நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 13 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை எப்போதும் மாலை 5 மணிக்கு திரையிடல் நடைபெறும். மற்ற நாட்களில் மாலை 7 மணியளவில் திரையிடல் நடைபெறும் என்பதை நண்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும். படங்களின் பட்டியலை மட்டும் இப்போது கொடுக்கிறேன். கன்னட படங்கள் பற்றிய குறிப்புகளை பிறிதொரு சமயத்தில் கொடுக்கிறேன். ஆனால் இனி திரையிடப்படும் படங்களில் பெரும்பாலானவை மிக முக்கியமான படங்கள். நண்பர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.
இடம்: Fifth Pillar, 41, united india colony, 2nd cross street, circular road, kodambakkam. Near kodambakkam park, and fathima school. தினசரி நேரம்: மாலை 6.30 இல் இருந்து 7 மணிக்குள்ளாக திரையிடப்படும்.
சனிக்கிழமை: மாலை 5 மணிக்கு.
மலையாள மொழி படங்கள்:
21-10-2013, திங்கள்.
14. கொடியேட்டம் - அடூர் கோபாலக்ருஷ்ணன் (சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற அடூரின் முக்கியமான படங்களில் ஒன்று. பாரதி கோபி இந்த படத்திற்கு பிறகு கொடியேட்டம் கோபி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்)
22-10-2013, செவ்வாய்.
15. வைஷாலி - பரதன் (எம்.டி. வாசுதேவன் நாயர் திரைக்கதையில் பரதன் இயக்கி, படத்தொகுப்பு செய்த திரைப்படம். இந்த படத்தின் ஒளிப்பதிவிற்காக மது அம்பாட் நிறைய பாராட்டுகளை பெற்றார். ஒளிப்பதிவிற்காகவும், படத்தின் கதை நகரும் பாணிக்காகவும் நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்)
23-10-2013, புதன்.
16. முடியனாய புத்திரன் - ராமு கரியாட் (தேசிய விருது பெற்ற இந்த திரைப்படம், தோப்பில் பாசியின் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது).
24-10-2013, வியாழன்.
17. நாயர் புடிச்ச புலிவால் - பி. பாஸ்கரன் (உருபின் பிசினஸ் கதைக்கு பாஸ்கரன் மிக சிறப்பான காட்சிகள் அமைத்திருப்பார். சர்கஸ் கலைஞனின் வாழ்க்கையில் எழும் காதல், அதற்கு ஏற்படும் தடை என எளிய மக்களின் வாழ்வை சித்தரித்த திரைப்படம்.
25-10-2013, வெள்ளி.
18. ஆதாமிண்ட மகன் அபு - சலீம் அஹ்மத் (2012 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், நிறைய விருதுகளை வென்ற சமீபத்திய கேரளா திரைப்படம்).
26-10-2013, சனி.
19. செல்லுலாயிட் - கமல் (மலையாள சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் ஜே.சி. டேனியல் பற்றிய திரைப்படம்)
27-10-2013, ஞாயிறு.
20. செம்மீன் - ராமு கரியாட் (நண்பர்கள் அவசியம் தவறவிடாமல் பார்க்கவேண்டிய மலையாளத் திரைப்படம். செம்மீன் ஷீலாவின் நடிப்பும், ஒளிப்பதிவும் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாமல் இருக்கும்)
28-10-2013, திங்கள்.
21. நீலக்குயில் - பி.பாஸ்கரன் & ராமு கரியாட் (இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய திரைப்படம். ஒரு தலித் பெண்ணுக்கும், உயர்சாதி ஆசிரியருக்கும் இடையான காதலை சொல்லும் இந்த திரைப்படம், நியோ-ரியாலிச மெலோட்ராமா பாணியில் எடுக்கப்பட்டது. உரூபின் சிறுகதைக்கு அவரே பாஸ்கரனுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்துள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
29-10-2013, செவ்வாய்.
22. ஓரிடத்து - ஜி. அரவிந்தன் (நண்பர்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய இன்னொரு திரைப்படம், மின்சாரம் இல்லாமல் வாழும் வாழ்க்கையே மனிதர்களை அவர்களின் இயல்போடு வாழவைக்கிறது என்பதை அழுத்தமாக சொன்ன திரைப்படம். இதுவும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற திரைப்படம்.
கன்னடப் படங்கள்:
---------------------------
30-10-2013, புதன்.
23. எட்டேலு மஞ்சுநாதா (Eddelu Manjunadha) - குருப்ரசாத்
31-10-2013, வியாழன்.
24. ஆ தினகலு (Aa Dinagalu) - கே.எம். சைதன்யா
01-11-2013, வெள்ளி
25. முங்காரு மலே (Mungaru Male) - யோகராஜ் பட்
02-11-2013 - சனி - தீபாவளி விடுமுறை
03-11-2013 - ஞாயிறு
26. மொதல்சலா (Modalasala) - புருஷோத்தம். சி.
04-11-2013 - திங்கள்
27. சார்மினார் - ஆர். சந்துரு
05-11-2013 - செவ்வாய்
28. சூப்பர் - உபெந்த்ரா
06-11-2013 - புதன்
29. சிம்பிள் அகி ஒந்து லவ் ஸ்டோரி - சுனி.
07-11-2013 - வியாழன்.
30. கனசெம்போகுடுரேயனேறி - கிரீஷ் காசரவள்ளி
அடுத்தப் பட்டியல் விரைவில்...
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.