கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு ( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளைக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.நிரந்தரமான ஓவியக்கூடம், நூட்பாலைக்கண்காட்சி, ஆண்டுதோறும் பதினைந்து கூட்டுக் கண்காட்சிகள், ஓவியப்பட்டறைகள், ஓவிய பயிற்சி முகாம்களை இது நடத்துகிறது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டிசம்பரில் தொடங்கியது.அவ்விழாவில் தலைமை விருந்தினராக்க் கலந்து கொண்ட கிருஸ்ணராஜ் வாணவராயர் “வித்தியாசமாக இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். எழுத்தாளர்களும் கலைஞர்களும் வித்தியாசமானவர்கள். நான் வித்தியாசமாக இருப்பதை பார்த்து சிரிக்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என்றார் விவேகானந்தர். ஆன்மீகமும் அறிவுவியலும், பகுத்தறிவும் கலந்த சிந்தனை மிக முக்கியம். நாளைய உலகில் நல்ல பண்பு கொண்ட மனிதர்கள்தான் அதிகம் இருக்கமாட்டார்கள்.அவர்களை உருவாகுவதில் கலைக்கும், எழுத்துக்கும் பங்கு உண்டு” என்றார்.
”வெட்டுப்புலி ”நாவலுக்கு பரிசு பெற்ற தமிழ்ம்கன் பாராட்டப்பட்டார். அவரின் உரையிலிருந்து: “வெற்றி பெற்றவர்களின் வரலாறு வெகு சாதராணமாய் நிறைய எழுதப்பட்டுள்ளன. வெட்டுப்புலி தோல்வியடைந்தவர்களின் கதை.அரசியல், திரைத்துறை, வாழ்க்கை என்று 30களில் பயணம் செய்ய ஆரம்பிக்கிற நாவல்சமீபகாலம் வரை திராவிட இயக்கவரலாறோடு சொல்லப்பட்டிருக்கிறது. உலகின் 6000 மொழிகளில் இந்த நூற்றாண்டில் அழியப் போகிற மொழிகள் 3000க்கு மேலே உள்ளது. பயன்பாட்டில் குறைந்து வருகிற தமிழை புழங்கு மொழியாக வைத்திருக்கவும் மொழியைப்புதுப்பிக்கவும் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தர், யேசு பேசின மொழிகள் இன்று பய்ன்பாட்டில் இல்லை. திருவள்ளுவர் பயன்படுத்திய மொழியை வாழ வைக்க எழுதுகிறோம். மொழியை நவீனப் படுத்தவேண்டும். செய்ய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் நெடும்காலம் இருந்திருக்கிறது. தமிழ் சிறுகதைக்கும், நாவலுக்கும் 100 வருடமே ஆகிறது.. எழுத்தாளர்கள் வாழ்க்கையை படைப்பில் முன் மொழியும் போது மொழியையும் முன் மொழிகிறோம்.அது வெவ்வேறு வடிவங்களும், நுட்பமும் கொண்டு இலக்கியத்தை சுவாரஸ்படுத்துகிறது.. ”ஒரு ஊரில் ஒரு பாட்ட“ என்று பாட்டி வடை சுட்டதில், காக்கா திருடிக் கொண்டு போனதினை இரண்டாம் முறை சொன்னாலே அலுப்பு வந்து விடும். அதைப்போக்க சொல்லும் மூறையில் நவீனம் தேவை. நவீன வாழக்கையை கூர்ந்து சொல்லவேண்டும், காப்ரியேல் மார்க்கூஸ்ஸின் “ மறுபடியும் சொல்லப்பட்ட கதையை “கொல்லப்படப் போகிறவன் படகுக்காக்க் காத்திருக்கிறான்.” என்று ஆரம்பிக்கிறார். டால்ஸ்டாய் அன்னாகரினாவில் “ எல்லா சந்தோசமான குடும்பங்களும் ஒரே மாதிரி “ என்று ஆரம்பிக்கிறது..”. தமிழ்மகனின் சமீபத்திய ” ஆண்பால் பெண்பால் ” நாவல் இப்படி ஆரம்பிக்கிறது:: “இடைப்பட்ட நீர்ப்ப்ரப்புகள் நீருக்குள் மூழ்கிப் போயின “ தமிழ் மொழி பற்றின படிமமாகக் கூட தமிழ் மகன் இந்த வரிகளை எழுதியிருக்க்க்கூடும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.