருந்து வெளியிடுகிறோம். நண்பர் யுகேந்திரன் இந்த மொழியாக்கத்தை மேற்கொள்கிறார். பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது தொடங்கி, காட்சி படிமங்களின் வியப்பை இந்த நூல் நமக்குள் விரிவாக பதிவு செய்துக்கொண்டே போகிறது. இப்படியான புத்தகங்கள் தமிழில் வெளியானால்தான், பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்கிற தெளிவு நமக்கு ஏற்படும். பிம்பங்களை நேர்த்தியாக அலச தெரிந்தால், தமிழில் நிகழ்ந்திருக்கும் இத்தனை மோசமான திரைப்பட ஆக்கத்தை நாம் கட்டுப்படுத்தி இருக்க முடியும். நண்பர்கள் தவறாமல் இந்த தொடரை வாசிக்க வேண்டும். உங்களுக்குள் பல அதிசயங்கள் நிகழலாம்.
இது தவிர, தமிழில் இதுவரை வெளியான பல்வேறு திரைப்பட இதழ்களை திரட்டி இந்த பேசாமொழி இதழில் நல்ல கட்டுரை ஒன்றை அரந்தை மணியன் தொகுத்திருக்கிறார். தமிழில் வெளிவந்திருக்கும் திரைப்பட இதழ்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு பொக்கிஷமாகவே இந்த கட்டுரை இருக்கும். மிக முக்கியமான இந்த ஆவணத்தொகுப்பையும் நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். இது தவிர சலனத்தில் வெளியான, சினிமா எடுப்பது எப்படி என்கிற அகிரா குரசோவாவின் கட்டுரையை குறைந்தது நாற்பது முறை படித்து பாருங்கள். எத்தனை முறை படித்தாலும், அலுக்காத கட்டுரை.
பேசாமொழி 18வது இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள்:
தியடோர் பாஸ்கரனுடன் - யமுனா ராஜேந்திரன் உரையாடல் - யமுனா ராஜேந்திரன்
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ் ஆனந்தன் - 5 - தினேஷ் குமார்
தமிழில் சினிமா சஞ்சிகைகள் - அறந்தை மணியன்
இந்திய சினிமா வரலாறு – 4 - பி.கே.நாயர்
உலக சினிமா சாதனையாளர்கள் - 4 - நிமாய் கோஷ் - சுனிபா பாசு
கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஞாநி
நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள் - கே.எஸ்.சங்கர்
திரைப்படம் எடுப்பது: சில குறிப்புகள் - அகிரா குரோசவா
படிக்க: http://pesaamoli.com/index_content_18.html
குறிப்பு: பேசாமொழி என்பது இணையத்தில் வெளியாகும் மாற்று சினிமாவிற்கான இதழ். இதனை இணைய வசதி உள்ள அனைவரும் இலவசமாகவே படிக்கலாம். பேசாமொழி அச்சு வடிவில் வெளிவரவில்லை.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.