நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளிவரும் இதழான பேசாமொழியின் 17வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. ஜூலை மாதம் முதல், பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவரவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும், 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் இணையத்தில் வெளியாகும். 17வது இதழ், பிரசன்னா விதானகேவின் புதிய படமான வித் யு, வித்தவுட் யு குறித்த பல கட்டுரைகளையும், பிரசன்னாவின் இரண்டு முக்கியமான நேர்காணலையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த இதழில்:
1. பிரசன்ன விதானகேவின் "வித் யூ விதவுட் யூ" - யமுனா ராஜேந்திரன்
2. With you Without you - ஒரு களப்பணியாளனின் நேரடி அனுபவம் - தமிழ் ஸ்டுடியோ அருண்
3. பிரசன்ன விதானகே நேர்காணல் - சுதீஷ் காமத், தமிழில்: யுகேந்தர்
4. பிரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - கேள்விகள்: விஸ்வாமித்திரன், தமிழில்: அஜீதன், சித்ரா
5. ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 5 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
6. கண்ணாடியறையிலிருந்து எறியப்படும் கல் - தினேஷ் குமார்
7. விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 4 - தினேஷ் குமார்
8. இந்திய சினிமா வரலாறு – 3 - பி.கே.நாயர்
9. உலக சினிமா சாதனையாளர்கள் - 3 - இங்மர் பெர்க்மன் - அம்ஷன் குமார்
10. ஒரு சகாப்தத்தை மீட்கும் பணி - தமிழில்: அம்ஷன் குமார்
இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_17.html
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)