அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 - 05 - 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் GLENWAVERLEY R S L மண்டபத்தில் (161, COLEMAN PARADE, GLENWAVERLEY - VICTORIA - 3150) ( GLENWAVERLEY ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மண்டபம்) நடைபெறும். ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு - சமணலவெவ - தமிழில் வெளியான உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost in you மற்றும் இந்த ஆண்டு வெளியான புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை ஆகிய மூன்று நூல்கள் இந்த விமர்சன அரங்கில் திறனாய்வு செய்யப்படும்.
திருவாளர்கள் ரெயில் மோல்ட்ரிச் - லெ.முருகபூபதி - எச்.எல்.டி மகிந்தபால - டி.பி.குருப்பு ஆகியோர் இந்த விமர்சன அரங்கில் உரை நிகழ்த்துவர். இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஸ்தாபகர் திரு. பந்து திஸாநாயக்கா இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றிய வாசிப்பு அனுபவ அரங்காக இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வண்ணாத்திக்குளம் நாவலை இலங்கையின் பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. மடுளுகிரியே விஜயரத்தின (சமணலவெவ ) சிங்களத்திலும் உனையே மயல் கொண்டு நாவலை தமிழக பேராசிரியை திருமதி பாரதி வாசுதேவ் ( Lost in you ) ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. நடேசனின் புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை கனடா பதிவுகள் இணைய இதழில் தொடராக முன்னர் வெளிவந்து தற்பொழுது நூலுருப்பெற்றுள்ளது. இந்நாவலுக்கு தமிழகப்படைப்பாளி திரு. ஜெயமோகன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நூல்களின் விமர்சன அரங்கின் இறுதியில் நூல்களை எழுதிய டொக்டர் நடேசன் ஏற்புரை வழங்குவார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.