நண்பர்களே, தமிழ் ஆழியின் முதல் ஆறு இதழ்களுக்கான விமர்சனக் கூட்டமும் அதன் இணைய தள அறிமுகக்கூட்டமும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளை மதுரை, கோவையிலும் நடத்த விருப்பம். நிகழ்ச்சியில் இதழ்களை விமர்சித்து பேச விரும்புவர்கள் தெரிவிக்கவும். உங்களிடம் எல்லா இதழ்களும் கையில் இல்லாத பட்சத்தில் பழைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அனுப்பிவைக்கிறோம். மதுரை, கோவையில் நிகழ்வு ஏற்பாடுகளைச் செய்ய எங்களது தோழமை சக்திகளின் உதவியும் தேவைப்படுகிறது. தமிழ் ஆழி ஜூலை இதழ் சர்வதேச சிறப்பிதழாக உருவாகி, இன்று அச்சுக்கு செல்கிறது. விரைவில் கடைகளில் கிடைக்கும். என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோமோ அதில் ஒரு சிறு பகுதியையே செய்துவருகிறோம். என்றாலும் அனைவரின் கருத்துகளைக் கேட்டு, இதழை co-create செய்வது மிகவும் சிறந்தது. அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு உள்பட அனைத்தையும் நீங்கள் விமர்சித்து வழிகாட்டவேண்டும் என விரும்புகிறேன்.
அத்துடன் இதழின் வளர்ச்சிக்கான ஆலோசனைகயும் கேட்கவிருப்பம். சட்டபூர்வமாக ஆழி எங்கள் பத்திரிகையாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில், நடைமுறையில் அது உங்கள் பத்திரிக்கைதான். அதன் வளர்ச்சிக்கு கைகொடுங்கள் என உங்களைத் தவிர வேறு யாரைக் கேட்க இயலும்?
அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்
ஆசிரியர் / பதிப்பாளர் - தமிழ் ஆழி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.